Madhavi

மாதவி-1980-1990-களில் ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகிய இரண்டு இமயங்களுடன் இணைந்து நடித்து அந்தக்கால இளைஞர்களை வசீகரித்தவர். “அகல விழியழகி” என்று ரசிகர்களால் வருணிக்கப்பட்டவர். பிறப்பு-12.8.1962. வயது 52. அவர் இப்போது (2014-இன் படி) டிபனி கவ்ரிகா [14], பிரிசில்னா அப்ரிகா[10], எவெலின் திவ்யா[7] என்ற 3 பெண் குழந்தைகளின் தாய். இவரது கணவர் ரால்ஃப் ஜெய்தீப் சர்மா, மாமியார், மாமனாருடன் கூட்டுக்குடும்பமாக அமரிக்காவிலுள்ள நியூஜெர்சியில் வசித்து வருகிறார்.  இவரது கணவர் நியூஜெர்சியில் பார்மசூடிக்கல் கம்பெனிகள் இரண்டை நடத்திவருகிறார். இக்கம்பெனிகளுக்கு அவர் தலைவர் என்றால் மாதவி உதவித்தலைவர். Continue reading

V.K.Ramasamy

வி. கே. ராமசாமி (பிறப்பு:1926 – இறப்பு: திசம்பர் 242002) வயது-76-ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர்.1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து

திரையுலகுக்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டவர்,அதன் பின் மேன்மேலும் புகழேணியில் ஏறத் தொடங்கினார்.ஆனால் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

1960-களிலும் 1970-களிலும் முன்னணியில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம்எம்.ஜி.ஆர்சிவாஜி கணேசன்ஜெய்சங்கர்ரவிச்சந்திரன்முத்துராமன்கமலஹாசன்,

ரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை(டைமிங் சென்ஸ்), அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் மறக்கவியலாதவை.

பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவரது கடைசிப் படம் டும் டும் டும் ஆகும். அவருக்கு 1970ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது.

அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ரமணியும் ஒரு நடிகையாவார்.

அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான்!

By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 04th November 2016 12:00 AM  |

நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.

இவருடைய வளர்ச்சியின் பரிமாணம் என்ன? அனுபவங்கள் எப்படிப்பட்டவை? அவருக்கே உரிய பணியில் அவரை பேச வைத்த பொழுது:

எனக்கு 57 வயசு ஆகுதுங்க.ஏழு வயசிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்த்துட்டேன்.நாடகத்திலே 15 வருஷம்.சினிமாவிலே 35 வருஷம். ஆக 50 வருஷமா நடிச்சிகிட்டே இருக்கேன்.

நாடக கம்பெனியில் நான் சிரிப்பு நடிகனாத்தான் இருந்தேன். நாகேஷ் மாதிரி ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லாம் பண்ணுவேன்.
“தியாக உள்ளம்” நாடகத்திலே பேங்கர்  சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன். அப்போ எனக்கு வயசு 15.ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே ‘நாம் இருவர்’ படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம்  எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன்.

பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க  அத்தனை  தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான்.

நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு   அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு.

அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான்.   அது என் சொந்தக் கதை. வாழ்க்கை வரலாறு மாதிரி 36 பக்கம் எழுதி வச்சிருந்தேன். விவகாரம் வந்து கோர்ட்டுக்கு போக வேண்டியதாயிடுச்சு. என் வாழ்க்கை வரலாறும் கோர்ட்டுக்கு போயிருக்கு.

எனக்கு டைரக்சன்ல என்ன அனுபவம்னு நீங்க கேக்கலாம். ஒரு அனுபவமும் இல்லை.இந்த 35 வருசமா பார்த்தது, பேசினது,நடிச்சது, படம் எடுத்து, கேள்விப்படறது எல்லாமே அனுபவம்தான்.

குடிப்பழக்கம் எல்லாம் முன்னே இருந்தது. இப்போ நிறுத்திட்டேன். அதுக்கும் ரமணிதான் காரணம். ரேஸுக்கு கூட போறத நிறுத்திட்டேன்.

சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் ரொம்ப நாள் சிநேகிதம்.அவரு கூட என்னை நீ பொழைக்க தெரியாதவன்டா என்பார்.

அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். இத்தனை வருஷம் இத்தனை படங்களில் நடிச்சும் கடன்காரனாயிருக்கேன்னா பாருங்களேன்.

சந்திப்பு: திரைஞானி

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.08.82 இதழ்)

http://www.dinamani.com/specials/cinemaexpress/2016/nov/04/

நன்றி:-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

‘தேன் கிண்ணம்’ படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் வி.கே.ராமசாமி

ImageImage

எம்.ஆர்.ஆர்.வாசு,விஜயலலிதாவுடன் வி. கே. ராமசாமி

Image

Image

‘தேன் கிண்ணம்’ படத்தில் விஜயலலிதா, எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் வி.கே.ராமசாமிImage

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் மனோரமா, பக்கோடா காதர்,

பேபி ராணியுடன் வி.கே.ராமசாமி

Packoda Kadher-VKR-Ponnu Mappillai-1966- Packoda Kadher-VKR-Manorama-Ponnu Mappillai-1966-1 Packoda Kadher-VKR-Manorama-Ponnu Mappillai-1966-

திகம்பர சாமியார் (1950) படத்தில்

 VK.Ramasamy-Digambara Samiyar

VK.Ramasamy-Digambara Samiyar-1

சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு, கே.சாரங்கபாணியுடன் வி.கே.ராமசாமி

K.Sarangapani-VKR-Chinnanjiru Ulagam-1966- K.Sarangapani-Chinnanjiru Ulagam-1966- TM.Samikkannu-Chinnanjiru Ulagam-1966-

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில் தனித்தும் குலதெய்வம் ராஜகோபாலுடனும் வி.கே.ராமசாமி

VKR-Veerapandiya Kattabomman-1959- Kuladeivam VR.R-VKR-Veerapandiya Kattabomman-1959-

1970-இல் வெளியான வி.கே.ராமசாமியின் சொந்தப்படமான “டில்லி மாப்பிள்ளை”யில்” சி.எஸ்.பாண்டியனுடன்

CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970-2CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970-1CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970-

1970-இல் வெளியான “டில்லி மாப்பிள்ளையில் ரவிச்சந்திரனுடன் வி.கே.ராமசாமி Ravichandran-VKR-Delhi Mappillai 1970-

1970-இல் வெளியான “டில்லி மாப்பிள்ளையில் சோ மற்றும் ரவிச்சந்திரனுடன் வி.கே.ராமசாமி 

Ravichandran-Cho-VKR-Delhi Mappillai 1970-

1970-இல் வெளியான “டில்லி மாப்பிள்ளையில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை, சோ மற்றும் ரவிச்சந்திரனுடன் வி.கே.ராமசாமி

 S.V.Shunmugampillai-Ravichandran-VKR-Delhi Mappillai 1970-

குடியிருந்த கோயில் [1968] படத்தில் வி.கே.ராமசாமி தனித்தும் நாகேஷுடனும்

VKR-Kudiyiruntha Kovil 1968-VKR-NAGESH-Kudiyiruntha Kovil 1968VKR-NAGESH-Kudiyiruntha Kovil 1968-1VKR-NAGESH-Kudiyiruntha Kovil 1968-2

’வேலைக்காரன்’ படத்தில் வி.கே.ராமசாமி

VKR- Velaikkaaran-

‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் சி.எஸ்.பாண்டியன், குலதெய்வம் ராஜகோபால், வி.கே.ஆர்/ராமசாமி, டைப்பிஸ்ட் கோபு

CS.Pandian-Kuladeivam-VKR-Typist Gopu-Avar Enakke Sontham 1977-

“நீ ஒரு மகாராணி” [ 1976] படத்தில் தனித்தும் ஜெய்சங்கருடனும்VKRamasamy-Nee Oru Maharani 1976-VKRamasamy-Nee Oru Maharani 1976-1VKR-Jai-Nee Oru Maharani 1976-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.கே.ராமசாமிVKR-Neelavukku Neranja Manasu 1960-VKR-Neelavukku Neranja Manasu 1960-1

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.எம்.ஏழுமலை மற்றும் கே.சாய்ராமனுடன் வி.கே.ராமசாமி

VM.Ezhumalai-K Sairaman-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பி.எஸ்.வீரப்பா மற்றும் வி.கே.ராமசாமி

PS Veerappa-VKR-Neelavukku Neranja Manasu 1960-PS Veerappa-VKR-Neelavukku Neranja Manasu 1960-1

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் பண்டரிபாய் மற்றும் வி.கே.ராமசாமி

Poongavanam MR.Santhanam-VKR-Pandaribhai-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் மற்றும் வி.கே.ராமசாமி

Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-3Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-2Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-1Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் மற்றும் பி.டி.சம்பந்தத்துடன் வி.கே.ராமசாமிPD.Sampantham-Poongavanam MR.Santhanam-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், ராகினி, ரி.பி.முத்துலட்சுமி, எம்.என்.ராஜம்

இருப்பவர்கள் இடமிருந்து வலம் வி.கே.ராமசாமி, சி.ரி.ராஜகாந்தம், வேணுபாய், ரி.ஆர்.ராமச்சந்திரன் [கருப்புச் சட்டையுடன்], ரி.கே.ராமச்சந்திரன், டணால் கே.ஏ.தங்கவேலு

VKR-Pandaribhai-PD.Sampantham-Ragini-TP.Muthulaxmi-MN.Rajam-TRR-TK.Ramachandran-CT.Rajakantham-Venubhai-KA.Thangavelu-Neelavukku Neranja Manasu 1958-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமிVKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதியுடன்

C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-1C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஏ.வீரப்பன்

A Veerappan-VKR-KUZHANTHAI ULLAM 1969-1A Veerappan-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதியுடன் ஏ.வீரப்பன்

A Veerappan-C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் தயிர்வடை தேசிகன், உசிலைமணி, பேபி ஷகிலா, வி.கே.ராமசாமி, சி.கே.சரசுவதி, ஏ.வீரப்பன்Thayir Vadai Desikan-Usilaimoni-Baby Shakila-A Veerappan-C K Saraswathi-VKR-KUZHANTHAI ULLAM 1969-

‘சத்யம்’ [1976] படத்தில் மஞ்சுளா, கமலஹாசனுடன் வி.கே.ராமசாமி

VKR-Kamal-Manjula-Sathyam 1976-

‘சத்யம்’ [1976] படத்தில் நம்பியாருடன் வி.கே.ராமசாமிVKR-M N Nambiyar-Sathyam 1976-

‘சத்யம்’ [1976] படத்தில்  வி.கே.ராமசாமிVKR-Sathyam 1976-

‘சத்யம்’ [1976] படத்தில் நம்பியார், நாகேஷுடன் வி.கே.ராமசாமி

Nagesh-VKR-Nambiyar-Sathyam 1976-Nagesh-VKR-Nambiyar-Sathyam 1976-1Nagesh-VKR-Nambiyar-Sathyam 1976-2Nagesh-VKR-Sathyam 1976-

‘சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் வி.கே.ராமசாமிVKR-Simma Swappanam 1981-

‘சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ராதாRadha-VKR-Simma Swappanam 1981-

‘சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ராதா ரவி

MR.Radha Ravi-VKR-Simma Swappanam 1981-

‘சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ராதா ரவி, பிரபு, கல்லாபெட்டி சிங்காரம்

Kallapetti Singaram-VKR-Prabhu-MR.Radha Ravi-Simma Swappanam 1981-Kallapetti Singaram-VKR-Prabhu-Simma Swappanam 1981-

“ரத்தபாசம்” [1980] படத்தில் வி.கே.ராமசாமிVKR-Rathapaasam 1980-VKR-Rathapaasam 1980-1

“ரத்தபாசம்” [1980] படத்தில் சிவாஜிகணேசனுடன் வி.கே.ராமசாமி

VKR-Sivaji-Rathapaasam 1980-

“ரத்தபாசம்” [1980] படத்தில் வி.கே.ராமசாமியுடன் புஷ்பலதாVKR-Pushpalatha-Rathapaasam 1980-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமிVKR-Kumara Vijayam 1976-VKR-Kumara Vijayam 1976-1VKR-Kumara Vijayam 1976-2

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஜெயசித்ரா

VKR-Jayachitra-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஜெயசித்ரா, கமலஹாசன்  VKR-Jayachitra-Kamalahassan-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்VKR-Kamalahassan-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் கமலஹாசன்  TS.Sheshathri-VKR-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Suruli Rajan-VKR-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் பீலி சிவம்

Beeli Sivam-VKR-Kumara Vijayam 1976-1Beeli Sivam-VKR-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ரி.எஸ்.சேஷாத்திரி,  சுருளிராஜன்TS.Sheshathri-VKR-Suruli Rajan-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் கமலஹாசன், ஜெய்சித்ரா, வி.கே.ராமசாமியுடன் பீலி சிவம்Beeli Sivam-VKR-Kamalahassan-Jayachithra-Kumara Vijayam 1976-1Beeli Sivam-VKR-Kamalahassan-Jayachithra-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமி, ஜெயசித்ரா, சுகுமாரி, தேங்காய் சீனிவாசனுடன், சுருளிராஜன்

Suruli Rajan-Thengai-Sukumari-VKR-Jayachitra-Kumara Vijayam 1976-

“கண்மலர்” [1970] படத்தில்  வி.கே.ராமசாமி  VKR-Kann Malar 1970-1VKR-Kann Malar 1970-2VKR-Kann Malar 1970-VKR-Kann Malar 1970-3

“கண்மலர்” [1970] படத்தில் வி.கே.ஆர்.ரமணி, வி.கே.ராமசாமி

VKR.Ramani-VKR-Kann Malar 1970-VKR-VKR.Ramani-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் நாகேஷுடன் வி.கே.ராமசாமி  

Nagesh-VKR-Kann Malar 1970-1Nagesh-VKR-Kann Malar 1970-VKR-Nagesh-Kann Malar 1970-1VKR-Nagesh-Kann Malar 1970-Nagesh-VKR-Kann Malar 1970-2

“கண்மலர்” [1970] படத்தில் வி.கே.ஆர்.ரமணி, எம்.எஸ்.சுந்தரிபாய்,  வி.கே.ராமசாமி VKR-VKR.Ramani-MSS-Kann Malar 1970-1VKR-VKR.Ramani-MSS-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் வி.கே.ஆர்.ரமணி, எம்.எஸ்.சுந்தரிபாய், நாகேஷுடன் வி.கே.ராமசாமி  

VKR.Ramani-MSS-Nagesh-VKR-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் ரமாபிரபா, நாகேஷுடன் வி.கே.ராமசாமி  

Ramaprabha-VKR-Nagesh-Kann Malar 1970-1Ramaprabha-VKR-Nagesh-Kann Malar 1970-

‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் வி.கே.ராமசாமி  VK.Ramasamy-Pattikaattu Ponnaiya 1973-1VK.Ramasamy-Pattikaattu Ponnaiya 1973-

‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் வி.கே.ஆருடன் ராஜஸ்ரீ VK.Ramasamy-Rajasri-Pattikaattu Ponnaiya 1973-1VK.Ramasamy-Rajasri-Pattikaattu Ponnaiya 1973-

‘பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.சுந்தரிபாய்,ராஜஸ்ரீயுடன் வி.கே.ராமசாமி VK.Ramasamy-Rajasri-MSS-Thengai-Pattikaattu Ponnaiya 1973-

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் வி.கே.ராமசாமியுடன் நாகேஷ் VK Ramaswamy-Rudra Thandavam 1978-VK Ramaswamy-Rudra Thandavam 1978-1VK Ramaswamy-Nagesh-Rudra Thandavam 1978-1VK Ramaswamy-Nagesh-Rudra Thandavam 1978-

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் வி.கே.ராமசாமியுடன் சுருளிராஜன்Surulirajan-V K Ramaswamy-Rudra Thandavam 1978-1Surulirajan-V K Ramaswamy-Rudra Thandavam 1978-

Gemini Balu

ஜெமினி பாலு.

இயற்பெயர் எம்.எஸ். பாலகிருஷ்ணன். வெகுளிப்பெண், பங்காளிகள், அன்று கண்ட முகம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ராஜா, நீலகிரி எக்ஸ்பிரஸ், ஏழைப்பங்காளன், கப்பலோட்டிய தமிழன்  உட்பட பல்வேறு 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும்  நடித்தவர். Continue reading

Vennira Aadai Moorthy

வெண்ணிற ஆடை மூர்த்தி (மூர்த்தி நட்ராஜா சாஸ்திரி) (பிறப்பு: 1936), வயது-78.வெண்ணிற ஆடை படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் இவரை அறிமுகம் செய்தார். அந்த படத்தின் பெயர் பின்னாளில் இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆனார்.சிறந்த ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் Continue reading

Nalinikanth

நளினிகாந்த்

வெற்றிகரமாக ஓடிய யாமிருக்க பயமே படத்தில்,  ஜடாமுடி வளர்த்த வயதான உருட்டும் விழி முதியவராக நடித்த பெரியவர் யாரோ எவரோ என்றுதான் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூப்பர் ஸ்டார் அன்று சாதாரண ரஜினிகாந்தாக நடித்துக் கொண்டு இருந்தபோது அவரைப் போலத்தான் இவரும் என்று பேசப்பட்டவர்தான் அந்த உருட்டுவிழி நடிகர் என்பது,  எத்தனை பேருக்குத் தெரியும். நளினிகாந்த்! 1970-களின் மத்தியில் தெலுங்கில் ரங்கோன் ரவுடி என்ற படத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர்

Continue reading

Anuradha

அனுராதா-இயற்பெயர் சுலோச்சனா.1980-களின் ஆரம்பத்தில் கதாநாயகியாக 35 படங்களில் இவர் நடித்துள்ளார் என்றாலும் தமிழில் அப்படங்களில் சில வெற்றிகரமாக ஓடவில்லையென்பதால் மலையாளக் கரையோரம் இவர் பார்வையைத் திருப்பினார். கவர்ச்சி ஆட்டக்காரராகவும் பின்னாளில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லிக் கதாபாத்திரங்களிலும் தமிழ்,கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தவர்.1979-இல் மோகனப்புன்னகைப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் Continue reading

V.S.Raghavan

வி.எஸ்.ராகவன் – வயது 88 – தமிழ்த் திரைப்பட,நாடக நடிகர். 1925-இல் பிறந்தவர்.1954-ஆம் ஆண்டு வெளிவந்த “வைரமாலை’ என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக இவர் அறிமுகம்.1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இன்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். மட்டுமல்லாது Continue reading