Nanjil Nalini

நாஞ்சில் நளினி

நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்த நடிகைகளில் நாஞ்சில் நளினிக்கு முக்கிய இடம் உண்டு.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை இவரது சொந்த ஊர். நாஞ்சில் நாட்டுப் பெண் என்பதால் பெயருடன் ‘நாஞ்சில்’ சேர்த்துக்கொண்டு நாஞ்சில் நளினி ஆனவர்.

மூன்றாவது வரை மட்டுமே பயின்றார். இவரது 12-ஆவது வயதில் நடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, திருநெல்வேலியிலுள்ள அமெச்சூர் குழு ஒன்றில் நடிக்கச் சேர்ந்தார். பின்னர் ‘வைரம்’ நாடக சபாவில் சேர்ந்து நடிப்பை விரிவுபடுத்திக் கொண்டார். 1958-இல் இக்கம்பெனி இவரது நடிப்பார்வத்திற்குப் பக்க பலமாக இருந்தது.

’நால்வர்’ என்னும் சமூக நாடகத்தில் 12-ஆவது வயதிலேயே 4 கதாநாயகர்களின் அம்மாவாக நடித்தவர்.

பி.மாதவனின் இயக்கத்தில் 1969-இல் வெளிவந்த வெற்றிப்படமான ‘எங்க ஊர் ராஜா’ வில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இதில் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு எடுத்துப் போகும் “சாப்பாட்டுக் கூடைக்காரி” வேடம். அதிலிருந்து சிவாஜிகணேசனின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ போன்றவை இவருக்கு நடிப்பை வெளிப்படுத்த அமைந்த படங்கள்.

நாடகங்கள், சினிமா என்று வாழ்ந்து வந்த நேரத்தில் இவர்தான் தனியாக ஒரு நாடகக் கம்பெனி தொடங்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்ட போது இவரது மகள் பெயரில் ‘ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.

பட வாய்ப்புகள் கொஞ்சம் தொய்ந்த நேரத்தில் இவருக்கு மறு ஜென்மம் கொடுத்தது சின்னத்திரை. குட்டி பத்மினியின் ‘மந்திர வாசல்’ தொடர்தான் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் இவரை சரியாகக் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து நடிகர் மோகனின் ‘அச்சம் மடம் நாணம்’, ’பிருந்தாவனம்’, ‘சூலம்’, போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு செல்வம் என்ற மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ஜக்கம்மா, ராஜநாகம், கல்யாணமாம் கல்யாணம் [1974], துணையிருப்பாள் மீனாட்சி, அத்தைமடி மெத்தையடி [1989], பூந்தளிர் [1979], ரோஜாவின் ராஜா [1976] சந்திப்பு [1983], அன்னை அபிராமி [1972], உங்களில் ஒருத்தி [1976], அதிர்ஷ்டக்காரன் [1978], வீட்டுக்கு வீடு வாசப்படி [1979] , கற்பகம் வந்தாச்சு [1993] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் என்ன நிலையிலுள்ளார் என்ற எந்த தகவலும் இல்லை.

’ரோஜாவின் ராஜா’ [1976] படத்தில் நாஞ்சில் நளினி தனித்தும் வாணிஸ்ரீயுடனும்

Nanjil Nalini-Rojavin Raja 1976-1 Nanjil Nalini-Rojavin Raja 1976-

‘பூந்தளிர்’ படத்தில் என்னத்தே  கன்னையாவுடன் நாஞ்சில் நளினிNANJIL NALINI-ENNATHE-Poonthalir

“தனிக்குடித்தனம்’ [1977] படத்தில் நாஞ்சில் நளினி  Nanjil Nalini-Thanikudithanam 1977-

”சந்திப்பு” [1983] படத்தில் சுஜாதாவுடன் நாஞ்சில் நளினி  

Nanjil Nalini- Santhippu 1983-

”ஆடுபுலி ஆட்டம்” 1977 படத்தில் கமலஹாசனுடன் நாஞ்சில் நளினி Nanjil Nalini-Aadu Puli Aattam 1977 -Nanjil Nalini-Aadu Puli Aattam 1977 -3Nanjil Nalini-Aadu Puli Aattam 1977 -1Nanjil Nalini-Aadu Puli Aattam 1977 -2

“ரசிகன் ஒரு ரசிகை’’ 1986 படத்தில் கவுண்டமணியுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Goundamani-Rasigan Oru Rasigai 1986-

“ரசிகன் ஒரு ரசிகை’’ 1986 படத்தில் செந்திலுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Senthil-Rasigan Oru Rasigai 1986-

“ரசிகன் ஒரு ரசிகை’’ 1986 படத்தில் மோகன்ப்ரியா, மனோரமா, கருப்பு சுப்பையா,  கவுண்டமணியுடன் நாஞ்சில் நளினி

Nanjil Nalini-Goundamani-Mohana Priya-Black Subbiah-Rasigan Oru Rasigai 1986-1Nanjil Nalini-Goundamani-Mohana Priya-Black Subbiah-Rasigan Oru Rasigai 1986-

“ரசிகன் ஒரு ரசிகை’’ 1986 படத்தில் செந்தில்,  கவுண்டமணியுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Goundamani-Senthil-Rasigan Oru Rasigai 1986-

“அன்னை அபிராமி” 1972 படத்தில் நாஞ்சில் நளினி, கே.ஆர்.விஜயாnanjil-nalini-annai-abirami-1972-1nanjil-nalini-annai-abirami-1972nanjil-nalini-kr-vijaya-annai-abirami-1972nanjil-nalini-kr-vijaya-annai-abirami-1972-1

“அன்னை அபிராமி” 1972 படத்தில் கே.ஆர்.விஜயா, குலதெய்வம் ராஜகோபாலுடன் நாஞ்சில் நளினி, nanjil-nalini-kuladeivam-kr-vijaya-annai-abirami-1972kuladeivam-nanjil-nalini-kr-vijaya-annai-abirami-1972

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் நாஞ்சில் நளினிNanjil Nalini-Ungalil Oruthi 1976-1Nanjil Nalini-Sujatha-Ungalil Oruthi 1976-Nanjil Nalini-Sujatha-Ennathe Kanniah-Ungalil Oruthi 1976-Nanjil Nalini-Ungalil Oruthi 1976-

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் நாகேஷுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Nagesh-Adhirstakaran 1978-1Nanjil Nalini-Nagesh-Adhirstakaran 1978-

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் ஃபடாபட் ஜெயலட்சுமி, வி.கே.ராமசாமி, நாகேஷுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Nagesh-Padapat Jayalakshmi-KA.Thangavelu-Adhirstakaran 1978-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் நாஞ்சில் நளினியுடன் தங்கராஜ்Nanjil Nalini-Veettukku Veedu Vasapadi 1979-1Nanjil Nalini-Veettukku Veedu Vasapadi 1979-Nanjil Nalini-MLA.Thangaraj-Veettukku Veedu Vasapadi 1979-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் நாஞ்சில் நளினியுடன் ஜக்கு

Nanchil Nalini-Othayadi Paathayilae 1980-Nanchil Nalini-Othayadi Paathayilae 1980-01Jaggu-Nanchil Nalini-Othayadi Paathayilae 1980-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் நாஞ்சில் நளினியுடன் [சங்கர்] கணேஷ்Nanchil Nalini-Sangar Ganesh-Othayadi Paathayilae 1980-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் நாஞ்சில் நளினியுடன் [சங்கர்] கணேஷ், பிரேமிNanchil Nalini-Premi-Sangar Ganesh-Othayadi Paathayilae 1980-

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
By Raj

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நாஞ்சில் நளினி, சிவாஜி கணேசன் நடித்த எங்க ஊர் ராஜா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படம் 1969 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து அண்ணன் ஒரு கோயில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உட்பட சில படங்களில் நடித்தார்.மற்றும் தர்மயுத்தம், ஆடுபுலி ஆட்டம், ரசிகன் ஒரு ரசிகை, அன்னை அபிராமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சித்  தொடர்களிலும் நடித்திருக்கிறார். சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த நாஞ்சில் நளினி, கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று [19.1.2020] காலமானார். மறைந்த நாஞ்சில் நளினிக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் நடக்கிறது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://tamil.filmibeat.com/news/actress-nanjil-nalini-passes-away-067071.html

‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ 1981 படத்தில் ஜெய்சித்ரா, வி.எஸ்.ராகவனுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Sorgathin Thirappu Vizha 1981-Nanjil Nalini-Jaichitra-Sorgathin Thirappu Vizha 1981-Nanjil Nalini-Jaichitra-VSR-Sorgathin Thirappu Vizha 1981-

‘கற்பகம் வந்தாச்சு’ 1993 படத்தில் எம்.ஆர்.ராதிகாவுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Karpagam Vanthachu 1993-Nanjil Nalini-MR.Radhika-Karpagam Vanthachu 1993-

‘கற்பகம் வந்தாச்சு’ 1993 படத்தில் அர்ஜுன் சார்ஜாவுடன் நாஞ்சில் நளினிNanjil Nalini-Arjun-Karpagam Vanthachu 1993-

Leave a comment