Shunmugasundaram

சண்முகசுந்தரம்

தமிழ்த்  திரைப்படங்களில் குணச்சித்திரம்,வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர். மிகச்சிறந்த ஒரு நடிகர். நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, மௌனம் சம்மதம்,லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன் போன்ற ஐநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்கள் பெரும்பாலும் இவருக்கு சந்தர்ப்பங்கள் அளிப்பதுண்டு.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் 1963 ஆம் ஆண்டுத் திரையுலகிற்கு அறிமுகமானவர். பழம்பெரும் நடிகை சந்திரகாந்தாவின் தம்பி ஆவார். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவின் தந்தையாக நடித்திருந்தார். இப்படம் அவருக்குப் பெரும்புகழைத்தேடிக்கொடுத்தது.

இவரது சொந்த ஊர் கும்பகோணம் அருகிலுள்ள திருப்பாம்புரம். மனைவி பெயர் சுந்தரி. இவர்களுக்கு கீதா, பவித்ரா என்ற இரு மகள்களும் பாலாஜி என்ற மகனும் இருக்கிறார்கள்.

சண்முகசுந்தரம் 12 வயதிலேயே மேடைக் கச்சேரிகள் செய்தவர். ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தவர். இவருக்கு வயது 75. இவர் தனது 79 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மயிலாப்பூரிலுள்ள தனது வீட்டில் வைத்து மரணமடைந்தார். 16.8.2017 அன்று உடல் தகனம் நடைபெறுகிறது.

அத்துடன் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார். 

இவர் நடித்த மேலும் சில படங்கள் :-

லட்சுமி கல்யாணம் [1968], ஆதி பராசக்தி [1971], பாக்தாத் பேரழகி [1973]. வெற்றி விநாயகர் [1996], படிக்காத பண்ணையார் [1985], நவக்கிரக நாயகி [1985], காலம் வெல்லும் [1970], தேவியின் திருவிளையாடல் [1982], தாலியா சலங்கையா [1977], உன்னைச் சுற்றும் உலகம் [1977], பொண்ணுக்கேத்த புருஷன், உன்னைத் தேடி [1999]

500 படங்களுக்கு மேல் நடித்த குணச்சித்ர நடிகர் சண்முக சுந்தரம், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
ஆகஸ்ட் 16, 2017, 03:27 AM

சென்னை,

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், சண்முக சுந்தரம். இவர், பழம்பெரும் நடிகை சந்திரகாந்தாவின் தம்பி ஆவார். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவுக்குத் தந்தையாக நடித்து இருந்தார்.இவர், கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை 8-45 மணிக்கு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.அவருடைய இறுதி சடங்கு இன்று காலை (புதன்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மாலை 3 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த நடிகர் சண்முக சுந்தரத்துக்கு வயது 79. சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பாம்புரம். மனைவி பெயர், சுந்தரி. இவர்களுக்கு கீதா, பவித்ரா என்ற 2 மகள்களும், பாலாஜி என்ற மகனும் இருக்கிறார்கள்.

சண்முக சுந்தரம் 12 வயதிலேயே மேடை கச்சேரி செய்தார். ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார். 1963-ஆம் ஆண்டில், ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். கர்ணன், வாழையடி வாழை, மவுனம் சம்மதம், கிழக்கு வாசல், ஷாஜகான், சென்னை-28, சரோஜா, கோவா, நண்பன், பிரியாணி உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் அப்பா வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.

கடைசியாக, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவரால் ‘டப்பிங்’ பேச முடியவில்லை. அவருக்கு பதில் வேறு ஒருவர் குரல் கொடுத்திருந்தார்.

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/08/16032718/Actor-Shanmugam-Sundaram-dies-over-500-films-Physical.vpf

 

அவளுக்கு நிகர் அவளே (1974)  படத்தில்

ImageImage

Image

Image

வாழையடி வாழை படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் சண்முகசுந்தரம்Image

வாழையடி வாழை படத்தில் பி.ஆர்.வரலட்சுமியுடன் சண்முகசுந்தரம்

Image

‘மாப்பிள்ளை அழைப்பு’ [1972] படத்தில் ஷண்முகசுந்தரம் தனித்தும் தேஙாய் சீனிவாசனுடனும்                   Shunmugasundaram-Mappillai Azhaippu 1972-Shunmugasundaram-Mappillai Azhaippu 1972-1Shunmugasundaram-Thengai-Mappillai Azhaippu 1972-Shunmugasundaram-Thengai-Mappillai Azhaippu 1972-1Shunmugasundaram-Thengai-Mappillai Azhaippu 1972-2

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் ‘வரமுனி’ கதாபாத்திரத்தில் சண்முகசுந்தரம்.Shunmugasundaram as Varamuni- Aathi Parasakthi 1971- (1)Shunmugasundaram as Varamuni- Aathi Parasakthi 1971- (2)Shunmugasundaram as Varamuni- Aathi Parasakthi 1971- (3)

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் கௌண்டில்ய முனிவராக ஷண்முகசுந்தரம்

Shunmugasundaram as Goundilya Maamunivar -Vetri Vinayagar 1996-1Shunmugasundaram-Vetri Vinayagar 1996-

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் நாரதராக ஸ்ரீதருடன் தனது மனைவி ஆசிரியையாக சங்கீதாவுடன் ஷண்முகசுந்தரம்           Shunmugasundaram-Sangeetha-Vetri Vinayagar 1996-Sreedhar-Shunmugasundaram-Sangeetha-Vetri Vinayagar 1996-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் ஷண்முகசுந்தரம் Shunmugasundaram-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ படத்தில் ஷண்முகசுந்தரத்துடன் சுபாShunmugasundaram-Subha-Baghdad Perazhagi 1973-1Shunmugasundaram-Subha-Baghdad Perazhagi 1973-

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் சிவாஜிகணேசனுடன் சண்முகசுந்தரம் Shunmugasundaram-Sivaji-Padikkatha Pannaiyar 1985-Shunmugasundaram-Sivaji-Padikkatha Pannaiyar 1985-1Shunmugasundaram-Sivaji-Padikkatha Pannaiyar 1985-2

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் ஷண்முகசுந்தரம் Shunmugasundaram-Navagraha Nayagi 1985-Shunmugasundaram-Navagraha Nayagi 1985-1

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் பாண்டியன் மற்றும் நளினியுடன் ஷண்முகசுந்தரம்Shunmugasundaram-Pandian-Nalini-Navagraha Nayagi 1985-

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் எம்.எல்.ஏ.தங்கராஜுடன் ஷண்முகசுந்தரம்

Shunmugasundaram-MLA.Thangaraj-Navagraha Nayagi 1985-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் சண்முகசுந்தரம்.Shunmugasundaram-Lakshmi Kalyanam 1968-Shunmugasundaram-Lakshmi Kalyanam 1968-1

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் நடிகர் திலகத்துடன் சண்முகசுந்தரம்.Shunmugasundaram-Sivaji-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் சண்முகசுந்தரம்.

Shunmugasundaram-Rajavelu-Lakshmi Kalyanam 1968-1Shunmugasundaram-Rajavelu-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.பி.நிர்மலா, சௌகார் ஜானகியுடன் சண்முகசுந்தரம்.

Shunmugasundaram-Nirmala-Sowkar-Lakshmi Kalyanam 1968-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் விஜயலலிதாவுடன் சண்முகசுந்தரம்Shanmugasundaram-Kaalam Vellum 1970-1Shanmugasundaram-Kaalam Vellum 1970-Shanmugasundaram-Vijayalalitha-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் ஜெய்சங்கருடன் சண்முகசுந்தரம்Shanmugasundaram-Jaisangar-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் விஜயலலிதா, கே.கண்ணன், உசிலைமணி, ஜெய்சங்கருடன் சண்முகசுந்தரம்Shanmugasundaram-Jaisangar-Vijayalalitha-K.Kannan-Kaalam Vellum 1970-

“தேவியின் திருவிளையாடல்” 1982 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் சண்முகசுந்தரம் shunmugasundaram-deviyin-thiruvilayadal-1982-1shunmugasundaram-deviyin-thiruvilayadal-1982shunmugasundaram-trr-deviyin-thiruvilayadal-1982shunmugasundaram-trr-deviyin-thiruvilayadal-1982-1

“தாலியா சலங்கையா” 1977 படத்தில் சண்முக சுந்தரத்துடன் வாணிஸ்ரீShunmugasundaram-Thaaliya Salangaiyaa 1977-1Shunmugasundaram-Thaaliya Salangaiyaa 1977-2Shunmugasundaram-Thaaliya Salangaiyaa 1977-Shunmugasundaram-Vanisri-Thaaliya Salangaiyaa 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் ஜெயலலிதாவுடன் ஷண்முக சுந்தரம்

Shunmugasundaram-Unnai Sutrum Ulagam 1977-Shunmugasundaram-Jayalalitha-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் தாம்பரம் லலிதா, ஜெயலலிதாவுடன் ஷண்முக சுந்தரம்

Shunmugasundaram-Jayalalitha-Thambaram Lalitha-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் ஸ்ரீதேவி, ஜெயலலிதாவுடன் ஷண்முக சுந்தரம்

Shunmugasundaram-Jayalalitha-Sreedevi-Unnai Sutrum Ulagam 1977-51

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் சண்முக சுந்தரம்Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-3Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-4Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-2Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-1

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் சண்முக சுந்தரத்துடன் அஞ்சலி தேவிShunmugasundaram-Anjalidevi-Pozhuthu Vidinchachu 1984-

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் சண்முக சுந்தரத்துடன் ஜி.தனபால், உசிலைமணி,சுலக்‌ஷனா

Shunmugasundaram-G.Dhanapal-Senchi Krishnan-Sulakshna-Usilaimani-Pozhuthu Vidinchachu 1984-58

”பொண்ணுக்கேத்த புருஷன்” 1992 படத்தில் ராஜுவுடன் சண்முக சுந்தரம்Shunmugasundaram-Ponnukethapurusan 1992-Shunmugasundaram-Ponnukethapurusan 1992-1Shunmugasundaram-Rajeev-Ponnukethapurusan 1992-

”பொண்ணுக்கேத்த புருஷன்” 1992 படத்தில் ராமராஜனுடன் சண்முக சுந்தரம்Shunmugasundaram-Ramarajan-Ponnukethapurusan 1992-

”பொண்ணுக்கேத்த புருஷன்” 1992 படத்தில் ராமராஜனுடன்  வி.கோபாலகிருஷ்ணன்

Shunmugasundaram-V.Gopalakrishanan-Ponnukethapurusan 1992-63

”உன்னைத்தேடி” 1999 படத்தில் ராஜீவ், ஜெய்கணேஷ், மனோரமாவுடன் சத்யபிரியாShanmugasundaram=Manorama -Rajeev-Unnaithedi 1999-64

‘வைகறை பூக்கள்’ 1995 படத்தில் சாமிக்கண்ணு, விஜயலட்சுமியுடன் ஷண்முகசுந்தரம்Shunmugasundaram-Vaigarai Pookal 1995-01Shunmugasundaram-Vaigarai Pookal 1995-Shunmugasundaram-Vijayalakshmi-TM.Samikkannu-Vaigarai Pookal 1995-67

’சிங்கார வேலன்’ 1992 படத்தில்  ஷண்முகசுந்தரம்Shunmuga Sundaram-Singaravelan 1992-68

’செவத்தப் பொண்ணு’ 1994 படத்தில் பிரேமி, வாசு விக்ரமுடன் சண்முகசுந்தரம்Shunmugasundaram-Sevathapponnu 1994-Shunmugasundaram-Vasu Vikram-Sevathapponnu 1994-Premi-Shunmugasundaram-Sevathapponnu 1994-71

9 comments on “Shunmugasundaram

  1. கிரேட் சஹாதேவன் சார்
    ஊமை விழிகள் படத்தில் கிழவியின் வேடத்தில் வருபவர் யார் என மண்டையை உடைத்து கொண்டு இருந்தேன்
    இந்த பதிவின் மூலம் எஸ் R ஜானகி என்று அறிந்து கொண்டேன்
    மிக்க நன்றி

    • எஸ்.ஆர்.ஜானகியைக் குறித்து தனியாகப் பதிவு செய்துள்ளேனே…….

  2. ‘அம்மா காமாட்சி, வந்துருக்குற புள்ளைகளுக்கு காப்பித் தண்ணி குடுமா…’-காலத்தால் மறையாத சண்முகசுந்தரம்

  3. பழம்பெரும் நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார். கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நாயகி கனகாவின் அப்பாவாக நடித்தவர் நடிகர் சண்முகசுந்தரம்.

  4. ரத்தத்திலகம், கறுப்புப்பணம் போன்ற கண்ணதாசன் படங்களிலேயே இவரை பார்க்கலாம்.
    கர்ணன் படத்தில் சல்லியன்.தான் சண்முகசுந்தரம்!
    மிகை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.
    சண்முகசுந்தரமும் ரமாப்ரபாவும் தம்பதிகள். மூன்று குழந்தைகள்.

    சரத்பாபுவுடன் ‘தொடுப்பாகி’ ரமாப்ரபா சண்முகசுந்தரத்தை விட்டுப்பிரிந்து விட்டார்.
    image: https://3.bp.blogspot.com/-pqHR-DzluWM/VR1tVwhHP7I/AAAAAAAAAw0/RKQPnwGzY6k/s1600/sarathbabu-ramaprabha.jpg

    சரத் பாபு – ரமாப்ரபா தம்பதியர் பாலச்சந்தரின் 47 நாட்கள்(சிவசங்கரி கதை) படத்தில் தம்பதியராகவே தலை காட்டினார்கள்.

    ராஜ்பரத் படம்”உச்சக்கட்டம்” – சரத்பாபு வில்லத்தனமான கதா நாயகன்.

    கே. பாலச்சந்தர் இந்த சரத்பாபுவைப்பற்றிசிலாகித்து சொன்ன வார்த்தைகள் ” Every inch, Sarat Babu is a gentleman!”

    நிஜ வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலேயே ‘ ஜெண்டில் மேன்’ பாத்திரங்களுக்கு ஒரு நடிகர்.
    சரத் பாபு வின் குரலில் ஒரு கண்ணியம் உண்டு.

    கமல் படங்கள் ” சட்டம்” “சலங்கை ஒலி” படங்களில் கமலின் நண்பனாக,
    ரஜினி படங்கள் “அண்ணாமலை” “முத்து” – முக்கிய பாத்திரத்தில் சரத் பாபு.

    சரத்பாபு படங்களை பட்டியல் போட வரவில்லை.

    கங்கை அமரன் இயக்கிய ஒரு படத்தில் சரத் பாபுவும் சண்முகசுந்தரமும் ஒரே காட்சியில் நடித்திருக்கிறார்கள்.

    சரத் பாபு ரமாப்ரபா ஜோடி பிரிந்தது. 1988 ல் விவாகரத்து.

    மீண்டும் சம்சார வாழ்க்கை சரத்பாபுவுக்கு ஏற்பட்டது.
    எம். என்.நம்பியாரின் மகள் சினேகலதா. இவருக்கு முதல் திருமணம் கோவிந்த மேனன் என்பவருடன் 11.12.1968ல் நடந்து பின் தோல்வியில் முடிந்தது.
    சரத் பாபுவின் 37வது வயதில்சினேகலதாவை சென்னை போட் கிளப்பில் சந்தித்தாராம். 02.07.1990ல் இருவருக்கும் இரண்டாவது திருமணம்!

    2014ல் சரத் பாபுவுக்கு 62 வயது. சினேகலதாவுக்கு 60 வயது.
    “சரத் பாபுவால் கடும் உளைச்சல். மனரீதியாக துன்புறுத்துகிறார். அவருக்குள்ள 20 கோடி சொத்தில் உள்ள எனது பங்கை நான் மீட்கவேண்டும். ”
    -விவாகரத்து வழக்கு தொடுத்தார் சினேக லதா.

    சென்ற வருடம் சரத் பாபு ” நான் இப்போதும் 35 வயதுக்காரனாகத் தான் உணர்கிறேன். நான் மீண்டும் திருமணம் செய்யப்போகிறேன். எனக்கு மனைவியாக வருபவர் பத்திரிக்கை பின்புலம் கொண்டவர்” என்று பேட்டி கொடுத்தார்.

  5. நான் அறியாத பல தகவல்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன திரு.சேதுராமன். நிச்சயமாக இவரது மனைவிதான் ரமாபிரபா என்பது இப்போது தான் எனக்குத் தெரியவருகிறது. சரத்பாபுவின் மனைவியாகத்தான் அவரை எனக்குத் தெரியும். நீண்டகாலம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தவர்கள் சரத்பாபு-ரமாபிரபா தம்பதி. இப்போது விவாகரத்தாகிவிட்டாலும் நீண்டகாலம் ஒற்றுமையாக இருந்தவர்கள் என்பதினை மறுக்கமுடியாது.

Leave a comment