Manochithra

மனோசித்ரா

தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு என்றென்றும் மறக்க முடியாத வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிக மேதை T.S.பாலையா. அவரது மகள் தான் இந்த மனோ சித்ரா. இவரது தாயார் பெயர் மல்லிகா. இவர் அறிமுகமான முதல் படம் “மாதுளை முத்துக்கள்”. இவரை அறிமுகப்படுத்தியவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான P.S.வீரப்பா. இப்படத்தில் பாராட்டுப்பெறக்கூடிய குடும்பப்பாங்கான கதாபாத்திரம் இவருக்குக் கிடைத்தது. நடிப்பும் பாராட்டைப் பெற்றது. எனினும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். கலைக்குடும்பத்தைச் சார்ந்த மனோசித்ராவின் சித்தி தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா.

தமிழைத் தொடர்ந்து மலையாளத்தில் 1983-இல் “மழ நிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ’ஒரு பைங்கிளிக் கதா’, “ஈ வழி மாத்ரம்”, ”திமிங்கிலம்”, “ஸ்வந்தம் சாரிகா”, ”உமா நிலையம்”, ”குருஜி ஒரு வாக்கு” போன்ற பல படங்களிலும், தெலுங்கில் “ஸ்ரீ வாரி ஷோபனம்” [1985], ”டெரர்” [1985], மா வாரி கோலா [1986] போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

போதிய படங்கள் அமையாததால் இவர் 1989-ஆண்டில் தனது பெயரை கிருத்திகா என்று மாற்றம் செய்து ’அண்ணனுக்கு ஜே’ என்ற தமிழ்ப் படத்தில் மீள் அறிமுகமானார். ‘’ஜெயம்’’ [2002] என்ற படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்திருக்கிறார். எனினும் தொடர்ந்து வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தமிழில் 2002-ஆம் ஆண்டில் வெளிவந்த “விவரமான ஆளு” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

11.1.1982 நாளிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

Manochithra with Kundara Johnny in Oru Painkilikatha 1984 Malayalam MovieManochithra- Oru Painkilikatha 1984-01Manochithra- Oru Painkilikatha 1984-.jpgManochithra- Kundara Johnny-Oru Painkilikatha 1984-

Manochithra , Kaviyoor Ponnamma with Kundara Johnny in Oru Painkilikatha 1984 Malayalam MovieManochithra- Kundara Johnny-Kaviyoor Ponnamma-Oru Painkilikatha 1984-

’அண்ணனுக்கு ஜே’ 1989 படத்தில் மனோசித்ரா கிருத்திகா என்ற பெயரில்Krithika [Introduce] [Manochithra] -Annanukku Jai 1989-

‘அசத்தல்’ 2001 படத்தில் மனோசித்ராManochithra-Asaththal 2001-

‘ஜெயம்’ 2002 படத்தில் ஜெயம் ரவியுடன் கிருத்திகாMano Chitra-Jayam 2002-01Mano Chitra-Jayam 2002-Mano Chitra-Jayam-Jayam 2002-

‘ஜெயம்’ 2002 படத்தில் செந்திலுடன் கிருத்திகாMano Chitra-Senthil-Jayam 2002-01Mano Chitra-Senthil-Jayam 2002-

3 comments on “Manochithra

  1. She acted in only 4 tamil movies. In 80s, film expected heroine to be more glam looking face and dancer (but exceptions are shoba, archana and suhasini, radhika are not good dancers).

    As like others, she tried her luck by changing her name as Kruthika and few dance movements in Gangai amaran’s Annanukku Jay – 1989 (Arjun) .

Leave a comment