Praveena (Praveena Bhagyaraj)

பிரவீணா
பாக்கியராஜ் இயக்குநர் ஆவதற்கான முயற்சிகளின் போது அவருக்கு அறிமுகமானவர் நடிகை பிரவீணா. துவக்கத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அந்நேரத்தில் அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் (1983-இல்) நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் பிரவீணா!
பாக்கியராஜை  ‘ராஜா’ எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா பாக்கியராஜுக்கு பரிசாக அளித்த R என்ற எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜின் விரலில் மின்னும். இடையில்,அந்த மோதிரம் தொலைந்துபோக,அதே டிசைனில் மோதிரம் அளித்தவர் மனைவி பூர்ணிமா!
பாக்கியராஜும் பிரவீணாவும் இணைந்து நடித்த கலகலப்பான படம் “பாமா-ருக்மணி”. மாந்தோப்புக்கிளியே, பில்லா, பசி, மன்மத லீலை போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அமைதியான, அழகான நடிகை. இவரது குரல் , உச்சரிப்பு கொஞ்சு தமிழில் இருக்கும்.
‘சீதாபதி சம்சாரம்’ [ 1978] தெலுங்குப் படத்தில் பிரவீணா
Praveena as Radha-Seethapathi Samsaram 1978- Praveena-Seethapathi Samsaram 1978-
மாந்தோப்புக்கிளியே படத்தின் காட்சிகள்
ImageImageImageImageImage
பிரேம் ஆனந்துடன் பிரவீணா
Image
’பாமா ருக்மணி’ [1981] படத்தில் நாகேஷ் அவர்களுடன் பிரவீணாNagesh-Praveena-Bama Rukmani 1983-
Praveena-Bama Rukmani 1983-Praveena-Bama Rukmani 1983-1
மன்மத லீலை [1976] படத்தில் பிரவீணா
Praveena-Manmadha Leelai 1976-
‘அடுக்கு மல்லி’ 1979 படத்தில் ராஜசுலோசனாவுடன் பிரவீணா
Praveena-Adukku Malli 1979-02Praveena-Adukku Malli 1979-01Praveena-Adukku Malli 1979-Praveena-Rajasulochana-Adukku Malli 1979-
‘அடுக்கு மல்லி’ 1979 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், வனிதா, ராஜசுலோசனாவுடன் பிரவீணாPraveena-Rajasulochana-YGM-Thengai-Vanitha-Adukku Malli 1979-

14 comments on “Praveena (Praveena Bhagyaraj)

  1. சார்
    டாக்ஸி டிரைவர் படத்தில் ஜெய்சங்கர் உடன் இணைந்து நல்லதொரு பாடலை கொடுத்து இருப்பார்
    ஜேசுதாஸ் ஜானகி குரலில்
    ‘சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்கங்கள் வருகின்றன ‘
    மெல்லிசை மன்னரின் மெலடி

    • ஜெய் ஹீரோவாக நடித்த கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்கிற படத்திலும் பிரவீணா நடித்துள்ளார்…மற்றபடி மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா என்கிற படங்களில் பிரவீணா நடித்துள்ளாரா…?….

  2. ஜெய் ஹீரோவாக நடித்த கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்கிற படத்திலும் பிரவீணா நடித்துள்ளார்…மற்றபடி மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா என்கிற படங்களில் பிரவீணா நடித்துள்ளாரா…?….

  3. SVK Sir, மௌன கீதங்கள் மற்றும் இன்று போய் நாளை வா ஆகிய படங்களில் பிரவீணா நடித்திருக்கவில்லை. சகோதரி மாலா அவர்கள் சொன்னது போல அப்படத்தில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்திருந்தவர் V K பத்மினி. அப்படங்களில் வேறு எந்த வேடங்களிலும் பிரவீணா நடிக்கவில்லை. எனவே விபரக்குறிப்புகளை திருத்திக் கொள்ளவும்.

    • ஒளிப்பதிவாளர் கர்ணன் டைரக்சனில் வெளிவந்த ‘ஜம்பு’ படத்திலும் பிரவீனா நடித்துள்ளார்.

      • ஜம்பு படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள், சேதுராமன் சார்…?

  4. நீங்கள் கேட்பதில் இருந்து… யூகிக்க முடிகிறது…

    நீங்கள் ‘ஜம்பு’ படத்தை பல தடவை பார்த்து இருப்பீர்கள் என்று…

    சரிதானே செந்தில்….???

    நான் பார்த்தது ‘ஒரே ஒரு முறை’ மட்டுமே…

    • அதிலும் இறுதிக் காட்சியில் பிரவீனா தன் தலையை படகின் ஓட்டைக்குள் கொடுத்து அனைவரையும் காப்பாற்றிவிட்டு, பிரவீனா இறக்கும் காட்சியில்… ஜெய்சங்கர் சொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்…

      “அம்மா நீ ‘தெய்வத்தின் தெய்வம்’ அம்மா….”

      அந்தக் காட்சி இன்னும் பசுமரத்தாணி போல என் நெஞ்சில் நிற்கிறது…,

      • உண்மைதான் சொல்கிறேன்
        சேதுராமன் சார்……நானும் ஒரே ஒரு முறைதான் இப்படம் பார்த்தேன்…+1 படித்துக் கொண்டிருந்த போது…..நம்புங்கள் சார்………..என்னைப் பொறுத்தவரை பிரவீணா படத்தில் இடம்பெற்றுள்ள விஷயமே எனக்கு மறந்து விட்டது…… விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி ஒரு பொட்டல் காட்டில் விழுந்து விடும்….அந்தக் காட்டில் கதாநாயகன் ஜெய்சங்கர் ஆதிவாசி போல பேசத் தெரியாமல் முழி முழி முழி என முழித்து சுற்றித் திரிவார்…. கதாநாயகி ஜெயமாலா (விபத்துக்குள்ளான விமானத்தின் பணிப்பெண்..?) அவ்வப்போது கவர்ச்சியாக நடித்து அவரை முழு மனிதனாக மாற்ற முயற்சி எடுப்பார்… இதுதான் என் நினைவில் உள்ளது…பிரவீணா படத்தில் என்ன வேடத்தில் வருவார் என்கிறதெல்லாம் மறந்து போய்விட்டது சார்.

  5. பிரவீணா இறுதிக்காட்சியில் நான்கு ரீலுக்குள் வருவார். வந்து….ஒரு டான்ஸ்.. ஒரு பைட்… கடைசியில் இறந்துவிடுவார்.

    ‘ஜம்பு’ படத்தில் எந்த காட்சிகளும் கோர்வையாக இருக்காது. காட்சிக்கு காட்சி சம்பந்தம் இருக்காது.

    ஆனால் படம் என்னவோ நன்றாக ஓடியது… காரணம் .. ஜெயமாலாவின் கவர்ச்சி.. மற்றும் பல அழகிகளின் ஆடைகுறைப்பு நடனங்கள்…

    இந்தப் படத்துடன் நடிகர் ஜெய்சங்கரின் கதாநாயக வாழ்வு முடிந்தது….

    இதற்குப் பின்னால் வந்த ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்தார்.. அதிலிருந்து அவர் ‘வில்லன்’ ஆகிவிட்டார்

  6. அதிர்ஷ்டமும் ஆயுள் பலமும் இல்லாமல் போய் விட்ட நல்ல பெண்மணி பிரவீணா…. சினிமா உலகில் ஆரம்ப கால கட்டத்தில் பிரவீணா- பாக்கியராஜ் இருவருமே முன்னுக்கு வர நிறைய சிரமப்பட்டுள்ளனர்..முதலில் பிரவீணாவிற்குதான் படவுலகில் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.. இரண்டாம் கதாநாயகி மற்றும் முக்கிய துணைப்பாத்திரங்கள் என மெல்ல தான் முன்னேறி வாய்ப்புகள் அமையாத தன் காதலர் பாக்யராஜ் அவர்களுக்கு பிரவீணா உதவினார்…. பிறகு பாக்யராஜ் தன் திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகராகவும் இயக்குனராகவும் திரையுலகில் உயர்ந்தார்…நன்றி மறவாமல் பிரவீணாவையே தன் வாழ்க்கைத் துணையாக்கி கொண்டார் பாக்கியராஜ்… ஆனால் பிரவீணாவிற்குத்தான் கண் நிறைந்த காதல் கணவர் மற்றும் மனமொத்த நல்வாழ்க்கை அமைந்தும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று வாய்க்காமல் போய்விட்டது… இதைத்தான் விதி என்பது…… மஞ்சள் காமாலை நோய் அவரைத் தாக்கி இந்த உலகத்தில் இருந்தே அவரை பிரித்துக் கொண்டு போய் விட்டது…. அதிர்ஷ்டமும் ஆயுள் பலமும் இல்லாததால் பிரவீணா மண வாழ்க்கை மிக குறுகிய காலத்தில் முடிந்து விட்டது……Rip,, பிரவீணா பாக்கியராஜ்……….‌.‌செந்தில்…..6380250112.

Leave a comment