V.M.Ezhumalai

V.M.ஏழுமலை

இயற்பெயர் வி.எம்.ஏழுமலை செட்டியார். மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.தூக்குத்தூக்கித் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் போன்ற பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம்.  இவரது அங்க சேஷ்டைகள் படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்யும்.இவருக்கென தனி ஸ்டைலில் இவர் நகைச்சுவையை வாரி வழங்கினார்.

சமீபத்தில் 1950-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் பொன்முடி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் ஏழுமலையும் ஏ.கருணாநிதியும் மச்சானும் மாப்பிள்ளையுமாவர். ஆனாலும் இருவரும் பரம எதிரிகளைப் போல் நடந்துகொள்வர். அதிலொரு காட்சியில் ஏழுமலை ஓர் மரத்தின் கீழ் தன்னுடைய ஆடுகளை விட்டுக்கொண்டு மரத்திலேறி இலை தழைகளை வெட்டிப்போட்டுக் கொண்டிருப்பார். இது தெரியாமல் கருணாநிதி தன்னுடைய ஆடு ஒன்றை மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு விட்டு விடுவார். ஆடும் நன்றாக மேய்ந்து கொண்டிருக்கும். இதை மரத்தின் மேலிருந்து கவனித்துவிட்ட ஏழுமலை எலே எவண்டா அது ஆட கொண்டாந்து மேயவிட்டது என்பார். அதற்கு கருணாநிதி…. நாந்தாண்டா….. இங்க ஆட்ட மேய விடறதுக்கு எவண்டடா கேக்கணும்; அப்படித்தாண்டா மேயும் என்று விதண்டாவாதம் பண்ணிக்கொண்டிருப்பார். மரத்திலிருந்து இறங்கிய ஏழுமலை கருணாநிதியைப் பார்த்து அடி வாங்காம ஆட்ட பத்திட்டுப் போடா என்பார். அதற்குக் கருணாநிதி நீ அடிச்சா என்கை என்ன பூவாப்பறிச்சிக்கிட்டிருக்கும் என்பார். கோபமுற்ற ஏழுமலை கருணாநிதியை மொத்து மொதென்று மொத்திவிடுவார். மொத்த அடியையும் வாங்கிக்கொண்டு எதிர்த்து அடிக்கத் துணிவின்றி யோவ் இந்த இடம் சரியில்ல. இன்னொரு நாள் பாத்துக்கிடறேன் ஒன்ன என்று சொல்லிக்கொண்டு ஆட்டைப் பிடித்துக் கொண்டு செல்வார். இக்காட்சியை ஏழுமலையின் உடல்மொழியுடனும் குரல்மொழியுடனும் திரையில் பார்ப்பதற்கு நகைச்சுவை விருந்தளிக்கும்.

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் என்ற படத்தில் நாடகத் தயாரிப்பாளராக வி.எம்.ஏழுமலை வருவார்.அதில் நாடக நடிகையாக வரும் நம்பியாரின் காதலியான சரோஜாதேவியை அடைவதற்காக எம்.என்.நம்பியாரிடம் சரோஜாதேவியை வைத்து நாடகம் நடத்த வேண்டுமென்று காக்கா பிடித்துக் கொண்டு வளைய  வலம் வரும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை விருந்தளிப்பார்.

சொந்தமாக பாகஸ்தர்களுடன் சேர்ந்து ஒரு படத்தையும் தயாரித்தார்.

1962-இல் வெளியான ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற படம் இவரது பங்களிப்பில் வெளிவந்த கடைசிப் படங்களுள் ஒன்று. இவரது மறைவுக்குப் பின் வெளியானது. அதில் இவர் தலைமைக் காவலர் வேடத்தில் நடித்திருந்தார்.

1953-இல் வெளிவந்த வெற்றிச் சித்திரமான “மதன மோகினி”யில் ஒரு காட்சி. அங்கமுத்து சேவற்கோழி ஒன்றைத் திருடன் ஒருவன் திருடிச் செல்லும் போது அதைப் பெருமையாக பாடிக்கொண்டே செல்வார். அப்போது ஒரு மண்டபத்திலிருந்து இதைக் கவனித்து வரும் வி.எம்.ஏழுமலை , புளிமூட்டை ராமசாமியும் அவனை மடக்கி நீ சொல்வதெல்லாம் உண்மைதானே என கேட்க, அதற்கு எதற்கெடுத்தாலும் “இது அப்பவே தெரியுமே” என அடிக்கடி கூறும் ஏழுமலை நான் சொல்லல உலகத்துல எவ்வளவோ அதிசயங்கள் எல்லாம் நடக்கும். அதுல இதுவும் ஒண்ணு என சொல்ல., அதக் கேட்டுப் பாத்துருவோம் என புளி மூட்டையும் சொல்ல, சேவல் திருடியவன் தங்க முட்டையைப் பத்தித்தான கேக்கப்போறீங்க என்பார். தினம் ஒரு முட்டையிடும் என்றும் கூற , புளிமூட்டை  அவன் கையிலிருக்கும் சேவலை, இத வெலைக்குக் கொடுக்கிறீங்களா என கேட்பார்..ஆகாங்…. இத வெலைக்குக் கொடுக்கறதுல்ல.  வேணா வாடகைக்குத் தரேன் என்று அதற்கு வாரத்திற்கு 100 வராகன்கள் என கேட்பார். அட போயா என்பார் புளிமூட்டை ராமசாமி. அதற்கு வி.எம்.எழுமலை அடப் பொறு அண்ணே அவசரப் படாதேண்ணே , தங்கமுட்டை விடுதில்ல. மூஞ்சியைப் பாத்தா தெரியல்ல. அது சாதாரண கோழியில்ல. தங்கமுட்டை நாளைக்கு ரெண்டொண்ணு விழும். அப்படீன்னா கணக்குப் பாரு.  ஆறு நாலும் பத்து, நாலும் ஆறும் பத்து என்பார், கேட்டேன். உன் கணக்குல மண்ணள்ளிப் போட என்பார் புளிமூட்டை. அட இருக்கட்டும் விடண்ணே அத வாங்கு என்பார் ஏழுமலை. ஆனால் கையில பணமில்லையே என்பார் புளிமூட்டை. “இது அப்பவே தெரியுமே” என்பார் ஏழுமலை. உடனே இருவரும் தத்தமது கரங்களில் அணிந்திருந்த காப்புக்களைக் கொடுத்து அச்சேவலை வாங்கிவிடுவர். வெளியில் தெரியாமல் கொண்டு செல்லவேண்டுமென கொடுத்தவர் கூறிவிடுவார். இவர்களும் அது போலவே மறைத்துக் கொண்டு செல்வர். அப்போது எதிரே சேவலைத் தேடி உரிமையாளரான அங்கமுத்து வர இவர்கள் மறைக்க துணிக்குள்ளிருந்து சேவல் ஒலியெழுப்ப அகப்பட்டுவிடுவர் இருவரும். அப்போது இருவரும் இது பொன் முட்டையிடும் கோழி. அதனால் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கி வருகிறோம் என்பர். அதற்கு அங்கமுத்து அது சரி பொன் முட்டையிடுவதிருக்கட்டும். எங்கேயாவது சேவல் முட்டையிடுமாடா சேவலத் திருடி மறைச்சிகிட்டாடா போறீங்க என கேட்க இருவரும் ஓட்டம்பிடிப்பர்.  இக்காட்சி மிகவும் சுவாரஸியமாக இருக்கும்.

தமிழுடன் சில தெலுங்குப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ImageImage

Image

V.M.Ezhumalai-Town Bus.-1jpg

V.M.Ezhumalai-Town Bus.-2jpg

V.M.Ezhumalai-Town Bus.-3jpg V.M.Ezhumalai-Town Bus

மிஸ்ஸியம்மா படத்தில் ஜமுனா, டணால் கே.ஏ.தங்கவேலு மற்றும் ஏ.கருணாநிதியுடன் ஏழுமலை

V.M.Ezhumalai-KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa V.M.Ezhumalai-KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa -1

மலைக்கள்ளன் படத்தில் பி.பானுமதியுடன் ஏழுமலை

V. M. Ezhumalai as Sadaiyan-Malaikkallan 1954-1

V.M.EZHUMALAI-MALAIKKALLAN

‘மலைக்கள்ளன்’ [1954] படத்தில் பானுமதி, பி.எஸ்.ஞானத்துடன் ஏழுமலை

V. M. Ezhumalai as Sadaiyan-Malaikkallan 1954-V. M. Ezhumalai as Sadaiyan-PS.Gnanam-Malaikkallan 1954-

மலைக்கள்ளன் படத்தில்  ஏழுமலைதுரைராஜ்எம்.ஜி.சக்கரபாணிV.M.EZHUMALAI - TS.DURAIRAJ-CHAKRAPANI- MALAIKKALLAN

மலைக்கள்ளன் படத்தின் இறுதிக்காட்சியில் இடமிருந்து வலமாக துரைராஜ், ஏழுமலை, எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ஆர், டி.பாலசுப்பிரமணியம், பானுமதி, பி.எஸ்.ஞானம்TS.DURAIRAJ-EZHUMALAI- CHAKRAPANI- MGR -D.BALASUBRAMONIYAM- BHANUMATHI- PS.GNANAM-MALAIKKALLAN

திகம்பர சாமியார் (1950) படத்தில் எம்.என்.நம்பியாருடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Digambara SamiyarVM.Ezhumalai-MN.Nambiyar-Digambara Samiyar.-1jpgVM.Ezhumalai-MN.Nambiyar-Digambara Samiyar

1950-இல் வெளிவந்த “பொன்முடி” படத்தில் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai--Ponmudi 1950-VM.Ezhumalai--Ponmudi 1950-1VM.Ezhumalai--Ponmudi 1950-2

1950-இல் வெளிவந்த “பொன்முடி” படத்தில் ஏ.கருணாநிதியுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai--Ponmudi 1950-3

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் என்ற படத்தில் வி.எம்.ஏழுமலை நம்பியாருடன்VM.Ezhumalai-MN.Nambiyar-Illarame Nallaram 1958-

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் ’அசம்பாவிதம்’ என்ற கதாபாத்திரத்தில் வி.எம்.ஏழுமலை

VM.EZHUMALAI-VAAZHKAI-VM.EZHUMALAI-VAAZHKAI-2VM.EZHUMALAI-VAAZHKAI-3VM.EZHUMALAI-VAAZHKAI-4

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன்

VM.EZHUMALAI-TRR-VAAZHKAI-2VM.EZHUMALAI-TRR-VAAZHKAI-1VM.EZHUMALAI-TRR-VAAZHKAI-

1949-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் பி.டி.சம்பந்தம்

VM.EZHUMALAI-TRR-PD.SAMPANTHAM-VAAZHKAI-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.எம்.ஏழுமலை  கே.சாய்ராமனுடன்

VM.Ezhumalai-K Sairaman-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.எம்.ஏழுமலை  VM.Ezhumalai-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் வி.எம்.ஏழுமலை மற்றும் கே.சாய்ராமனுடன் வி.கே.ராமசாமி

VM.Ezhumalai-K Sairaman-VKR-Neelavukku Neranja Manasu 1960-

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் மண்ணப்பன் என்ற கதாபாத்திரத்தில் வி.எம்.ஏழுமலை                                       VM.Ezhumalai as Mannappan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1VM.Ezhumalai as Mannappan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் மண்ணப்பன் என்ற கதாபாத்திரத்தில் வி.எம்.ஏழுமலையும் காளி என்ற கதாபாத்திரத்தில் காளி என்.ரத்தினமும்

 VM.Ezhumalai-Kali N Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1VM.Ezhumalai-Kali N Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

”குணசுந்தரி” [1955] படத்தில் அப்பா துரைசாமி, எஸ்.வி.ரெங்காராவுடன் வி.எம்.ஏழுமலை

Ezhumalai-Appa Duraisami-SVR-Gunasundari 1955-

”குணசுந்தரி” [1955] படத்தில் சி.வி.வி.பந்துலுவுடன் வி.எம்.ஏழுமலைEzhumalai-CVV.Bandulu-Gunasundari 1955-

”குணசுந்தரி” [1955] படத்தில் எம்.இ.மாதவன், எம்.என்.நம்பியாருடன் வி.எம்.ஏழுமலைEzhumalai-MN.Nambiar-Gunasundari 1955-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் ஜெமினி ஆர்.கணேசன், ரி.எஸ்.பாலையாவுடன் வி.எம்.ஏழுமலை

VM.Ezhumalai-R.Ganesan-Jamuna-TS.Balaiah-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன்  வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-TRR-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் பாலையாவுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-TS.Balaiah-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் பாலையா, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் வி.எம்.ஏழுமலை

VM.Ezhumalai-TS.Balaiah-TRR-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் ஜமுனாவுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Jamuna-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேலு, ஆர்.பக்கிரிசாமி, ஈ.வி.சரோஜாவுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-KA.Thangavelu-EV.Ezhumalai-Kadan Vangi Kalyanam 1958-

”கடன் வாங்கி கல்யாணம்” [1958] படத்தில் கே.ஏ.தங்கவேலு, ஜமுனா, ஆர்.கணேசனுடன் வி.எம்.ஏழுமலை

VM.Ezhumalai-KA.Thangavelu-R.Ganesan-Kadan Vangi Kalyanam 1958-

“ஜீவிதம்” [1953] என்ற தெலுங்குப் படத்தில் [வாழ்க்கைப் படத்தின் தழுவல்] ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Jeevitham 1950-1VM.Ezhumalai-Jeevitham 1950-VM.Ezhumalai-TR.Ramachandran-Jeevitham 1950-VM.Ezhumalai-TR.Ramachandran-Jeevitham 1950-1VM.Ezhumalai-TR.Ramachandran-Jeevitham 1950-2

“ஜீவிதம்” [1953] என்ற தெலுங்குப் படத்தில் [வாழ்க்கைப் படத்தின் தழுவல்] ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் பி.டி.சம்பந்தம் VM.Ezhumalai-PD.Sampantham-Jeevitham 1950-VM.Ezhumalai-PD.Sampantham-Jeevitham 1950-1

’நல்லதங்கை’’ 1955 படத்தில் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Nalla Thangai 1955-VM.Ezhumalai-Nalla Thangai 1955-2VM.Ezhumalai-Nalla Thangai 1955-1

’நல்லதங்கை’’ 1955 படத்தில் வி.எம்.ஏழுமலை, ராஜசுலோசனாவுடன் மாதுரி தேவி VM.Ezhumalai-Rajasulochana-Madhuridevi-Nalla Thangai 1955-VM.Ezhumalai-Rajasulochana-Madhuridevi-Nalla Thangai 1955-1

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் புளிமூட்டை ராமசாமியுடன்  வி.எம்.ஏழுமலை Pulimoottai Ramasamy-VM.Ezhumalai-Nalla Thangai 1955-2

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் புளிமூட்டை ராமசாமியுடன் வேணுபாய், வி.எம்.ஏழுமலை Pulimoottai Ramasamy-VM.Ezhumalai-Nalla Thangai 1955-3Pulimoottai Ramasamy-VM.Ezhumalai-Nalla Thangai 1955-1Pulimoottai Ramasamy-VM.Ezhumalai-Nalla Thangai 1955-65

”சாரங்கதரா” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்Poongavanam MR.Santhanam-VM.Ezhumalai-Sarangadhara 1959-1Poongavanam MR.Santhanam-VM.Ezhumalai-Sarangadhara 1959-VM.Ezhumalai-Poongavanam MR.Santhanam-Sarangadhara 1959-

”சாரங்கதரா” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம் , எம்.என்.நம்பியார்

VM.Ezhumalai-Poongavanam MR.Santhanam-MN.Nambiar-Sarangadhara 1959-69

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் வி.எம்.ஏழுமலை

VM.Ezhumalai-MR.Radha-Ellorum Vaazhavendum 1962-1VM.Ezhumalai-MR.Radha-Ellorum Vaazhavendum 1962-VM.Ezhumalai-MR.Radha-Ellorum Vaazhavendum 1962-272

”பணம் பந்தியிலே” 1961 படத்தில்  வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Panam Panthiyile 1961-1VM.Ezhumalai-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” 1961 படத்தில் எஸ்.என்.லட்சுமி, வி.கே.ராமசாமியுடன்  வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-VK.Ramasamy-SN.Lakshmi-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” 1961 படத்தில் வி.பி.எஸ்.மணி, எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் வி.எம்.ஏழுமலைVPS.Mani-VM.Ezhumalai-SSR-Panam Panthiyile 1961-76

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் எம்.என்.நம்பியாருடன்  வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-Enga Veetu Mahalakshmi 1957-VM.Ezhumalai-MN.Nambiar-Enga Veetu Mahalakshmi 1957-1VM.Ezhumalai-MN.Nambiar-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் ஏ.நாகேஷ்வர ராவுடன்  வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-A.Nageswara Rao-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் எம்.என்.நம்பியார், ஏ.நாகேஷ்வர ராவுடன்  வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-MN.Nambiar-A.Nageswara Rao-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் கே.ஏ.தங்கவேலு, எம்.எஸ்.சுந்தரிபாயுடன் வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-KA.Thangavelu-MS.Sundaribhai-Enga Veetu Mahalakshmi 1957-

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் எஸ்.வி.ரங்காராவ் பி.கண்ணாம்பாவுடன் வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-P.Kannamba-SV.Ranga Rao-Enga Veetu Mahalakshmi 1957-83

”கன்னிகா” 1947 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் காளி என்.ரத்தினம்VM.Ezhumalai as Poojari Shyshyan-Kanniga 1947-VM.Ezhumalai as Poojari Shyshyan-Kanniga 1947-1Kali N.Rathnam-VM.Ezhumalai-Kanniga 1947-86

”மாங்கல்யம்” 1954 படத்தில் வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் ஏ.கருணாநிதி

VM.Ezhumalai-Maangalyam 1954-2VM.Ezhumalai-Maangalyam 1954-1VM.Ezhumalai-Maangalyam 1954-VM.Ezhumalai-A.Karunanidhi-BS.Saroja-Maangalyam 1954-VM.Ezhumalai-A.Karunanidhi-Maangalyam 1954-

”மாங்கல்யம்” 1954 படத்தில் வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் எஸ்.ஏ.நடராஜன்VM.Ezhumalai-SA.Natarajan-Maangalyam 1954-92

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் VM.Ezhumalai chettiar-Ponni 1953-2VM.Ezhumalai chettiar-Ponni 1953-1VM.Ezhumalai chettiar-Ponni 1953-VM.Ezhumalai chettiar-TS.Durairaj-Lalitha-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் பி.எஸ்.ஞானம்,  டி.பாலசுப்பிரமணியம்VM.Ezhumalai chettiar-P. S. Gnanam-Ponni 1953-VM.Ezhumalai-K.N.Kamalam-D.Balasubramaniam-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன்  எம்.ஆர்.சுவாமிநாதன்MR.Swaminathan-VM.Ezhumalai chettiar-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் ரி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன்MR.Swaminathan-VM.Ezhumalai chettiar-T.S.Durairaj-Ponni 1953-100

”சாரங்கதரா” 1958 படத்தில் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் எம்.என்.நம்பியார்

VM.Ezhumalai-MN.Nambiar-Poongaavanam MR.Santhanam-Sarangadhara 1958-VM.Ezhumalai [Prohithars]-Poongaavanam MR.Santhanam-Sarangadhara 1958-Poongaavanam MR.Santhanam-VM.Ezhumalai [Prohithars]-Sarangadhara 1958-VM.Ezhumalai-MN.Nambiar-Poongaavanam MR.Santhanam-Sarangadhara 1958-1104

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் ஜெமினி பாலுVM.Ezhumalai-Gemini Balu-Manjal Magimai 1959-VM.Ezhumalai-Gemini Balu-Manjal Magimai 1959-1Gemini Balu-VM.Ezhumalai-Manjal Magimai 1959-1

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் ஜெமினி பாலு, எஸ்.வி.ரங்காராவ்

VM.Ezhumalai-Gemini Balu-SVR-Manjal Magimai 1959-

”மஞ்சள் மகிமை” 1959 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன்  கே.ஏ.தங்கவேலு, ஜெமினி பாலு

Gemini Balu-VM.Ezhumalai-Thangavelu-Manjal Magimai 1959-109

“அமுதவல்லி” 1959 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் வி.எம்.ஏழுமலை செட்டியார்

VM.Ezhumalai-Amudhavalli 1959-1VM.Ezhumalai-Amudhavalli 1959-VM.Ezhumalai-TR.Mahalingam-Amudhavalli 1959-112

”மதனமோகினி”1953 படத்தில் புளிமூட்டை ராமசாமியுடன் வி.எம்.ஏழுமலை VM.Ezhumalai-Madana Mohini 1953-1VM.Ezhumalai-Madana Mohini 1953-VM.Ezhumalai-Pulimoottai Ramaswami-Madana Mohini 1953-VM.Ezhumalai-Pulimoottai Ramaswami-Madana Mohini 1953-1Pulimoottai Ramaswami-VM.Ezhumalai-Madana Mohini 1953-Pulimoottai Ramaswami-VM.Ezhumalai-Madana Mohini 1953-1Pulimoottai Ramaswami-VM.Ezhumalai-Madana Mohini 1953-2

”மதனமோகினி”1953 படத்தில்  பி.வி.நரசிம்ம பாரதி புளிமூட்டை ராமசாமியுடன் வி.எம்.ஏழுமலை Pulimoottai Ramaswami-VM.Ezhumalai-PV.Narasimha Bharathi-Madana Mohini 1953-

”மதனமோகினி”1953 படத்தில் கே.எஸ்.அங்கமுத்து புளிமூட்டை ராமசாமியுடன் வி.எம்.ஏழுமலை  KS.AngamuthuPulimoottai Ramaswami-VM.Ezhumalai-Madana Mohini 1953-121

”உத்தமபுத்திரன்” 1940 படத்தில் காளி என்.ரத்தினத்துடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-Kali N.Rathnam- Uthama Puthiran 1940-VM.Ezhumalai-Kali N.Rathnam- Uthama Puthiran 1940-1Kali N.Rathnam- VM.Ezhumalai-Uthama Puthiran 1940-

”உத்தமபுத்திரன்” 1940 படத்தில் எஸ்.எஸ்.கொக்கொவுடன் வி.எம்.ஏழுமலைVM.Ezhumalai-SS.Kocho- Uthama Puthiran 1940-125

“மாயா பஜார்” 1957 படத்தில்  வி.எம்.ஏழுமலைச் செட்டியார்VM.Ezhumalai - Maya Bazaar 1957- (1)VM.Ezhumalai - Maya Bazaar 1957- (2)

“மாயா பஜார்” 1957 படத்தில்  வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் எஸ்.வி.ரங்காராவ்VM.Ezhumalai-SVR - Maya Bazaar 1957-

“மாயா பஜார்” 1957 படத்தில் வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் ஏ.கருணாநிதிVM.Ezhumalai-A.Karunanidhi - Maya Bazaar 1957-

“மாயா பஜார்” 1957 படத்தில்  வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் எஸ்.வி.ரங்காராவ், சி.ரி.ராஜகாந்தம் CT.Rajakantham-SVR-VM.Ezhumalai - Maya Bazaar 1957-CT.Rajakantham-SVR-VM.Ezhumalai - Maya Bazaar 1957-1131

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் கே.ஏ.தங்கவேலுVM.Ezhumalai-Athisaya Thirudan 1958-KA.Thangavelu-VM.Ezhumalai-Athisaya Thirudan 1958-

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் ஜெமினி கணேசன்VM.Ezhumalai-Gemini Ganesani-Athisaya Thirudan 1958-

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்Kallapart TR.Natarajan-VM.Ezhumalai-Athisaya Thirudan 1958-01VM.Ezhumalai-Kallapart TR.Natarajan-Athisaya Thirudan 1958-VM.Ezhumalai-Kallapart TR.Natarajan-Athisaya Thirudan 1958-01

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் கே.சாவித்திரிVM.Ezhumalai-Savithiri-Athisaya Thirudan 1958-VM.Ezhumalai-Savithiri- Kallapart TR.Natarajan-Athisaya Thirudan 1958-

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் ரி.பி.முத்துலட்சுமிVM.Ezhumalai-TP.Muthulakshmi-Athisaya Thirudan 1958-140

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s