Nalinikanth

நளினிகாந்த்

வெற்றிகரமாக ஓடிய யாமிருக்க பயமே படத்தில்,  ஜடாமுடி வளர்த்த வயதான உருட்டும் விழி முதியவராக நடித்த பெரியவர் யாரோ எவரோ என்றுதான் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூப்பர் ஸ்டார் அன்று சாதாரண ரஜினிகாந்தாக நடித்துக் கொண்டு இருந்தபோது அவரைப் போலத்தான் இவரும் என்று பேசப்பட்டவர்தான் அந்த உருட்டுவிழி நடிகர் என்பது,  எத்தனை பேருக்குத் தெரியும். நளினிகாந்த்! 1970-களின் மத்தியில் தெலுங்கில் ரங்கோன் ரவுடி என்ற படத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர்

தாசரி நாராயணராவ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த நளினிகாந்த், தமிழில் காதல் காதல் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனாலும் நாயகனாக தொடர்ந்து வளர முடியாத நிலையில் தமிழில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும், தெலுங்கில் சுமார் நாற்பது படங்களிலும் நடித்தார். தவிர மலையாளத்திலும் பல படங்கள். தமிழில் பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் சத்துணவு  வண்டி டிரைவர்,  ராசுக்குட்டியில் சித்தப்பா என்று பல படங்களில் சிறப்பான  கதாபாத்திங்களில் இவரைப் பார்க்க முடிந்தது.  ஒரு நிலையில்  மனம் வாடிப் போய் நடிப்பதை நிறுத்தி விட்டு,  சன் டிவி,  விஜய் டிவியில் பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும், ஜெமினி டிவி, மா டிவியில் பல தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்தார். காவேரி சீரியல் மூலம் சுதா சந்திரனை சீரியலுக்கு கொண்டு வந்தவர் இவர். இவர் மூலம் சீரியல் இயக்க ஆரம்பித்து பின்னர் சினிமாவுக்கு வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர்.நளினிகாந்த்தின் ஒரு மகன் மென்பொருள் பொறியாளராக இருக்க, இன்னொரு மகன் ராம் சிம் கார்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில்தான் யாமிருக்க பயமே படத்தில் வரும் அந்த ஜடா முடி வளர்த்த பயந்த சுபாவ உருட்டு விழி திகில் முதியவர் கேரக்டருக்கு,  நளினிகாந்த் நடிக்க வேண்டும் என்று கேட்டு வந்தார்களாம்.”ராசுக்குட்டி, முந்தானை முடிச்சு படங்களில் என் நடிப்பைப் பார்த்ததன் அடிப்படையில்தான் படத்தின் இயக்குனர் டீகே என்னை நடிக்கக் கேட்டார். உண்மையில் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றே சொன்னேன்  ஆனால் அவர்கள் தொடர்ந்து கேட்க,  என்னால் மறுக்க முடியவில்லை. ஏனெனில் நடிப்புதானே என்னை வெளி உலகுக்கு காட்டியது, எனவே ஒப்புக் கொண்டேன். என்னிடம் டைரக்டர் டீகே உங்கள் கண்களை உருட்டிக் காட்டுங்கள் என்றார். நான் இப்படிக் (உருட்டிக் காட்டுகிறார்) காட்டினேன். உடனே,  போதும் போதும் என்று திருப்தியாக சொல்லிய இயக்குனர், படத்தில் நடிக்க வைத்தார்” என்கிறார். இந்தப் படத்தில் நளினிகாந்த்தின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட, அதன் விளைவாக விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நளினிகாந்த். “படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கியமான கேரக்டர் அது. இப்போது மேலும் சில படங்கள் வந்துள்ளன. எனது அடுத்த இன்னிங்ஸ் துவங்கி விட்டது. வாடிய மனம் துளிர்த்து விட்டது” என்று சிரி க்கிறார் நளினிகாந்த். (திறமை என்றும் கைவிடாது!)

http://dinaethal.com/  -லிருந்து எடுக்கப்பட்டது. வெளிவந்த நாள்:- மே-2014

சத்திய சுந்தரம் [1981] படத்தில் நளினிகாந்த்

Image

சத்திய சுந்தரம் [1981] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நளினிகாந்த்

ImageImage

நிரபராதி [1984] படத்தில் மாதவியுடன் நளினிகாந்த் Nalinikanth-Nirabarathi 1984-2Nalinikanth-Nirabarathi 1984-1Nalinikanth-Nirabarathi 1984-Nalinikanth-Madhavi-Nirabarathi 1984-1Nalinikanth-Madhavi-Nirabarathi 1984-

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் மாதவியுடன் நளினிகாந்த் Nalinikanth-Mangamma Sapatham 1985-1Nalinikanth-Mangamma Sapatham 1985-Nalinikanth-Madhavi-Mangamma Sapatham 1985-

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் சத்யராஜுடன் நளினிகாந்த் Nalinikanth-Sathyaraj-Mangamma Sapatham 1985-Nalinikanth-Sathyaraj-Mangamma Sapatham 1985-1

‘திராவிடன்’ 1989 படத்தில் சத்யராஜுடன் நளினிகாந்த்  Nalinikanth-Dravidan 1989-2Nalinikanth-Dravidan 1989-1Nalinikanth-Dravidan 1989-Nalinikanth-Dravidan 1989-3Nalinikanth-Sathyaraj-Dravidan 1989-

“பலி தானம்” [1982] தெலுங்குப் படத்தில் நளினிகாந்த் nalinikanth-bali-daanam-1982-3nalinikanth-bali-daanam-1982-2nalinikanth-bali-daanam-1982-1nalinikanth-bali-daanam-1982

”ருத்ரா” 1991 படத்தில் நளினிகாந்துடன் டெல்லி கணேஷ்,கே.பாக்யராஜ்Nalinikanth-Rudra 1991-1Nalinikanth-Rudra 1991-Nalinikanth-Bhagyaraj-Delhi Ganesh-Rudra 1991-

”ருத்ரா” 1991 படத்தில் நளினிகாந்துடன் டெல்லி கணேஷ்,மன்சூர் அலி கான்Nalinikanth-Delhi Ganesh-Mansoor Ali Khan-Rudra 1991-

”சிவப்பு நிலா” 1985 படத்தில் வனிதாவுடன் நளினிகாந்த்Nalinikantha-Sivappu Nila 1985-Nalinikantha-Vanitha-Sivappu Nila 1985-Nalinikantha-Vanitha-Sivappu Nila 1985-1Nalinikantha-Vanitha-Sivappu Nila 1985-2

”புதுப்பட்டி பொன்னுத்தாயி” 1991 படத்தில் நளினிகாந்துடன் வி.கே.ராமசாமிNalinikanth-Puthupatti Ponnuthayee 1991-1Nalinikanth-Puthupatti Ponnuthayee 1991-Nalinikanth-VKR-Puthupatti Ponnuthayee 1991-

”புதுப்பட்டி பொன்னுத்தாயி” 1991 படத்தில்  நளினிகாந்துடன் வி.கே.ராமசாமி, விஜயகுமார்

Nalinikanth-VKR-Vijayakumar-Puthupatti Ponnuthayee 1991-

”புதுப்பட்டி பொன்னுத்தாயி” 1991 படத்தில்  நளினிகாந்துடன் வி.கே.ராமசாமி, விஜயகுமார், சாரதா பிரீதா, அஸ்வினி

Nalinikanth-Ashwini-Sarathapreetha-VKR-Vijayakumar-Puthupatti Ponnuthayee 1991-

ராஜா எங்க ராஜா [1995] நளினிகாந்துடன் செந்தில்Nalinikanth-Raja Enga Raja 1995-Nalinikanth Senthil-Raja Enga Raja 1995-

ராஜா எங்க ராஜா [1995] நளினிகாந்துடன் எம்.சுப்பையாBlack Subbaiah-Nalinikanth-Raja Enga Raja 1995- (1)

‘எங்கம்மா மகராணி’ 1981 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜனுடன் நளினிகாந்த்Nalinikanth-Engamma Maharani 1981-Nalinikanth-TKS.Nadarajan-Engamma Maharani 1981-

‘எங்கம்மா மகராணி’ 1981 படத்தில் ரூபா, ரி.கே.எஸ்.நடராஜனுடன் நளினிகாந்த்Nalinikanth-TKS.Nadarajan-Roopa-Engamma Maharani 1981-

மலையாளத்தில் தனது அறிமுகப்படமான ‘வனிதா போலீஸ்’ 1984 படத்தில் நளினிகாந்துடன் மாஸ்டர் சுரேஷ்Nalinikanth [Malayalam Introduce]-VANITHA POLICE 1984-01Nalinikanth [Malayalam Introduce]-VANITHA POLICE 1984-Nalinikanth-Master Suresh-VANITHA POLICE 1984-

மலையாளத்தில் தனது அறிமுகப்படமான ‘வனிதா போலீஸ்’ 1984 படத்தில் நளினிகாந்துடன் ஆலப்புழை அஸ்ரப்Nalinikanth-Alleppey Ashraf -VANITHA POLICE 1984-

மலையாளத்தில் தனது அறிமுகப்படமான ‘வனிதா போலீஸ்’ 1984 படத்தில் நளினிகாந்துடன் சங்கராடி, மீனாNalinikanth-Sankaradi -Meena -VANITHA POLICE 1984-

Leave a comment