Rama Arangannal [Producer-Dialogue writer-Politician]

இராம.அரங்கண்ணல் [வசனகர்த்தா, தயாரிப்பாளர், அரசியல்வாதி]

தொடர்ந்து ஆயிரம் நாட்கள் ஓடிய “மரோ சரித்ரா” படத்தைத் தயாரித்தவர் இராம. அரங்கண்ணல். இவர் பத்திரிகையாளராக இருந்தவர். பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பத்திரிகைகளில் வேலை செய்தவர்.

இயக்குநர் பீம்சிங்குடன் நீண்டகாலம் பணியாற்றியவர். இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் ஏராளமான படத்தைத் தயாரித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் முன்னணி தயாரிப்பாளராக விளங்கியவர்.

தஞ்சை மாவட்டம், திருவாரூருக்கு அருகேயுள்ள கோமல்தான் இவரது சொந்த ஊர். திருவாரூரிலும், திருத்துறைப்பூண்டியிலும் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1956-இல் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

அந்த நேரத்தில் தான் இவருக்கு முதன் முதலாக ஒரு திரைப்படத்துக்குக் கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த “செந்தாமரை”. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவியால் தான் அவ்வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. இவர் வசனத்தில் முதன்முதலாக வெளிவந்த படம் “தாய் மகளுக்குக் கட்டிய தாலி”.

நடிகை பத்மினியின் உறவினர் தயாரித்த “பொன் விளையும் பூமி” படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார். 1960-இல் வெளியான “பச்சை விளக்கு” படம் தான் இவரது முதல் சொந்தப் படம். இப்படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியாரின் உதவியுடன் தயாரித்தார். இப்படம் வெளியான நேரத்தில் தான் மைலாப்பூர் சட்டமன்ற வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனாலும் படத்தயாரிப்பையும் விடாது தொடர்ந்தார். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “அனுபவி ராஜா அனுபவி” படத்தைத் தயாரித்தார். பாலசந்தரே வசனம் எழுதி இயக்கினார். இதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு தோன்றியதால் அவரையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “நவக்கிரஹம்”, “அவள் ஒரு தொடர் கதை” படங்களைத் தமிழில் தயாரித்தார்.

தெலுங்கில் ஏவி.எம்.செட்டியாரின் உதவியுடன் “பொம்மா புருஷா” [தமிழில் பூவா தலையா”] படத்தைத் தயாரித்து வெளியிட்டார். கே.பாலசந்தர் இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் அடிப்படையில் “அவள் ஒரு தொடர் கதை” படத்தை “அந்துலேனி கதா” என்று தெலுங்கில் தயாரித்து வெளியிட்டார். அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி ஏற்பட்டது. அரசின் ஊடுருவல்கள் திரைத்துறையில் மிகுந்தது. ஆகவே தமிழில் படம் தயாரிப்பதை விட்டுவிட்டார்.

 

8 comments on “Rama Arangannal [Producer-Dialogue writer-Politician]

 1. ஈ. வெ. ராவின் இரண்டாவது திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாவும் ஒருவர்.

  அந்தத் திருமணத்திற்குப் பிறகு ‘திராவிட நாடு’ பத்திரிகையில், அதைக் கண்டித்தும், அதைப் பற்றிப் புலம்பியும், ஈ. வெ. ராவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியும் பல கட்டுரைகள் தொடர்ந்து எழுதியுள்ளார் அண்ணா. (”ஈ. வெ. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” – ம. வெங்கடேசன் – பக்கம் 118-137)

  மற்றும் ஒரு தலைவரான திரு இராம அரங்கண்ணலும் ஈ. வெ. ராவின் இடண்டாவது திருமணத்தைச் சகியாதவர். ”மனச்சாட்சியின்படி நடக்க விரும்பியவர்களில் ஒருவர் இராம. அரங்கண்ணல். அவர் தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்தார். ‘வயதானவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்ற பொருள்பட ஈ. வெ. ரா பல மேடைகளில் முழங்கியிருந்தார். அந்தப் பேச்சுக்களைத் தொகுத்து ஈ. வெ. ரா-வுக்குத் தெரியாமல் இந்த (அ)சந்தர்ப்பத்தில் விடுதலை இதழில் அச்சேற்றிவிட்டார் அரங்கண்ணல்.

  அவர் விடுதலை இதழில் துணையாசிரியராக இருந்தார். விடுதலை இதழின் உரிமையாளர் ஈ. வெ. ரா. அதில் வெளிவந்ததோ ஈ. வெ. ராவின் பேச்சு.

  தன்னுடைய கையால் தன் கண்ணைக் குத்துகிறார்களே என்ற கோபம் ஈ. வெ. ராவுக்கு; அரங்கண்ணல் வெளியேற்றப்பட்டார். பகுத்தறிவாளர்களின் பயணத்தில் இது இன்னொரு மைல்கல்” என்று தன்னுடைய ”போகப் போகத் தெரியும்” தொடர் கட்டுரையில் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள்.

 2. திராவிட இயக்க எழுத்தாளர் -திரைப்படத் தயாரிப்பாளர் -கதை வசனகர்த்தா, “அறப்போர்’ இதழின் ஆசிரியர், மயிலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. -கலைஞர் ஆட்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் முதல் தலைவர் என்ற பல பெருமைகளைக் கொண்ட இராம.அரங்கண் ணல், அறிஞர் அண்ணாவின் அன்பிற்குரிய அரசியல்வாதி. அண்ணா வழியிலேயே அவர்தன் குடும்பத்தினர் யாரையும் அரசியல் பக்கம் விட வில்லை. அரங்கண்ணலின் வாரிசுகளும் ஆர்வம் காட்ட வில்லை.

 3. சென்னை: பிரபல பாப் இசை பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் (எ) சுராங்கனி எ.இ. மனோகர் சென்னையில் காலமானார். இவர் சுராங்கனி என்ற பைலா பாடல் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடத்தும் உள்ளார். மேலும் பல டி.வி. சீரியல்களும் நடந்துள்ளார்.

 4. any detail about s a nataraj actor and director of nalla thangai, t r natarajan and supporting actress (acted only 2 or 3 movies acted with santhanam & anuska in the movie deiva thirumagal as lawyer assistant. she also acted in eesan by sasikumar

 5. despite war torn island due to linguistic conflict in 70s or 80s , sinhalese had big fan base for tamil films. their mail hero is mgr, sivaji and surangani songs based on baila sinhala party songs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s