Legendary playback Singer | Actor SP Balasubrahmanyam passes away at 74

55 ஆண்டுகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடிய ’தேமதுரக்குரலோன்’ பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று [25.9.2020] காலமானார். நாளை தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
சென்னை,
பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74).  திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதைப் புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சியடைந்தனர்.
51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசமடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ஆம் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார்.  பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நன்றி:-https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/25133212/Popular-film-playback-singer-SB-Balasubramaniam-has.vpf

Last Updated: 

Popular Playback Singer SP Balasubrahmanyam Passes Away At The Age Of 74

Popular playback singer SP Balasubrahmanyam passed away on Friday, Sept 25, his son SP Charan informed the media. SPB was admitted in the hospital on August 5.

Popular playback singer S P Balasubrahmanyam passed away on Friday, his son SP Charan informed the media. Addressing the media personnel at the gates of the hospital, SPB’s son said that his father passed away at 1:04 pm and thanked all those who prayed for the singer’s recovery.

The 74-year-old Balasubrahmanyam, popularly known as SPB, admitted on August 5, “remains on ECMO (extracorporeal membrane oxygenation) and other life support measures,” MGM Healthcare had said on Thursday.  “His condition in the last 24 hours has deteriorated further warranting maximal life support and he is extremely critical,” Assistant Director (Medical Services), MGM Healthcare, Dr Anuradha Baskaran said in a statement.

SPB’s condition deteriorated on August 13

The singer, who was admitted to the hospital had initially tested positive for COVID-19, however, his health deteriorated for the first time on August 13, late night and he was put on life support and moved to the Intensive Care Unit. On August 19, he was put on ECMO besides ventilator and a day after, when he remained critical, people from all walks of life, including celebrities and the general public, came together to pray for his early recovery and his condition stabilised soon.

Towards the end of last month, he underwent passive physiotherapy and later “actively participated in physiotherapy” and he was fully awake and responsive during that phase.

Balasubrahmanyam, who has to his credit over 40,000 songs, has sung in languages including Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. During admission, he had symptoms of cold and intermittent fever for a couple of days and had even posted a video in which he sounded confident.

https://www.republicworld.com/entertainment-news/regional-indian-cinema/popular-playback-singer-sp-balasubrahmanyam-passes-away-at-the-age-of.html

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்..

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் எழுந்து அமர்ந்திருந்ததாகவும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

நன்றி:-https://tamil.news18.com/news/entertainment/cinema-singer-s-p-balasubramayam-passed-away-mg-350057.html

2 comments on “Legendary playback Singer | Actor SP Balasubrahmanyam passes away at 74

Leave a comment