“White” Subbaiah

“வெள்ளை” சுப்பையா

இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமம். அந்த காலத்து நடிகர்கள் சொன்ன காரணத்தையே தான் இவரும் சொல்றாரு. சின்ன வயசில் படிப்பு வராத காரணத்தால் குறிப்பாக இங்கிலீஷ் வராத காரணத்தால் பள்ளி வாத்தியார் தொல்லை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு ஓடி வந்தவர். அம்மாவிடம் அடி உதை வாங்கி காலத்தை கடத்திய பொழுது அங்குள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் சென்று வேலை கேட்டுள்ளார். இவர் சொல்லும் ஒரு அபூர்வத் தகவல், அப்போதெல்லாம் டூரிங் டாக்கீசுக்கு ஆறு மாச காலம் தான் லைசென்ஸ் கொடுப்பார்களாம். அதற்குப் பிறகு லைசென்சை மீண்டும் புதுப் பித்துக் கொள்ள வேண்டுமாம்.

அந்த டூரிங் டாக்கீஸ் ஓனர் கோபிச் செட்டிப்பாளயத்தை சேர்ந்தவர். அப்போது அங்கிருந்தபடியே பல படம் பார்த்திருக்கிறார்.அப்போது பெரும் கூட்டம் கூடிய நடிகர் திலகத்தின் பராசக்தி படத்தில் அவரின் வசன உச்சரிப்பைப் பார்த்து நடிக்க ஆசைபட்டிருக்கிறார்.அந்தியூர் தேவி நாடக சபா ஓனரான கே.எம்.ரத்தினப் பிள்ளை அவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். இவ்வாறு ட்ராமாக்களில் ஐக்கியம் ஆன இவர் மொத்தம் 63 பேர் கொண்ட நாடகக் குழுவில் பல நாடகங்கள் நடித்து உள்ளார். அங்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட நடனம், பாட்டு அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

பிறகு அங்கிருந்து மெட்ராஸ் வந்து லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா,எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்களுடன் மூன்று வருட காலம் மேடையில் நடித்து இருக்கிறார்.அப்போது இவர் நாடகத்தின் மேல் தீராத காதல் கொண்ட பைத்தியமாக அலைந்து இருக்கிறார். அப்போது எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்கள் நடத்திய ட்ரூப்பிலும் நடித்து இருக்கிறார்.

கிட்டத் தட்ட 25 -30 வருடங்கள் கலைத் துறையில் இருக்கும் இவர் நடித்த முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாசமலர் என்ற மிகப் பெரும் வெற்றி பெற்ற சில்வர் ஜுபிலி படம். இவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களால் கிடைத்து இருக்கிறது. இன்று வரையில் அவரை தன் தெய்வமாகவே மதித்து வருகிறார். ஏற்கனவே நடித்து இருந்தாலும் 1972 ஆம் வருடம் ஜெய்ஷங்கர்,லக்ஷ்மி நடிப்பில் வெளியான மாணவன் என்ற படம் தான் இவரது முதல் திரைப் படம் என்று இவர் கருதுகிறார். அதில் இவர் காத்தாடி ராமமூர்த்தி, பாண்டு போன்றவர்களுடன் ஜெய் ஷங்கரின் நண்பர்களில் ஒருவராக நடித்து இருக்கிறார். இவருக்கு வெள்ளை சுப்பையா என்ற பேரே சாண்டோ வைத்தது தான்.

இவர் பல படங்கள் நடித்திருந்தாலும், இவரை பலருக்கு அறிமுகப் படுத்தியது, அறிமுகப் படுத்திக்கொண்டிருப்பது ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உண்டான வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் வெளிவந்த “மேகம் கருக்கையிலே” என்ற பாடல் தான்.பாண்டி பஜார் ஷாப்பிங்ல இருந்த போது ஒரு லண்டன் நண்பர் இவரை பார்த்து “நேத்து தான் உன்னை லண்டனில் பார்த்தேன்.” என்றாராம். பேந்த பேந்த முழித்த இவரிடம் “ஆமாங்க நேத்து தான் டி.வி ல உங்கள் பாட்டை பார்த்தேன். அந்த பாடலில் நடித்தது நீங்க தானே” என்றாராம்.இப்படி இந்த பாடல் அவருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்ததாக கூறுகிறார். அந்த பாடல் உங்களுக்காகவும்.

ஆனால் இவர் நடித்த பாடலில் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்திருக்கும் பாட்டு என்றால், கரகாட்டகாரனில் வரும் “ஊரு விட்டு ஊரு வந்து” என்ற பாட்டு தான்.அந்த பாடலும் உங்க பார்வைக்காக.

பயணங்கள் முடிவதில்லை, அமைதிப்படை போன்று இவர் நடித்த பல படங்கள் சில்வர் ஜுபிலி ஆகி இருக்கிறதாம். பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் வெளிவந்த கரகாட்டகாரன் இரண்டு வருடங்கள் ஓடியது. இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோரின் நட்பே தன்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிரபு-சில்க் ஸ்மிதா நடித்த கோழி கூவுது படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படமும் அனைத்து ஊர்களிலும் 150 நாட்கள் ஓடியதாக கூறுகிறார்.மேலும் கேப்டன் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே,வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் இளையராஜாவின் இசை தான் என்றாலும், இளையராஜா, கங்கை அமரன், ஆர்.சுந்தர்ராஜனின் நட்பும் அவர்களின் எளிமையாகப் பழகும் விதமும் தான் என்கிறார்.

ஒரு காலத்தில் தேனாம்பேட்டையில் இவர், அண்மையில் மறைந்த இசை அமைப்பாளர் சந்திர போஸ், தேவா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர்கள்
ஒன்றாக வசித்து இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் சங்கிலி முருகன் இருந்த லாட்ஜில் அறை எண் 92 -சியை ஞாபகம் வைத்திருக்கிறார். இன்று சாலிக்ராமம் பங்களாவில் இவர்கள் குடியிருந்தாலும் அந்த இனிமையான நாட்களை என்றும் அவர்கள் மறக்க மாட்டார்கள், இன்றும் நினைச்சுப் பார்ப்பார்கள் என்கிறார்.

இவரை சென்டிமேன்ட்டுக்காக பல படங்களில் ஒரு சீன், அரை சீன் காட்சிகளில் நடிக்க கூப்பிட்டாலும் உடனே சம்மதிப்பாராம்.இயக்குனர் தரணி இவரை அனைத்துப் படங்களிலும் நடிக்க அழைப்பதாக கூறுகிறார்.தற்போது கே.வி ஆனந்தின் இயக்கத்தில் உள்ள கோ படத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலையும் விட்டு வைக்கவில்லை. சன் டி.வியில் தங்கம், ராஜ் டி,வியில் வீட்டுக்கு வீடு, கலைஞர் டி.வியில் செண்பகமே போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இப்படி பட்ட ஆடம்பரம் இல்லாத, கொடுக்க்கரத்தை வாங்கிட்டு நடிக்கும், எளிமையான ஒரு கலைஞனை பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டிப்பா மீண்டும் எதாச்சும் பினாத்த வருவேன்.இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.

Thanks: http://dagaalti.blogspot.in/2011/03/blog-post_8905.html

“White” Subbaiah– He was Comedian in Thamizh Films.

திசை மாறிய பறவைகள் [1979] படத்தில் உசிலைமணியுடன் வெள்ளை சுப்பையாVellai Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-1 Vellai Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-

திசை மாறிய பறவைகள் [1979] படத்தில் தயிர்வடை தேசிகன், உசிலைமணியுடன் வெள்ளை சுப்பையாThayirvadai-V.Subbaiah-Usilaimoni-Thisai Maariya Paravaigal 1979-

ImageImage

ஏன் ? [1977] படத்தில் என்னத்தே கன்னையாவுடன் வெள்ளை சுப்பையா

Ennathe Kannaiah-Vellai Subbaiah-En 1974-1Ennathe Kannaiah-Vellai Subbaiah-En 1974-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீவெள்ளை சுப்பையாவுடன்

Vanisree-White Subbaiah-Athay Magal 1965-White Subbaiah-Vanisree-Athay Magal 1965-White Subbaiah-Vanisree-Athay Magal 1965-1

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ,  வெள்ளை சுப்பையாவுடன் சி.எல்.ஆனந்தன்

CL Anandan-Vanisree-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ, காந்திமதி, வெள்ளை சுப்பையாவுடன் சி.எல்.ஆனந்தன்

White Subbaiah-Vanisree-CL Anandan-Kanthimathi-Athay Magal 1965-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் வெள்ளை சுப்பையா White Subbaiah-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் சச்சுவுடன் வெள்ளை சுப்பையா White Subbaiah-Sachu-Ival Oru Seethai 1978-White Subbaiah-Sachu-Ival Oru Seethai 1978-1White Subbaiah-Sachu-Ival Oru Seethai 1978-2

இவள் ஒரு சீதை [1978] படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன் வெள்ளை சுப்பையா White Subbaiah-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-White Subbaiah-Sachu-Surulirajan-Ival Oru Seethai 1978-1White Subbaiah-Surulirajan-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் அய்யா தெரியாதயா ராமராவ், வெள்ளை சுப்பையா, சச்சுவுடன் சுருளிராஜன்Surulirajan-Sachu-S.Ramarao-Ival Oru Seethai 1978-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் செந்திலுடன் வெள்ளை சுப்பையா

White Subbaiah-Samayapurathale Satchi 1985-White Subbaiah-Senthil-Samayapurathale Satchi 1985-

“இமைகள்” [1983] படத்தில் சில்க் சுமிதாவுடன் வெள்ளை சுப்பையா

White Subbaiah-Silk-Emaigal 1983-

“இமைகள்” [1983] படத்தில் ஜி.தனபால், வெள்ளை சுப்பையா,  ஒருவிரல் கிருஷ்ணாராவ்

Oruviral-Duck SV-G.Dhanapal-White Subbaiah-Emaigal 1983-

“இமைகள்” [1983] படத்தில் ஜி.தனபால், வெள்ளை சுப்பையா, சின்ன முருகன்

G.Dhanapal-White Subbaiah-Emaigal 1983-

“இமைகள்” [1983] படத்தில் ஜி.தனபால், வெள்ளை சுப்பையா, சின்ன முருகன், வாத்து சிவராமன், ஒருவிரல் கிருஷ்ணாராவ்

White Subbaiah-Oruviral-Duck SV-G.Dhanapal-Emaigal 1983-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் எம்.ஏ.கணபதிபட், சாவித்திரியுடன் வெள்ளை சுப்பையா

 White Subbaiah-Savithri-Aayiram Rupai 1964-MA.Ganapathi Patt-White Subbaiah-Savithri-Aayiram Rupai 1964-MA.Ganapathi Patt-White Subbaiah-Savithri-Aayiram Rupai 1964-1MA.Ganapathi Patt-White Subbaiah-Savithri-Aayiram Rupai 1964-2MA.Ganapathi Patt-White Subbaiah-Savithri-Aayiram Rupai 1964-3

“முள்ளில்லாத ரோஜா” [1982] படத்தில் வெள்ளை சுப்பையாவுடன் குமரி முத்து White Subbaiah-Mull Illatha Roja 1982-White Subbaiah-Kumari Muthu-Mull Illatha Roja 1982-2White Subbaiah-Kumari Muthu-Mull Illatha Roja 1982-Kumari Muthu-White Subbaiah-Mull Illatha Roja 1982-1Kumari Muthu-White Subbaiah-Mull Illatha Roja 1982-White Subbaiah-Kumari Muthu-Mull Illatha Roja 1982-1

“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 மொட்டை சுப்பையா, கல்லாபெட்டி சிங்காரத்துடன் வெள்ளை சுப்பையாWhite Subbiah-Mottai Subbiah-Kallappetti-Oruthi Mattum Karaiyinile-1981-White Subbiah-Mottai Subbiah-Kallappetti-Oruthi Mattum Karaiyinile-1981-1White Subbiah-Mottai Subbiah-Oruthi Mattum Karaiyinile-1981-

’சீறிவரும் காளை’ 2001 படத்தில் ராமராஜன்எஸ்.எஸ்.சந்திரனுடன்   வெள்ளை சுப்பையாwhite-subbiah-seerivarum-kaalai-2001white-subbiah-ramarajan-ss-chandran-seerivarum-kaalai-2001

“அன்னை அபிராமி” 1972 படத்தில் தேங்காய் சீனிவாசன், திடீர் கன்னையாவுடன் வெள்ளை சுப்பையா vellai-subbiah-annai-abirami-1972vellai-subbiah-thengai-annai-abirami-1972vellai-subbiah-thideer-kanniah-thengai-annai-abirami-1972thideer-kanniah-thengai-vellai-subbiah-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில்  சி.பி.கிட்டான், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை, திடீர் கன்னையாவுடன் வெள்ளை சுப்பையாsv-shunmugam-pillai-thengai-srinivasan-white-subbiah-annai-abirami-1972

“இரட்டை மனிதன்” 1981 படத்தில் லதா, மனோரமா, சுருளிராஜன்  வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆருடன் வெள்ளை சுப்பையா  White Subbiah-VKR-Irattai Manithan 1981-White Subbiah-Surulirajan-SSR-Manorama-VKR-Latha-Irattai Manithan 1981-Surulirajan-SSR-Manorama-VKR-White Subbiah-Latha-Irattai Manithan 1981-1

“உழவன் மகன்” 1987 படத்தில் வெள்ளை சுப்பையாவுடன் விஜயகாந்த்White Subbiah-Vijayakanth-Uzhavan Maghan 1987-

“உழவன் மகன்” 1987 படத்தில் வெள்ளை சுப்பையாவுடன் எம்.என்.நம்பியார், செந்தில்White Subbiah-Uzhavan Maghan 1987-

“உழவன் மகன்” 1987 படத்தில் வெள்ளை சுப்பையாவுடன் குள்ளமணி,  கருப்பு சுப்பையாBlack Suvbbiah-Kullamani-PP.Subbiah-Uzhavan Maghan 1987-

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் எம்.என்.நம்பியார், பிரபுவுடன் வெள்ளை சுப்பையாWhite Subbiah-Pozhuthu Vidinchachu 1984-White Subbiah-Pozhuthu Vidinchachu 1984-1White Subbiah-MN.Nambiar-Prabhu-Pozhuthu Vidinchachu 1984-

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் ஜி.தனபால்,செஞ்சி கிருஷ்ணன், உசிலைமணியுடன் வெள்ளை சுப்பையாWhite Subbiah-Usilaimani-Pozhuthu Vidinchachu 1984-

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் சண்முக சுந்தரத்துடன் வெள்ளை சுப்பையாWhite Subbiah-Shunmugasundaram-Pozhuthu Vidinchachu 1984-57

மனைவி சொல்லே மந்திரம் [1993] படத்தில் நளினி,மோகனுடன் வெள்ளை சுப்பையாWhite Subbiah-Manavi Solle Manthiram 1993-White Subbiah-Mohan-Manavi Solle Manthiram 1993-White Subbiah-Mohan-Manavi Solle Manthiram 1993-1White Subbiah-Mohan-Nalini-Manavi Solle Manthiram 1993-61

One comment on ““White” Subbaiah

  1. சமீபத்தில் இவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கோவை கலெக்டர் இடம் பண உதவி கேட்டதாக செய்தி தாள்களில் படித்த நினைவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s