Santhi Williams

சாந்தி வில்லியம்ஸ்

மெட்டிஒலி, சித்தி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் கொடுமைக்கார மாமியாராகவும் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். ஆனா இவங்க மெட்டி ஒலி கேரக்டரான ‘ராஜம்’ ங்குற பேரை சொன்னா தான் நிறைய பேருக்கு தெரியும். இவர் ஒரு சில மாந்தோப்புக்கிளியே போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Continue reading

Veena S.Balachander (Sundaram Balachander)

வீணை எஸ்.பாலச்சந்தர் (சுந்தரம் பாலச்சந்தர்) (பிறப்பு- ஜனவரி 18, 1927 – மறைவு-ஏப்ரல் 13, 1990), வயது-63. இவர் ஒரு சிறந்த வீணை வித்வானாகவும் சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், சிறந்த நகைச்சுவை நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார். Continue reading

Ragini

ராகினி– (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு  மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை  என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். Continue reading

M.Bhanumathi

எம்.பானுமதி-குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை.

அறிஞர் அண்ணாதுரை கதை, வசனம் எழுதி, ரவிச்சந்திரன் கதாநாயனாக நடித்த காதல் ஜோதி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், மனிதனும் தெய்வமாகலாம், மயங்குகிறாள் ஒரு மாது, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். Continue reading

Amjath Kumar

அம்ஜத்குமார் – வில்லன் நடிகர். தோற்றத்தில் பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ஜத்கான் போலவே இருப்பார். 1975-1985 காலகட்டங்களில் இவர் பிரபலம். தற்போது படங்களில் இவரைக் காண்பது அரிது. சங்கிலி, நான் சிகப்பு மனிதன், மாந்தோப்புக்கிளியே போன்ற 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். Continue reading