Ramu Kariat [Director and Producer]

ராமு காரியத் [இயக்குநர் | தயாரிப்பாளர்]

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராமு காரியத். இவரது பிறப்பிடம் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சேத்துவா என்ற கடற்கரை கிராமம். தந்தை குஞ்ஞய்யப்பன், தாயார் கார்த்தியானி. 01 பிப்ரவரி 1927 அன்று பிறந்தார். எங்கண்டியூர் தொடக்கப்பள்ளி மற்றும் கந்தசம்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

Madurai Thirumaran [Story | Screenplay | Dialogue Writer | Director]

மதுரை திருமாறன் [கதை, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குநர்]

தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர். 50 படங்களுக்கும் மேல் இயக்கியவர். இவரது படங்களில் பெரும்பாலானவற்றில் கதாநாயகனாக நடித்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

M.Krishnan [M.Krishnan Nair] – (Director)

எம். கிருஷ்ணன் [எம்.கிருஷ்ணன் நாயர்] [இயக்குநர்]

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் இவர். மாதவன் பிள்ளை, தங்கம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். நவம்பர் இரண்டாம் நாள் 1926-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்று இருபது படங்களை இயக்கியுள்ளார். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

V.Sekar [ Film director | Producer ]

வி.சேகர் [இயக்குநர் / தயாரிப்பாளர்]

இயக்குநர் விசுவிடம் உதவியாளராக இருந்தவர் வி.சேகர். இவரது படங்களும் குடும்பப் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களாகத்தான் இருக்கும். இவர் முதன் முதலாக இயக்கிய படம் ‘நீங்களும் ஹீராதான்’. இப்படம் 1990-இல் வெளி வந்தது. Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

Manobala [ Actor | Director]

மனோபாலா [ நடிகர் | இயக்குநர் | தயாரிப்பாளர் ]

கோயமுத்தூரையடுத்த சூலூர் என்பதே இவர் பிறந்த ஊர். பாரதிராஜாவின் உதவி இயக்குநராக 1979-ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 40 திரைப்படங்கள் வரை இயக்கியுள்ளார். அத்துடன் 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர் இவர். Continue reading

K.S.Ravikumar [Film actor, director, screenwriter, producer]

கே.எஸ்.ரவிகுமார் [நடிகர் | இயக்குநர் | திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர்]

விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிப் படமான ‘புது வசந்தம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் கே.எஸ்.ரவிகுமார். இவருக்குப் பட அதிபர் ஆர்.பி.சௌத்ரி ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். அப்படம் தான் புரியாத புதிர். இது 1990-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாயின. இவர் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக மாறினார். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

Mahendran.J [Literary editor, Director, Screenwriter, Actor]

மகேந்திரன் [நடிகர், கதை, வசனகர்த்தா, இயக்குநர்]

இவரது இயற்பெயர் அலெக்சாண்டர். முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த ‘நிறைகுடம்’ படத்தின் கதை, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ் நடித்த நாம் மூவர் , ஜெய்சங்கர் நடித்த சபாஷ் தம்பி, ரவிச்சந்திரன் இரட்டை வேடங்களில் நடித்த பணக்காரப் பிள்ளை , ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த திருடி , ஜெய்சங்கர் நடித்த கங்கா , சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ஹிட்லர் உமாநாத் போன்ற படங்களின் கதையை எழுதியவர் இவர்.
Continue reading

T.N.Balu [Director | Story,Dialogue Writer | Producer]

ரி.என்.பாலு [கதை, வசனகர்த்தா | இயக்குநர் | தயாரிப்பாளர்]

இவர் ஒரு ஜனரஞ்சக இயக்குநர். சிவாஜி கணேசன் நடித்த அஞ்சல் பெட்டி 520 [1969], ரவிச்சந்திரன் நடித்த மீண்டும் வாழ்வேன் [1971], கமலஹாசன் நடித்த “உயர்ந்தவர்கள்” [1977] படங்களுக்கு வசனம் எழுதியதுடன் இயக்கியுமுள்ளார். ஜெய்சங்கர் நடித்த மனசாட்சி [1969] கதை, வசனம் எழுதியுடன் இயக்கியுமுள்ளார், ரவிச்சந்திரன் நடித்த ஏவி.எம்.மின் ”அதே கண்கள்” படத்திற்கு வசனம் மட்டும் எழுதியுள்ளார்.  Continue reading

Sundar Rao Nadkarni [Actor, editor, cinematographer, producer and director]

சுந்தர் ராவ் நட்கர்னி [நடிகர், தயாரிப்பாளர், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்]

கதை, இசை, நடிப்பு, இயக்கம், படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கி 1944-இல் வெளியாகி ஒரே திரையரங்கில் மூன்று தீபாவளிகளைக் கண்ட மாபெரும் வெற்றிச் சித்திரமான “ஹரிதாஸ்” படத்தை இயக்கியவர்தான் இந்த சுந்தர் ராவ் நட்கர்னி. Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

G.Ramakrishnan [Producer-Director-Dialogue writer]

ஜி.ராமகிருஷ்ணன் [தயாரிப்பாளர்-இயக்குநர்-வசனகர்த்தா]

பிரபல இயக்குநர்களான கே.ராம்நாத், எல்.வி.பிரசாத் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர். இயக்குநர் கே.பாக்கியராஜ் முதன் முதலில் இவரிடம் தான் உதவியாளராகச் சேர்ந்தார். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors