Bharani (Alias) Bharani Kumar [Disigner-Actor-Director)

பரணி என்ற பரணி குமார் [வடிவமைப்பாளர்-நடிகர்-இயக்குநர்] 

இவர் ஒரு பிரபலமான வடிவமைப்பாளர். சுவரொட்டிகள், திரைப்படத் தலைப்புக்கள் வடிவமைப்பாளர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான புன்னகை, நவக்கிரஹம், அவள் ஒரு தொடர் கதை, மூன்று முடிச்சு, மன்மத லீலை, புன்னகை மன்னன், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. மனதில் உறுதி வேண்டும், பொய்க்கால் குதிரை, பெண்மணி அவள் கண்மணி, நூற்றுக்கு நூறு, அக்னி பரீட்சை, நான் காந்தி அல்ல! உள்ளிட்ட பல கே.பாலசந்தரின் திரைப்படங்களுக்கு இவரே வடிவமைப்பாளர். Continue reading

Advertisements

Kalaranjini [Actress,Dancer]

கலாரஞ்சனி [நடிகை-நாட்டியக் கலைஞர்]

இவரை மலையாளத் திரையுலகிற்குக் கொண்டு வந்தவர் ஸ்ரீகுமாரன் தம்பி என்ற இயக்குநர். இவரது உடன் பிறந்தவர்கள் காலஞ்சென்ற நடிகை கல்பனா, ஊர்வசி. தம்பிமார் கமல் ராயும், பிரின்சும் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமானவர்கள். ஆனால் இவ்விருவரும் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டனர். Continue reading

Kalpana [Playback Singer-Actress]

கல்பனா [பின்னணிப் பாடகி மற்றும் நடிகை]

இவர் பிரபல குணச்சித்திர நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான ரி.எஸ்.ராகவேந்திரா [விஜயரமணி] என்பவரின் இளைய மகளாவார். பி.இ., எம்.சி.ஏ., எம்.பில் படித்தவர். இவருக்கு ஷகிலா ஷான் என்ற ஒரு தங்கையும் உள்ளார். இவரது தாயார் சுலோச்சனா. இவரும் மெல்லிசைக் கச்சேரிகளில் பாடியவர். Continue reading

Mansoor Ali Khan [Villain Actor-Producer-Director-Music Composer]

மன்சூர் அலி கான் [வில்லன் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்]

1991-ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ‘வேலை கிடைச்சிருச்சு’ படத்தின் மூலமாக தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானவர் மன்சூர் அலிகான். விஜயகாந்துடன் ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ [1991] திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். Continue reading

Divya Bharti

திவ்யா பார்தி

மகாராஷ்ட்ர மாநிலம், மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திவ்யா பார்தி. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தவர். குறுகிய காலமே திரையுலகில் நீடித்தவர். எனினும் முதல்தர நடிகையாகத் திகழ்ந்தவர். Continue reading

Master Suresh

மாஸ்டர் சுரேஷ்

கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1981-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மௌன கீதங்கள்’ படத்தினைக் கண்டு களித்தவர்கள் இச்சிறு நாயகனை அத்தனை எளிதில் மறக்க இயலாது. இப்படத்தில் இவர் கே.பாக்யராஜ்-சரிதா தம்பதியின் மகனாக மிக அருமையாக நடித்திருப்பார். Continue reading

Ganga

கங்கா

1983-ஆம் ஆண்டில் ரி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ”உயிருள்ள வரை உஷா”, பி.மாதவனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான “கரையைத் தொடாத அலைகள்”, விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் சாவித்திரி”, 1986-ஆம் ஆண்டில் Continue reading

Priyadharshini

பிரியதர்ஷினி

கே.பாக்யராஜின் இயக்கத்தில், தயாரிப்பில் 1984-ஆம் ஆண்டில் வெளியான தாவணிக் கனவுகள் படம் பார்த்தவர்களுக்கு ஞாபகமிருக்கும் இந்த பேபி நடிகையை. கே.பாக்யராஜின் ஐந்து தங்கைகளில் ஒருவராக இவர் வருவார். எனினும் மற்றவர்களைப் பின் தள்ளிவிட்டு நடிப்பில் அசத்தியதால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர். Continue reading

K.L.V.Vasantha

கே.எல்.வி.வசந்தா

தமிழ் சினிமாவிலும் திரைக்கதை உண்டு, அதற்கு இணையான பிரம்மாண்டம் உண்டு என்பதை உலகத்துக்கு உரக்கச் சொன்ன முதல் படம் வாசன் இயக்கித் தயாரித்த ‘சந்திரலேகா’. ஆம்! ‘சந்திரலேகா’ படத்தின் கால அளவைக் குறைத்து, அதன் ஆங்கில மொழியாக்கப் பதிப்பை,

Continue reading

R.P.Lakshmi Devi [Actress]

ஆர்.பி.லட்சுமி தேவி

சென்னை மாகாணம், வடசென்னையைச் சேர்ந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் ஆர்.பி.லட்சுமி தேவி. சென்னையில் எடுக்கப்பட்ட முதல் படமான ஏ.நாராயணனின் “ஸ்ரீநிவாச கல்யாணம்’ படத்தில் நடித்தவர். 1936-இல் ”தர்மபத்தினி“, 1937-இல் “டேஞ்சர் சிக்னல்”, இதே ஆண்டில் “’பக்கா ரௌடி” என்று பெயர் மாற்றப்பட்ட “தஞ்சாவூர் ரௌடி”, 1939-இல் Continue reading