Comedy actor Vadivel Balaji Died due to health problems

உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் ‘வடிவேல்’ பாலாஜி(45) மரணமடைந்தார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையைப் பூர்வீமாக கொண்ட பாலாஜி, பலகுரல் கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி’ மூலம் பிரபலமானார். வடிவேலு பாணியில் இவர் செய்த நகைச்சுவைகள் பிரபலமானதால் ‘வடிவேல்’ பாலாஜி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து அந்த டிவியின் நட்சத்திர கலைஞராக வலம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தவர், ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் இரு கைகளும் வாதத்தால் முடங்கியது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். போதிய பண வசதி இல்லாததால் இறுதியாக இன்று(செப்.,10 2020) சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாலாஜியின் திடீர் மறைவு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://cinema.dinamalar.com/tamil-news/91084/cinema/Kollywood/Actor-Vadivel-Balaji-pasess-away.htm?device=telegram

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Updated: 10 Sep 2020, 02:49:00 PM

விஜய் டிவி காமெடியன் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று [10.9.2020] திடீரென உடல் நலக் குறைவால் காலமானார். அவரது திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எஸ்பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடிவேல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அவர் அறுத்தால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. வாதம் காரணமாக அவரது இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்குப் பணமின்றியும் கஷ்டப்பட்டதாகவும், அதனால் அவரது குடும்பம் அதிகம் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டிவி பிரபலங்களும் கூட பலரும் சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருக்கிறார்கள். மிக இளம் வயதில் வடிவேல் பாலாஜி இறந்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அது இது எது நிகழ்ச்சியில் வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து அதிகம் கவர்ந்திருக்கிறார். அவரது நகைச்சுவைக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் நகைச்சுவை மற்றும் ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் வடிவேல் பாலாஜி நடித்து இருக்கிறார்.

வடிவேல் பாலாஜி மரணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். இது வரை நம்மை அதிகம் சிரிக்க வைத்தவரின் மரணம் சோகத்தைக் கொடுத்திருக்கிறது என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
https://tamil.samayam.com/tv/news/comedy-actor-vadivel-balaji-passes-away/articleshow/78035306.cms

One comment on “Comedy actor Vadivel Balaji Died due to health problems

Leave a comment