Kalyan Kumar

கல்யாண் குமார்– (பிறப்பு 1929 – இறப்பு-1.8.1999) வயது-70- இவர் தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் பின்னாளில் குணச்சித்திர நடிகராகவும் பரிணமித்தவர். கன்னடத்தில் பிரபல Continue reading

”Thayir Vadai” Desigan

 “தயிர் வடை” தேசிகன் [சி.எஸ்.தேசிகன்] – பழம்பெரும் தமிழ்ப்பட நகைச்சுவை நடிகர். நீதி, சோப்பு சீப்பு கண்ணாடி, ராஜா, திலகம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, உயர்ந்த மனிதன், வாலிப விருந்து, பட்டணத்தில் பூதம், திசை மாறிய பறவைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒல்லியான தேகம் கொண்ட இவரைத் திரையில் பார்த்த மாத்திரத்திலேயே சிரிப்பு வரும்.

Continue reading

Typist Gopu

”டைப்பிஸ்ட்” கோபு. மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தற்போது சுமார் 82 வயதாகியிருக்கலாம்.சென்னை, இராயப்பேட்டையில் வசிக்கிறார். நடக்க இயலாத நிலையிலிருப்பதால் திரைப்படங்களில் இவர் நடிப்பதில்லை. இவரது சொந்த ஊர் லால்குடி. Continue reading

Padma Priya

பத்மபிரியா

காரோட்டிக்கண்ணன் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.தொடர்ந்து உறவு சொல்ல ஒருவன், சொர்க்கம் நரகம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், வாழ்ந்து காட்டுகிறேன், வைர நெஞ்சம் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 1983-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமானது. இவரது கணவர் பெயர் சீனிவாசன். இவர்களுக்கு வசுமதி என்ற ஒரே பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கை இவருக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. Continue reading

Magic Radhika

”மாஜிக்” ராதிகா – இவரது பெற்றோரது பூர்வீகம் கேரள மாநிலம் கோட்டயம். இவரது சகோதரியர் கோட்டயத்தில் பிறந்திருந்தாலும் ராதிகா பிறந்தது சென்னையில். சென்னையிலுள்ள குட்ஷெப்பர்டு கான்வெண்டில்தான் இவர் படித்தார். இவருக்கு மலையாளத்தைவிட தமிழே நன்கு தெரியும். ஹீராலால், கோபி கிருஷ்ணா, லக்ஷ்மி நாராயணன் போன்றோரிடம் முறையாக நாட்டியம் கற்றுக் கொண்டார்.  அப்போது இவருக்கு எப்படியேனும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இவர் கிளாசிக்கல் டான்ஸ் பலவற்றை நடத்திக் கொண்டிருந்தார். அதைக் காண பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு முறை இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் Continue reading

Kalpana

கல்பனா- 8.7.1943-இல் பிறந்து 12.5.1979 இல் இறந்தார்.வயது-36. தமிழ்ப் படங்களில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாது மிரண்டால், கட்டிலா தொட்டிலா போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார், மலையாளத்தில் ஸ்கூல் மாஸ்டர், காட்டு மல்லிகா போன்ற படங்களிலும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாகவும்  நடித்தவர்.தெலுங்கு மொழியிலும் பிரதான கதாநாயகர்களுடன் சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1979-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கல்பனா குறித்த மேலும் விவரங்கள் கீழே ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகியிருந்ததைக் காணலாம். Continue reading

“Kallappart” T.R.Nadarajan

கள்ளப்பார்ட் நடராஜன் – மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானா மோகனாம்பாள், கெட்டிக்காரன்,தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான்  போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். நடனத்திலும் கைதேர்ந்தவர்.தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பு சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களிலும் Continue reading

Thideer Kannaiah

திடீர் கன்னையா (வயது-77) துணை நடிகர். காரோட்டிக்கண்ணன், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனார். இப்படத்தில் இவர் பேருந்து நடத்துநராக நடித்திருப்பார்.
அவள் ஒரு தொடர் கதை, அபூர்வ ராகங்கள், ஏட்டிக்குப் போட்டி,காரோட்டிக்கண்ணன், என்னப்பெத்த ராசா உட்பட 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சென்னை, பெரம்பூர் ரெயில்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டே Continue reading

‘Pakoda’ Kadhar (Kadhar)

காதர் என்ற பக்கோடா காதர்

தமிழ்த் திரையுலகில் மறக்க இயலாத நடிகர்களில் இவரும் ஒருவர். குள்ளமாகவும் வண்ணமான உடல்வாகையும் கொண்டவர். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் Continue reading

Karikol Raju

கரிக்கோல் ராஜ்– நீதிபதி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ரிக்‌ஷாக்காரன் குமரிக்கோட்டம், கலைக்கோயில்,யாருக்கு சொந்தம் போன்ற 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் குணச்சித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்தவர்.இறுதியாக ஒரு தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்றவர் தான்.திரும்பி வரவேயில்லை. என்ன ஆனார் என்பது இன்று வரை மர்மம். Continue reading