Bindhu Ghosh

பிந்து கோஷ் [திரைப்பட நடிகை, டான்ஸ் மாஸ்டர், நாடக நடிகை]

தான் நடித்த முதல் படத்தின் மூலமே மிகப் பிரபலமாகிவிட்டவர் பிந்து கோஷ். கோழி கூவுது படத்தில் இவர் ஏற்றிருந்த பாத்திரம் குறிப்பிடும்படியானது. இவரது இயற்பெயர் விமலா. “களத்தூர் கண்ணம்மா”, தான் இவரது முதல் படம்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதில் கமலஹாசனோடு சேர்ந்து ஒரு குரூப் டான்ஸ் ஆடியிருக்கிறார் இவர்.

சர்வர் சுந்தரம் படத்தில் நடனமாட அழைத்து இவர் போனபோது இவர் ரொம்ப ஒல்லியாக (!) இருந்துள்ளார். தங்கப்பன் மாஸ்டர் பார்த்துவிட்டு, “அம்மா இவ்வளவு ஒல்லியா இருக்கியே, உனக்கு டான்ஸ் வராது. உடம்பை தேற்றி நல்லபடியாக டான்ஸ் கற்றுக்கொண்டு வா ! “ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

பிறகுதான் இவர், டான்ஸ் மாஸ்டர் ஹீராலாலிடம் சேர்ந்து, நடனங்களைக் கற்றுக்கொண்டார். அவர் இவரை உற்சாகப்படுத்தி ரிகர்சல் கொடுத்திருக்கிறார். ஹீராலாலின் மைத்துனர் சீனு மாஸ்டர் இவருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஹீராலாலின் படங்களில் தவறாது இடம்பெற்றார். நான்கைந்து இந்திப் படங்களிலும் ஹீராலால் மூலம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

பிறகு ஒரு நாள் ‘எங்கமாமா’ படத்தில் நடனமாடுவதற்காக அந்தப் படத்தின் டான்ஸ்மாஸ்டர் தங்கப்பன் மாஸ்டர் மீண்டும் அழைத்தபோது இவர் அவர்முன் நின்றபோது அவருக்கு அடையாளம் தெரியவில்லை. இவராகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘எங்க மாமா’ வில் ‘எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்’ என்ற பாடலுக்கு இவர் குரூப் டான்ஸ் ஆடினார். அன்றிலிருந்து தங்கப்பன் மாஸ்டரின் எல்லா படங்களிலுமே இவர் குரூப் டான்ஸில் இடம்பிடித்தார்.

நடிகை நளினியின் தந்தை வைக்கம் மூர்த்தியிடம் நடன உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். அதன் மூலம் மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் கம்போஸிங் செய்திருக்கிறார்.

’கண்ணே, பூர்வ ஜென்மம்’ உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்துள்ளார். ‘உருவங்கள் மாறலாம்’, ‘தலைமகன்’, ‘டௌரி கல்யாணம்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ , ‘சூரகோட்டை சிங்கக்குட்டி’, ‘டெலக்ஸ் பாண்டியன்’, ‘வளர்த்த கடா’, ‘ஏதோ மோகம்’, ‘ஓசை’ , ‘கொம்பேறி மூக்கன்’ , ‘நீதியின் நிழல்’  வேங்கையன் , ‘நவக்கிரஹ நாயகி’, “தாயம் ஒண்ணு” உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1.7.1983 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

’ஓசை’ [1984] படத்தில் மோகனுடன் பிந்து கோஷ்

Bindhugoash-Osai 1984- Bindhugoash-Mohan-Osai 1984- Bindhugoash-Mohan-Osai 1984-1

‘சொல்லத் துடிக்குது மனசு’ [1986] படத்தில் பிந்து கோஷ்Bindu Goush-Solla Thudikuthu Manasu 1986-Bindu Goush-Solla Thudikuthu Manasu 1986-1

‘சொல்லத் துடிக்குது மனசு’ [1986] படத்தில் குள்ளமணி – பிந்து கோஷ்Kullamani=Bindu Goush-Solla Thudikuthu Manasu 1986-

“தேன் கூடு” [1984] படத்தில் ராஜலட்சுமியுடன் பிந்துகோஷ்Bhindhu Ghosh-Rajalakshmi-Thenkoodu 1984-

“தேன் கூடு” [1984] படத்தில் இடமிருந்து வலம் பொன்னி, ராஜலட்சுமி, கே.ஆர்.விஜயா, பிந்துகோஷ்

Bhindhu Ghosh-Rajalakshmi-KR.Vijaya-Thenkoodu 1984-

“தேன் கூடு” [1984] படத்தில் இடமிருந்து வலம் பிந்துகோஷ், கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ்

Bhindhu Ghosh-Nagesh-Major-KR.Vijaya-Thenkoodu 1984-

“தேன் கூடு” [1984] படத்தில் இடமிருந்து வலம் பிந்துகோஷ், கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சுமித்ரா, எம்.ஆர்.ராதாரவிBhindhu Ghosh-Nagesh-Major-KR.Vijaya-Sumithra-MR.Radharavi-Thenkoodu 1984-

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் பாண்டியன், வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் பிந்துகோஷ் Bindhugoash-Pandian-Navagraha Nayagi 1985-Bindhugoash-Venniraadai Moorthy-Navagraha Nayagi 1985-Bindhugoash-Venniraadai Moorthy-Pandian-Navagraha Nayagi 1985-1Bindhugoash-Venniraadai Moorthy-Pandian-Navagraha Nayagi 1985-

மங்கம்மா சபதம் [1985] படத்தில் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தியுடன் பிந்துகோஷ் Bindu Goush-Nagesh Krishnamurthi-Mangamma Sapatham 1985-1Bindu Goush-Nagesh Krishnamurthi-Mangamma Sapatham 1985-

மங்கம்மா சபதம் [1985] படத்தில் மனோரமாவுடன் பிந்துகோஷ் Bindu Goush-Manorama-Mangamma Sapatham 1985-1Bindu Goush-Manorama-Mangamma Sapatham 1985-

“குடும்பம் ஒரு கோயில்’’ 1987 படத்தில் வி.கே.ராமசாமியுடன் பிந்துகோஷ்Bindu Goash-Kudumbam Oru Koyil 1987-Bindu Goash-Kudumbam Oru Koyil 1987-1Bindu Goash-VK.Ramasamy-Kudumbam Oru Koyil 1987-

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் லூஸ் மோகனுடன் பிந்து கோஷ்Bindhu Goash-Engal Thaikulame Varuga 1986-Bindhu Goash-Loose Mohan-Engal Thaikulame Varuga 1986-Bindhu Goash-Loose Mohan-Engal Thaikulame Varuga 1986-1

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் ஜீவிதா, லூஸ் மோகனுடன் பிந்து கோஷ்

Bindhu Goash-Loose Mohan-Jeevitha-Engal Thaikulame Varuga 1986-Bindhu Goash-Loose Mohan-Jeevitha-Engal Thaikulame Varuga 1986-1

”உருவங்கள் மாறலாம்” 1983 படத்தில் கமலஹாசனுடன் பிந்து கோஷ்Bindhu Goash-Uruvangal Maralam 1983-Bindhu Goash-Kamal-Uruvangal Maralam 1983-

”உருவங்கள் மாறலாம்” 1983 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் பிந்து கோஷ்

Bindhu Goash-Venniradai Moorthy-Uruvangal Maralam 1983-

”உருவங்கள் மாறலாம்” 1983 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன்Bindhu Goash-YGM-Uruvangal Maralam 1983-Bindhu Goash-YGM-Uruvangal Maralam 1983-1

”தாயம் ஒண்ணு” 1988 படத்தில் அர்ஜுனுடன் பிந்துகோஷ்Bindhu Ghosh-Thayam Onnu 1989-Bindhu Ghosh-Arjun-Thayam Onnu 1989-

’வீட்டுக்காரி’ 1985 படத்தில் லூஸ் மோகனுடன் பிந்து கோஷ்

Bindhu Goash-Veettukkari 1985-.jpgBindhu Goash-Loose Mohan-Veettukkari 1985-

’வீட்டுக்காரி’ 1985 படத்தில் காந்திமதியுடன் பிந்து கோஷ்Bindhu Goash-Kanthimathi-Veettukkari 1985-

’வீட்டுக்காரி’ 1985 படத்தில் செந்தில், லூஸ் மோகனுடன் பிந்து கோஷ்Bindhu Goash-Senthil-Veettukkari 1985-Bindhu Goash-Senthil-Loose Mohan-Veettukkari 1985-

’வளர்த்த கடா’ 1983 படத்தில் லூஸ் மோகனுடன் பிந்துகோஷ்Bindhu Goash-Valartha Kada 1983-02Bindhu Goash-Valartha Kada 1983-Bindhu Goash-Valartha Kada 1983-01Bindhu Goash-Loose Mohan-Valartha Kada 1983-Bindhu Goash-Loose Mohan-Valartha Kada 1983-01

’லூஸ் லூஸ் அரப்பிரி லூஸ்’ 1988 படத்தில் பிந்துகோஸுடன் குதிரவட்டம் பப்பு, ஜகதி ஸ்ரீகுமார், மாள அரவிந்தன் 6 படங்கள்

11 comments on “Bindhu Ghosh

  1. கோழிகூவுது முன் விமலா என்ற பெயரில் நடனம் மற்றும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்

  2. ஆமாம் சிவசுப்பிரமணியம் அவர்களே! இப்பெயர் வர காரணமானவர் கங்கை அமரன். படப்பிடிப்பின் போது ரசிகர்கள் இவரை யாரென்று கங்கை அமரனிடம் கேட்க இவர் இந்தி நடிகை; பெயர் பிந்துகோஷ் என்று சொல்லியிருக்கிறார். அதுவே பின்னர் நிரந்தரமாகிவிட்டது.

  3. Kozhi Koovuthu – Padathirkku piraguthan ivar popular aanaar, Bindhukosh endra peyaril….. Atharkku munname ivarudaiya chinna vayathi earaalamana padangalil group dancer aaga velai seithullar.

    eg: -Mullum Malarum, Adai Vida Ragasiyam

  4. காரில் போகும் போது இந்த பாடலை கேட்டு பாருங்கள் அற்புதமாக இருக்கும்… இந்த பாடல் அந்த படத்தில் பிரபலமான மற்றபாடல் போல் இந்த பாடல் பிரபலமாகவில்லை… இருந்தாலும் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. ஒருஷாட்டில் பிந்து கோஷ் வருவார்…அந்த காலத்து பார்ட்டி எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.. அந்த காலத்து பிகர் ஸ்ரீதேவி ஒரு பெரிய கண்ணாடி போட்டு கொண்டு ஒரு ஸ்டெப் போடுவாங்க பாருங்க அதை என்னைக்கு மறக்க முடியாது..

  5. பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மூத்த நகைச்சுவை நடிகை பிந்துகோஷுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நிதி உதவி வழங்கியுள்ளார். மருத்துவ உதவி இல்லாமல் மூத்த நடிகை பிந்துகோஷ் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியும், அதனை தொடந்து மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்துள்ளார்.

    Read more at: https://tamil.filmibeat.com/news/vishal-s-timely-help-actress-bindhu-gosh-051669.html

Leave a comment