Baby Shakila

பேபி ஷகிலா

எங்க வீட்டுப் பிள்ளை படம் பார்த்தவர்கள் இக்குழந்தையின் நடிப்பை மறந்திருக்கமாட்டார்கள். இப்படத்தில் எம்.என்.நம்பியார்-பண்டரிபாய் தம்பதியரின் மகளாக வருவார். பரிதாபத்திற்குரிய அல்லது அப்பாவித்தனமான எம்.ஜி.ஆர் நம்பியார் அவர்களால் தண்டிக்கப்படும் போதெல்லாம் ஆறுதல் கூறுவதும், ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் வீட்டைவிட்டு வெளியேறும் போது தந்தையின் சட்டைப் பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்து வழியனுப்பி வைப்பதும், முரட்டு சுபாவமுள்ள எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வரும்போது அவரிடம் அங்கு நடப்பவைகளை எடுத்துக்கூறி; படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல துணையாயிருப்பதும் இச்சிறுமிதான்.

அதுபோல் கன்னித்தாய், குழந்தை உள்ளம் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். குமாரியான பின் அறிமுகமான படம் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் தயாரிப்பில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பாலூட்டி வளர்த்த கிளி. இப்படத்தில் மனோரமா, ரி.எம்.சாமிக்கண்ணு தம்பதியரின் மகளாகவும் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாகவும் நடித்திருந்தார்.மேலும் குமாரியாக அவர் நடித்த மற்றொரு படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1974-இல் வெளிவந்த ‘குமாஸ்தாவின் மகள்’. இப்படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார். மற்றொருவர் நடிகை ஆர்த்தி. குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் “எழுதி எழுதிப் பழகி வந்தேன்…. எழுத்துக்கூட்டி பாடி வந்தேன்……” என்ற பாடல் கூட அந்நாளைய ரசிகர்களுக்கு நினைவுக்கு வரலாம். இப்படம் தோல்விப்படமானது. அதன்பின் இவரைக் குறித்தத் தகவல் எதுவும் இல்லாமலிருந்தது.

இவர் வளர்ந்த பொண்ணு என்ற படத்திற்குப்பின் நடிப்பிலிருந்து விலகி திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். ஆனால் முப்பது வயதிலேயே இறைவன் இவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் பேபி ஷகிலாவாக

Baby Shakila-KUZHANTHAI ULLAM 1969- Baby Shakila-KUZHANTHAI ULLAM 1969-1

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் பேபி ரோஜாரமணியுடன் பேபி ஷகிலாBaby Shakila-Rojaramani-KUZHANTHAI ULLAM 1969- Baby Shakila-Rojaramani-KUZHANTHAI ULLAM 1969-1

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் சௌகார் ஜானகியுடன் பேபி ஷகிலா

Baby Shakila-Sowkar-KUZHANTHAI ULLAM 1969- Baby Shakila-Sowkar-KUZHANTHAI ULLAM 1969-1

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் குமாரி ஷகிலாKumari Shakeela-Paalooti Valartha Kili 1976-1Kumari Shakeela-Paalooti Valartha Kili 1976-2

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், குமாரி ஷகிலாKumari Shakeela-YGM-Paalooti Valartha Kili 1976-1

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் குமாரி ஷகிலாவுடன் மனோரமா Kumari Shakeela-Manorama-Paalooti Valartha Kili 1976-Kumari Shakeela-Manorama-Paalooti Valartha Kili 1976-1Kumari Shakeela-Manorama-Paalooti Valartha Kili 1976-2

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், குமாரி ஷகிலா, மனோரமாவுடன் ரி.எம்.சாமிக்கண்ணு

TM.Samikkannu-YGM-Manorama-Paalooti Valartha Kili 1976- TM.Samikkannu-Manorama-Paalooti Valartha Kili 1976-

‘குமாஸ்தாவின் மகள்’ [194] படத்தில் கன்னட நடிகை ஆர்த்தியுடன் குமாரி ஷகிலாBaby Shakila-Kumasthaavin Magal 1969-1 Baby Shakila-Kumasthaavin Magal 1969-3 Baby Shakila-Aarthi-Kumasthaavin Magal 1974 - (1) Baby Shakila-Aarthi-Kumasthaavin Magal 1974 - (2) Baby Shakila-Aarthi-Kumasthaavin Magal 1974 - (4) Baby Shakila-Aarthi-Kumasthaavin Magal 1974 - (5)

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் பேபி ஷகிலாBaby Shakila-Annaavin Aasai 1966-Baby Shakila-Annaavin Aasai 1966-1Baby Shakila-Annaavin Aasai 1966-2

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் பாலாஜியுடன் பேபி ஷகிலாBaby Shakila-Balajee-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரியுடன் பேபி ஷகிலாBaby Shakila-Savithri-Gemini-Annaavin Aasai 1966-

“நாடோடி” 1966 படத்தில் பாரதியுடன் பேபி ஷகிலா.BABY SHAKILA-Nadodi 1966-2BABY SHAKILA-Nadodi 1966-1BABY SHAKILA-Nadodi 1966-BABY SHAKILA-BHARATHI-Nadodi 1966-

“நாடோடி” 1966 படத்தில் பி.கே.சரஸ்வதியுடன் பேபி ஷகிலா.BABY SHAKILA-PK.Saraswathi-Nadodi 1966-

Advertisements

7 comments on “Baby Shakila

  1. பேபி சகிலா பற்றி கூகுலில் தேடும்பொழுது அவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறான தகவல். அவர் சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார். நான் அவருடைய உறவினர்.

  2. உங்களுடைய பதிப்பிலும் அவர் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறீர்கள் ஆனால் அது தவறு.

    • நானும் இணையத்தில் பார்த்ததைத்தான் பதிவு செய்திருக்கிறேன் திரு.நசீர். நீங்கள் ஒருவர்தான் அவரது உறவினர் என்றும் அவர் சென்னையில் வசிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அவரைக் குறித்த வேறெந்த விவரங்களையும் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அதற்கான ஆதாரங்களை இங்கே தந்திருக்கலாமே. ரத்தினச் சுருக்கமாக உங்கள் கருத்துக்களை வழங்கியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட திருத்தம் அப்படியே இருக்கிறது. இன்னொருவர் வருவார் நீங்கள் குறிப்பிட்டதைத் தவறென வரிந்து கட்டிக்கொண்டு பதிவிடுவார்.

  3. இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரது கணவர் அன்வர்ஜான் இவர் பாசமலர் டைரக்டர் பீம் சிங்கிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s