SRI RAM

ஸ்ரீராம் -பழம்பெரும் தமிழ் நடிகர். 1950-1960-களில் தமிழ்ப் படங்களில் இவரது பங்களிப்பிருந்தது.இவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார்.

விண்ட்ஸர் பிக்சர்ஸ் தயாரித்து எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கி 1952-இல் வெளிவந்த ‘கலாவதி’, ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து ஆர்.நாகேஸ்வர ராவ் இயக்கி 1952-இல் வெளிவந்த ‘மூன்று பிள்ளைகள்’, பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஏ.எஸ்.ஏ.சாமியும் சி.எஸ்.ராவும் இணைந்து இயக்கிய 1953-இல் வெளிவந்த ‘பொன்னி’ யில் லலிதா, பத்மினியுடனும், பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய 1954-இல் வெளிவந்த ‘மலைக்கள்ளன்’, மெர்க்குரி பிலிம்ஸ் தயாரித்து சி.சீனிவாசராவ் இயக்கத்தில் 1954-இல் வெளிவந்த ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ படத்தில் குசலகுமாரியுடன் இணைந்தும், ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து கே.ஜே.மஹாதேவன் இயக்கி ரி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த 1954-இல் வெளிவந்த ‘ராஜி என் கண்மணி’,ஸ்ரீ கணேஷ் மூவிடோன் தயாரிப்பில் சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் 1955-இல் வெளியான ‘கோடீஸ்வரன்’ படத்தில் ராகினியுடன் இணைந்தும், அரவிந்த் பிக்சர்ஸ் தயாரித்து வி.கிருஷ்ணன் இயக்கத்தில் 1955-இல் வெளிவந்த ‘முல்லை வனம்’, ஆனந்தா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.பிரகாஸ்ராவ் இயக்கத்தில் 1956-இல் வெளிவந்த ‘மறுமலர்ச்சி’, ஜூப்லி ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் 1956-இல் வெளிவந்த ‘மர்ம வீரன்’ மற்றும் சத்ர்ன் பிலிம்ஸ் தயாரிப்பில் ரி.பி.சுந்தரம் இயக்கி 1958-இல் வெளிவந்த ‘மாய மனிதன்’ மற்றும் வல்லவன் ஒருவன் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

1960-இல் வெளிவந்த வெற்றிப்படமான ‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ படத்தில் பேபி உமாவின் அண்ணனாக அமைதியான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இப்படத்தின் இறுதியில் பண்டரிபாயைக் கரம் பிடிப்பார். ஜெமினியின் வெற்றித்தயாரிப்பான ‘சம்சாரம்’ படத்தில் வேணு என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை ததும்ப யதார்த்தமாக நடித்திருப்பார்.

கோடீஸ்வரன் படத்தில் கே.ஏ.தங்கவேலுவின் மகனாகவும் சிவாஜிகணேசனின் நண்பராகவும் ராகினியின் காதலராகவும் நடித்திருப்பார். ‘மர்ம வீரன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

நீர்க்குமிழி 3: குறைவான படங்கள், நிறைவான நடிப்பு

06chrcjMarmaveeran (1)

‘மர்ம வீரன்’ படத்தில் ஸ்ரீராம், வைஜெயந்தி மாலா

நாடகம் வளர்த்த மதுரை, பல சிறந்த கலைஞர்களைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறது. அவர்களில் அழகே உருவான நடிகர், ஸ்ரீராம் என்று அழைக்கப்பட்ட மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. பக்ஷிராஜா ஸ்டுடியோவை கோவையில் நிறுவிப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அதன் முதலாளியின் பெயரும் ஸ்ரீராமுலு நாயுடுவாக இருந்தது. இதனால் நடிகர் ஸ்ரீராமுலு நாயுடு தனது பெயரை ஸ்ரீராம் என மாற்றிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று புகழ்பெற்று விளங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில், தனது தனித்த, உயரமான, அழகான தோற்றத்தால் 50-களின் இறுதியில் கவனம் பெறத் தொடங்கினார் ஸ்ரீராம். ‘பார்க்க மட்டுமல்ல, பழகுவதிலும் உதவி என்று வருபவர்களுக்குக் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பதிலும் இவர் ‘ஹேண்ட்சம் ஹீரோ’ எனப் பாராட்டி எழுதியிருக்கின்றன அன்றைய பத்திரிகைகள்.

ஜெமினியிலிருந்து…

மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான ஸ்ரீராம், ஜெமினி ஸ்டுடியோவின் படங்களால் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஜெமினியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் தன்னைப் போலவே நூற்றுக்கணக்கான ‘ஜெமினி பாய்ஸும் கேர்ள்ஸும்’ இருப்பதைக் கண்டு திகைத்துப்போனார். ஆனால் தனது தோற்றம், இதர திறமைகள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஜெமினி தயாரிக்கும் படத்தில் தனக்கு நல்ல வேடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பின்னால் ஜெமினிக்குப் புகழ் சேர்த்த படங்களில் ஒன்றாக மாறிய ‘சம்சாரம்’ படத்தில் ஸ்ரீராமுக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் அவருக்கு அங்கே வசனம் இல்லாத ‘கூட்டத்தில் ஒருவன்’ வேடங்களே கிடைத்தன. அவற்றில் ஒன்று ஜெமினியின் பிரம்மாண்ட காவியமாகிய ‘சந்திரலேகா’வில் குதிரை வீரனாக அவர் நடித்தது.

ஆனால், ‘சந்திரலேகா’ தயாரிப்பில் இருக்கும்போதே எழுத்தாளர், இயக்குநர் கே.வேம்புவின் கண்களில் பட்டார் ஸ்ரீராம். ‘சந்திரலேகா’ வெளியான அதே ஆண்டில் வேம்பு, கதை, வசனம் எழுதி இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் சௌந்தரராஜன் தயாரித்து வெளியிட்ட ‘மதனமாலா’(1948) படத்தில் ஓர் அழகிய ராஜகுமாரனாக குதிரையேறிவந்தார். அரசனுக்குப் பயப்படாமல் அரசவை நாட்டியக்காரி மதனமாலாவை காதலித்துக் கரம்பற்றினார். விக்கிரமனாக அந்தப் படத்தில் ஸ்ரீராம் வரும் காட்சிகளுக்குத் திரையரங்கில் விசில் பறந்தது.இளம் ரசிகைகளின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

இளம் ரசிகர்களின் ‘ஹீரோ’

அரச உடையில் சரி, சாதாரண குடும்பத்துப் பையனாக ஸ்ரீராம் எப்படி இருப்பார் என்பதை அடுத்த ஆண்டே வெளியான ‘நவஜீவனம்’ காட்டியது. ஸ்ரீராமைச் சுற்றித்தான் ‘நவஜீவனம்’ படம் நகர்ந்தது. எளிய தொழிலாளி நாகையா. அவருடைய மனைவி கண்ணாம்பா. பெற்றோரை இழந்ததால் தனது தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாகத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் நாகையா. கண்ணாம்பாவும் ஸ்ரீராமைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்கிறார். வளர்ந்து கல்லூரி மாணவன் ஆகும் ஸ்ரீராம் சக மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.

ஸ்ரீராம்

வரலட்சுமி நூல் மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஆகாது என்று அண்ணனும் அண்ணியும் எச்சரிக்கிறார்கள். ஆனால், வளர்த்தவர்கள் சொல் கேளாமல் வரலட்சுமியைக் கல்யாணம் செய்து கொள்ளும் ஸ்ரீராம், மாமனாரின் திடீர் மரணத்துக்குப் பின் முதலாளி ஆகிறார்.

அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் அவர், தான் ஒரு தொழிலாளியின் தம்பி என்பதை மறந்து ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை அடித்தும்விடுகிறார். அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீராமுக்கு வாழ்க்கை புரிந்துவிடுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கண்ணாம்பா தயாரித்து நடித்த இந்தப் படத்தில் நாகையா, கண்ணம்பாவுக்கு சற்றும் சளைக்காத நடிப்பைக் கொடுத்துப் பாராட்டு பெற்றார் ஸ்ரீராம்.

06chrcjpazhani

‘பழனி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர், ஸ்ரீராம், சிவாஜி, முத்துராமன்

முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தபோது 1949-ல் சிறந்த திரைப்படமாக ‘நவஜீவனம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அன்றைய கல்லூரி மாணவ, மாணவியர் ரசித்துப் பார்க்கும் நாயகனாக ஸ்ரீராம் மாறினார். இதைப் பயன்படுத்திக்கொள்ளும்விதமாக ஜெமினி நிறுவனம் அடுத்து தயாரித்த ‘சம்சாரம்’ படத்தில் அவருக்கு முக்கிய வேடம் அளித்தது. கிராமத்துப் பட்டிக்காட்டானாக இருந்து, பின் நவநாகரிக இளைஞனாக மாறும் இருபரிமாணக் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய ஸ்ரீராமுக்கு உயர்தரமான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு கைவந்த கலையாக இருந்தது.

பன்முக நாயகன்

வெறும் 23 படங்களே நடித்திருக்கும் ஸ்ரீராமின் சிறப்பு, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தொடர்ந்து நடித்தது. இரண்டாவது கதாநாயகன், வில்லன், பாசமான தம்பி, பாசமான அண்ணன், பட்டிக்காட்டான், கோடீஸ்வரன், வீரம் செறிந்த இளவரசன் என பல வண்ணத் துணைக் கதாபாத்திரங்களில் தன் நடிப்புத் திறமையை நிறைவாகப் பளிச்சிடச் செய்திருக்கிறார். பிசிறு தட்டாத கணீர் குரல், நாடகத்தனம் குறைந்த ஸ்டைலான நடிப்பு, எம்.ஜி.ஆர்., ரஞ்சன் ஆகிய நடிகர்களுக்கு இணையாக வாள் சுழற்றும் திறன், சிறந்த குதிரையேற்ற வீரர், நல்ல காரோட்டி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ரீராம். சொந்தப் படம் தயாரித்ததால் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நடிகர்களில் ஒருவராக ஆனார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் ‘பழனி’ படத்தில் சிவாஜிக்குத் தம்பியாகவும் நடித்த ஸ்ரீராம், இந்திப் படவுலகில் நுழைந்திருந்தால் வெற்றியை ஈட்டியிருக்கலாம்.

‘மர்மமாய்’ மறைந்த கலைஞர்

கடைசியாக அவர் தயாரித்து நடித்த படம் ‘மர்மவீரன்’. அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை நாவல்களின் சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் ‘மர்ம வீரனில்’ இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் வழங்கிய நடிப்பு சாகசமும் சவால்களும் நிறைந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர். எஸ்.வி.ஆர், வி.கே.ஆர், ஆர்.நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த அத்தனை ஜாம்பவான் நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக ‘மர்மவீர’னில் நடித்துக் கொடுத்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ‘எலெக்ட்ரிக்’ வாள் சண்டை என்ற புதுமையைப் புகுத்திய ஸ்ரீராம் ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்தளித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தவர், சாதனைகள் படைக்கு முன்பே மறைந்தார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19802428.ece

 

‘சம்சாரம்’ [1950] படத்தில் ஸ்ரீராம் 

Sreeram as Venu-Samsaram 1950- Sreeram as Venu-Samsaram 1950-1 Sreeram as Venu-Samsaram 1950-2

‘சம்சாரம்’ [1950] படத்தில் குமாரி வனஜாவுடன் ஸ்ரீராம் Kumari Vanaja as Kamala-Sriram-Samsaram 1950-w

கோடீஸ்வரன் [1955] படத்தில் ஸ்ரீராம்-ராகினி

Sriram-Kodeeswaran 1955-1 Sriram-Kodeeswaran 1955-2 Sriram-Ragini-Kodeeswaran 1955-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ படத்தில் பேபி உமா, பண்டரிபாயுடன் ஸ்ரீராம்

Sriram-Neelavukku Neranja Manasu 1960-Sriram-Neelavukku Neranja Manasu 1960-1Sreeram-Baby Uma-Neelavukku Neranja Manasu 1960-Sreeram-Baby Uma-Pandaribhai-Neelavukku Neranja Manasu 1960-

‘மலைக்கள்ளன்’ [1954] படத்தில் வீரராஜன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் தனித்தும் ஈ.ஆர்.சகாதேவனுடனும்

Sri RAM -Veerarajan-Malaikkallan 1954-1Sri Ram-E. R. Sahadevan AS Kathavarayan-Malaikkallan 1954-

‘மலைக்கள்ளன்’ [1954] படத்தில் ஸ்ரீராம் எஸ்.எம்.திருப்பதிசாமி மற்றும் ஈ.ஆர்.சகாதேவனுடனும்

Sriram-SM.Thiruppathi Sami as Kuttippatty Jamindar -E. R. Sahadevan AS Kathavarayan-Malaikkallan 1954-1Sri RAM -Veerarajan-Malaikkallan 1954-

’மலைக்கள்ளன்’ [1957] படத்தில் ஸ்ரீராமுடன் சுரபி பாலசரஸ்வதி

Surabhi Balasaraswathi -Sriram -Malaikkallan 1954-Surabhi Balasaraswathi -Sriram -Malaikkallan 1954-1Surabhi Balasaraswathi -Sriram -Malaikkallan 1954-2

’மலைக்கள்ளன்’ [1957] படத்தில் ஸ்ரீராமுடன் ரி.எஸ்.துரைராஜ்

T. S. Durairaj as Karuppiah-Sriram-Malaikkallan 1954-T. S. Durairaj as Karuppiah-Sriram-Malaikkallan 1954-1

“பாலும் பழமும்” 1961 படத்தில் ஸ்ரீராமுடன் கே.டி.சந்தானம் Sriram-KD.Santhanam-Palum Pazhamum 1962-KD.Santhanam-Sriram-Palum Pazhamum 1962-

“மாய மனிதன்” 1958 படத்தில் ஸ்ரீ ராமுடன் சந்திரகாந்தாSri Ram-MAAYA MANITHAN 1958-1Sri Ram-MAAYA MANITHAN 1958-Sri Ram-Chandrakantha-MAAYA MANITHAN 1958-1Sri Ram-Chandrakantha-MAAYA MANITHAN 1958-

“மாய மனிதன்” 1958 படத்தில் ஸ்ரீராமுடன் காக்கா ராதாகிருஷ்ணன்Kaka Radhakrishnan-Sriram-MAAYA MANITHAN 1958-

”பொன்னி” 1953 படத்தில் ஸ்ரீராமுடன் பத்மினிSriram-Ponni 1953-1Sriram-Ponni 1953-2Sriram-Ponni 1953-Sriram-Ponni 1953-3Sriram-Padmini-Ponni 1953-1Sriram-Padmini-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் ஸ்ரீராமுடன் லலிதாLalitha-Sriram-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் ஸ்ரீராம்Sriram-D.Balasubramaniam-Ponni 1953-

”போன மச்சான் திரும்பி வந்தான்” [1954] படத்தில் குசலகுமாரியுடன் ஸ்ரீராம்Sri Ram-Pona Machaan Thirumbi Vanthaan 1954-2Sri Ram-Pona Machaan Thirumbi Vanthaan 1954-Sri Ram-Kuchalakumari-Pona Machaan Thirumbi Vanthaan 1954-1Sri Ram-Kuchalakumari-Pona Machaan Thirumbi Vanthaan 1954-

12 comments on “SRI RAM

  1. நடிகர் திலகமும் ஜெமினி கணேசனும் இணைந்து கௌரவ வேடத்தில் நடித்த படம்
    இசை அமைப்பாளர் வேதா அவர்கள் நடிகர் திலகத்தின் படத்திற்கு இசையமைத்த ஒரே படம்

    தகவல் தந்து உதவியவர் – நடிகர்திலகம்.காம் நண்பர் திரு ராகவேந்தர் அவர்கள்

  2. ஓ அப்படியா….. மிக்க மகிழ்ச்சி. படத்தைப் பதிவேற்றம் செய்ததற்கும் மிக்க நன்றி.திரு ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி.

  3. திரு சிவாஜி கணேசன் நடித்த பச்சைவிளக்கு திரைபடத்தில் எம் ஆர் ராதா உடன் இணைந்து வில்லன் ஆக வருவார் என்று நினைவு .

  4. கணபதி கிருஷ்ணன் உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.

  5. his last film was PALANI,one of the brother role,he lost every thing in his own film Marma Veeran,Sivaji,his stage friend,acted for him,without any salary but the film failed.

    • நல்ல தகவல் சிவசுப்பிரமணியம் அவர்களே! மிக்க நன்றி.

  6. La même année que le film de l’acteur Sivaji Ganeshan, PAZHANI, 1965 d’A. Bhimsingh, l’acteur Sri Ram est vu aussi dans MUGARACI, de la Devar Films, avec MGR. Il joue le rôle d’un voyou aux côtés du producteur M.M.A.Chinnappa Devar…

  7. ஸ்ரீராம் 1966ஆம் ஆண்டில் ஜெய்சங்கர் நடித்த வல்லவன் ஒருவன் படத்தில் நடித்திருந்தார்.

Leave a comment