Vidwan V.Lakshmanan [Balajosiyar, Poet, Story, Screenplay, Dialogue Writter, Journalist, Tamil Pandit, Producer ]

வித்வான் வெ.லட்சுமணன் [சோதிட வல்லுநர் | கவிஞர் | கதை, வசனகர்த்தா | தமிழ்ப் பண்டிதர் | பத்திரிகையாளர் | படத் தயாரிப்பாளர்]

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்வான் பட்டம் பெற்றவர் இவர். அதே பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகவும் இருந்துகொண்டு, ஜோதிட வகுப்புக்களையும் நடத்தி வந்தார். பிரபல பத்திரிகைகளில் ராசி, பலன்களையும் எழுதி வந்தார்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை, இலாகாவில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சுதர்ஸன் பிக்சர்ஸ் தயாரித்து 1959-இல் வெளிவந்த “அவள் யார்” என்ற படத்தில் தான் முதன்முதலாக இவர் பாடல் எழுதினார். இந்தப் படத்திற்குத் கதை, வசனம் எழுதியது இவரே. இப்படத்தில் 3 பாடல்களை வித்வான் வே.லட்சுமணன் எழுதியுள்ளார். ரகுநாத் பாணிகிரஹி பாடிய நான் தேடும் போது நீ ஓடலாமோ, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய கண் காணும் மின்னல்தானோ, பட்டுப்பூச்சி போலும் ராணி என்ற இம்மூன்று பாடல்களே இவரது கற்பனையில் உருவான பாடல்கள். இம்மூன்று பாடல்களுமே திரையிசை ரசிகர்களைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.

வீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய ”அவனா இவன்” [1962] படத்தில் திரைக்கதை, வசனத்தை வீணை எஸ்.பாலசந்தரும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்தே எழுதினர். வீணை எஸ்.பாலசந்தர் இசையில் 4 பாடல்களை எழுதினார். 1964-இல் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் மீண்டும் ”பொம்மை” திரைப்படத்துக்காக 6 பாடல்களை எழுதினார் வித்வான் வே.லட்சுமணன். இப்படத்திற்கான கதையையும் இவரே எழுதினார். கே.ஜே.யேசுதாஸ் முதன்முதலாக இப்படத்தில் இவர் எழுதிய நீயும் பொம்மை நானும் பொம்மையென்ற பாடலையே பாடினார். இதே ஆண்டில் “நல்வரவு” என்ற படத்துக்காக 6 பாடல்கள் எழுதினார் வித்வான் வே.லட்சுமணன். ”ஆசையுடன் அவர் அணைத்தார் நாணாமலே” என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

1966-இல் எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி நடித்த “நான் ஆணையிட்டால்” படத்தில் ஒரு பாடல் மட்டும் எழுதினார். அப்பாடல் ”கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே”. மெல்லிசை மன்னரின் ஹம்மிங் குரலோடு, பி.சுசீலா தேனாய் இனிக்க இப்பாடலைப் பாடினார். 1967-இல் வெளிவந்த “கற்பூரம்” படத்துக்காக 2 பாடல்களை எழுதினார். அவை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய ”நிலவே உனக்குக் குறையேது” என்ற பாடலும், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய “அம்மா வேணுமா இல்லை அப்பா வேணுமா” என்னும் பாடல்கள். அதே ஆண்டு ஏவி.எம்.ராஜன், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த “மனம் ஒரு குரங்கு” படத்தில் 2 பாடல்களை எழுதினார். அதில் ஒன்று டி.பி.ராமச்சந்திரா இசையில் ரி.எம்.எஸ்.பாடிய ”மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு”. 1969-இல் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் மீண்டும் “நடு இரவில்” என்ற படத்துக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. இப்படத்திற்கான கதை,வசனம் எழுதியவரும் இவரே. இப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் ”கண் காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்”.

வித்வான் வே.லட்சுமணன் கடைசியாக பாடல் எழுதிய படம் “மகிழம்பூ”. ‘வேண்டியதை வாரிக்கொள்ள வாருங்கள்’ என்ற பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி பாடினார். 1959-லிருந்து 1969 வரை 9 படங்களுக்கு 28 பாடல்கள் எழுதினார். ஆனால் 11 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். மணியன் என்பவருடன் சேர்ந்து ஆறு படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் போல் திறமைசாலிகள் இலைமறை காயாக திரையுலகில் இருந்து மறைந்திருக்கிறார்கள்.

நன்றி:- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை.

Bommai Technicians - Dialaugs Vidhvan V.Lakshmanan-1

MGR-with-his-ghost-writer-Vidwan-V.-Lakshmanan

Picture Credit:- sangam.org

 

Advertisements

One comment on “Vidwan V.Lakshmanan [Balajosiyar, Poet, Story, Screenplay, Dialogue Writter, Journalist, Tamil Pandit, Producer ]

  1. தமிழ் திரையுலகில் வித்வான்
    வே.லட்சுமணன் போன்று இலைமறை காயாக இருக்கிறார்கள். அவர்களை கண்டுணர்ந்து பதிப்பித்ததற்கு
    நன்றிகள் பல
    With Regards
    Sivashanmugam.P
    Brushy Creek Cedar Park
    Austin.
    Time:12:08 PM
    Day: Tuesday
    Date:20 March 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s