Kuladeivam V.R.Rajagopal

”குலதெய்வம்” வி.ஆர்.ராஜகோபால்

தமிழ்த்திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர். இவரை ’சின்னக்கலைவாணர்’ என்றும் அழைப்பதுண்டு. 1956-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ”குலதெய்வம்” படத்தில் அறிமுகமானார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடக்குழுவில் இருந்தவர். சித்தி, அவர் எனக்கே சொந்தம், சபாஷ் மீனா, ராஜா ராணி, திலகம், மன்னாதி மன்னன்,  குறவஞ்சி, எல்லைக்கோடு, நத்தையில் முத்து, நல்லதம்பி, கருந்தேழ் கண்ணாயிரம், இதோ எந்தன் தெய்வம், அருணோதயம், காவேரி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி, களத்தூர் கண்ணம்மா, காவல் தெய்வம், திருடாதே, வாழ வைத்த தெய்வம், கப்பலோட்டிய தமிழன், எங்கிருந்தோ வந்தாள்  போன்ற 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இடைக்காலத்தில் படங்கள் குறைந்திருந்த காலத்தில் இவருக்கு மறுவாழ்வளித்தவர் இயக்குநர் கே.பாக்கியராஜ். அவரது பெரும்பாலான படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

இவர் 30.10.1992 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது சிறப்புக்கும் ஆற்றலுக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-

ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குலதெய்வம் ராஜகோபால் ஒரு சமயம் அறந்தாங்கியில் தொடர்ந்து நாடகம் போட்டபோது தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்குப் பல மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. கண்டித்துக் கேட்டும் அவருக்கு பாக்கி வந்தபாடில்லை. ஒரு நாள் இரவோடு இரவாக அடுத்த ஊருக்கு ‘டேரா’ தூக்கிவிட்டார்கள். அடுத்த நாள் காலையில் வீட்டில் யாருமில்லாததைப் பார்த்த வீட்டுக்காரர் அதிர்ச்சியுற்று, விஷயத்தை அறிந்து அடுத்த ஊருக்கு ஓடினார். அவரைக் கண்டதும் அனைவரும் பயந்துவிட்டனர். அவரோ அமைதியாக ஏனய்யா! சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தீர்கள்?. தொலைஞ்சி போங்க. ஆனா சுவத்திலே பட்டையா நாமத்தைப் போட்டுட்டு விளக்கை ஏத்தி வச்சுட்டுப் போயிருக்கீங்களே! நான் என்ன செத்தாப் போயிட்டேன்!” என்று கேட்டார். அதைக் கேட்டு அங்கிருந்த மனோரமா திருதிருவென விழித்தார்.

அடுத்து……..

‘கலைமணி நாடகக் குழு திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில் நாடகம் போட ஒத்துக்கொண்டனர். ‘சர்வாதிகாரி’ நாடகத்தை ‘நீதியின் வெற்றி’ என்ற பெயரில் நடிக்க ஏற்பாடு நடந்தது. குலதெய்வம் ராஜகோபால் கோஷ்டி அங்கு வந்து இறங்கிய பிறகுதான் தெரிந்தது. இசைக்குழுவில் ஒரே ஒரு ஆர்மோனியக்காரர் மட்டும்தான் வந்திருந்தார். நடிகர்கள் ஒரு சிலர் தான் வந்திருந்தார்கள். சர்வாதிகாரி நாடகமோ போடமுடியாது. பார்த்தார் குலதெய்வம் ராஜகோபால். கூடியிருந்தவர்களோ கிருத்தவர்கள். உடனே நாடகத்தின் சில காட்சிகளைத் தொடுத்து கிருத்தவ நாடகமாகப் போட்டு பாராட்டும் பெற்று ஊர் திரும்பினார்.

மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்காக வழங்கியவரே சின்னக் கலைவாணர் குலதெய்வம் ராஜகோபால்.

12.8.1983 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து திரட்டப்பட்டது.

இவர் அறிமுகமான குலதெய்வம் படத்தின் காட்சிகள்

Kuladeivam

Rajagopal-Kuladeivam

Rajagopal-Kuladeivam-2 Rajagopal-Pandaribhai-Kuladeivam

Image

ImageImage

Image

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் சபாஷ் மீனா படத்தில்

ImageImage

“சித்தி” [1966] படத்தில் குலதெய்வம் ராஜகோபால் விஜயநிர்மலாவுடன்Kuladeivam Rajagopal - Chitthi 1966-1Kuladeivam Rajagopal - Chitthi 1966-2Kuladeivam Rajagopal - Vijayanirmala- Chitthi 1966-

ஏவி.எம்-மின் திலகம் படத்தில் குலதெவம் ராஜகோபால்KULADEIVAM-THILAGAM KULADEIVAM-THILAGAM-1

கப்பலோட்டிய தமிழன் (1959) படத்தில் குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam VR.R-Veerapandiya Kattabomman-1959-1

கப்பலோட்டிய தமிழன் (1959) படத்தில் குலதெய்வம் ராஜகோபால் வி.கே.ராமசாமியுடன்Kuladeivam VR.R-VKR-Veerapandiya Kattabomman-1959-

கப்பலோட்டிய தமிழன் (1959) படத்தில் தாம்பரம் லலிதாவுடன் குலதெய்வம் ராஜகோபால்

Thambaram Lalitha-Kuladeivam-Veerapandiya Kattabomman-1959-1 Thambaram Lalitha-Kuladeivam-Veerapandiya Kattabomman-1959-

‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் சி.எஸ்.பாண்டியன், குலதெய்வம் ராஜகோபால், வி.கே.ஆர்/ராமசாமி, டைப்பிஸ்ட் கோபு

CS.Pandian-Kuladeivam-VKR-Typist Gopu-Avar Enakke Sontham 1977-

‘சபாஷ் மாப்பிளே’ [1962] படத்தில் தனித்தும் எம்.ஜி.ஆருடனும் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam-Sabash Mappile 1962-Kuladeivam-Sabash Mappile 1962-1Kuladeivam-Sabash Mappile 1962-2

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் ‘சின்னக்கலைவாணர்’ குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Penmani Aval Kanmani 1988-Kuladeivam Rajagopal-Penmani Aval Kanmani 1988-1Kuladeivam Rajagopal-Penmani Aval Kanmani 1988-3Kuladeivam Rajagopal-Penmani Aval Kanmani 1988-

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் சீதாபாட்டியுடன் ‘சின்னக்கலைவாணர்’ குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Seetha Patti-Penmani Aval Kanmani 1988-2

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் விசுவுடன் ‘சின்னக்கலைவாணர்’ குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Visu-Penmani Aval Kanmani 1988-

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் குலதெய்வம் வி.ஆர். ராஜகோபால்  Kuladeivam - Kannil Theriyum Kathaikal 1980 -Kuladeivam - Kannil Theriyum Kathaikal 1980 -1

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் பேபி பத்மாவுடன் குலதெய்வம் வி.ஆர். ராஜகோபால்  

Kuladeivam - Baby Padma-Kannil Theriyum Kathaikal 1980 -

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் குலதெய்வம் வி.ஆர். ராஜகோபால் – செந்தாமரை,

Kuladeivam - Senthamarai-Kannil Theriyum Kathaikal 1980 -

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் செந்தாமரை,  ஏ.கே.வீராச்சாமி  AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -1AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -

“ராஜா ராணி” [1956] படத்தில் கலைவாணருடன் குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam Rajagopal-NSK-Raja Rani 1956-Kuladeivam Rajagopal-NSK-Raja Rani 1956-1Kuladeivam Rajagopal-NSK-Raja Rani 1956-2

“ராஜா ராணி” [1956] படத்தில் ரி.ஏ.மதுரத்துடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam Rajagopal-TA.Madhuram-Raja Rani 1956-

“ராஜா ராணி” [1956] படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,கலைவாணருடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam Rajagopal-NSK-SSR-Raja Rani 1956-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் பி.எஸ்.ஞானம், கே.சாரங்கபாணி

Kuladeivam VR.Rajagopal-Gomathiyin Kathalan 1955-Kuladeivam VR.Rajagopal-Gomathiyin Kathalan 1955-1PS.Gnanam-Kuladeivam-K.Sarangapani-Gomathiyin Kathalan 1955-

“ரங்கூன் ராதா” 1956 படத்தில் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam-Rangoon Radha 1956-2Kuladeivam-Rangoon Radha 1956-1Kuladeivam-Rangoon Radha 1956-

“நாலு வேலி நிலம்” 1959 படத்தில்  குலதெய்வம் ராஜகோபாலுடன் மைனாவதிKuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-Kuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-2Kuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-1Kuladeivam Rajagopal-Mainavathi-Naalu Veli Nilam 1959-Mainavathi-Kuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-Mainavathi-Kuladeivam Rajagopal-Naalu Veli Nilam 1959-152

“வாய்ச் சொல்லில் வீரனடி” 1984 படத்தில்   குலதெய்வம் ராஜகோபால்kuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-4akuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-4kuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-3kuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-2kuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-1kuladeivam-rajagopal-vaai-sollil-veeranadi-1984-558

‘மாடப்புறா’ படத்தில் சரோஜாதேவியுடன் குலதெய்வம் ராஜகோபால்kuladeivam-v-r-rajagopal-madapura-1962kuladeivam-v-r-rajagopal-madapura-1962-2kuladeivam-v-r-rajagopal-madapura-1962-1kuladeivam-v-r-rajagopal-sarojadevi-madapura-1962kuladeivam-v-r-rajagopal-sarojadevi-madapura-1962-163

“அன்னை அபிராமி” 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் செந்தாமரை

kuladeivam-annai-abirami-1972-1kuladeivam-annai-abirami-1972kuladeivam-senthamarai-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.வீரப்பன்a-veerappan-kuladeivam-annai-abirami-1972-1

“அன்னை அபிராமி” 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் கே.எம்.நம்பிராஜன், ஏ.வீரப்பன்

a-veerappan-km-nambirajan-kuladeivam-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில்  குலதெய்வம் ராஜகோபாலுடன் செந்தாமரை, கே.எம்.நம்பிராஜன், ஏ.வீரப்பன்a-veerappan-km-nambirajan-kuladeivam-senthamarai-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் நாஞ்சில் நளினி, கே.ஆர்.விஜயாkuladeivam-nanjil-nalini-kr-vijaya-annai-abirami-197270

“பயணம்” 1976 படத்தில் நாகேஷுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeviam Rajagopal-Payanam 1976-1Kuladeviam Rajagopal-Payanam 1976-Kuladeviam Rajagopal-Payanam 1976-2Kuladeviam Rajagopal-Nagesh-Payanam 1976-74

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் கே.சாய்ராம்

Kuladeivam VR.Rajagopal-K.Sairam-Ellorum Vaazhavendum 1962-K.Sairam-Kuladeivam VR.Rajagopal-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில்  குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் கே.வி.சாந்தி

Kuladeivam VR.Rajagopal-KV.Shanthi-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில்  குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் புளிமூட்டை ராமசாமி, கே.வி.சாந்தி

Kuladeivam VR.Rajagopal-Pulimoottai-Ellorum Vaazhavendum 1962-Kuladeivam VR.Rajagopal-Pulimoottai-Ellorum Vaazhavendum 1962-1

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில்  குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் கே.வி.சாந்தி, கே.சாய்ராம்

K.Sairam-KV.Shanthi-Kuladeivam VR.Rajagopal-Ellorum Vaazhavendum 1962-80

”குறவஞ்சி” 1960 படத்தில் சிவாஜிகணேசனுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam Rajagopal-Kuravanji 1960-2Kuladeivam Rajagopal-Kuravanji 1960-1Kuladeivam Rajagopal-Kuravanji 1960-Kuladeivam Rajagopal-Sivaji Ganesan-Kuravanji 1960-Kuladeivam Rajagopal-Sivaji Ganesan-Kuravanji 1960-1

”குறவஞ்சி” 1960 படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam Rajagopal-C.K.Saraswathi-Kuravanji 1960-86

”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-Vazha Vaitha Deivam 1959-1Kuladeivam V.R.Rajagopal-Vazha Vaitha Deivam 1959-Kuladeivam V.R.Rajagopal-S.V.Subbaiah-Vazha Vaitha Deivam 1959-

”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் ஜெமினி கணேசனுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-Gemini Ganesan-Vazha Vaitha Deivam 1959-

”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் ஜி.சகுந்தலா, எஸ்.வி.சுப்பையாவுடன் குலதெய்வம் ராஜகோபால்

Kuladeivam V.R.Rajagopal-G.Sakunthala-S.V.Subbaiah-Vazha Vaitha Deivam 1959-91

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் மனோரமாவுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-Yaanaippaagan 1960-1Kuladeivam V.R.Rajagopal-Yaanaippaagan 1960-Kuladeivam V.R.Rajagopal-Manorama-Yaanaippaagan 1960-2Kuladeivam V.R.Rajagopal-Manorama-Yaanaippaagan 1960-1Kuladeivam V.R.Rajagopal-Manorama-Yaanaippaagan 1960-

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் உதய்குமாருடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-Udaykumar-Yaanaippaagan 1960-97

”எங்கள் செல்வி” 1960 படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-C.K.Saraswathi-Engal Selvi 1960-

”எங்கள் செல்வி” 1960 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் குலதெய்வம் ராஜகோபால்Kuladeivam V.R.Rajagopal-TS.Balaiah-Engal Selvi 1960-99

”திலகம்” 1960 படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்Kuladeivam VR.Rajagopal-Thilakam 1960-Kuladeivam VR.Rajagopal-Sreeranjani-Thilakam 1960-Kuladeivam VR.Rajagopal-Sreeranjani-Thambaram Lalitha-Thilakam 1960-102

‘பாலைவனப் பறவைகள்’ 1990 படத்தில் கே.கண்ணனுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Palaivana Paravaigal 1990-Kuladeivam Rajagopal-K.Kannan-Palaivana Paravaigal 1990-

‘பாலைவனப் பறவைகள்’ 1990 படத்தில் சம்பத்குமாருடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Sampathkumar-Palaivana Paravaigal 1990-

‘பாலைவனப் பறவைகள்’ 1990 படத்தில் ஆர்.வாணி, செந்திலுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Senthil-Palaivana Paravaigal 1990-R.Vani-Kuladeivam Rajagopal-Senthil-Palaivana Paravaigal 1990-107

”எங்கள் குடும்பம் பெரிசு” 1958 படத்தில் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் கே.டி.சந்தானம்

Kuladeivam-Engal Kudumbam Perisu 1958-KD.Santhanam-Kuladeivam-Engal Kudumbam Perisu 1958-Kuladeivam-KD.Santhanam-Engal Kudumbam Perisu 1958-110

’பிரார்த்தனை’ 1973 படத்தில் ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்Kuladeivam Rajagopal -Prarthanai 1973- (1)Kuladeivam Rajagopal -Prarthanai 1973- (4)Kuladeivam Rajagopal -Prarthanai 1973-Kuladeivam Rajagopal -Prarthanai 1973- (6)Kuladeivam Rajagopal-Sreekanth -Prarthanai 1973- (1)Kuladeivam Rajagopal-V.Nirmala-Sreekanth -Prarthanai 1973- (3)116

’வாயில்லா பூச்சி’ 1976 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Thengai-Vaayilla Poochi 1976-01Kuladeivam Rajagopal-Thengai-Vaayilla Poochi 1976-

’வாயில்லா பூச்சி’ 1976 படத்தில் திடீர் கன்னையாவுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்

Kuladeivam Rajagopal-Thideer Kannaiah-Vaayilla Poochi 1976-119

15 comments on “Kuladeivam V.R.Rajagopal

  1. திரு சகாதேவன் விஜயகுமார் சார்
    இன்று தமிழ் ஹிந்து நாளிதழ்இல் இவரை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள் .அதில் அவர் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்து அதில் பணம் முழுவதையும் இழந்தார் என்று சொல்லி இருந்தார்கள் .இவர் தயாரித்த திரைப்படம் பெயர் என்ன என்று தெரிந்தால் தகவல் அறிவிக்கவும்

    • இவர் திரைப்படம் தயாரித்து அதில் பணம் முழுவதையும் இழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது நானும் அறிந்திராதது. குலதெய்வம் சீட்டு விளையாட்டிலும் மதுவிலும் தான் சம்பாதித்தை இழந்தார் என்றே நான் அறிந்துள்ளேன். சம்பத்-செல்வம் என்ற இரு மகன்கள். இருவரும் சேர்ந்து ஒரு படத்திற்கும் இசையமைத்தனர். வளர்ந்து வருகின்ற வேளையில் சம்பத் வாகன விபத்தொன்றில் மரணமடைந்தார். இவ்விருவரைப்பற்றியும் எந்தவொரு தகவலும் தி இந்து-வில் இல்லை.

  2. 1993 ல் வெளிவந்த நான் பேச நினப்பதெல்லாம் என்ற படத்தில், இசையமைப்பாளர் வேடத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

    • தகவலுக்கு நன்றி. மறு பிரவேசம் செய்து முன்னேறி வருகையில் காலமாகிவிட்டார்.

  3. He joined Congress and through VilluPattu he covered almost entire Tamilnadu.Due to his poliitics and unwanted habbits and also of his loose talks he was ignored.

  4. வெளிவந்திராத தகவல். பல நடிகர்களுக்கு வாழ்வைப் பாழாக்கியது இந்த அரசியலில் சேர்ந்ததனால்தான். அதில் இவரும் தப்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போது தொற்று வியாதி போன்று இது வந்து சேர்ந்துவிடும். கேரளாவில் கடைசி காலத்தில் அரசியலில் அதுவும் காங்கிரஸில் சேர்ந்து ஓய்வில்லாமல் பிரசாரமெல்லாம் செய்ததனால் தன்னைக் கவனிக்க முடியாது போய் ஓஹோவென்றிருந்த நேரத்தில் பிரேம்நசீர் அற்ப வயதில் மரணத்தைத் தழுவினார். இதுபோல் பலரும். தகவலுக்கு மிக்க நன்றி.

  5. There was rumour(may be not real) he taken Kerala Auyurveda THANGA PASPAM which affected Premnazir physical health due to that age.

  6. I think ‘Mamiyar Veedu’ was the last film he acted. There was a tribute to him in the title cards. Saravanan and Selva were the heroes in this movie.

    He also acted in “Villu Pattukkaran” and “Karaiyellam Shenbagapoo”.

  7. RESPECTED
    THE GREATEST FANS OF , MY FATHER , KULADHEIVAM V .R .RAJAGOPAL AYYA .
    THANKS A LOT , FOR YOUR INFORMATION , ABOUT LEGEND ARTIST .
    THANKS AGAIN & AGAIN , FOR RARE PHOTOS & NEWS ABOUT , ONE MAN SHOW –
    STAGE & CINEMA , HERO , COMEDIAN ,CHARACTER MAESTRO .

    FOR OTHER CONTACTS :
    ISAIMAYDHAI , ISAIPPURATCHI , ISAIVAANAR SAMBATHSELVAM V. R .
    INDIAN TAMIL CINEMA MUSIC DIRECTOR . { 1986 – 2017 .}
    CELL : +917358461720.//
    Email : isaivaanarsambathselvamvr1958@gmail.com

  8. மிகப் பெரிய நகைச்சுவைக் கலைஞரின் வாரிசு, சிறந்த இசையமைப்பாளராகிய உங்களின் பாராட்டுக்கள் எனது வலைப்பூவிற்குக் கிடைத்திருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு ஒரு ஊட்டச்சத்துப் போல. நான் உங்கள் தந்தையின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவன். அவரது உடல் மொழியும், சொல்லாளுமையும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அவரது ஒவ்வொரு படத்தையும் அணு அணுவாக ரசிப்பவன். என்றென்றும் என் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் அந்நாளையக் கலைஞர்களுள் உங்கள் தந்தையும் ஒருவர் என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். மிக்க நன்றி,நன்றி,, நன்றி.

  9. நகைச்சுவையில் புது வடிவம் கண்டவர் சின்ன கலைவாணர்
    குலதெய்வம் ராஜகோபால்!

    (கரிகாலன்)

    தமிழ்ப்படவுலகில் பவனி வந்த எத்தனையோ நகைச்சுவை நடிகர்களில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கடைக் கண் பார்வையில் அவரின் அபிமானத்தை ஈர்த்து, பின்னாளில் சின்னக் கலைவாணர் என்ற சிறப்பினால் சிகரம் கண்டவர் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால் ஆவார்.

    நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணசித்திரக் கலைஞராகவும் தன்னை உயர்த்திக் கொண்ட ராஜகோபால், வில்லுப்பாட்டுத் துறையிலும் விவேகம் கண்டு ரசிகர்களை மலைக்கச் செய்து மகிழ்வித்தவர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவரான ராஜகோபால், சிறு வயது முதலே தெருக்கூத்துகளில் நடிக்கத் தொடங்கி, தனது 12வது வயதிலேயே பாய்ஸ் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார்.

    அங்கு பல்வேறு பாத்திரங்களில் நடித்து பிரபலமாகி, தனது 16வது வயதில் மதுரையில் இயங்கி வந்த கலைமணி நாடக நிறுவனத்தில் இணைந்தார்.இந்நிலையில் ஒருமுறை சேலத்திற்கு சென்றிருந்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தையும் பெற்ற ராஜகோபால், பின்னாளில் அவரின் நாடக நிறுவனத்தில் சேர்ந்து, ஏராளமான வேடங்களை ஏற்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.இதனால் கலைவாணரின் நன்மதிப்பைப் பெற்ற கலைஞராக ராஜகோபால் பிரபலமானார்.

    அப்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ‘புதுவாழ்வு’ என்ற படத்தில் நடிப்பதற்கு கலைவாணர் அழைக்கப்படவே, ராஜகோபாலையும் அப்படத்தில் முதன் முதலாக நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் ஏற்படுத்தி தந்தார்.இந்தப் படம் நீண்ட காலமாக வளர்ந்து கொண்டிருந்ததால் 1954இல் எம்.கே.ராதா நடிப்பில் கே.வேம்பு இயக்கிய, ஜெய்சக்தி பிக்சர்ஸ் ‘நல்ல காலம்’ என்ற படத்தில் கலைவாணருடன் இணைந்து ராஜகோபால் அடுத்து நடித்தார்.தொடர்ந்து 1955இல் கலைவாணரின் பரிந்துரையில், அவருடன் பத்மினி பிக்சர்ஸ் ‘முதல் தேதி’ படத்திலும், கிருஷ்ணா பிக்சர்ஸ் ‘காவேரி’ படத்திலும் ராஜகோபால் தோன்றினார்.பின்னர் 1956இல் ‘குலதெய்வம்’ படத்தில் 4 கதாநாயகர்களில் ஒருவராக ராஜகோபால் மைனாவதியுடன் இணைந்து நடித்தார். இப்படத்தின் வெற்றியால் குலதெய்வம் என்ற சிறப்புடன் ராஜகோபால் பெயர் பெற்றார்.இந்த ஆண்டில் ‘ரங்கோன் ராதா’ படத்திலும் இவர் இடம் பெற்றார்.

    தொடர்ந்து பலப் படங்களில் நடித்துக் கொண்டே சொந்தமாக நாடக நிறுவனத்தையும் நடத்தி சிறந்த வகையில் ராஜகோபால் கலைப்பணி ஆற்றினார்.1958இல் ‘சபாஷ் மீனா’, ‘செங்கோட்டை சிங்கம்’, ‘தேடி வந்த செல்வம்’, ‘நான் வளர்த்த தங்கை’ போன்றப் படங்களிலும் 1959இல் ‘வாழ வைத்த தெய்வம்’, ‘எங்கள் குலதேவி’, ‘அபலை அஞ்சுகம்’, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘கல்யாணிக்கு கல்யாணம்’, ‘தங்கப் பதுமை’, ‘தலை கொடுத்தான் தம்பி’, ‘தெய்வபலம்’, ‘நாலு வேலி நிலம்’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘ராஜ மலையசிம்மன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற பலப் படங்களில் ராஜகோபால் தோன்றினார்.தேடி வந்த செல்வம் படத்தில் ‘பிளாட்பாரம் மட்டமென்று எண்ணாதீங்க’ என்ற’ பாடலும், நாலு வேலி நிலம் படத்தில் ‘நடை போடு வீர நடை போடு’ என்ற பாடலும் எஸ்.சி.கிருஷ்ணன் பாட இவருக்காக ஒலிக்கும் பாடல்களாக இடம் பெற்றன.1961ஆம் ஆண்டில் மதுரை ரசிகர்கள் இவருக்கு ‘சின்ன கலைவாணர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.

    1960இல் ‘களத்தூர் கண்ணம்மா’, ‘குழந்தைகள் கண்ட குடியரசு’, ‘குறவஞ்சி’, ‘மன்னாதி மன்னன்’, ‘திலகம்’, ‘மகாலஷ்மி’
    ‘யானைப் பாகன்’, ‘ராஜமகுடம்’, ‘உத்தமி பெற்ற ரத்தினம்’ உள்ளிட்ட பலப் படங்களிலும் தொடர்ந்து ‘கொங்கு நாட்டுத் தங்கம்’,
    ‘சபாஷ் மாப்பிள்ளே’, ‘மாடப்புறா’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘சித்தி’, ‘தாயே உனக்காக’, ‘அருணோதயம்’, ‘எங்கிருந்தோ வந்தாள்’,
    ‘இதோ எந்தன் தெய்வம்’, ‘எல்லைக்கோடு’, ‘நத்தையில் முத்து’ போன்ற ஏராளமானப் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திரப் பாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டி ராஜகோபால் அற்புதமாக நடித்தார்.

    நல்ல பக்திமானாகவும் விளங்கிய ராஜகோபால் கலைவாணரைப் போன்று சிறந்த வில்லுப்பாட்டு கலைஞராகவும் புகழ் பெற்றார்.
    ‘ஐயப்பன் சரித்திரம்’, ‘முருகன் பெருமை’, ‘ஐயனார் கதை’, ‘நல்லத் தங்காள்’, ‘ஆறு அண்ணன்மார்’, ‘அருக்காணி தங்கை’ போன்ற
    நாடகங்களை சுவாரஸ்யமான முறையில் வில்லுப்பாட்டு இசையில் இவர் தமிழகமெங்கும் விவரித்து நடத்திய நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிட்டியது.தனது ஆசான் கலைவாணருக்கு நன்றி பாராட்டும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாற்றையும் வில்லுப்பாட்டாக இசைத்து இவர் நடத்தி வந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு பெருகியது.

    இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் திரைப்படங்களில் நடித்தும், இவர் சேகரித்த பணத்தை யாவும் சொந்தப் படம் எடுக்கும்
    முயற்சியில் செலவழித்து பெரும் இழப்பை எதிர்கொண்டார். 1970களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் ‘அவர் எனக்கே சொந்தம்’,‘ஆரத்தி எடுங்கடி’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘கரையை தொடாத அலைகள்’, ‘வில்லுப்பாட்டுக்காரன்’ போன்ற சிலப் படங்களில் நடித்த பின்னர், திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்த இவருக்கு, நடிகர் பாக்கியராஜ் ‘எங்க சின்ன ராசா’, ‘பவுணு பவுணுதான்’, ‘ஆராரோ ஆரிரரோ’ போன்ற தனது படங்களின் வாயிலாக வாய்ப்புகள் வழங்கி மீண்டும் புத்துயிர் பெறச் செய்தார்.

    ஏறத்தாழ 200 படங்களில் பலதரப்பட்ட பாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி புகழ்பெற்ற சின்ன கலைவாணர் ராஜகோபால், ஆனந்த், ஆனந்த்பாபு, மோனிகா, விவேக் முதலியோர் நடித்திருந்த ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக ஆகக் கடைசியாக நடித்திருந்தார்.1992ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ஆம் நாள் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ராஜகோபாலின் இந்த கடைசிப் படம் 1993ஆம் ஆண்டில் வெளி வந்தது.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கடைசிச் சீடன் என்று தன்னை துணிச்சலாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட ராஜகோபால் உண்மையில் தமிழ்த் திரையுலகிற்கு வாய்த்த சிறந்ததொரு நகைச்சுவைக் கலைஞன் என்று புகழ்வதில் எவ்வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை.

    (நிறைவு)

    • அற்புதம். அருமையான பதிவு. சின்னக் கலைவாணர் குலதெய்வம் ராஜகோபாலின் மகன்கூட இவ்வலைப்பூவைப் பாராட்டியிருந்தார்.

  10. குலதெய்வம் ராஜகோபால் அவர்கள் நடித்த பாடல் காட்சி எந்த படத்தில் வருகிறது. பாடல் வரி அய்யஞ்சி ஆண்டு ஆட்சி யார்யாரோ ஆண்டாச்சி இந்த அரிசன முன்னேற்றம் என்னாச்சி இந்த பாடல் வரிகள் எந்த படம்.தயவுசெய்து கூறமுடியுமா?

Leave a comment