Magic Radhika

”மாஜிக்” ராதிகா – இவரது பெற்றோரது பூர்வீகம் கேரள மாநிலம் கோட்டயம். இவரது சகோதரியர் கோட்டயத்தில் பிறந்திருந்தாலும் ராதிகா பிறந்தது சென்னையில். சென்னையிலுள்ள குட்ஷெப்பர்டு கான்வெண்டில்தான் இவர் படித்தார். இவருக்கு மலையாளத்தைவிட தமிழே நன்கு தெரியும். ஹீராலால், கோபி கிருஷ்ணா, லக்ஷ்மி நாராயணன் போன்றோரிடம் முறையாக நாட்டியம் கற்றுக் கொண்டார்.  அப்போது இவருக்கு எப்படியேனும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இவர் கிளாசிக்கல் டான்ஸ் பலவற்றை நடத்திக் கொண்டிருந்தார். அதைக் காண பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு முறை இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவரது நாட்டியத்தைப் பார்த்துவிட்டு பலவித பயிற்சிகள் கொடுத்து பரிசோதனைகளையெல்லாம் முடித்து ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா ஆகியோரிடம் அபிப்பிராயம் கேட்டு இவரது தந்தையிடம் தெரிவித்து அனுமதி பெற்று முதன்முதலாக தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய 1966-இல் வெளிவந்த‘சின்னஞ்சிறு உலகம்’. இப்படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் காதலியாக நடித்தார். இப்படத்தில் இவர் மட்டுமே புதுமுகம். வி.கே.ராமசாமியின் மகளாக இவர் கதாபாத்திரம். இப்படம் பெரும் வெற்றி பெற்று இவரை நிலைக்கச் செய்தது. தொடர்ந்து தமிழில் மட்டும் 75 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், நடன தாரகையாகவும், வில்லியாகவும் நடித்தவர். வெகுளிப்பெண், சின்னஞ்சிறு உலகம், ஆதிபராசக்தி, நான் யார் தெரியுமா, புத்திசாலிகள், இருளும் ஒளியும், நல்ல நேரம், மகராசி வாழ்க போன்ற தமிழில் பல படங்களில் நடித்தார்.

இதற்கிடையே இயக்குநர் ஸ்ரீதர் இவரை  சிவந்த மண்  படத்தில் சோலோ டான்ஸ் ஒன்று இருப்பதாகவும் அது நல்ல பெயரை சம்பாதித்துத் தருமென்றும் கூறி அப்படத்தில் நடிக்க ராதிகாவை அழைத்தார். அப்போது தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதனை ஏற்க இயலாது என தெரிவித்தபோதும் ஸ்ரீதர் இல்லை ராதிகா இப்படம் தமிழ், இந்தி இரண்டிலும் வருகிறது. இரண்டிலுமே நீதான் அந்த நடனத்தை ஆடவேண்டுமென்றும் இதற்குப்பின் உனது பெயரே ‘சிவந்த மண்’ ராதிகா என்று மாறிவிடும் என்று வற்புறுத்தியதால் அப்படத்தில் ராதிகா அந்த சோலோ டான்ஸை ஆடினார். இந்த டான்ஸ் இவருக்கு பெரும் பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதன் பின் இவர் ‘சிவந்த மண்’ ராதிகா என்றே பல வருடங்கள் அழைக்கப்பட்டார்.

மலையாளத்தில் ‘பட்டுத் துவாலா’ என்ற படமே இவரது முதல் படமாகும். இயக்குநர் குஞ்சாகோ மலையாளத்தில் இவருக்குப் பல படங்களில் வாய்ப்பளித்தார். மாஜிக் மாஜிக் என்ற படத்தில் சில வருடங்களுக்கு முன் இவர் குஞ்சாகோவின் இயக்கத்தில் நடித்தார். மலையாளத்தில் லவ் இன் கேரளாவில் பிரேம் நஷீர்-ஷீலாவுடன், நீல பொன் மான் கே.பி.உம்மருடன், யக்ஷியில் சத்யனுடன் நடித்தார்.

திரைப்படங்களில் புகழுடனிருக்கும் போதே இவர் மாஜிக் துறையில் ஈடுபட்டார். தெலுங்கில் ‘அர்த்த ராத்திரி’ படத்தில் இவரது தந்தையாக நடித்தார் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரமணா ரெட்டி. இவர் ஒரு பெரிய மாஜிக் நிபுணர். அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரமணா ரெட்டி யிடம் தனது விருப்பத்தைத் தெரித்தார். இவரிடமே ராதிகா மாஜிக் கற்றுக்கொண்டார். மாஜிக்கில் இவரது குருவாக ரமணா ரெட்டியைத்தான் ஏற்றுக்கொண்டார். அதன்பின் இலண்டன் சென்று மேலும் மாஜிக் வித்தைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் ஹிட்டரிஸ்ட்  விஜயகுமார் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு பிராமணன். இவரோ கிருத்தவர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. எனவே விவாகரத்துச் செய்துகொண்டனர். இவரது ஒரே மகன் கிராஃபிக்ஸில் உள்ளார். பல பெரிய திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்து வருகிறார். அவரது ஆதரவிலேயே ராதிகாவுள்ளார். இப்போதும் மாஜிக் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

ஆதிபராசக்தி படத்தில் அமரர் சுருளிராஜனுடன் இணைந்து மீன் விற்கும் குப்பத்துப்பெண்ணாக நடித்தார். இப்படத்தில் “ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா” என்ற பாடலில் இவ்விருவரும் ஆடிய ஆட்டம்  ரசிகர்களால் எக்காலத்திலும் மறக்க இயலாதது. பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது.

Magic Radhika-Vegulippenn 1971

Magic Radhika-Vegulippenn 1971-1

”வெகுளிப் பெண்” 1970 படத்தில் ராதிகாImage

Image

சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் தனித்தும் ஜெமினிகணேசனுடனும் மாஜிக் ராதிகா

Majic Radhika-Chinnanjiru Ulagam-1966- Majic Radhika-Chinnanjiru Ulagam-1966-1 Majic Radhika-Chinnanjiru Ulagam-1966-2 Majic Radhika-Chinnanjiru Ulagam-1966-3 Majic Radhika-Chinnanjiru Ulagam-1966-4 Majic Radhika-Gemini-Chinnanjiru Ulagam-1966-

மகராசி வாழ்க [1976] படத்தில் ஜெயசுதாவுடனும் தனித்தும் மாஜிக் ராதிகாMagic Radhika-Jayasudha-Maharaasi Vazhga 1976-Magic Radhika-Jayasudha-Maharaasi Vazhga 1976-1Magic Radhika-Jayasudha-Maharaasi Vazhga 1976-2Magic Radhika-Maharaasi Vazhga 1976-

நான் யார் தெரியுமா [1973] படத்தில் மாஜிக் ராதிகா தனித்தும் குண்டு கருப்பையாவுடனும்Magic Radhika-Gundu Karupaiah-Naan Yar Theriuma 1972- Magic Radhika-Naan Yar Theriuma 1972-

நான் யார் தெரியுமா [1973] படத்தில் மாஜிக் ராதிகா ஓ.ஏ.கே.தேவருடன்Majic Radhika-OAK.Devar-Naan Yar Theriuma 1972-

சிவந்த மண் [1969] படத்தில் மாஜிக் ராதிகாMagic Radhika-Sivantha Mann 1969-Magic Radhika-Sivantha Mann 1969-1Magic Radhika-Sivantha Mann 1969-2Magic Radhika-Sivantha Mann 1969-4

2010-இல் மாஜிக் ராதிகா மலையாளத் தொலைக்காட்சியான ‘அமிர்தா’ ரி.வி.யில் இந்நலத்தே தாரம் நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது

Magic Radhika- Magic Radhika-1 Magic Radhika-3

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் குப்பத்து மீனவப்பெண்ணாக மாஜிக் ராதிகாவும் சுருளிராஜன் மற்றும் ஆதி பராசக்தியாக எஸ்.வரலக்ஷ்மியும்Magic Radhika-Surulirajan-Aathi Parasakthi 1971-Magic Radhika-Surulirajan-S.Varalakshmi-Aathi Parasakthi 1971-Magic Radhika-Surulirajan-S.Varalakshmi-Aathi Parasakthi 1971-1

”தெய்வீக உறவு” 1968 படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் மாஜிக் ராதிகா Magic Radhika-Deiviga Uravu 1968-2Magic Radhika-Deiviga Uravu 1968-Magic Radhika-Deiviga Uravu 1968-1Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-1Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-3Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-2

Magic Radhika with Vanisree in ‘Iddaru Ammayilu’ 1972 Telugu MovieMagic Radhika-Iddaru Ammayilu 1972-1Magic Radhika-Iddaru Ammayilu 1972-3Magic Radhika-Iddaru Ammayilu 1972-Magic Radhika-Iddaru Ammayilu 1972-2Magic Radhika-Vanisri-Iddaru Ammayilu 1972-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் சுஜாதாவுடன் மாஜிக் ராதிகாMagic Radhika-Vaazhnthu Kaattugiren 1975-1Magic Radhika-Vaazhnthu Kaattugiren 1975-Magic Radhika-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-1Magic Radhika-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் எம்.பானுமதியுடன் மாஜிக் ராதிகாMagic Radhika-M.Bhanumathi-Vaazhnthu Kaattugiren 1975-

“ஒரு விரல்” 1965 படத்தில் பிரேம் ஆனந்துடன் மாஜிக் ராதிகாMalaysia Magic Radhika-Oru Viral 1965-4Malaysia Magic Radhika-Oru Viral 1965-2Malaysia Magic Radhika-Oru Viral 1965-3Malaysia Magic Radhika-Oru Viral 1965-1Malaysia Magic Radhika-Oru Viral 1965-Malaysia Magic Radhika-Prem Anand-Oru Viral 1965-50

“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் மாஜிக் ராதிகாMagic Radhika-Thulli Odum Pulliman 1971-Magic Radhika-Thulli Odum Pulliman 1971-1Magic Radhika-Thulli Odum Pulliman 1971-2Magic Radhika-Thulli Odum Pulliman 1971-354

”சுபதினம்” 1969 படத்தில் நாகேஷுடன் மாஜிக் ராதிகாMagic Radhika-SUBHA DINAM 1969-Magic Radhika-Nagesh-SUBHA DINAM 1969-

”சுபதினம்” 1969 படத்தில் கே.கண்ணனுடன் மாஜிக் ராதிகாMagic Radhika-K.Kannan-SUBHA DINAM 1969-1Magic Radhika-K.Kannan-SUBHA DINAM 1969-58

இன்னும் படங்கள் வரும்.

தகவல் உதவி:- ‘அமிர்தா தொலைக்காட்சி [மலையாளம்]. நன்றி: அமிர்தா ரி.வி.

Advertisements

One comment on “Magic Radhika

  1. இவர் வாழ்வு என் பக்கம் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் காதலியாக வருவார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s