Manochithra

மனோசித்ரா

தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு என்றென்றும் மறக்க முடியாத வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிக மேதை T.S.பாலையா. அவரது மகள் தான் இந்த மனோ சித்ரா. இவரது தாயார் பெயர் மல்லிகா. இவர் அறிமுகமான முதல் படம் “மாதுளை முத்துக்கள்”. இவரை அறிமுகப்படுத்தியவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான P.S.வீரப்பா. இப்படத்தில் பாராட்டுப்பெறக்கூடிய குடும்பப்பாங்கான கதாபாத்திரம் இவருக்குக் கிடைத்தது. நடிப்பும் பாராட்டைப் பெற்றது. எனினும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. Continue reading