About (எம்மைப்பற்றி)

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தமது அபார நடிப்பினால் மக்கள் மனதில் தலைமுறைத் தலைமுறையாக இடம் பிடித்திருக்கும் அன்றைய நடிகர், நடிகையர்களைப் பற்றியும் பல திரைப்படங்களில் துணைப்பாத்திரம் ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் நிழலாக பதிவாகியிருக்கும் நடிகர், நடிகையர் பலர் இருப்பர். அவர்களது பெயர் பலருக்குக் குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புள்ளது என்பதாலும் எனக்குத் தெரிந்த ஒரு சிலரின் புகைப்படங்களை இவ்வலைப்பூவில் பதிவு செய்வதன் மூலம் தெரியாமல் இருக்கும் பல கலைஞர்களை அடையாளம் கண்டுகொள்ளச் செய்ய இது ஒரு பாலமாக அமையும் என்பதோடு திறமைசாலிகளான நம் முன்னோர்களைக் கௌரவிக்கவும் ஒரு வழிவகை ஏற்படும் என்ற உன்னத நோக்கத்தில் இவ்வலைப்பூவைத் துவங்கியுள்ளேன். இவ்வலைப்பூவைப் பார்வையிடுவோர் வெறுமனே பார்த்து மட்டும் செல்லாது உங்கள் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்தால் இவ்வலைப்பூவை மென்மேலும் சிறந்த ஒரு வலைப்பூவாக விரிவாக்கம் செய்ய ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும்.
உங்கள் கருத்துக்கள் எமக்கு ஓர் ஊட்டச்சத்து.

மேலும் நடிகர், நடிகையர்களை மாத்திரமல்லாது மும்மொழிகளிலுமுள்ள இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் மற்றும் பல இன்றைய தலைமுறையினர் அறிந்திராத தொழிற்நுட்பக் கலைஞர்களைக் குறித்தும் இவ்வலைப்பூவில் புகைப்படங்களையும், தகவல்களையும் தருவதற்குத் தயாராகவுள்ளேன்.

உங்கள் நல்லாதரவை விரும்பும்,
சகாதேவன் விஜயகுமார். பதிவர்.

There were lot of actors/actresses from Black and white days in Tamil, Malayalam and Telugu Film industry, they had excellent skills in acting, direction, music, lyric writing, singing etc, apart from very famous people in these Industry.  Omg! That was excellent days, it still in my mind.

 As days goes, identity of such people were completely vanished from people from black and white days it self, leaving famous actors/actresses as identity for Classic movies. To make those hidden and vanished people proud also especially for coming generation, who didn’t know there existence, this blog was created. 

 I made my full effort to provide as much details as I can; I hope it is worthy and precious. So viewers leave at least a comment after going through the details. I expect nothing but your appreciation in “words” as comment, which boost me to add more details in future.

Sahadevan Vijayakumar

Author

—————————————————————–

வலைப்பூ துவங்கிய நாள்:- 23.07.2013

168 comments on “About (எம்மைப்பற்றி)

 1. 15 – 09 – 2019 இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாள்

  அறிஞர் அண்ணா அவர்கள் 10 படங்களுக்கு கதை – வசனம் எழுதி, திரையில் இயற்றமிழை வளர்த்துள்ளார்.

  அண்ணா கதை – வசனம் எழுதிய படங்கள்

  1. வேலைக்காரி – 1949 – கதை, திரைக்கதை, வசனம்
  2. நல்லதம்பி – 1949 – கதை, திரைக்கதை, வசனம்
  3. ஓர் இரவு – 1951 – கதை, வசனம்
  4. சொர்க்க வாசல் – 1954 – கதை, வசனம்
  5. ரங்கோன் ராதா – 1956 – கதை
  6. தாய்மகளுக்கு கட்டிய தாலி – 1959 – கதை
  7. நல்லவன் வாழ்வான் – 1961 – திரைக்கதை, வசனம்
  8. எதையும் தாங்கும் இதயம் – 1962 – திரைக்கதை, வசனம்
  9. காதல் ஜோதி – 1970 – கதை, வசனம்
  10. வண்டிக்காரன் மகன் – 1978 – கதை

  • தகவலுக்கு மிக்க நன்றி திரு.பொன்.செல்லமுத்து அவர்களே.

 2. Hello Sir. I recently became a visitor to this blog and I am able to find my favourite actors and actresses here and i am very happy about it.

  There is no information available about a Malayalam actress srikala . She was called Rathidevi in Tamil movies. Her Malayalam movies are Mazhu( Sindhu samaveli like story), Shila,Tharattu and few . In Tamil she acted in Andha June 16 aam naal(available in YouTube), velichathukku vanga(available in YouTube), pappathi with Jaiganesh(movie not available) . I want to know what happened to her,because she completely vanished after 1984 . No news,wiki on her. I will be very happy if i get any information on her. Please help. Thanks

 3. On 19.10.2019 (today),this ANTRUKANDAMUGAM WORDPRESS… blog is crossed 9,00,000 (9 lakhs) views….and still it will be going …going…..to reach infinity.

  This has been achieved only because of your tireless & effective efforts !!

  There is no words to express how much we appreciate your hard work and interest !!

  Keep up this good work !!

  Thank you !!

  வாழ்க வளமுடன் !!

  Sethuraman

  • நன்றி திரு.சேதுராமன். உங்கள் பாராட்டுக்களுக்கு நான் தகுதியுள்ளவனாக இருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் ஊக்கமடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. தொடரட்டும் தங்கள் பங்களிப்பு.

 4. Congratulations to Mr. Sahadevan Vijayakumar…… for his blog reaches 900000+ views today.

  Also… Congratulations to the regular readers of this blog Mr.Senthil, Mrs.Kalyani,Mrs.Mala,,Mrs,Gayathri , Mr, Venkatesh Rajendran and others for keeping this blog always active and dynamic.

  Sethuraman
  One of the regular reader

 5. Happy deepavali wishes to Mr. Sahadevan Vijayakumar

  Happy deepavali wishes to Mr.
  Senthil

  Happy deepavali wishes to all regular readers of this blog.

  Sethuraman

  • தங்களுக்கு நேற்றே நான் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்துவிட்டேன். பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன். தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு.சேதுராமன்.

 6. உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா காமெடி நடிகர் திடீர் மரணம்.. அடுத்த சோகம்!

  சென்னை: வடிவேலு உடன் பல காமெடி சீன்களில் நடித்த நடிகர் ஜெயசந்திரன் காலமானார்.

  நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில், அவருடன் சேர்ந்து பலர் காமெடி செய்வர். அதில் ஒருவர் தான் ஜெயசந்திரன். ஹரி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ஆறு படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து ஜெயசந்திரன் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

  ‘உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா’, எனும் வடிவேலுவின் எவர்கிரீன் வசனம் இடம்பெற்ற காமெடி காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த காமெடியில் இரண்டாவது நபராக வடிவேலுவிடம் வந்து பேசுபவர் தான் ஜெயசந்திரன்.

 7. Dear all,

  Tomorrow night, our blog is going to cross 10,00,000 views.

  Advance congrats to Mr. Sahadevan and all of our regular readers to maintain this blog active.

  Happy & Prosperous new year 2020 to all…!!

  Sethuraman

  • உங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி திரு.சேதுராமன். நமது வலைப்பூவிற்கு நீங்கள் ஆற்றி வரும் நற்பணிகள் ஏராளம் ஏராளம். உங்கள் அத்தனை பேரின் பங்களிப்பு இவ்வலைப்பூவிற்கு ஆணி வேராக திகழ்கின்றது. இன்னும் இன்னும் பல லட்சம் மைல் கல்லைத் தொடுவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிகவும் இன்றியமையாதது. தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்கி பிறக்கவிருக்கும் 2020-ஆம் ஆண்டு மென்மேலும் வளங்கள் பலவற்றை நல்கட்டும் என வாழ்த்துகிறேன்.

 8. பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்
  த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில்
  ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள்
  விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள்
  நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை
  ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும்
  நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள்
  நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌
  எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌
  பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்,,,!!!!

  ‘அன்று கண்ட முகம்’ இணையத்தைப் தோற்றுவித்த சகோதரர் திரு. சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கும், சகோதரர் திரு. செந்தில் அவர்களுக்கும், மற்றும் இந்த இணையத்தினை தினசரி பார்க்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  சேதுராமன்

 9. நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

  நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கே.கே.பி. கோபால கிருஷ்ணன் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியான அனன்யாவின் தந்தையாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் சசிகுமாரிடம் “மாப்பிள இந்த கையில கவர்மெண்ட் ஆர்டரு, இந்த கையில பொண்ணு’ என்று அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நாடோடிகள்-2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

  • நானும் தினத்தந்தியில் பார்த்தேன் திரு.சேதுராமன். விவரம் பிரசுரிக்கப்பட்டது.

  • உடனடி தகவலுக்கு மிக்க நன்றி திரு.சேதுராமன்.

 10. https://m.dinamalar.com/detail.php?id=2511532

  : தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76.

  சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா

  தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

  நாட்டுப்புறப்பாட்டினை திரைத்துறையில், தனது கம்பீரமான குரலாலும், வெள்ளந்தியான மதுரை மண்ணுக்கே உரிய தன் நடை, உடை மற்றும் தன் முகத்தாலும் சமீபத்திய திரை வரலாற்றில் காண்பித்ததில் பெரும் பங்கு மறைந்த பரவை முனியம்மா அவா்களுக்கு சேரும். அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்.

  • உடனடி தகவலுக்கு மிக்க நன்றி திரு.சேதுராமன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s