Nellai Siva [Comedy & Character Actor]

நெல்லை சிவா [நகைச்சுவை நடிகர்]

தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசி, நகைச்சுவைக் காட்சிகளைக் கலகலக்க வைப்பதில் வல்லவர். நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி அருகிலுள்ள வேப்பிலாங்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் படம் ‘ஆண் பாவம்’.

கே.பாக்யராஜ் இயக்கத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் சில தொடர்களில் பங்கெடுத்துள்ளார். கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ படத்திலும் நடித்துள்ள இவர் சுமார் 510 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற மன்சூர் அலி கான் தயாரித்த படத்தில் இவர் சிரேஷ்ட நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

சிந்துபாத் [1995], அன்பே சிவம், சாமி [2003, ஒரு நாள் ஒரு கனவு [2005, கிரீடம் [2007], அறை எண் 105-ல் கடவுள் [2008], வட்டாரம், உன்னைத்தேடி [1999], கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி ஜில்லா [2013], அஞ்சல் துறை [2013], ஐவர் கூடம் [2015], விந்தை [2015], ஆரம்பமே அட்டகாசம் [2017], சாய்ந்தாடு சாய்ந்தாடு [2018]

’அறை எண் 305-இல் கடவுள்’ 2008 படத்தில் சந்தானம், கஞ்சா கருப்புடன் நெல்லை சிவா

Nellai Siva- Santhanam-Ganja Karuppu-Arai En 305-il Kadavul 2008-

’சிந்துபாத்’ 1995 படத்தில் மன்சூர் அலிகான், ராஜன் பி.தேவுடன் நெல்லை சிவா Nellai Siva-Rajan P.Dev-Mansoor Ali Khan-Sindu Bath 1995-

’வட்டாரம்’ படத்தில் வையாபுரி, ரமேஷ் கன்னாவுடன் நெல்லை சிவா

Nellai Siva-Ramesh Kanna-Vaiyapuri-Vattaram-

’உன்னைத் தேடி’ 1999 படத்தில் நெல்லை சிவாவுடன் விவேக்Nellai Siva-Vivek-Unnai Thedi 1999-

11 comments on “Nellai Siva [Comedy & Character Actor]

  1. கிரி படத்தில் இவர் நடிப்பு சிரிப்பை வரவழைக்கும்…. காலங்காத்தால ….இவர் வடிவேலுவிடம் தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யும் அந்த இடம்…எலே…..நீ உன் அக்காவை வைச்சுத்தான் இந்த பேக்கரிய வாங்கினியாமே….நிப்பான் என்று கேட்கும் அந்த இடம்..

  2. சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….வாழ்க நீடுழி…… வாழ்க வளமுடன்…

  3. மலையாள நடிகர் சத்தார் மரணம்

    கொச்சி:மலையாள திரைப்படங்களில், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சத்தார், 67. இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட, 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    • தகவலுக்கு நன்றி திரு.சேதுராமன். பதிவிடப்பட்டது.

Leave a comment