Mano [Playback Singer | Actor | Producer | Stage Artiste | Voice Dubbing]

மனோ [பின்னணிப் பாடகர் | நடிகர் | தயாரிப்பாளர் | பின்னணி குரல் கொடுப்பவர்]

இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர். Continue reading

Uma Ramanan [Playback Singer]

உமா ரமணன் [பின்னணிப் பாடகி]

1980-1990-களில் பின்னணிப் பாடகியாக திரையிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைகளிலும் கலக்கியவர் உமா ரமணன். எம்.ஏ., பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரி நாட்களில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். விமானப் பணிப்பெண்ணாக ஆகவேண்டுமென்பதே கனவாகயிருந்தது இவருக்கு. Continue reading

B.S.Sasirekha [Playback Singer]

பி.எஸ்.சசிரேகா [பின்னணிப் பாடகி]

இவர் முதன்முதலாக பின்னணிப் பாடியது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையில் 1973-ஆம் ஆண்டில் வெளிவந்த “பொண்ணுக்குத் தங்கமனசு” என்ற படத்தில். பாடல் “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த பொன்னியம்மா” என்ற பாடல். இப்பாடலில் இவருடன் இணைந்து பாடியவர்கள் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும் ஜானகியும். இப்பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல். Continue reading

A.G.Rathnamala [Playback Singer | Stage Actress]

A.G.ரத்னமாலா [பின்னணிப்  பாடகி, நடிகை]

ஏ.ஜி.ரத்னமாலா கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். இனிமையான குரல் வளம் படைத்தவர். திறமையான பின்னணிப்  பாடகி. வானொலிகளில் இவரது பெயரில் முதல் எழுத்துக்கள் இரண்டில் ஜி என்ற எழுத்து குறிப்பிடப்படுவதில்லை. திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், ரி.வி.ரத்னம், ஜே.பி.சந்திரபாபு, சிதம்பரம்.எஸ்.ஜெயராமன் போன்ற எத்தனையோ பிரபல பாடகர்கள்,பாடகிகளுடன் இணைந்து காலத்தால் அழியாத பற்பல மனங்கவர்ந்த பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். Continue reading

T.K.Kala [Playback Singer/Actress/Dubbing Artiste]

ரி.கே.கலா [பின்னணிப் பாடகி, நடிகை, பின்னணிக் குரல் கலைஞர்]

இவரது சொந்த ஊர் திருத்தணி. இவரது 12-ஆவது வயதிலிருந்தே மேடைக் கச்சேரிகளில் பாடி வருபவர். இவரது பெற்றோரும் நாடக, திரைப்பட நடிகர், நடிகையாவர். இவரது தாயார் பிரபல நகைச்சுவை நடிகை ரி.ஷண்முகசுந்தரி. எம்.ஜி.ஆருடன் என் அண்ணன், கணவன் உள்ளிட்ட 750 படங்களில் நடித்திருந்தவர். ரி.கே.கலாவுடன் பிறந்தவர்கள் நீலா, மாலா, செல்வி ஆகியோர். Continue reading

M.R.Vijaya [Playback Singer]

எம்.ஆர்.விஜயா [ பின்னணிப் பாடகி ]

’ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை…. கோடி கோடியாய் நீ கொண்ட ஆசை’ என்று 1970-இல் ‘’மறு பிறவி” படத்தில் ஒலித்த மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்தான் இந்த எம்.ஆர்.விஜயா. Continue reading

B.Vasantha [Playback Singer]

பி.வசந்தா [பின்னணிப் பாடகி]

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் ரி.ஆர்.சுந்தரம் தயாரித்த கடைசிப் படமான “கொஞ்சும் குமரி”யில் [1963] கே.ஜே.யேசுதாசுடன் ‘ஆசை வந்த பின்னே’ என்ற இனிமையான பாடலை இனிமையாக டூயட் பாடலாக பாடினார் வசந்தா. இருவருக்கும் தமிழ் சினிமாவில் இதுதான் முதல் டூயட். Continue reading

L.R.Anjali [Playback Singer]

எல்.ஆர்.அஞ்சலி [பின்னணிப் பாடகி]

1950-களில் பிரபல கோரஸ் பாடகியாகயிருந்த திருமதி.நிர்மலா என்பவரது இளைய மகள். இவரது மூத்த சகோதரிதான் பிரபல துள்ளிசைப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. இவரது தந்தை பெயர் தேவராஜ். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் பல பாடல்களைப் பாடியவர் இவர். Continue reading

M.S.Rajeshwari [Playback Singer]

‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது. Continue reading

P.Susheela [Playback Singer]

பி.சுசீலா [பின்னணிப் பாடகி]

தமிழுக்கும் அமுதென்று பேர்!….

அமுதைப் பொழியும் நிலவே!…..

மன நாட்டிய மேடையில்……….

நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை,,,,,

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ!……. Continue reading