Rajashree [ Karuthamma Rajashree ]

ராஜஸ்ரீ [கருத்தம்மா ராஜஸ்ரீ]

இவரது இயற்பெயர் மாதவி. இவர் 1994-ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘கருத்தம்மா படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு, அம்மன் கோயில் வாசலிலே, முறை மாப்பிள்ளை, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, வைகறை பூக்கள், அசோகவனம், இலக்கணம் உள்ளிட்ட 57 தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். Continue reading

Advertisements

Bharath

பாரத்

1993-ஆம் ஆண்டு ரகு வியாஸ் என்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளி வந்த ‘’ மின் மினிப் பூச்சிகள்’’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த பாரத் என்ற நடிகர். இதே படத்தில் தான் இன்றைய யுவராணி, பார்கவி என்ற பெயரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பார்கவி பின்னர் யுவராணி என்ற பெயர் மாற்றத்துக்குப் பின் பிரபலமடைந்தார். Continue reading

Chinthamani

சிந்தாமணி

1987-ஆம் ஆண்டில் நடிகர் , இயக்குநர் பாண்டியராஜன் இயக்கியும், தயாரித்ததுமான ‘மனைவி ரெடி’ என்ற படத்தில் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் இந்த சிந்தாமணி. இந்தப் படம் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. அதனால் இவரும் பிரபலமாகவில்லை. Continue reading

Tamil cinema comedy actor Krishnamoorthy passed away

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்புத் தளத்தில் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இன்று தனது 55-ஆவது வயதில் அகால மரணமடைந்தார். Continue reading

Nadesaiya-R

நடேசய்யா

1942-ஆம் ஆண்டு ஏவி.எம். தனது சரஸ்வதி சினி பிலிம் லெபரட்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, சுந்தர்ராவ் நட்கர்னியுடன் இயக்கி வெளியிட்டு மாபெரும் வெற்றியடைந்த ‘’என் மனைவி’’ படத்தைப் பார்த்தவர்கள் இவரை இன்னமும் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படத்தில் எஜமானர் கே.சாரங்கபாணி, எஜமானி கே.ஆர்.செல்லம் ஆகியோரின் வீட்டு சமையல்காரர் சுப்புவாக நடித்துப் பார்ப்பவர்களைத் தனது அபார நகைச்சுவையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்த நடேசய்யா. Continue reading

R.N.Jayagopal [Actor | Lyricist | Screenplay | dialogue Writer | film director ]

ஆர்.என்.ஜெயகோபால் [ நடிகர் | பாடலாசிரியர் | இயக்குநர் ]

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்ற நடிகர் ஆர்.நாகேந்திர ராவின் மகனாவார். அத்துடன் பிரபல வில்லன் நடிகர் ஆர்.என்.சுதர்ஸனம், ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் ஆகியோரது உடன் பிறந்த சகோதரர் ஆவார். Continue reading

Famous writer Maharishi Passed away due to ill health

‘என்னதான் முடிவு’ திரைப்படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் தனது 87-ஆவது வயதில் சேலத்தில் காலமானார்.

Continue reading

R.N.Krishna Prasad [Actor | Cinematographer | Film director | Producer]

ஆர்.என்.கிருஷ்ண பிரசாத் [நடிகர் | ஒளிப்பதிவாளர் | இயக்குநர் ]

இவரது இயற்பெயர் ரத்திஹள்ளி நாகேந்திர ராவ் கிருஷ்ண பிரசாத். 1929-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் , மைசூருவில் பிறந்தவர். கன்னடத்திலும், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் வில்லனாக புகழ்பெற்றிருந்த நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் அவர்களின் மகனாவார். இவருடன் பிறந்தவர்கள் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக தென்னிந்திய மொழிகளில் திகழ்ந்த நடிகர் ஆர்.என்.சுதர்ஸனம், மற்றும் நடிகர் ஆர்.என்.ஜெயகோபால் இருவருமாவர். Continue reading

Shabnam

ஷப்னம்

இவரது இயற்பெயர் ஜர்னா பசக். வங்காளப் பிரதேசம், முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவில் டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இந்து வங்காளிக்குடும்பத்தில் பிறந்த இவர் வங்காளத்திலும், பாகிஸ்தானிலும் மேடை மற்றும் திரைப்பட நடிகையாகவும் விளங்கியவர். Continue reading

Famous Malayalam Villain Actor Sattar Death

பிரபல மலையாள வில்லன் நடிகரும், பிரபல நடிகை ஜெயபாரதியின் முன்னாள் கணவருமான சத்தார் உடல்நலக்குறைவால் தனது 67-ஆவது வயதில் காலமானார். Continue reading