S.A.Nair [Publicity Designer]

எஸ்.ஏ.நாயர் [விளம்பர வடிவமைப்பாளர்]

1960-களிலிருந்து தமிழ், மலையாள மொழிகளில் திரைப்படங்களின் சுவரொட்டிகட்கும், படத் தலைப்புகளுக்கும் வடிவமைப்பாளராக இருந்தவர். செம்பி பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தில் பிரபல வடிவமைப்பாளர்களாக இருந்த சீநி சோமு, பக்தா ஆகியோருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர்களுக்குப் பின்னர் ஓவியர் பரணிகுமாருடனும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றியவர். Continue reading

Advertisements

Vindhan [Story,Screenplay, Dialogue Writer,Lyricsist]

விந்தன் [கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர், பாடலாசிரியர்]

செங்கல்பட்டு மாவட்டம், நாகளூர் என்னும் கிராமத்தில் வேதாச்சலம், ஜானகியம்மாள் தம்பதிக்கு 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 22-ஆம் திகதி மூத்த மகனாகப் பிறந்தவர் கோவிந்தன் என்கின்ற விந்தன். Continue reading

Vidwan V.Lakshmanan [Balajosiyar, Poet, Story, Screenplay, Dialogue Writter, Journalist, Tamil Pandit, Producer ]

வித்வான் வெ.லட்சுமணன் [சோதிட வல்லுநர் | கவிஞர் | கதை, வசனகர்த்தா | தமிழ்ப் பண்டிதர் | பத்திரிகையாளர் | படத் தயாரிப்பாளர்]

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்வான் பட்டம் பெற்றவர் இவர். அதே பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகவும் இருந்துகொண்டு, ஜோதிட வகுப்புக்களையும் நடத்தி வந்தார். பிரபல பத்திரிகைகளில் ராசி, பலன்களையும் எழுதி வந்தார்.

Continue reading

C.V.Rajendran [Director / Producer]

சி.வி.ராஜேந்திரன் [இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்]

இளமை இயக்குநர் என்றும் இவரைக் குறிப்பிடுவதுண்டு. பிரபல இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். போதிய பயிற்சிக்குப் பின் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு அதில் வெற்றி நடை போட்டவர். Continue reading

M.A.Venu [Producer-Actor-Production Manager]

எம்.ஏ.வேணு [தயாரிப்பாளர்-நடிகர்-தயாரிப்பு நிருவாகி]

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் சாதாரண காவலாளியாக இருந்தவர்தான் எம்.ஏ.வேணு. படத்தொழிலின் நுட்பங்களை அறிந்துகொண்டு, பட அதிபராக உயர்ந்தவர். Continue reading

Rama Arangannal [Producer-Dialogue writer-Politician]

இராம.அரங்கண்ணல் [வசனகர்த்தா, தயாரிப்பாளர், அரசியல்வாதி]

தொடர்ந்து ஆயிரம் நாட்கள் ஓடிய “மரோ சரித்ரா” படத்தைத் தயாரித்தவர் இராம. அரங்கண்ணல். இவர் பத்திரிகையாளராக இருந்தவர். பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பத்திரிகைகளில் வேலை செய்தவர். Continue reading

V.C.Shunmugam [Producer]

வி.சி.சண்முகம் [தயாரிப்பாளர்]

விழுப்புரம், சின்னையா மன்றாயர் சண்முகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய சகோதரராவார். சிவாஜி கணேசனின் மூத்த அண்ணன் வி.சி.தங்கவேலு. அடுத்த இரண்டாவது அண்ணன் தான் நடிகர் சிவாஜி கணேசன். அடுத்தவர் அக்காள் பத்மாவதி. நான்காவதாக பிறந்தவர்தான் வி.சி.சண்முகம். மிகவும் கண்டிப்பானவர். Continue reading

“Murasoli” Selvam [Producer]

“முரசொலி” செல்வம் [தயாரிப்பாளர்]

கலைஞர் கருணாநிதி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஆரம்பித்த பட நிறுவனம் தான் மேகலா பிக்சர்ஸ் பட நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் “நாம்”. கருணாநிதி கதை, வசனம் எழுத, காசிலிங்கம் இயக்கியது அப்படம். அதைத் தொடர்ந்து “பூமாலை”, “ரங்கோன் ராதா”, “பூம்புகார்”, “மறக்க முடியுமா”, “காஞ்சித் தலைவன்”, “எங்கள் தங்கம்” போன்ற படங்கள் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்தன. Continue reading

A.L.S.Kannappan [Producer-Distributer]

ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் [தயாரிப்பாளர்-விநியோகஸ்தர்]

மறைந்த ஏ.எல்.ஸ்ரீநிவாசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் 48 படங்களைத் தயாரித்தவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரர். ஏ.எல்.ஸ்ரீநிவாசன் இன்று இல்லை. அதுபோல் அவரது மகனான ஏ.எல்.எஸ். கண்ணப்பனும் இன்றில்லை. கடந்த 17 ஜனவரி 2017 அன்று காலமாகிவிட்டார். Continue reading

Mayavanathan [Poet-Lyricist]

மாயவநாதன் [கவிஞர்-பாடலாசிரியர்]

திரைப்படங்கள் வெளிவருகின்றன. ரசிகர்கள் மனதில் நின்று நிலைப்பதில்லை. ஆனால் திரைப்படப் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படப் பாடல்கள் பொழுதுபோக்குக்கு மாத்திரமன்றி தத்துவம், அறிவுரை, மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்தையுமே கொண்டதாக அமைந்திருப்பதால் அவை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பங்குப் பாடல்களை இயற்றிய கவிஞர்களையே சாரும். 1960-கள் தொடங்கி 1970-கள் வரையிலான காலப்பகுதியில் பல நல்ல கருத்தாழமிக்கப் பாடல்களைத் திரையிசைப் பிரியர்களுக்காக வழங்கியவர் கவிஞர் மாயவநாதன். Continue reading