V.C.Shunmugam [Producer]

வி.சி.சண்முகம் [தயாரிப்பாளர்]

விழுப்புரம், சின்னையா மன்றாயர் சண்முகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய சகோதரராவார். சிவாஜி கணேசனின் மூத்த அண்ணன் வி.சி.தங்கவேலு. அடுத்த இரண்டாவது அண்ணன் தான் நடிகர் சிவாஜி கணேசன். அடுத்தவர் அக்காள் பத்மாவதி. நான்காவதாக பிறந்தவர்தான் வி.சி.சண்முகம். மிகவும் கண்டிப்பானவர்.

வி.சி.சண்முகம் அவர்களின் மனைவி பெயர் அலமேலு அம்மாள். இவர் நடிகர் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளின் உடன் பிறந்த தங்கையாவார். சண்முகத்திற்கு முரளி, கிரி என்று இரு மகன்கள். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் படித்தவர்கள்.

சிவாஜி கணேசனின் கால்ஷீட், குடும்பப் பொறுப்பு உள்பட பல்வேறு பொறுப்புக்களைக் கவனித்து வந்தார். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ், ராம் குமார் பிலிம்ஸ், பிரபு ராம் பிக்சர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களைத் திறம்பட நிர்வகித்தவர். விடி வெள்ளி, ரத்தபாசம், வா கண்ணா வா, திரிசூலம், புதிய பறவை, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு, அண்ணன் ஒரு கோவில், சந்திப்பு, நீதியின் நிழல், ஆனந்த கண்ணீர், அறுவடை நாள், தெய்வமகன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.

இவரது 50-ஆவது வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி 25.3.1986 அன்று காலமானார்.

Advertisements

3 comments on “V.C.Shunmugam [Producer]

  1. சகோதரர் வி.சி.சண்முகம், தங்கவேலுவுடன் சிவாஜி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s