A.Karunanidhi

A.கருணாநிதி-தமிழ்ப்படவுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர். மேலும் மிகச்சிறந்த சமையற்கலை நிபுணர். நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சென்னை தியாகராயநகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார். இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரது உணவகம் பெயர் பெற்றிருந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1948-ஆம் ஆண்டில் வெளிவந்த “ஆதித்தன் கனவு” என்ற படத்தில் இவர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து “திகம்பர சாமியார்”, ”பொன் முடி”, ”தேவகி”, “கல்யாணி”, “வளையாபதி” என மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

1923-இல் திருவாரூரில் பிறந்த இவர் 58 ஆவது வயதில் 1981-இல் காலமானார். இவருக்கு ஏ.சுவாராஜையம் என்ற மனைவியும் மூன்று மகள்களும், ஒரு மகனும் ஐந்து பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

மாங்கல்யம் ‘ என்ற படத்தில் ஏ கருணாநிதி தான் குளித்தலைக்கு செல்லவிருப்பதை வி.எம் ஏழுமலை என்ற நடிகரிடம் இரவு விடை பெறும்போது ஓட்டை இங்கிலீஷில் சொல்வார் :“Good Morning! I am going to ‘ the’ Kulithalai. Good Morning!”
குழந்தைத்தனமான காமடியன் ! அந்த விடைத்த மூக்கு அவரது காமடிக்கு மிகவும் கைகொடுத்தது .
பெண் வேடமிட்டு அவர் வந்தால் கொனஷ்டைகள் பிரமாதமாக இருக்கும் .
கதாநாயகி படத்தில் பெண் வேடமிட்டு அவர் சொல்லும் ” நாங்கல்லாம் ரொம்ப கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பொம்பளைங்க ” கேட்கும்போதே சிரிப்பை நம்மால் அடக்க முடியாது .
வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் பெண் வேடத்தில் அவர் மாட்டுவண்டி யோட்டும் சிவாஜிக்கு பின் உட்கார்ந்து செய்யும் கொனஷ்டைகள் !
அதே படத்தில்
“ஒற்றனாக நான் போகிறேன் அரசே ” என்பார் . சிவாஜி ” பொடியன் பொருத்தமானவன் ”
வெள்ளையர் படையெடுத்து வருவதை தெரிவிக்கும்போது ‘ நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் .முடியவில்லை ‘ – ஏ கருணாநிதி பதட்டத்துடன் சொல்லும்போது வேடிக்கையாயிருக்கும் .

குழந்தை தனமான காமெடி செய்தவர் என்றாலும் ‘பாலும் பழமும்’ படத்தில் எம்ஜியார் – வி என் ஜானகி திருமணம் பற்றி அரசியல் பேசியவர் .
” ஜானகிக்காக ராமச்சந்திரன் வில்லை ஒடைக்கலயா ?”
மனோரமாவிடம் காதல் பேசிவிட்டு ‘வரட்டுமா ‘ என்று வீட்டின் மேலே பார்ப்பார் .மனோரமா ‘ ஓடு புதுசா இப்பத்தான் மேலே போட்டுருக்கு . வாசல் வழியா போ ‘ என்பார் .
மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் கண்டக்டர் நாகேஷ் உடன் சேர்ந்து டிரைவர் ஏ கருணாநிதி அடிக்கும் லூட்டி ..
அதே கண்கள் படத்தில் மலையாளி சமையல்காரராக “யாரு செத்துபோயி ” என்று திகிலுடன் கேட்பார் .
‘ஆதி பராசக்தி ‘ படத்தில் ஒ . ஏ .கே .தேவரும் , ஏ .கருணாநிதியும் அசுரர்கள் .தேவர்களை சிறைப்பிடித்துவிடுவார்கள் . தேவகன்னிகைகளை பார்வையிடும்போது தேவர் ஜொள்ளு விட்டு சொல்வார் : தம்பி ! இந்த தேவ கன்னிகைகளை பார்த்தவுடன் தேவப்பயல்கள் மீது இரக்கம் வருகிறது .”உடனே ஏ .கருணாநிதி அழுத்தமாக சொல்வார் : இயற்கை ! இயற்கை !
முத்து லக்ஷ்மி யுடன் ஜோடியாக இணைந்து நிறைய படங்கள் (கிட்டத்தட்ட நூறு படங்கள் ?அல்லது நூற்றுக்கும் மேல் )நடித்தவர்.
” மாமியா ஓட்டல் ” என்ற பெயரில் கடைசி காலத்தில் உணவகம் நடத்தினார் .எலும்புருக்கி நோயால் இறந்தார் .

நன்றி:-http://rprajanayahem.blogspot.in/

ஆதி பராசக்தி படத்தில் ஒரு சுவையான காட்சி. ஓ.ஏ.கே.தேவரும் ஏ.கருணாநிதியும் பங்கு கொண்டது. சும்பன் ஓ.ஏ.கே.தேவர், நிசும்பன் ஏ.கருணாநிதி. சும்பன் அண்ணன் – நிசும்பன் தம்பி.

சும்பனும் நிசும்பனும் 15 வருடங்கள் கடும் தவம்புரிந்து பிரம்மாவிடம் ஒரு வரம் வாங்கிவிடுகின்றனர். அதாவது அவர்களாகவே அவர்களை அழித்துக் கொண்டாலொழிய வேறு எவராலும் இவர்களை அழிக்க முடியாது என்பது தான் அந்த வரம். அதனால் வரத்தைக் கொடுத்த பிரம்மா,விஷ்ணு,எமதர்மன் முதல் அத்தனை பேரையும் ஆட்டிப்படைக்கின்றனர் இருவரும். இதற்கு முடிவுகாண அன்னை ஆதிபராசக்தியை நாடுகின்றனர் பிரம்மாவும் மற்றவர்களும். அதைக் கேட்டு ஆதி பராசக்தி அழகான ஒரு பெண்ணாக உருமாறி (வாணிஸ்ரீ) நடனமாடுவதற்காக சும்பன் – நிசும்பன் அவைக்கு வருகிறார். நடனதாரகையைப் பார்த்த இருவரும் அப்பெண்ணை அடைந்துவிடவேண்டுமென போட்டி போட்டு துடிக்கின்றனர். அப்போது சும்பனும் நிசும்பனும் உரையாடும் காட்சி.

நிசும்பன் (ஏ.கருணாநிதி):-

ஆ அஹ்ஹஹ்ஹா……வந்தார்கள் மடையர்கள்

சும்பன் (ஓ.ஏ.கே.தேவர்):- மடையர்கள் கடைமடையர்கள்

சும்பன்:-

தம்பி இந்தப் பெண்ணை பேயென்று சொன்ன காவலாளிகளுக்குக்        கடுமையான தண்டனைக் கொடுத்துவிட்டு வா…போ…போ….

நிசும்பன்:- தாங்கள்

சும்பன்:- நான் இங்கிருந்தபடியே இவளைக் கண்காணித்துக் கொள்கிறேன்.

நிசும்பன்:- சும்பண்ணா……..

சும்பன்:- தம்பி….

நிசும்பன்:-

இன்று வரை எல்லா கட்டளைகளையும் தாங்கள் தானே இட்டுக் கொண்டு வருகிறீர்கள். அதன் பிரகாரம் இந்தக் கட்டளையையும் தாங்களே இடுங்கள் அண்ணா… போங்கள் அண்ணா போங்கள் அண்ணா…

சும்பன்:- நீ….

நிசும்பன்:-

நான் இங்கிருந்தபடியே அந்தப்பெண்ணைக் கண்காணித்துக் கொள்கிறேன்.

சும்பன்:- தம்பீ….

நிசும்பன்:- அண்ணா…..

சும்பன்:- இப்படி இப்படி…. புரிகிறதடா உன் எண்ணம்…..

நிசும்பன்:-

எனக்கும் புரிகிறது உங்கள் எண்ணம்.. சுருக்கமாகச் சொல்கிறேன். அந்தப் பெண்ணை முதலில் பார்த்தவன் நான். ஆகவே எனக்குதான் அவள் சொந்தம்.

சும்பன்:-

ஆ .. கண்டுவிட்டால் மட்டும் உனக்கு அவள் சொந்தமாகிவிடுவாளோ? இந்தப் பெண்ணை முதலில் காதலித்தவனே நான்தான்.

நிசும்பன்:-

காதலா? அந்தப் பெண்ணைக் கண்ட மறுகணமே தாரமாக எண்ணிவிட்டேன். தம்பியின் தாரத்தை இம்சிப்பது மகா பாவம் அண்ணா.

சும்பன்:- டேய்ய்ய்ய்….

நிசும்பன்:- ம்ம்ம்ம்ம்….

சும்பன்:-

இனி ஒரு தரம் அவளை தாரம் என்று நீ சொன்னால் உன் சிரம் உன் கழுத்திலிருக்காது.

நிசும்பன்:- அதுவரை என் கரம் பூப்பறித்துக் கொண்டிருக்குமோ?

சும்பன்:- போடா சின்னப்பயலே….

நிசும்பன்:- நீ போடா சும்பா…

சும்பன்:- அட மூடா கொஞ்சம்கூட அண்ணன் என்ற மரியாதை இல்லாமல்

நிசும்பன்:-

பெண்கள் விஷயத்தில் அண்ணனாவது தம்பியாவதுடா மடையா… இவளை அடைவதற்காக நான் எந்த முடிவிற்கும் துணிந்துவிட்டேன். ஓடிவிடு.

சும்பன்:-

ஹ..ஓடுவதா அடேய் இவளை நான் தான் அடையப்போகிறேன். உன்னால் ஆனதைப்பார்.

நிசும்பன்:-

முதலில் இந்த வாளுக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் நெருங்கு அவளை.

இருவரும் ஒருவருக்கொருவர் வாளால் சண்டையிட்டு முடிவில் ஒருவரையொருவர் வாளால் குத்திக்கொண்டு மடிகின்றனர். ஆதி பராசக்தி சிரிக்கிறாள்.

இந்தக் காட்சியில் இருவரும் கனகச்சிதமாக தத்தமது திறமையைக் காட்டியிருப்பார்கள்.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் இவர் பேருந்து ஓட்டுநராக நடித்த  காட்சி

ImageImage

Image

Image

A.KARUNANIDHI-Madras to Pondicherry-8

Image

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் நாகேசுடன்

ImageImage

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Kanchi Kaamaatchi 1978

சாய்ராமுடனும் ரி.பி.முத்துலட்சுமியுடனும் ஏ.கருணாநிதி டவுன் பஸ் படத்தில் 

K.Sairam-A.Karunanidhi-Town Bus

TP.Muthulakshmi-Karunanidhi-Town Bus.1955-1jpg

TP.Muthulakshmi-Karunanidhi-Town Bus.1955jpg

என்.என்.கண்ணப்பாவுடன் ஏ.கருணாநிதி

Town Bus.1955-NN.Kannappa-Karunanidhi-jpg

ரி.கே.ராமச்சந்திரன் மற்றும் என்.என்.கண்ணப்பாவுடன் ஏ.கருணாநிதி

TK.Ramachandran-NN.Kannappa-Karunanidhi-Town Bus.1955jpg

மிஸ்ஸியமா படத்தில் டணால் தங்கவேலு, ஜமுனா, எஸ்.வி.ரங்காராவ் மற்றும் வி.எம்.ஏழுமலையுடன் கருணாநிதி

KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa 4 KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa 3 KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa 2 KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa 1 KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa Jamuna-SVR-KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa  (2) Jamuna-KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa  (1) V.M.Ezhumalai-KA.Thangavelu-A.Karunanidhi-Missiayammaa

பொண்ணு மாப்பிள்ளை படத்தில் தனித்தும் டைப்பிஸ்ட் கோபுவுடனும் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Ponnu Mappaillai A.Karunanidhi-Typist Gopu-Ponnu Mappaillai.-1jpg A.Karunanidhi-Typist Gopu-Ponnu Mappaillai

கண் திறந்தது(1959) படத்தில் தனித்தும் பிரண்ட் ராமசாமி மற்றும் ராமநாதனுடனும் கருணாநிதி

A.Karunanidhi-Kan Thiranthathu - 1959 A.Karunanidhi-Kan Thiranthathu - 1959-1 A.Karunanidhi-Ramanathan-Friend Ramasamy-Kan Thiranthathu - 1959

திகம்பர சாமியார் (1950) படத்தில் எம்.என்.நம்பியார் மற்றும் நரசிம்ம பாரதியுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Digambara Samiyar A.Karunanidhi-MN.Nambiyar-Digambara Samiyar-Saamiyar-Nathaswaram-2 A.Karunanidhi-MN.Nambiyar-Narasimha Bharathi-Digambara Samiyar

கப்பலோடிய தமிழன் படத்தில் ஜெமினிகணேசனுடன் கருணாநிதி

A.Karunanidhi-Kappalottiya Thamizhan- 

எங்க பாட்டன் சொத்து [1975] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் கருணாநிதி

A.Karunanidhi-Thengai-Enga Paattan Sothu-1975-1 A.Karunanidhi-Thengai-Enga Paattan Sothu-1975-

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில் ஏ.கருணாநிதி பக்கிரிசாமியுடன்

A.Karunanidhi-R.Packirisami-Veerapandiya Kattabomman-1959-

ஏ.கருணாநிதி ரி.பி.முத்துலெட்சுமி, பத்மினியுடன்

A.Karunanidhi-TP.Muthulakshmi-Padmini-Veerapandiya Kattabomman-1959- A.Karunanidhi-Veerapandiya Kattabomman-1959-1

இடமிருந்து  ஓ.ஏ.கே.தேவர், பூங்காவனம் சந்தானம், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஏ,கருணாநிதி

Poongavanam-Sivaji-OAK.Devar-A.Karunanidhi-Gemini-Veerapandiya Kattabomman-1959-

1950-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் “பொன்முடி” படத்தில் கருணாநிதி தனித்தும் வி.எம்.ஏழுமலையுடனும்VM.Ezhumalai--Ponmudi 1950-3A.Karunanidhi-Ponmudi 1950-

’தில்லானா மோகனாம்பாள்’ [1968] படத்தில் நடிப்பின் இமயத்துடன் ஏ.கருணாநிதி A.Karunanidhi-Sivaji-Thillana Mohanambal 1969-

’தில்லானா மோகனாம்பாள்’ [1968] படத்தில் ரி.எஸ்.பாலையா, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ் மற்றும் நடிப்பின் இமயத்துடன் ஏ.கருணாநிதி 

Nagesh-TS.Balaiah-Sivaji-A.Karunanidhi-AVM.Rajan-Thillana Mohanambal 1969-

தில்லானா மோகனாம்பாள்’ [1968] படத்தில் ரி.எஸ்.பாலையா,  நடிப்பின் இமயத்துடன் ஏ.கருணாநிதி

 T.S.Balaiah-Karunanidhi-Sivaji-Thillana Mohanambal 1969-

தில்லானா மோகனாம்பாள்’ [1968] படத்தில் ரி.எஸ்.பாலையா, ஏ.வி.எம்.ராஜன், K.சாரங்கபாணி,P.D.சம்பந்தம் மற்றும் நடிப்பின் இமயத்துடன் ஏ.கருணாநிதி PD.Sambantham-TS.Balaiah-A.Karunanidhi-Sivaji-AVM.Rajan-Thillana Mohanambal 1969-

தில்லானா மோகனாம்பாள்’ [1968] படத்தில்ஏ.வி.எம்.ராஜன், பி.டி.சம்பந்தம் மற்றும் நடிப்பின் இமயத்துடன் ஏ.கருணாநிதி

 PD.Sambantham-A.Karunanidhi-Sivaji-AVM.Rajan-Thillana Mohanambal 1969-

குலேபகாவலி [1955] படத்தில் ஏ.கருணாநிதி தனித்தும் ரி.ஆர்.ராஜகுமாரியுடனும் A.Karunanidhi-Gulebakavali 1955- A.Karunanidhi-Gulebakavali 1955-1 A.Karunanidhi-TR.Rajakumari-Gulebakavali 1955- A.Karunanidhi-TR.Rajakumari-Gulebakavali 1955-1

குலேபகாவலி [1955] படத்தில் கே.சாய்ராம் , கே.ஏ.தங்கவேலுவுடன் ஏ.கருணாநிதி  K.Sairam-A.Karunanidhi-KA.Thangavelu-Gulebakavali 1955-50

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் நிசும்பன் என்ற கதாபாத்திரத்தில் ஏ.கருணாநிதியும் சும்பன் என்ற கதாபாத்திரத்தில் ஓ.ஏ.கே.தேவரும்

A.Karunanidhi as Nisumban-Aathi Parasakthi 1971-OAK.Devar as Sumban- A.Karunanidhi as Nisumban-Aathi Parasakthi 1971-OAK.Devar as Sumban- A.Karunanidhi as Nisumban-Aathi Parasakthi 1971-1OAK.Devar as Sumban- A.Karunanidhi as Nisumban-Aathi Parasakthi 1971-2

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் இடமிருந்து வலம் ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே.தேவர், நாரதராக கம்பர் ஜெயராமன், பிரம்மாவாக ஏ.கே.வீராச்சாமி

OAK.Devar- A.Karunanidhi as Nisumban-AK.Veerasamy-Kambar Jayaraman-Aathi Parasakthi 1971-OAK.Devar- A.Karunanidhi as Nisumban-AK.Veerasamy-Kambar Jayaraman-Aathi Parasakthi 1971-C

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதிA.Karunanithi-Lakshmi Kalyanam 1968-A.Karunanithi-Lakshmi Kalyanam 1968-2A.Karunanithi-Lakshmi Kalyanam 1968-1A.Karunanithi-Lakshmi Kalyanam 1968-3

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சோவுடன் ஏ.கருணாநிதிA.Karunanithi-Cho-Lakshmi Kalyanam 1968-A.Karunanithi-Cho-Lakshmi Kalyanam 1968-1

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதியுடன் சி.கே.சரஸ்வதி

A.Karunanithi-CK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-1A.Karunanithi-CK.Saraswathi-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதியுடன் நிர்மலாA.Karunanithi-AB.Nirmala-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதியுடன் சிவாஜிகணேசன், சோ

A.Karunanithi-Cho-Sivaji-Lakshmi Kalyanam 1968-

“குழந்தைக்காக” [1968] படத்தில் சோ, கே.ஏ.தங்கவேலுவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-KA.Thangavelu-Kuzhanthaikkaga 1968-A.Karunanidhi-KA.Thangavelu-Kuzhanthaikkaga 1968-1A.Karunanidhi-KA.Thangavelu-CHO-Kuzhanthaikkaga 1968-

“குழந்தைக்காக” [1968] படத்தில் மேஜர் சுந்தரராஜன், கே.ஏ.தங்கவேலுவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-KA.Thangavelu-Major-Kuzhanthaikkaga 1968-1A.Karunanidhi-KA.Thangavelu-Major-Kuzhanthaikkaga 1968-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில் அய்யா தெரியாதய்யா ராமராவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Iruvar ullam 1963-A.Karunanidhi-S.Ramarao-Iruvar ullam 1963-A.Karunanidhi-S.Ramarao-Iruvar ullam 1963-1A.Karunanidhi-S.Ramarao-Iruvar ullam 1963-2

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  லட்சுமி ராஜம், அய்யா தெரியாதய்யா ராமராவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-S.Ramarao-Lakshmi Rajam-Iruvar ullam 1963-79

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Nalla Thangai 1955-3A.Karunanidhi-Nalla Thangai 1955-2A.Karunanidhi-Nalla Thangai 1955-A.Karunanidhi-MSS.Packiam-Nalla Thangai 1955-A.Karunanidhi-MN.Nambiar-Nalla Thangai 1955-2A.Karunanidhi-MN.Nambiar-Nalla Thangai 1955-1A.Karunanidhi-MN.Nambiar-Nalla Thangai 1955-86

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.ஜி.ஆருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-SARVATHIKARI 1951-1A.Karunanidhi-SARVATHIKARI 1951-A.Karunanidhi-MGR-SARVATHIKARI 1951-1A.Karunanidhi-MGR-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் கே.கே.சவுந்தருடன் ஏ.கருணாநிதிKK.Sounder-A.Karunanidhi-SARVATHIKARI 1951-1

”சர்வாதிகாரி” 1951 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதிTP.MUTHULAKSHMI-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.சரோஜா, ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதிTP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-TP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-1TP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-2

”சர்வாதிகாரி” 1951 படத்தில் கே.கே.சவுந்தருடன் ஏ.கருணாநிதிKK.Sounder-A.Karunanidhi-SARVATHIKARI 1951-

”சாரங்கதரா” 1959 படத்தில் முத்துகிருஷ்ணனுடன்.கருணாநிதிA.Karunanidhi-Sarangadhara 1959-2A.Karunanidhi-Sarangadhara 1959-A.Karunanidhi-Sarangadhara 1959-1A.Karunanidhi-Muthukrishnan-Sarangadhara 1959-

”சாரங்கதரா” 1959 படத்தில் முத்துலட்சுமியுடன்.கருணாநிதிA.Karunanidhi-TP.Muthulakshmi-Sarangadhara 1959-2A.Karunanidhi-TP.Muthulakshmi-Sarangadhara 1959-1A.Karunanidhi-TP.Muthulakshmi-Sarangadhara 1959-100

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் மனோரமாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Padithaal Mattum Pothuma 1962-A.Karunanidhi-Manorama-Padithaal Mattum Pothuma 1962-2A.Karunanidhi-Manorama-Padithaal Mattum Pothuma 1962-1A.Karunanidhi-Manorama-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் ரங்காராவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-SV.Rangarao-Padithaal Mattum Pothuma 1962-A.Karunanidhi-SV.Rangarao-Padithaal Mattum Pothuma 1962-1106

“திரும்பிப்பார்” 1953 படத்தில் பண்டரிபாயுடன் ஏ.கருணாநிதிa-karunanidhi-thirumpipaar-1953a-karunanidhi-pandaribai-thirumpipaar-1953-1a-karunanidhi-pandaribai-thirumpipaar-1953

“திரும்பிப்பார்” 1953 படத்தில் பி.வி.நரசிம்மபாரதி, கிரிஜாவுடன் ஏ.கருணாநிதிa-karunanidhi-girija-pv-narasimhabharathi-thirumpipaar-1953

“திரும்பிப்பார்” 1953 படத்தில் சிவாஜிகணேசன், கிரிஜா, பண்டரிபாயுடன் ஏ.கருணாநிதிa-karunanidhi-girija-pandaribai-sivaji-thirumpipaar-1953111

“அவன் பித்தனா” 1966 படத்தில் எஸ்.எஸ்.ஆர்,  மாஸ்டர் தசரதனுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-AVAN PITHANA 1966-A.Karunanidhi-Master Dhasarathan-AVAN PITHANA 1966-A.Karunanidhi-SSR-AVAN PITHANA 1966-

“அவன் பித்தனா” 1966 படத்தில் சகஸ்ரநாமத்துடன் ஏ.கருணாநிதி A.Karunanidhi-Sv.Sahasranamam-AVAN PITHANA 1966-

“அவன் பித்தனா” 1966 படத்தில் ரி.பி.முத்துலட்சுமி, சகஸ்ரநாமத்துடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Sv.Sahasranamam-TP.Muthulakshmi-AVAN PITHANA 1966-

“அவன் பித்தனா” 1966 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் ஏ.கருணாநிதி A.Karunanidhi-TS.Balaiah-AVAN PITHANA 1966-

“அவன் பித்தனா” 1966 படத்தில் ரி.பி.முத்துலட்சுமி,ரி.எஸ்.பாலையாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-TS.Balaiah-TP.Muthulakshmi-AVAN PITHANA 1966-118

“பாலும் பழமும்” 1961 படத்தில் மனோரமாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Palum Pazhamum 1962-A.Karunanidhi-Manorama-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் பாலையாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-TS.Balaiah-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் கே.சாய்ராமன், மனோரமாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-K.Sairaman-Manorama-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் சிவாஜிகணேசன், பாலையாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-TS.Balaiah-Sivaji Ganesan-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் பிரேம் நசீர், எம்.ஆர்.ராதா, பாலையாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Prem Nazir-TS.Balaiah-MR.Radha-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் பிரேம் நசீர், சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, பாலையாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Prem Nazir-TS.Balaiah-Sowcar-Sivaji Ganesan-Palum Pazhamum 1962-125

”டாக்டர் சாவித்திரி” 1955 படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் ஏ.கருணாநிதி A.Karunanidhi-Dr Savithri 1955-A.Karunanidhi-Dr Savithri 1955-1A.Karunanidhi-NSK-Dr Savithri 1955-A.Karunanidhi-NSK-Dr Savithri 1955-1129

“துளசி மாடம்” 1963 படத்தில் சாரதாவுடன் ஏ.கருணாநிதி A.Karunanidhi-Thulasi Maadam 1963-A.Karunanidhi-Sharadha-Thulasi Maadam 1963-131

“புதிய பாதை” 1960 படத்தில் கே.பாலாஜியுடன் கருணாநிதிA.Karunanidhi-Puthiya Paathai 1960-A.Karunanidhi-K.Balaji-Puthiya Paathai 1960-

“புதிய பாதை” 1960 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் கருணாநிதிA.Karunanidhi-K.A.Thangavelu-Puthiya Paathai 1960-

“புதிய பாதை” 1960 படத்தில் ஜெமினி பாலுவுடன் கருணாநிதிA.Karunanidhi-Gemini Balu-Puthiya Paathai 1960-2A.Karunanidhi-Gemini Balu-Puthiya Paathai 1960-1A.Karunanidhi-Gemini Balu-Puthiya Paathai 1960-137

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Indira En Selvam 1962-1A.Karunanidhi-Indira En Selvam 1962-A.Karunanidhi-MR.Radha-Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் பண்டரிபாயுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Pandari Bai-Indira En Selvam 1962-1A.Karunanidhi-Pandari Bai-Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில்  அம்முகுட்டி புஸ்பமாலாவுடன் ஏ.கருணாநிதிAmmukkutty Pushpamala-A.Karunanidhi-Indira En Selvam 1962-A.Karunanidhi-Pandari Bai-Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் நாகேஷ், எம்.ஆர்.ராதாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Nagesh-MR.Radha-Indira En Selvam 1962-144

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் நாகேஷுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Adhirstakaran 1978-1A.Karunanidhi-Adhirstakaran 1978-A.Karunanidhi-Nagesh-Adhirstakaran 1978-A.Karunanidhi-Nagesh-Adhirstakaran 1978-1

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-V.K.Ramasamy-Adhirstakaran 1978-

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Venniradai moorthy-Adhirstakaran 1978-

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் படாபட் ஜெயலட்சுமியுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-Padapat Jayalakshmi-Adhirstakaran 1978-151

”துணைவி” 1981 படத்தில் சிவகுமாருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Thunaivi 1981-1A.Karunanidhi-Thunaivi 1981-A.Karunanidhi-Sivakumar-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் ரூபாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Roopa-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் ரூபா, சிவகுமாருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Roopa-Sivakumar-Thunaivi 1981-156

”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் அத்தனைப் பிரபலமாகாத காலத்தில் பின்னாளில் எம்.ஜி.ஆர்., ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற முன்னணிக் கதாநாயகர்களின் கதாநாயகியாக நடித்த ராஜஸ்ரீ ஏ.கருணாநிதியுடன் இணைந்து இப்படத்தில் நடித்த காட்சிகள்.A.Karunanidhi-Panam Panthiyile 1961-1A.Karunanidhi-Panam Panthiyile 1961-A.Karunanidhi-Rajasree-Panam Panthiyile 1961-1A.Karunanidhi-Rajasree-Panam Panthiyile 1961-2A.Karunanidhi-Rajasree-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” படத்தில் 1961-இல் வி.கே.ராமசாமியுடன் கருணாநிதிA.Karunanidhi-VKR-Panam Panthiyile 1961-162

”மாங்கல்யம்” 1954 படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Maangalyam 1954-02A.Karunanidhi-Maangalyam 1954-01A.Karunanidhi-Maangalyam 1954-A.Karunanidhi-BS.Saroja-Maangalyam 1954-

”மாங்கல்யம்” 1954 படத்தில் வி.எம்.ஏழுமலைச் செட்டியார், பி.எஸ்.சரோஜாவுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi-BS.Saroja-VM.Ezhumalai-Maangalyam 1954-167

”சாரங்கதரா” 1958 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Sarangadhara 1958-1A.Karunanidhi-Sarangadhara 1958-A.Karunanidhi-TP.Muthulakshmi-Sarangadhara 1958-A.Karunanidhi-TP.Muthulakshmi-Sarangadhara 1958-1

”சாரங்கதரா” 1958 படத்தில் சிவாஜிகணேசன், வளையாபதி ஜி.முத்துகிருஷ்ணனுடன்  ஏ.கருணாநிதிA.Karunanidhi-Valaiyapathi Muthukrishnan-Sarangadhara 1958-A.Karunanidhi-Sivaji Ganesan-Valaiyapathi Muthukrishnan-Sarangadhara 1958-172

”சுபதினம்” 1969 படத்தில் எஸ்.ராமராவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-S.Ramarao-SUBHA DINAM 1969-

”சுபதினம்” 1969 படத்தில் கே.வி.சீனிவாசனுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-KV.Sreenivasan-SUBHA DINAM 1969-

”சுபதினம்” 1969 படத்தில் புஸ்பலதா, முத்துராமனுடன் கருணாநிதிA.Karunanidhi-Muthuraman-Pushpalatha-SUBHA DINAM 1969-175

“அமுதவல்லி” 1959 படத்தில் கே..எஸ்..அங்கமுத்துவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Amudhavalli 1959-2A.Karunanidhi-Amudhavalli 1959-1A.Karunanidhi-Amudhavalli 1959-KS.Angamuthu-A.Karunanidhi-Amudhavalli 1959-179

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் எஸ்.எஸ்.ஆர், ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதி

A.Karunanidhi -PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-1A.Karunanidhi -PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-A.Karunanidhi -SSR-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-A.Karunanidhi -TP.Muthulakshmi PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-A.Karunanidhi -TP.Muthulakshmi PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-2A.Karunanidhi -TP.Muthulakshmi PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-3A.Karunanidhi -TP.Muthulakshmi PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-1186

“மாயா பஜார்” 1957 படத்தில் ஏ.கருணாநிதிA.Karunanidhi- Maya Bazaar 1957-

“மாயா பஜார்” 1957 படத்தில் வி.எம்.ஏழுமலைச் செட்டியாருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-VM.Ezhumalai - Maya Bazaar 1957-VM.Ezhumalai-A.Karunanidhi - Maya Bazaar 1957-189

’பெண் குலத்தின் பொன் விளக்கு’ 1959 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Penn Kulathin Pon Villakku 1959-A.Karunanidhi-Penn Kulathin Pon Villakku 1959-02A.Karunanidhi-C.K.Saraswathi-Penn Kulathin Pon Villakku 1959-

’பெண் குலத்தின் பொன் விளக்கு’ 1959 படத்தில் ஜெமினி கணேஷ், எம்.என்.நம்பியாருடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-M.N.Nambiar-Penn Kulathin Pon Villakku 1959-A.Karunanidhi-M.N.Nambiar-Gemini Ganesan-Penn Kulathin Pon Villakku 1959-A.Karunanidhi-M.N.Nambiar-Gemini Ganesan-Penn Kulathin Pon Villakku 1959-01

’பெண் குலத்தின் பொன் விளக்கு’ 1959 படத்தில் பி.வி.நரசிம்மபாரதி, ஸ்ரீரஞ்சனி, ரி.பி.முத்துலட்சுமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-P.V.Narasimha Bharathi-Sriranjani-C.K.Saraswathi-Penn Kulathin Pon Villakku 1959-196

’பார் மகளே பார்’ 1963 படத்தில் சிவாஜி கணேசனுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Paar Magale Paar 1963-01A.Karunanidhi-Paar Magale Paar 1963-A.Karunanidhi-Sivaji-Paar Magale Paar 1963-

’பார் மகளே பார்’ 1963 படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-MR.Radha-Paar Magale Paar 1963-

’பார் மகளே பார்’ 1963 படத்தில் சோவுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-CHO-Paar Magale Paar 1963-

’பார் மகளே பார்’ 1963 படத்தில் பி.எஸ்.சீதாலட்சுமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Seethalakshmi-Paar Magale Paar 1963-202

’தெய்வப்பிறவி’ 1960 படத்தில் அப்பா கே.துரைசாமியுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi-Deivapiravi 1960-A.Karunanidhi -Appa K.Doraisamy--Deivapiravi 1960-

’தெய்வப்பிறவி’ 1960 படத்தில் பத்மினி, ராதாபாயுடன் ஏ.கருணாநிதிA.Karunanidhi -Padmini-Radhabai--Deivapiravi 1960-205

10 comments on “A.Karunanidhi

  1. I got it at last!!!. thank s a lot. A very long stint ias a frontline comedian in tamilfilmdom.Missiamma .Mayabazar. Madras to Pondichery;;;;;;; the list goes on

    • நிச்சயமாக திரு.ரங்கராஜன். அவர் ஒரு வித்தியாசமான நகைச்சுவை வள்ளல்.

  2. புதிய பறவை படத்தில் கருணாநிதியின் மரத்தடி மாமுனி காமெடி மறக்க முடியுமா

    • இவரது நகைச்சுவையை ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டு என்னால் நிறுத்திக்கொள்ள முடியாது. மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படம் இவரது நடிப்பில் என்றென்றும் என்னால் மறக்கமுடியாது.

  3. நகைச்சுவை நடிப்பில் மெருகேற்றம் கண்டவர் ஏ.கருணாநிதி!

    (கரிகாலன்)

    தமிழ்ப்படவுலகில் தோன்றி மறைந்த எத்தனையோ நகைச்சுவை நடிகர்களில் ஏ.கருணாநிதி தனி பாணியைக் கையாண்டவர். நகைச்சுவையில் குழந்தைத் தனமாக பேசி நடிக்கும் உத்தியில், இவர் பலப் படங்களில் சிறந்து விளங்கினார்.இவரது நகைச்சுவை பாணி, அன்றைய பல தமிழ்ப்படங்களில் சிறப்பாக இடம் பெற்றதால், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பிருந்தது.

    இவர் உண்மையில் சிறந்த சமையற்கலை நிபுணராக விளங்கியவர். சென்னை தியாகராய நகரில் சொந்தமாக ‘மாமியா ஓட்டல்’ என்ற பெயரில் உணவகம் நடத்தியவர்.இங்கு தாயாரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காலம் உண்டு. மற்ற நடிகர்களைப் போன்று கருணாநிதிக்கும் இளம் வயதிலேயே நாடக அனுபவம் வேரூன்றி, அதுவே அவரின் திரைப்பட பிரவேசத்திற்கும் வித்திட்டது.

    1948ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடாக டி,ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கி, டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாகத் தோன்றிய ‘ஆதித்தன் கனவு’ படத்தின் மூலம் அறிமுகமான கருணாநிதி, அடுத்து 1950ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரு வெளியீடுகளான, ‘திகம்பர சாமியார்’ மற்றும் ‘பொன்முடி’ ஆகியப் படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.1951இல் எம்ஜிஆருடன் ‘சர்வாதிகாரி’ படத்திலும், இதே ஆண்டில் ‘தேவகி’ படத்திலும் கருணாநிதி தோன்றினார்.1952இல் ‘கல்யாணி” மற்றும் ‘வளையாபதி’ ஆகியப் படங்களிலும் இவர் இடம் பெற்றார்.

    தொடர்ந்து ‘என் மகள்’, ‘திரும்பிப்பார்’ மற்றும் ‘பத்மினி’ (1954) முதலியப் படங்களிலும் நடித்த இவர், இதே ஆண்டில் மற்றொரு நகைச்சுவை நடிகரான வி.எம்.ஏழுமலையுடன் ‘மாங்கல்யம்’ படத்தில் நடித்தார்.1955இல் ‘கதாநாயகி’ படத்தில் பெண் வேடத்தில் திறம்பட நடித்த கருணாநிதி, இதே ஆண்டில் ‘குணசுந்தரி’, ‘குலேபகாவலி’, ‘டவுன் பஸ்’, மிஸ்ஸியம்மா’, ‘மகேஸ்வரி’, ‘முல்லைவனம்’ ,‘டாக்டர் சாவித்திரி’ மற்றும் ‘பெண்ணரசி’ ஆகியப் படங்களிலும் தோன்றினார்.இந்த ஆண்டில் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்து இயக்கிய ‘நல்ல தங்கை’ படத்திலும் இவர் இடம் பெற்றார். 1956இல் ‘கண்ணின் மணிகள்’, ‘பாசவலை’ ஆகியப் படங்கள் கருணாநிதியின் நகைச்சுவையைத் தாங்கி வெளி வந்தன.

    1957இல், ‘மகாதேவி’, ‘ஆரவல்லி’, ‘மணமகன் தேவை’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘மாயபஜார்’, முதலியப் படங்கலில் தோன்றிய இவர், 1958இல் ‘சாரங்கதாரா’, ‘பூலோகரம்பை’ படங்களிலும் 1959இல் ‘அல்லி பெற்ற பிள்ளை’, ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்’, ‘கண் திறந்தது’, ‘வீரபாண்டியன் கட்டபொம்மன்’ போன்றப் படங்களிலும் நடித்தார்.1960இல் ‘அடுத்த வீட்டுப் பெண்’, ‘ஆடவந்த தெய்வம்’, ‘தெய்வப்பிறவி’, ‘புதிய பாதை’ , ‘கண் திறந்தது’ போன்ற பலப் படங்களில் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.

    தொடர்ந்து, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாலும் பழமும்’, ‘தென்றல் வீசும்’, ’இந்திரா என் செல்வம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’ ,’இருவர் உள்ளம்’, ‘பார் மகளே பார்’, ’துளசி மாடம்’, ‘புதிய பறவை’, ‘அதே கண்கள்’, ‘அண்ணாவின் ஆசை’, ‘அவன் பித்தனா’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘பெண் என்றால் பெண்’, ‘பொண்ணு மாப்பிள்ளை’, லட்சுமி கல்யாணம்’, ‘குழந்தைக்காக’, ‘ஆதி பராசக்தி’, ‘எங்க பாட்டன் சொத்து’, ஸ்ரீ காஞ்சி காமாட்சி’, ‘அதிர்ஷ்டக்காரன்’ போன்ற ஏராளமானப் படங்களில் கருணாநிதி தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்தார்.

    பொன்முடி, மாங்கல்யம் ஆகிய இரு படங்களில் வி.எம்.ஏழுமலையுடன் இணைந்து இவர் புரியும் நகைச்சுவை காட்சிகள் தமாஷ் நிறைந்தவை. குலேபகாவலி படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியை திருமணம் செய்வதற்கு, அவர் விதிக்கின்ற பகடை விளையாட்டின் நிபந்தனைகளில் திக்கு முக்காடி திரு திருவென்று இவர் விழிப்பது வேடிக்கையானது. மகாதேவி படத்தில் நகைச்சுவை நடிகை சுசீலாவை அடைவதற்கு, கவிதை பாடும் கவிஞராக இவர் திறம்பட நடித்திருந்தார்.கதாநாயகி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றப் படங்களில் இவரின் பெண் வேட நடிப்பு பிரமாதம்.ஆரவல்லி படத்தில் முத்துலட்சுமியின் காதலை பெறுவதற்கு, காகா ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து, இவர் போட்டிப் பாடலில் பங்கேற்று நடித்திருந்த விதம் சுவாரஸ்யமானது.பாலும் பழமும் படத்தில் மனோரமாவிடம், எம்ஜிஆர்-வி.என்.ஜானகி திருமணம் பற்றி அரசியல் பேசுவது அருமை.

    இருவர் உள்ளம் படத்தில் தனது மகள் லஷ்மிராஜ்யத்தை மற்றொரு நகைச்சுவை நடிகர் எஸ்.ராமராவுக்கு திருமணம் செய்து கொடுத்து, மாமனாராக வரும் கருணாநிதி, தேனை திருட்டுத் தனமாக குடிக்க முயலும்போது, மருமகன் ராமராவ் தேனீக்கள் மீது கல் எறிய, அவை படையெடுத்து வந்து கருணாநிதியை கொட்டிட, அவர் படும் அவஸ்தை வேடிக்கை நிறைந்தது.புதிய பறவை படத்தில் மரத்தடி மாமுனியாக நாகேஷூக்கு அறிவுரை கூறுகின்ற காட்சியில் சிரிப்பை வரவழைப்பார்.மெட்ராஸ் டூ பாண்டிசேரி படத்தில் பேருந்து ஓட்டுநராக இவர் நடித்திருக்கும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை ஆகும். அதே கண்கள் படத்தில் சமையற்காரனாக மலையாள பாஷையில் ‘யாரு செத்துப் போயி…யாரு செத்துப் போயி….என்று திகிலுடன் இவர் கேள்வி கேட்பது ரசிக்கத்தக்கது.

    ஆதி பராசக்தி படத்தில் தேவலோகக் கன்னியாக வரும் வாணீஸ்ரீ மீது மையல் கொண்டு, இவரும் ஓ.ஏ.கே.தேவரும் அண்ணன் தம்பியாக, சும்பன்-நிசும்பன் என்ற பெயர்களில் அரக்கர்களாக நடித்திருப்பர்.இதில் ஒரு காட்சியில் ‘பொம்பள விஷயத்தில் தலையிடாதீங்க அண்ணா’ என்று தேவரைப் பார்த்து இவர் கூறுவது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைக்கும்.டவுன் பஸ் படத்தில் முத்துலட்சுமியுடன் இணைந்து இவர் புரியும் நகைச்சுவைக் காட்சிகள் கவரும் விதமாக இருந்தன.எங்க பாட்டன் சொத்து படத்தில் தேங்காய் சீனிவாசனும் இவரும் போலீஸ்காரர்களாக நடித்திருந்த காட்சிகளில், அவருடன் அட்டகாசமான நகைச்சுவையை அள்ளி வழங்கியிருந்தார்.

    நகைச்சுவை காட்சிகளுக்கு ஏற்றவாறு இவர் தனது முக பாவனைகளை மாற்றிக் கொள்வதில் ஆற்றல் கொண்டிருந்தார்.இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போதிலும், முத்துலட்சுமியுடன் இணைந்து அதிகமாக நடித்திருக்கிறார். கருணாநிதி 1981ஆம் ஆண்டில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.கருணாநிதி காலத்தால் மறக்க முடியாத சிறந்ததொரு நகைச்சுவை நடிகர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    (நிறைவு)

    • மிக நிறைவான , மிக ஆத்மார்த்தமான , மிக யதார்த்தமான கட்டுரை. ஏ.கருணாநிதியை முழுமையாக ரசித்திருந்தால் மட்டுமே இது போன்ற கட்டுரையை எழுத இயலும். நான் ஏ.கருணாநிதியின் நடிப்பை மிகவும் விரும்பி ரசித்தவன் என்ற முறையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற ஒவ்வொன்றோடும் என்னால் உடன்பட முடிகின்றது திரு.கரிகாலன். ஒரு குறிப்பிடத்தக்க விடையம் யாதெனில் அக்காலகட்டத்தில் வரலாற்றுப் படங்களில் செந்தமிழ்ப் பேசிக்கொண்டிருந்த காலத்தில் இவர் வழக்குத் தமிழில் பேசி அசத்தியவர். மிக்க நன்றி திரு.கரிகாலன். இப்போது இவரை எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?

      • நன்றி திரு சகாதேவன்.இதுபோன்ற எனது பழம்பெரு நடிகர்களைப் பற்றிய கட்டுரைகளை இந்தப் புலனத்தில் பாருங்கள்.கருத்துரையுங்கள்.மிகவும் மகிழ்ச்சி.நல்வாழ்த்து!

  4. ஐயா, தங்களது புலனத்தின் நம்பரை தாருங்களேன்…

  5. Who was his female pair in Adhey Kangal movie? She was seen after few years in Kattabomman movie. Sanghoodhara vayasule Samgeetha dialogue by Koundamani

Leave a comment