Manobala [ Actor | Director]

மனோபாலா [ நடிகர் | இயக்குநர் | தயாரிப்பாளர் ]

கோயமுத்தூரையடுத்த சூலூர் என்பதே இவர் பிறந்த ஊர். பாரதிராஜாவின் உதவி இயக்குநராக 1979-ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 40 திரைப்படங்கள் வரை இயக்கியுள்ளார். அத்துடன் 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர் இவர். Continue reading

Advertisements

Ramesh Kanna [ film actor | dialogue writer | film director ]

ரமேஷ் கண்ணா

தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் இவர். நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். பிரபல வில்லன் நடிகர் ‘நாடகக் காவலர்’ ஆர்.எஸ்.மனோகர் அவர்களின் நாடகங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பயிற்சி பெற்றவர். தனது 10 வயதிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். அன்றைய ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். Continue reading

Ragasudha

ராகசுதா

ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜனின் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழச்சி, ஜல்லிக்கட்டுக் காளை, பாண்டிநாட்டு தங்கம், தங்கத்தின் தங்கம், தம்பி  உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும், ஜகதி ஜகதீஷ் இன் டவுன் போன்ற சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகள். ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

Continue reading

Vignesh [Actor | businessman | film producer]

விக்னேஷ் ([நடிகர் | தொழிலதிபர் | தயாரிப்பாளர்)

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற வெறியோடு ரயிலேறியவர் வாய்ப்புக்கள் கிடைக்காத்தால் சிவாஜி கணேசனின் வீட்டுக்கெதிரில் இருந்த ஒரு தையற்கடையில் வேலை செய்தவர். அதன்பின் லாட்டரி டிக்கட் முகவராகி டிக்கட் விற்றுள்ளார். தவணை முறையில் துணி விற்றுள்ளார். பீடா கடை நடத்தியுள்ளார். இவ்வாறு நான்கு வருடப் போராட்டத்திற்குப் பின் 1992-ஆம் ஆண்டு எஸ்.கணேஷராஜ் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘சின்னத்தாயி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் விக்னேஷ். Continue reading

K.S.Ravikumar [Film actor, director, screenwriter, producer]

கே.எஸ்.ரவிகுமார் [நடிகர் | இயக்குநர் | திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர்]

விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிப் படமான ‘புது வசந்தம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் கே.எஸ்.ரவிகுமார். இவருக்குப் பட அதிபர் ஆர்.பி.சௌத்ரி ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். அப்படம் தான் புரியாத புதிர். இது 1990-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாயின. இவர் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக மாறினார். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

Swaminathan [Comedian]

சுவாமிநாதன் [நகைச்சுவை நடிகர்]

1985-ஆம் ஆண்டில் தமிழ்த் திரையுலகிற்கு வந்தவர் சுவாமிநாதன். 31.01.1959-இல் பிறந்த இவருக்குத் தற்போது வயது 60. தற்போது வரை நடித்து வருகிறார். Continue reading

Saravanan [Actor | Director]

சரவணன் [நடிகர் | இயக்குநர்]

நடிகை லட்சுமி மற்றும் அவரது கணவர் சிவச்சந்திரன் ஆகியோரின் பரிந்துரையினால் நடிகராக உருவானவர் சரவணன். பள்ளிப் பருவத்திலேயே பிற கலைஞர்களைப் போல் பேசி நடிக்கும் திறமை பெற்றிருந்தவர். திரைப்படத் துறையில் முதன்முதலாக சிவச்சந்திரனுக்கு உதவியாளராகத் தான் நுழைந்தார். பின்னர் நடிகை லட்சுமியின் பரிந்துரையின் பேரில் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். நடிகர் சக்தி குமார் இவரது கல்லூரித் தோழர். Continue reading

Veteran actress, director Vijaya Nirmala passes away @ 73

பணமா பாசமா, என் அண்ணன், சோப்பு சீப்பு கண்ணாடி, சித்தி,எங்க வீட்டு பெண், பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ். சிரித்த முகம், சத்யம் தவறாதே,உயிரா மானமா, அன்பளிப்பு உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளம், தெலுங்குப் படங்களில் கதாநாயகியாக நடித்தவரும், 43 தமிழ், தெலுங்குப் படங்களை தயாரித்து  இயக்கியவரும், கின்னஸ் சாதனையாளரும் , பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியுமான விஜயநிர்மலா நேற்று [26.6.2019] தனது 73 ஆவது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். Continue reading

Legendary actor and playwright Girish Karnad dies at 81 in Bengaluru

பழம்பெரும் நடிகர் கிரீஷ் கர்னாட் இன்று தனது 81-ஆவது வயதில் பெங்களூருவில் காலமானார். தமிழில் ரட்சகன், காதலன், செல்லமே, காதல் மன்னன், ஹே ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இவர்.

Continue reading

Veteran Actor | Screenplay Writer Crazy Mohan Passed Away at 67

தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாசிரியகராக, நடிகராகப் பணியாற்றிய கிரேஸி மோகன் இன்று (10.6.2019)  மதியம் 2 மணியளவில் காலமானார்.மாரடைப்பு காரணமாக இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார் கிரேஸி மோகன்.  Continue reading