Jaikumari

ஜெய்குமாரி– நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்‌ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம்  உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களிலும் ,இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பல இருநூற்றுக்கும் மேலான படங்களில்  டான்ஸ்ராக நடித்துப் புகழ்பெற்றவர்.தற்போது வறுமையில் வாடுகிறார்.

நடிகை ஜெய்குமாரி “அம்மா அல்லது பாட்டி வேடம் கிடைத்தால் நடிக்க தயார்” என்கிறார்

தொடர்ந்து படியுங்கள்.

“ஒரே பாடல் உன்னை அழைக்கும்…உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்…” என்ற இனிமையான பழைய பாடலை நினைவிருக்கிறதா? அந்த பாடலை நினைவில் வைத்திருப்பவர்கள், பாடல் காட்சியில் நடித்த ஜெய்குமாரியை மறந்திருக்க மாட்டார்கள்.

`எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில், `நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் காதல் தேவதையாக சித்தரிக்கப்பட்டவர், இவர். எம்.ஜி.ஆர். நடித்த `நாடோடி’ படத்தில் எம்.என்.நம்பியாரின் தங்கையாக, சிவாஜி நடித்த `கவுரவம்’ படத்தில் மேஜர் சுந்தரராஜனின் காதலியாக, 1970-80 களில் நிறையபேர் இதயங்களில் `கனவுக்கன்னி’யாக வாழ்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த ஜெய்குமாரி, இப்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடுகிறார். வறுமையின் கொடுமை தாங்காமல், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

பேட்டி

இந்த நிலைமை ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி ஜெய்குமாரி, `தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

“எனது சொந்த ஊர், பெங்களூர். ஆனால் வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் சென்னையில்தான். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டதால், 6 வயது சிறுமியாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டேன். என் முதல் படம், `மக்கள் ராஜ்யா’ என்ற கன்னட படம். பந்துலு டைரக்டு செய்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த `நாடோடி’ தான் என் முதல் தமிழ் படம். அப்போது எனக்கு 14 வயது. அதன்பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், அதிகமாக நடித்தது தெலுங்கு-மலையாள படங்களில்தான். அப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் வரைதான் சம்பளம். அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கொடுப்பார்கள். நடிப்பதை விட, (கவர்ச்சி) நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்ததால், நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டினேன்.

திருமணம்

நான் நடித்து சம்பாதித்து, 2 தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்தேன். என்னுடைய 25-வது வயதில், நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல்-கலப்பு திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள். என் மூத்த மகள் சாஜிதாவை `எம்.சி.ஏ.’ படிக்க வைத்தேன்.

இந்த சமயத்தில்தான் என் கணவர் சொந்த படம் எடுக்க ஆரம்பித்தார். ஏ.எஸ்.பிரகாசம் டைரக்ஷனில், `முன்னொரு காலத்திலே’ என்ற படத்தை தயாரித்தோம். படம் முடிவடைந்த நிலையில், என் கணவருக்கும், பைனான்சியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை.

கணவர் மரணம்

இந்த கவலையில், என் கணவர் மரணம் அடைந்து விட்டார். அதன்பிறகுதான் என் வாழ்க்கையில் சோதனை ஆரம்பம் ஆனது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை, கடனுக்காக எடுத்துக்கொண்டார்கள். நான் 3 கார்கள் வைத்திருந்தேன். மூன்று கார்களையும் விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறினேன்.

மூத்த மகளை படிக்க வைத்த அளவுக்கு, இரண்டாவது மகளையும், மகனையும் படிக்கவைக்க முடியவில்லை. என் தங்கைகள் எனக்கு உதவ முன்வரவில்லை. கஷ்டப்பட்டு இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

வாடகை வீட்டில்…

நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்துவைத்த 2 தங்கைகளும், 2 மகள்களும் என்னை கவனிப்பதில்லை. எந்த உதவியும் செய்வதில்லை. நானும், என் மகனும் வேளச்சேரியில் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறோம். என் பிள்ளை கஷ்டப்பட்டு படித்து, `பி.பி.ஏ.’ தேறினான். மேற்கொண்டு `எம்.பி.ஏ.’ படிக்க ஆசைப்படுகிறான். படிப்பு கட்டணம் செலுத்த பணம் இல்லை.

படித்துக்கொண்டே அவன், `இன்டீரியர் டெகரேஷன்’ கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்கிறான். அந்த பணத்தில்தான் இருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சில சமயம் வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

மீண்டும் நடிப்பு

அதனால் மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். எனக்கு, தமிழ் பட உலகில் இப்போது உள்ள இளையதலைமுறைகள் யாரையும் தெரியாது. அவர்கள் எனக்கு அம்மா வேடமோ, பாட்டி வேடமோ எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயார்.

இத்தனை காலமும் மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டேன். இனிமேல் வாழப்போகிற காலம் வரை எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். வறுமை, கடன் சுமை காரணமாக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன். என் மகன் காப்பாற்றி விட்டான்.

என் நிலைமையை சொல்லி, முதல்-அமைச்சர் கலைஞரிடம் உதவி கேட்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அவரை தவிர, எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை.”

இவ்வாறு ஜெய்குமாரி கண்கலங்க கூறினார்.

Image

Image

Image

Image

Image

1970-இல் வெளிவந்த “ரிக்‌ஷாக்காரன்” படத்தில் ஜெய்குமாரி

Jeikumari-Rickshawkaran-1970

மாணிக்கத் தொட்டில் (1974) படத்தில் விதவிதமான தோற்றத்தில் ஜெய்குமாரிJaikumari-Manikka Thottil-1974Jaikumari-Manikka Thottil-1974-1Jaikumari-Manikka Thottil-1974-2Jaikumari-Manikka Thottil-1974-3Jaikumari-Manikka Thottil-1974-4Jaikumari-Manikka Thottil-1974-5

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் ஜெய்குமாரிJayakumari-Engiruntho Vanthal 1970-1

வைரம்’ [1974] படத்தில் ஜெய்குமாரியுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

Jaikumari-MRR.Vasu-Vairam 1974-

‘சிட்டி செல்லெலு’ [1970] படத்தில் ஜெய்குமாரிJaikumari-Chitti Chellelu 1970-Jaikumari-Chitti Chellelu 1970-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் தனித்தும் விஜயகுமாருடனும்  ஜெய்குமாரிJaykumari-Ival Oru Seethai 1978-Jaykumari-Ival Oru Seethai 1978-1Jaykumari-Ival Oru Seethai 1978-2Jaykumari-Ival Oru Seethai 1978-3Jaykumari-Vijayakumar-Ival Oru Seethai 1978-

“அக்னி ம்ருகம்” [1971] படத்தில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஜெய்குமாரி

Jayakumari as Valli-Agni Mrugam 1971-Jaykumari as Valli-Agni Mrugam 1971-5Jaykumari as Valli-Agni Mrugam 1971-Jaykumari as Valli-Agni Mrugam 1971-2Jaykumari as Valli-Agni Mrugam 1971-1Jaykumari as Valli-Agni Mrugam 1971-4Jaykumari as Valli-Agni Mrugam 1971-3Jaykumari as Valli-Agni Mrugam 1971-6

“பிஞ்சு மனம்” [1972] படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜெய்குமாரி Jaikumari-PINCHUMANAM 1975- (2)Jaikumari-Sreekanth-PINCHUMANAM 1975- (2)

”பத்தாம் பசலி” 1970 படத்தில் ஜெமினி பாலு, தர்மலிங்கத்துடன் ஜெய்குமாரி  Jaikumari-Pathaam Pasali 1970-Gemini Balu-Jaikumari-Dharmalingam-Pathaam Pasali 1970-1Gemini Balu-Jaikumari-Dharmalingam-Pathaam Pasali 1970-

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் ஆர்.முத்துராமனுடன் ஜெய்குமாரிjayakumari-anathai-ananthan-1970jayakumari-anathai-ananthan-1970-4jayakumari-anathai-ananthan-1970-3jayakumari-anathai-ananthan-1970-2jayakumari-anathai-ananthan-1970-1jayakumari-r-muthuraman-anathai-ananthan-1970

Jaikumari with Shoban Babu in ‘Manavadu Danavadu’ 1972 [Tamil movie: Engal Thanga Raja] Telugu MovieJayakumari-Manavudu Danavudu 1972-Jayakumari-Manavudu Danavudu 1972-1Jayakumari-Manavudu Danavudu 1972-2Jayakumari-Sobhan Babu-Manavudu Danavudu 1972-Jayakumari-Sobhan Babu-Manavudu Danavudu 1972-1

Jaikumari with Raja Babu in ‘Manavadu Danavadu’ 1972 [Tamil movie: Engal Thanga Raja] Telugu MovieJayakumari-Rajababu-Manavudu Danavudu 1972-

”துணைவி” 1981 படத்தில் விஜயபாபுவுடன் ஜெயகுமாரிJaikumari-Vijayababu-Roopa-Thunaivi 1981-2

”துணைவி” 1981 படத்தில் ரூபா, விஜயபாபுவுடன் ஜெயகுமாரிJaikumari-Vijayababu-Roopa-Thunaivi 1981-1Jaikumari-Vijayababu-Roopa-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுதாகர், விஜயபாபுவுடன் ஜெயகுமாரிJaikumari-Vijayababu-Sudhakar-Thunaivi 1981-50

“Jaikumari” in “Kalyana Mandapam” 1971 Telugu MovieJaya Kumari-Kalyana Mantapam 1971-2Jaya Kumari-Kalyana Mantapam 1971-1Jaya Kumari-Kalyana Mantapam 1971-53

”பந்தாட்டம்” 1974 படத்தில் சுருளிராஜன், எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஜெய்குமாரிJayakumari-Pandhattam 1974-1Jayakumari-Pandhattam 1974-Jayakumari-Pandhattam 1974-2Jayakumari-Suruli Rajan-Pandhattam 1974-Jayakumari-Suruli Rajan-MRR.Vasu-Pandhattam 1974-58

”சக்கரம்” 1968 படத்தில் கே.கண்ணனுடன் ஜெய்குமாரிJaikumari-Chakkaram 1968-Jaikumari-Chakkaram 1968-01Jaikumari-K.Kannan-Chakkaram 1968-61

Jayakumari, Chandramohan with Nagabhushanam in “Inti Gowravam” 1970 Telugu MovieJaya Kumari-Inti Gowravam 1970-Jaya Kumari-Chandra Mohan-Inti Gowravam 1970-Chandra Mohan-Jayakumari-Inti Gowravam 1970-Chandra Mohan-Nagabhushanam-Jayakumari-Inti Gowravam 1970-65

”சுபதினம்” 1969 படத்தில் நாகேஷுடன் ஜெயகுமாரிJaikumari-Nagesh-SUBHA DINAM 1966-66

“தியாக உள்ளம்” 1979 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் ஜெய்குமாரிJaikumari-Thiyaga Ullam-Jaikumari-Thengai-Thiyaga Ullam-Jaikumari-SURULI RAJANi-Thiyaga Ullam-69

Jaikumari with Vijaya in Hanthakulu Devanthakulu 1972 Telugu MovieJaikumari-Hanthakulu Devanthakulu 1972-001Jaikumari-Hanthakulu Devanthakulu 1972-02Jaikumari-Vijaya- Hanthakulu Devanthakulu 1972-

Jaikumari with Sathyanarayana in Hanthakulu Devanthakulu 1972 Telugu MovieJaikumari-Sathyanarayana-Hanthakulu Devanthakulu 1972-02Jaikumari-Sathyanarayana-Hanthakulu Devanthakulu 1972-Jaikumari-Sathyanarayana-Hanthakulu Devanthakulu 1971-0275

’ரகசிய ராத்திரி’ 1974 படத்தில் ஜெயகுமாரி

Jayakumari -Rahasya Rathri 1974-Jayakumari -Rahasya Rathri 1974-0177

’கண்ணம்மா’ 1972 படத்தில் ஆர்.முத்துராமனுடன் ஜெயகுமாரிJaikumari-Kannamma 1972-01Jaikumari-Kannamma 1972-Jaikumari-R.Muthuraman-Kannamma 1972-01Jaikumari-R.Muthuraman-Kannamma 1972-

’கண்ணம்மா’ 1972 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் ஜெயகுமாரிJaikumari-KR.Vijaya-Kannamma 1972-

’கண்ணம்மா’ 1972 படத்தில் செந்தாமரையுடன் ஜெயகுமாரிJaikumari-Senthamarai-Kannamma 1972-

’கண்ணம்மா’ 1972 படத்தில் செந்தாமரை, ஆர்.முத்துராமனுடன் ஜெயகுமாரிJaikumari-R.Muthuraman-Senthamarai-Kannamma 1972-84

நன்றி:- தினத்தந்தி http://www.viparam.com

6 comments on “Jaikumari

  1. சகோதரி மாலா அவர்களே, நடிகை ஜெய் குமாரியின் சோக கதையை படித்தீர்களா….?…. நடிப்புலகில் பிஸியாக இருக்கும் போது சம்பாதித்த பணத்தை பத்திரமாக அசையா சொத்துக்களில் முதலீடு செய்து நிரந்தர வருமானம் பார்க்கும் நடிக நடிகையர்கள் மிகவும் குறைவு…ஜெய்குமாரியும் அப்படி செய்யாமல் இப்போது சிரமப்படுகிறார்கள் பாருங்கள்… கடைசி காலம் வரை அவர் தன் வாழ்வை நல்லபடியாக கவனித்துக் கொள்ள அவருடைய மகனாவது உதவட்டும்…

  2. இவர் நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் மறைந்த நடிகர் சசிகுமார் அவர்களுடன் இவர் ஆடி பாடிய ” இன்று வந்த இந்த மயக்கம், என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதம்மா” … எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்…. பொதுவாக இந்த மாதிரி பாடல் என்றால் இசையமைப்பாளர்கள் கூப்பிடுங்க ஈஸ்வரியை…. என்பார்கள்… ஆனால் இந்த பாடலுக்கு MSV அவர்கள் சுசீலாம்மாவை பாடல் வைத்து விட்டார்.. சுசீலா அம்மாவும் இந்த பாடலை எங்கேயோ கொண்டு போய்விட்டார்… எனக்கு பிடித்த பாடல்களின் பட்டியலில் இப்பாடலும் ஒன்று…you tubela நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் பாடல் இது.

    • Yes.senthil sir…Those days girls enter films very early like 14 ..15 age..they become too busy and hv no time to look into money matters..or too naive n young to know the other side of life…totally dependent on parents ..siblings..or husband or any third person..if she s lucky to have a genuine person she will enjoy her earnings at her later years…or else pushed to penury…..

  3. She was a good dancer cum actress.

    What about her present status..??

    If anybody knows.. Please post here.

    Some years back, I heard that she was starving.

  4. Very sad to hear that this actress is now living in poverty. The Nadigar Sangam must have adequate funds to help such actors/actresses who are ignored by directors and producers. I don’t know her present status. Hope she is OK now.

Leave a comment