Baby Jaya Gowsalya

பேபி ஜெய கௌசல்யா – துடுக்குத்தனமான குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் மிளிர்ந்தவர். பாமா விஜயம் [1966], தங்கை [1966], சாந்தி நிலையம் [1968],  சூதாட்டம்[1971], நீதி, காதல் படுத்தும் பாடு, அவன் பித்தனா, எதையும் தாங்கும் இதயம், சங்கே முழங்கு [1971],  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள பேபி ஜெய கௌசல்யா குமாரியானபின் பொதுவாகக்குழந்தை நட்சத்திரங்களுக்கு ஏற்படும் வெற்றிடத்தைப் போல இவருக்கும் தமிழ்த் திரையுலகில் எதிர் கொள்ளவேண்டியிருந்ததால் தனது கவனத்தை இவர் தெலுங்குத் திரையுலகத்தின் மீது திருப்பினார். 1973-இல் ‘கண்ணா கொடுகு’ போன்ற பல படங்களில் துணை வேடங்களில் இவர் நடித்தார்.

கே.பாலாஜியின் முதல் வெற்றிப்படமான ‘தங்கை’ படத்தில் இவர் சிவாஜிகணேசனின் தங்கையாக வடிவு என்ற கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்தார். இவரது இயல்பான நடிப்பில் பார்ப்பவர் கண்கள் குளமாகிவிடும்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

தாமரை நெஞ்சம் [1968], முகம்மது பின் துக்ளக் [1971], சங்கே முழங்கு [1972], அவன் பித்தனா [1966], காதல் படுத்தும் பாடு [1966]

’தங்கை’ [1966] படத்தில் பேபி ஜெய கௌசல்யா தனித்தும் நடிகர் திலகத்துடனும்Jayagowsalya-Thangai 1966- Jayagowsalya-Sivaji-Thangai 1966-

கன்னா கொடுகு [1973] தெலுங்குத் திரைப்படத்தில் தனித்தும் சூரியகாந்தத்துடனும்

Jayagawsalya-Kanna Koduku 1973- Jayagawsalya-Kanna Koduku 1973-1 Jayagawsalya-Kanna Koduku 1973-2 Jayagawsalya-Suryakantham-Kanna Koduku 1973-

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் பேபி ஜெய கௌசல்யாJayagawsalya-Motor Sundaram Pillai 1966-

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் பேபி அவந்தி, ஜெயலலிதா, ஆஷா, சௌகார் ஜானகி, பண்டரிபாய், குட்டி பத்மினி, மாஸ்டர் குமாருடன் பேபி ஜெய கௌசல்யா

Jayagowsalya-Pandaribai-Sowkar-Motor Sundaram Pillai 1966-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில்  ஜெய கௌசல்யாJaya Gowsalya-Thamarai Nenjam 1968-Jaya Gowsalya-Thamarai Nenjam 1968-1

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் பேபி ராஜி, ஜெய கௌசல்யா, மாஸ்டர் பிரபாகர்

Jaya Gowsalya-Baby Raji-Master Prabhagar-Thamarai Nenjam 1968-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் சரோஜாதேவி, மாஸ்டர் பிரபாகர், பேபி ராஜியுடன் ஜெய கௌசல்யா, 

Jaya Gowsalya-Baby Raji-Master Prabhagar-B.Sarojadevi-Thamarai Nenjam 1968-

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் நீலுவுடன் ஜெய கௌசல்யாJaya Gowsalya-Mohammed Bin Tughlaq 1971-Jaya Gowsalya-Neelu-Mohammed Bin Tughlaq 1971-1Jaya Gowsalya-Neelu-Mohammed Bin Tughlaq 1971-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் ஜெய கௌசல்யாJayagowsalya-Sangae Muzhangu 1972-3AJayagowsalya-Sangae Muzhangu 1972-Jayagowsalya-Sangae Muzhangu 1972-2Jayagowsalya-Sangae Muzhangu 1972-7Jayagowsalya-Sangae Muzhangu 1972-1Jayagowsalya-Sangae Muzhangu 1972-6

“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெய கௌசல்யாJayagowsalya-MGR-Sangae Muzhangu 1972-1Jayagowsalya-MGR-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் ஜெய கௌசல்யாJayagowsalya-Kallapart-Sangae Muzhangu 1972-

”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யாJayagowsalya-Sheela-Vivahasammanam 1971-4Jayagowsalya-Vivahasammanam 1971-2Jayagowsalya-Vivahasammanam 1971-3Jayagowsalya-Vivahasammanam 1971-4Jayagowsalya-Vivahasammanam 1971-1

”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யாவுடன் பிரேம் நசீர்Jayagowsalya-Nazir-Vivahasammanam 1971-

”விவாஹ சம்மானம்’ [1971] படத்தில் ஜெய கௌசல்யாவுடன் ஷீலா,பிரேம் நசீர்Jayagowsalya-Sheela-Nazir-Vivahasammanam 1971-

“அவன் பித்தனா” 1966 படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் கௌசல்யாBaby Gowsalya-AVAN PITHANA 1966-1Baby Gowsalya-AVAN PITHANA 1966-Baby Gowsalya-SSR-AVAN PITHANA 1966-Baby Gowsalya-SSR-AVAN PITHANA 1966-1

”காதல் படுத்தும் பாடு” 1966 படத்தில் விஜயலலிதா, பண்டரிபாயுடன் பேபி ஜெயகௌசல்யாJayagowsalya-Kathal Paduthum Padu 1966-Jayagowsalya-Pandaribhai-Kathal Paduthum Padu 1966-Jayagowsalya-Pandaribhai-Vijayalalitha-Kathal Paduthum Padu 1966-

8 comments on “Baby Jaya Gowsalya

  1. ஜெயகௌசல்யா பற்றிய தகவல்களுக்கு நன்றி சகாதேவன் விஜயகுமார் சார் .
    ஜெயகௌசல்யா 1972 இல் வெளியான நீதி படத்தில் பார்த்த நினைவு உண்டு . மேலும் ஜெய்சங்கர் இன் வரவேற்பு திரைபடத்தில் பார்த்த நினைவும் உண்டு (பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது என்ற பாடலுக்கு) ஜெய் சங்கர் உடன் ஆடி கொண்டு வருவார் . ‘தோரஹா’ இந்திப்படத்தை எடுத்த ராம்தயாள் தனது ‘பிரபாத்’ இந்திப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க பம்பாய் அழைத்துச்சென்றார். அப்படத்தில் நடித்தபின் வேறு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கததால் அங்கேயே “தப்பான” தொழில் பக்கம் போய்விட்டதாக பின்னர் செய்தித்தாள்களில் இவர் பெயர் அடிபட்டது.

  2. மிக அருமையான தகவல்கள் கணபதி கிருஷ்ணன். ஏராளமான நடிகர்/நடிகையர்கள் பற்றிய செய்திகள் காலத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் அக்கால துடுக்குத்தனமான குழந்தை நட்சத்திரங்கள் பலர் என்ன நிலையில், எங்கெங்கு இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. எனக்குத் தெரியாத விடையங்களைப் பரிவோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கணபதி கிருஷ்ணன்.

    • அருமை அருமை மிக அருமை கணபதி கிருஷ்ணன். சும்மா சொல்லவில்லை நண்பரே! இவ்வலைப்பூவிற்காக நீங்கள் செய்யும் ஒத்துழைப்பு என்பது மகத்தானது.

  3. ஜெயகௌசல்யா குமாரியாக நீதி, மூன்று தெய்வங்கள் போன்ற சிவாஜி கணேசன் படங்களிலும் நடித்துள்ளார். ஜெய்சங்கருடன் வரவேற்பு, பொன் வண்டு படங்களிலும் நடித்துள்ளார்.

  4. பிரமாதம். ஒரு சிறிய தகவலை மிக விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்துள்ளீர்கள். நன்றி

Leave a comment