T.N.Balu [Director | Story,Dialogue Writer | Producer]

ரி.என்.பாலு [கதை, வசனகர்த்தா | இயக்குநர் | தயாரிப்பாளர்]

இவர் ஒரு ஜனரஞ்சக இயக்குநர். சிவாஜி கணேசன் நடித்த அஞ்சல் பெட்டி 520 [1969], ரவிச்சந்திரன் நடித்த மீண்டும் வாழ்வேன் [1971], கமலஹாசன் நடித்த “உயர்ந்தவர்கள்” [1977] படங்களுக்கு வசனம் எழுதியதுடன் இயக்கியுமுள்ளார். ஜெய்சங்கர் நடித்த மனசாட்சி [1969] கதை, வசனம் எழுதியுடன் இயக்கியுமுள்ளார், ரவிச்சந்திரன் நடித்த ஏவி.எம்.மின் ”அதே கண்கள்” படத்திற்கு வசனம் மட்டும் எழுதியுள்ளார்.  Continue reading

Advertisements
By sahadevanvijayakumar Posted in Directors

Playback singer MS Rajeshwari passes away on 25.4.2018 Wednesday in Chennai.

கமலஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த மிகச் சிறந்த மழலைக்குரல் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி நேற்று [25.4.2018]  தனது 87-ஆவது வயதில் சென்னை, குரோம்பேட்டையிலுள்ள மகளின் வீட்டில் வைத்து காலமானார்! அன்னாரது இறுதிச் சடங்குகள் 26.4.2018 சென்னையில் மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.

Continue reading

Gunalan [Villain Actor]

குணாளன் [வில்லன் நடிகர்]

ஆர்.எஸ்.மனோகர், கே.கண்ணன், எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன், எஸ்.வி.ராம்தாஸ், கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்  ஆகியோரின் சம காலத்திய வில்லன் நடிகராக திகழ்ந்தவர் குணாளன். Continue reading

Indraja [Cinema & Serial Actress]

இந்திரஜா [வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை]

தெலுங்குக் குடும்பமொன்றில் சென்னையில் பிறந்தவர் இந்திரஜா. இயற்பெயர் ராஜாத்தி. 1993-ஆம் ஆண்டு வெளிவந்த ரஜனிகாந்தின் “உழைப்பாளி” படத்தில் சிறு வயது ஸ்ரீவித்யாவாக நடித்தவர் இந்திரஜா. 1994-ஆம் ஆண்டில் அலி கதாநாயகனாக நடித்த “எமலீலா” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது இவர் ஒன்பதாம் வகுப்பில் பயின்று வந்தார். Continue reading

Vindhan [Story,Screenplay, Dialogue Writer,Lyricsist]

விந்தன் [கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர், பாடலாசிரியர்]

செங்கல்பட்டு மாவட்டம், நாகளூர் என்னும் கிராமத்தில் வேதாச்சலம், ஜானகியம்மாள் தம்பதிக்கு 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 22-ஆம் திகதி மூத்த மகனாகப் பிறந்தவர் கோவிந்தன் என்கின்ற விந்தன். Continue reading

Uma Ramanan [Playback Singer]

உமா ரமணன் [பின்னணிப் பாடகி]

1980-1990-களில் பின்னணிப் பாடகியாக திரையிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைகளிலும் கலக்கியவர் உமா ரமணன். எம்.ஏ., பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரி நாட்களில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். விமானப் பணிப்பெண்ணாக ஆகவேண்டுமென்பதே கனவாகயிருந்தது இவருக்கு. Continue reading

B.S.Sasirekha [Playback Singer]

பி.எஸ்.சசிரேகா [பின்னணிப் பாடகி]

இவர் முதன்முதலாக பின்னணிப் பாடியது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையில் 1973-ஆம் ஆண்டில் வெளிவந்த “பொண்ணுக்குத் தங்கமனசு” என்ற படத்தில். பாடல் “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த பொன்னியம்மா” என்ற பாடல். இப்பாடலில் இவருடன் இணைந்து பாடியவர்கள் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும் ஜானகியும். இப்பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல். Continue reading

Kovai Senthil [Comedy and Character Actor]

கோவை செந்தில் [நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்]

கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டில் வெளிவந்த “ஒரு கை ஓசை”, 1988-ஆண்டு வெளியான “இது நம்ம ஆளு”, 1989-இல் வெளிவந்த ”ஆராரோ ஆரிரரோ”, 1989-இல் வெளிவந்த ”என் ரத்தத்தின் ரத்தமே”, 1991-இல் வெளியான “பவுனு பவுனுதான்”, “அவசர போலீஸ் 100”, Continue reading

Saranya Ponvannan

சரண்யா பொன்வண்ணன்

1987-ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரித்து இயக்கிய நாயகன் என்ற படத்தில் அறிமுகமானவர் தான் சரண்யா பொன்வண்ணன். இப்படம் பெரிய வெற்றியைப் பெற்று இவர் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. Continue reading

Legendary actress Jayanthi hospital admissions

நாகேஷுடன் பல படங்களில் இணைந்து நடித்து பெரும் புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை ஜெயந்தி மூச்சுத்திணறல் காரணமாக நேற்று [27.3.2018] பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகையர் சரோஜாதேவி, பாரதி, தாரா ஆகியோர் நேரில் சென்று உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

Continue reading