“White” Subbaiah

“வெள்ளை” சுப்பையா

இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமம். அந்த காலத்து நடிகர்கள் சொன்ன காரணத்தையே தான் இவரும் சொல்றாரு. சின்ன வயசில் படிப்பு வராத காரணத்தால் குறிப்பாக இங்கிலீஷ் வராத காரணத்தால் பள்ளி வாத்தியார் தொல்லை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு ஓடி வந்தவர். அம்மாவிடம் அடி உதை வாங்கி காலத்தை கடத்திய பொழுது அங்குள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் சென்று வேலை கேட்டுள்ளார். இவர் சொல்லும் ஒரு அபூர்வத் தகவல், அப்போதெல்லாம் டூரிங் டாக்கீசுக்கு ஆறு மாச காலம் Continue reading

Advertisements

“Ammukkutty” Pushpamala

“அம்முக்குட்டி” புஷ்பமாலா– எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். வல்லவன் ஒருவன் படத்தில் ‘அம்முகுட்டி ஹோட்டல்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் பெண்ணாக, தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். அது பெரும் வரவேற்புப் பெற்றதால், ‘அம்முகுட்டி புஷ்பமாலா’ என்றே என் பெயர் ஆனது. காதலித்தால் போதுமா, கொஞ்சும் குமரி, நான் வாழவைப்பேன், எதிரிகள் ஜாக்கிரதை, நான்கு கில்லாடிகள், மகளே உன் சமது, வெகுளிப்பெண், காரைக்கால் அம்மையார், என்னைப் போல் ஒருவன், ரகசிய போலீஸ் 115 போன்ற நாநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பெரும்பான்மையானவற்றில் இவர் பங்குபெற்றுள்ளார். 1965-1975- களில் தமிழ்ப்படங்களில் இவரது பங்களிப்பு அளப்பரியது. தற்போதும் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வறுமை நிலையில் உள்ளார். தற்போது இவருக்கு வயது 70 இருக்கலாம். இவரது கதை மிகவும் சோகமானது. அது குறித்து  http://www.yarl.com/forum3/index.php?showtopic=37068 வலைத்தளத்தில் வாசித்த ஒரு செய்தியைக் கீழே தொடர்ந்து படியுங்கள். Continue reading