Dhanush’s Thiruda Thirudi Producer Krishnakanth passes away @ 52

தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், விக்ரம் நடித்த கிங், துஷ்யந்த் நடித்த மச்சி, உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். கடைசியாக விவேக் முதன் முறையாக கதாநாயகனாக நடித்த சொல்லி அடிப்பேன் என்ற படத்தை அவர் தயாரித்திருந்தார். இவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அன்னாரது வயது 52.

திருடா திருடி படத் தயாரிப்பாளர் காலமானார்

By DIN  |   Published on : 01st October 2020 11:41 AM

தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 52.

திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களைத் தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கிருஷ்ணகாந்த் சமீபகாலமாக எந்தப் படங்களையும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியுள்ளார்.

டி. ராஜேந்தர், திருடா திருடி இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Source:-https://www.dinamani.com/cinema/cinema-news/2020/oct/01/dhanushs-thiruda-thirudi-producer-krishnakanth-3476196.html

நடிகர்கள் விக்ரம், தனுஷ், சிம்பு படத் தயாரிப்பாளர் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்

தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், விக்ரம் நடித்த கிங், துஷ்யந்த் நடித்த மச்சி, உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். கடைசியாக விவேக் முதன் முறையாக கதாநாயகனாக நடித்த சொல்லி அடிப்பேன் என்ற படத்தை அவர் தயாரித்திருந்தார்.இந்த படம் வெளியாகவில்லை.

கிருஷ்ணகாந்த் தயாரித்த படங்களில் ஒரு சில தவிர மற்றவை தோல்வியில் முடிந்ததால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இவர் ஆரம்ப காலத்தில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றி இருந்தார்.

இந்தநிலையில், சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கிருஷ்ணகாந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்ததில், கிருஷ்ணகாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மறைந்த கிருஷ்ணகாந்துக்கு லட்சுமி என்ற மனைவியும் சந்திரகாந்த், உதயகாந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர் இறுதிச்சடங்கு இன்று மாலை [1.10.2020] ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் நடக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையைச் சேர்ந்த பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது திரைத்துறையினரை மட்டுமின்றி ரசிகர்களையும் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
Source;-https://www.malaimurasu.in/2020/10/01/cinema-producer-krishnakanth-passes-away/

7 comments on “Dhanush’s Thiruda Thirudi Producer Krishnakanth passes away @ 52

  1. I saw yathartham ponnusami Pillai post in this blog.iam his great grand daughter.so happy to see that article first of all thank u so much.i would like to abt that more in detail.pls reply to my comment..

    • நீங்கள் இவ்வாறு கூறியிருப்பதே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. பெரும்பாலும் மூத்த நடிகர்களின் வாரிசுதாரர்கள் பலர் வருகை தந்து தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அந்த ஒரு முறைக்குப் பின் இவ்வலைப்பூவை அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஏதேனும் விவரங்கள் கேட்டாலும் பதில் தருவதில்லை. அதனால் நானும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆதலால் விரிவாக நீங்கள் கூறவேண்டுமென உங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருப்பதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு.

  2. வேர்ட் பிறஸ்.காம் புதியதாக பதிவேற்றம் செய்யமுடியாதபடி தடுத்துவிட்டது. குறிப்பிட்ட எம்.பி.க்கள் மீதமிருந்த நிலையில் தடுக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு பதிவேற்றம் செய்வதாயின் வேர்ட் பிறஸ் நிறுவனத்தில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே புதிய பதிவேற்றம் செய்ய இயலாத நிலை.

Leave a comment