Amjath Kumar

அம்ஜத்குமார் – வில்லன் நடிகர். தோற்றத்தில் பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ஜத்கான் போலவே இருப்பார். 1975-1985 காலகட்டங்களில் இவர் பிரபலம். தற்போது படங்களில் இவரைக் காண்பது அரிது. சங்கிலி, நான் சிகப்பு மனிதன், மாந்தோப்புக்கிளியே போன்ற 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது இயற்பெயர் எம்.ஆர்.கணேசன். இந்தி நடிகர் அம்ஜத் கானின் பாதிப்பால் தனது பெயரை அம்ஜத்குமார் என மாற்றிக்கொண்டார். சிவாஜிகணேசனின் டச் அப் பாயாகவும் நீண்ட நாட்கள் இருந்தவர். பல வேலைகளையும் சினி பீல்டில் செய்துள்ளார். 80-க்கும் அதிகமான படங்களில் கதாநாயகிகளைக் கற்பழிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார். எனினும் இயல்பில் வம்பு தும்புகளுக்குச் செல்லாதவர்.

நன்றி: திரு.ராஜநாயகம் மற்றும் திரு.சேதுராமன்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

‘பொன்னகரம்’ [1980], குழந்தை ஏசு [1984], வேங்கையன் [1984], பட்டணத்து ராஜாக்கள் [1982], சுராங்கனி, பசி [1979], “பலி தானம்” [1982] [தெலுங்கு], ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ [1981]

மாந்தோப்புக்கிளியே படத்தில் அம்ஜத்குமார்ImageImageImage

சங்கிலி [1981] படத்தில் அம்ஜத்குமார்

AMJATH KUMAR-Sangili

‘பொன்னகரம்’ [1980] படத்தில் சிலோன் மனோகருடன் அம்ஜத் குமார்Amjathkumar-Ceylon Manokar-Ponnagaram 1980-

‘பொன்னகரம்’ [1980] படத்தில்  அம்ஜத் குமார்Amjathkumar-Ponnagaram 1980-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் சிலோன் வி.எஸ்.ராகவனுடன் அம்ஜத் குமார்Amjathkumar-VSR-Ponnagaram 1980-

“பட்டணத்து ராஜாக்கள்” 1982 படத்தில் சில்க் சுமிதா, விஜயகாந்துடன் அம்ஜத்குமார்

Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-7Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-5Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-4Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-6Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-3Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-Amjath Kumar-Pattanathu Rajakkal 1982-2Amjath Kumar-Silk Smitha-Vijayakanth-Pattanathu Rajakkal 1982-

“பசி’’ 1979 படத்தில் பிரவீணாவுடன் அம்ஜத் குமார்amjathkumar-pasi-1979-1amjathkumar-pasi-1979amjathkumar-praveena-pasi-1979

“பலி தானம்” [1982] தெலுங்குப் படத்தில் அம்ஜத் குமார்amjath-kumar-bali-daanam-1982-1amjath-kumar-bali-daanam-1982

“பலி தானம்” [1982] தெலுங்குப் படத்தில் சந்திரமோகனுடன் அம்ஜத் குமார்amjath-kumar-chandra-mohan-bali-daanam-1982amjath-kumar-chandra-mohan-bali-daanam-1982-1

“பலி தானம்” [1982] தெலுங்குப் படத்தில் கேப்டன் ராஜுடன் அம்ஜத் குமார்amjath-kumar-captain-raj-bali-daanam-1982amjath-kumar-captain-raj-bali-daanam-1982

‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ 1981 படத்தில் அம்ஜத் குமாருடன் ஐசரிவேலன்Amjath Kumar-Sorgathin Thirappu Vizha 1981-Amjath Kumar-Sorgathin Thirappu Vizha 1981-01Amjath Kumar-Aisary Velan-Sorgathin Thirappu Vizha 1981-

‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ 1981 படத்தில் அம்ஜத் குமாருடன் ஜெயமாலினி, சிலோன் மனோகர்Amjath Kumar-Ceylon Manohar-Jayamalini-Sorgathin Thirappu Vizha 1981-

‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ 1981 படத்தில் அம்ஜத் குமாருடன் ஜெயமாலினி, ஐசரிவேலன், காந்திமதிAmjath Kumar-Jayamalini-Aisary Velan-Kanthimathi-Sorgathin Thirappu Vizha 1981-

2 comments on “Amjath Kumar

  1. அம்ஜத் குமார்
    – R.P.ராஜநாயஹம்

    ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தின் அவுட் டோர் ஷூட்டிங். டச் அப் பாய் எம்.ஆர்.கணேசன் ஒரு காரில் கதவை திறந்து வைத்து விட்டு அமர்ந்திருக்கிறான். அவனை சுற்றி ஷூட்டிங் பார்க்க வந்த சிலர்.

    கார் சிவாஜி கணேசனின் கார். “டேய், யார்ரா இது.”
    கார் பார்க்க நின்றவர்கள் காரின் உள்ளே உட்கார்ந்திருந்த டச் அப் பாயை பார்த்து தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள்.

    அதில் ஒருவன் “ சிவாஜியோட மகனா இருக்கும்டா”.
    இன்னொருவன் “ சிவாஜி மகனா நீ” என்று எம்.ஆர்.கணேசனைப் பார்த்தே கேட்கிறார்.
    பெருமை பொங்க பந்தாவாக எம்.ஆர்.கணேசன் ஆம் என்பதாக தலையசைக்கிறான்.
    கொஞ்சம் சிவாஜியைப் போல சின்ன சின்ன மேனரிசங்களை செய்து கொள்கிறான். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து சிவாஜி ஸ்டைலில் ஊதுகிறான்.

    சிவாஜி கணேசன் ஷாட் ப்ரேக்கில் தற்செயலாக கவனிக்கிறார். டச் அப் கொஞ்சம் தேவையும் கூட.
    “ அவன் என்னடா என் கார்ல ஒக்காந்துட்டு பந்தாவா சிகரெட் ஊதுறான். அவனை கூப்பிடுறா”

    “ டேய் டச் அப், வாடா இங்கே” என்று ப்ரொடக்சன் அஸிஸ்டண்ட் ஒருவன் ஓடி வந்து கூப்பிடுகிறான்.
    “ என்னடா சிவாஜி சார் கார்ல ஒக்காந்துகிட்டு பந்தாவா சிகரெட் ஊதுற. வாடா வந்து டச் அப் பண்ணு.”

    காரை சுற்றியிருந்த கும்பலில் ஒருவன், பதட்டத்துடன் காரை விட்டு இறங்கும் எம்.ஆர் கணேசனைப்பார்த்து
    “ ச்சீ.. இவன் எடுபிடிடா!” என்று கத்துகிறான். இன்னும் ஒருவன் “ என்னா பந்தாவா சிவாஜி மகன்னு தலையாட்டினான்டா”
    இன்னும் ரெண்டு மூணு பேர் கோபத்துடன் “ த்தூ “

    டச் அப் பாய் ஓடி வந்து சிவாஜி முன் கை கட்டி நிற்கிறான். “ ஏண்டா என் கார்ல என்னடா பந்தா பண்ணிக்கிட்டிருந்தே, திருட்டுப்பயலே”
    “ ஒன்னும் இல்லண்ணே, கார் புது கார வேடிக்க பாத்தேன்”
    சிவாஜி “ என்னமோ ஓனர் மாதிரில்லடா பந்தாவா ஒக்காந்திருந்தே. அவனுங்க ஏன் ஒன்ன காறி துப்புனானுங்க”
    அசடு வழிய எம்.ஆர் கணேசன் குழைகிறான்.

    பல வருடங்களுக்குப் பின் என்னிடம் இந்த சம்பவத்தை ”என் மேல காறி துப்புனதை சிவாஜி சாரே பாத்துட்டாரு’’ன்னு ரசித்து சிரித்து சொன்னது யார் தெரியுமா? அதே எம்.ஆர் கணேசன் தான்.

    நான் ’அழைத்தால் வருவேன்’ படத்தில் சந்திக்கும்போது எம்.ஆர்.கணேசனின் பெயர் அம்ஜத்குமார். அந்தப்படத்தில் வில்லன் ரோல்.
    ஷோலே படத்தின் பாதிப்பில் தான் அம்ஜத்குமாராக மாறியது.

    அம்ஜத்துக்கு. டச் அப் பாய் வாழ்க்கை, ப்ரொடக்சன் அஸிஸ்டண்ட், அது, இது என்று மாறி வில்லன் நடிகராக அம்ஜத்குமார்.

    ’அழைத்தால் வருவேன்’ கேமராமேன் ‘விக்கோ டர்மரிக்’ விளம்பரமெல்லாம் எடுத்திருந்த அசோக் குன்சால். வட நாட்டுக்காரர்.
    பெங்களூரில் ஒரு நாள் அதிகாலை. மெஜஸ்டிக் சர்க்கிளில் உள்ள ஹோட்டல் நடராஜில் இருந்து ஷூட்டிங்கிற்காக ஒரு லெப்டினண்ட் கர்னல் வீட்டிற்கு போக காருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த போது அசோக் குன்சால் அப்போது இளவயதில் திரையில் மிக நல்ல சாதனை செய்திருந்த ஒரு நடிகரை பற்றி பரவசமாக என்னிடம் “ A fantastic actor. Wonderful actor” என்று சிலாகித்து சொன்னார்.

    எங்கள் அருகில் நின்று கொண்டிருந்த அம்ஜத்குமார் என்னிடம் உடனே ஒரு சம்பவத்தை விவரித்தான்.
    “ அப்போது பால நடிகர்களாக ஒரு நாடக கம்பெனியில் இருந்தோம். குளிக்கும் போது ஒரு வினோதம். சிறுவனாக இருந்த அந்த பிரபல கதாநாயக நடிகரை குளிக்கும்போது நான், தசரதன், பக்கோடா காதர் எல்லோரும் சேர்ந்து கைகளை விரித்து, கால்களையும் விரித்து கட்டிப்போட்டோம். சோப் நுரையால் அவன் சாமானை உருவினோம். அவன் முதலில் “ டேய், என்ன விடுங்கடா..விடுங்கடா, சாமான விடுங்கடா” என்று கத்தினான்”
    சோப் நுரை கைங்கரியம் தொடர்ந்து நடந்திருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சிறுவனாயிருந்து இன்று மிக பிரபலமாகி விட்ட கதாநாயகன் “ டேய் பிடிங்கடா, பிடிங்கடா, தயவு செய்து சாமான பிடிங்கடா” என்று கெஞ்சும் போது சோப் கைங்கரியம் நிறுத்தப்பட்டு விட்டது.
    “ டேய், பிடிங்கடா, பிடிங்கடா” – துடித்து அப்போது அந்த பையன் கெஞ்சினானாம்.

    இதை என்னிடம் சொல்லி விட்டு அம்ஜத் குமார்
    “ இதை அசோக் குன்சாலிடம் இங்கிலீஷில் சொல்லு” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
    இது தான் அம்ஜத்குமார். இப்படி கொஞ்சமும் ஈகோ இல்லாத நடிகனை சினிமாவில் பார்ப்பது அரிதான விஷயம். குழந்தைத்தனமான ஆள்.
    Childlike and Childish.

    A trouble maker.

    ஷூட்டிங் போது ஒரு சமயம் ’ட்ரெஸ் கண்டினியூட்டி’ உள்ள சீனில் என் டீ சர்ட் கேட்டு கெஞ்சினான்.
    அது அழகான ஃபாரின் டீ சர்ட். அப்போது அதை நான் போடும்போது நின்று பார்ப்பார்கள். கண்டினியூட்டி சீன் என்பதால் இந்த டீ சர்ட் போடக்கூடாது என்று அவனுக்கு புரியவைக்க வேண்டியிருந்தது.
    அவனைப் பற்றி சினிஃபீல்டில் பலவாறு அவ்வப்போது காதில் வந்து விழும்.

    ஜெமினி ரங்கநாதன் என்ற மீடியேட்டர் அப்போது ஒரு எடிட்டர் டைரக்டருக்காக ஒரு படம் பண்ணச்சொல்லி பிரபல நடிகர் ஒருவரிடம் பேசியிருந்தார். முதலில் தலையாட்டி விட்டு அந்த நடிகர் பின்னர் சுதாரித்து நிராகரித்து விட்டார்.

    ’கமிஷன் போச்சே’ என்ற என்ற கோபத்தில் அப்போது அவர் பெருமாள் நாயுடு என்ற மீடியேட்டரிடம் சொன்னார். “ இவன் என்ன மார்க்கெட்ல நிப்பானா? எவன் எவனோ காணாம போயிட்டான் ஃபீல்டில. இவன் பொண்டாட்டிய அம்ஜத்குமார் எவ்வளவு பேருட்ட அப்ப அனுப்பியிருக்கான். அம்ஜத்குமார கேட்டா சொல்வான் இவன் பொண்டாட்டி வண்டவாளத்த…”

    நான் இது பற்றி கேட்ட போது “ நண்பனோட மனைவியாயிட்டா இப்ப. அதெல்லாம் இனிமே பேசக்கூடாது”

    ஒரு தடவை பிரமாதமான அழகியொருத்தியுடன் கழுத்தில் பெரிய செயினுடன், கைவிரல்களில் மூன்று மோதிரத்துடன் அழகான காரில் வந்து இறங்கியிருக்கிறான்.
    சரி அம்ஜத் சூப்பரா செட்டிலாயிட்டான். புடிச்சாலும் புடிச்சான் புளியங்கொம்ப பிடிச்சிட்டான் என எல்லோருக்கும் சந்தோசம்.
    ஆனா கொஞ்ச நாள்ள அவளையும் லைன்ல விட ஆரம்பிச்சிருக்கான். அவள் மிரண்டு ஓடி விட்டாள்.

    அம்ஜத்குமார் பணம் கேட்டு அவன் நடிக்கும் ப்ரொடக்சன் கம்பெனிகளை ரொம்ப அரிப்பான். அதனால் சலித்துப்போவார்கள்.
    அவனுக்கு தேவைகள் மிக அதிகமாயிருந்தது.
    பணம் கேட்டு எப்போதும் கெஞ்சுவான்.

    ஷுட்டிங் இல்லாத நாட்களில் ஒரு ஆட்டோ பிடித்து என் போல் பலரையும் தேடி வருவான். “கண்ணு, ஆட்டோவுக்கு குடுக்கணும். ஒரு முப்பது ரூபா கொடு.”
    ஒரு பத்து பேர இப்படி பார்த்து காசு தேத்தி ஆட்டோவுக்கு சின்ன தொகை கொடுத்துட்டு அன்னக்கி ’வசதி’கள தேடிக்குவான்.
    Always a taker and sponger.

    ஒரு கட்டத்தில் நான் அவனிடம் “ நீ தூரத்தில வரும்போதே என் கையப் பார். நான் விரித்து வைத்திருப்பேன். அதில் பணம் இருந்தா வா, பணம் இல்லன்னா அப்படியே திரும்பி போயிரு. பக்கத்தில வந்து கெஞ்சாத” என்று சொல்லும்படியானது.

    சினிமாவில் பல ரேப் சீன்களில் நடித்தவன். எப்போதும் அவன் சொல்வது “ கே.ஆர் விஜயா துவங்கி எத்தன பேர படத்தில ரேப் பண்ணியிருக்கேன் தெரியுமா? எண்பது பேர் இருக்கும்!”

    ஒரு நாள் சீரியஸா “ அவங்க பேரல்லாம் சொல்லு” என்றேன்.
    ஒரு பதினைஞ்சு பேர் பெயரை சொல்லி விட்டு “டயர்டா இருக்கு கண்ணு. போதும்”

    மலேசியா வாசுதேவன் தன் பேட்டிகளில் எப்போதும் சொல்வதுண்டு. “ என் நண்பன் அம்ஜத்குமார் தான் எனக்கு முதன் முதலாக பின்னணி பாடல் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.”

    ……………..

    ராசுக்குட்டி டப்பிங்குக்காக ஏ.பி.என் டப்பிங் தியேட்டருக்கு போகும்போது ஒரு நாள் கவிஞர் முத்துலிங்கம் வீட்டு பக்கத்தில் எதிரே வந்த ஆள் அம்ஜத்குமார் என்பதை உடனே கண்டு கொண்டேன். முடி, தாடியெல்லாம் நரைந்துப்போய் வழுக்கை விழுந்து கண் குழி விழுந்து……

    “அம்ஜத்…. என்ன தெரியுதா”

    ”தெரியலண்ணே”

    ”ராஜநாயஹம்”

    “ஞாபகமில்லண்ணே..”

    “ இப்ப பாக்யராஜ் கிட்ட ராசுகுட்டியில ஒர்க் பண்றேன்”

    அம்ஜத் “அண்ணே… ஏதாவது வேஷம் எனக்கு இருந்தா சொல்லுங்கண்ணே..”

  2. பயனுள்ள தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி திரு.சேதுராமன். நான் அறியாத பல தகவல்கள் கிடைத்தன. மேலே சில திருத்தங்களையும் இதனைக் கொண்டு மேற்கொள்ள முடிந்தது.

Leave a comment