Tamil actor Florent C Pereira passes away @ 67

மூத்த ஊடகவியலாளரும், புதிய கீதை, கயல், என்கிட்டே மோதாதே, தொடரி, வேலையில்லா பட்டதாரி’ உட்பட, ௫௦க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா, வயது 67, கொரோனா பாதிப்பால் காலமானார்.

நடிகர் ப்ளோரன்ட் பெரேரா கொரோனா பாதிப்பால் மரணம்

செப் 16, 2020

சென்னை:மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா, 67, கொரோனா பாதிப்பால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துரைச் சேர்ந்தவர், பிரபல குணச்சித்திர நடிகர் ப்ளோரன்ட் பெரேரா. இவர், ‘புதிய கீதை, கயல், என்கிட்டே மோதாதே, தொடரி, வேலையில்லா பட்டதாரி’ உட்பட, ௫௦க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்த, மூத்த ஊடகவியலாளரான ப்ளோரன்ட் பெரேரா, கலைஞர், ‘டிவி’யில், முன்னாள் பொது மேலாளராகவும், விஜய், ‘டிவி’ உள்ளிட்ட சில ஊடகங்களில், முக்கிய நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க காப்பாளராகவும் இருந்துள்ளார். மாவீரன் கிட்டு, தர்மதுரை ஆகிய படங்களில், சிறந்த நடிப்பிற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் பாராட்டுகளை, ப்ளோரன்ட் பெரேரா பெற்றுள்ளார். சமீபத்தில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

சில தினங்களுக்கு முன், ப்ளோரன்ட் பெரேராவுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.அவர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவியும், யோகேஸ்வரன் என்ற மகனும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர்.

அவரது மறைவு குறித்து, இயக்குனர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:கலைஞர், ‘டிவி’ முன்னாள் பொதுமேலாளரான, ப்ளோரன்ட் பெரேராவின் மரணம், என்னால் நம்ப முடியவில்லை. அவர் நல்ல மனசுக்கு சொந்தக்காரர். என்றும் என் நினைவில் வாழும், உங்களுடைய ஆன்மா சாந்திய அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

நன்றி:- https://www.dinamalar.com/news_detail.asp?id=2614585

2 comments on “Tamil actor Florent C Pereira passes away @ 67

    • தகவலுக்கு மிக்க நன்றி bibmilikki bilappi. செய்தி பிரசுரிக்கப்பட்டது.

Leave a comment