T.G.Ravi

கொடூரனல்ல, ஒரு பாவப்பட்ட நடிகன்……

சிவந்த கண்களும், சுருண்ட முடியும், அட்டகாசமுமாய் ரசிகர்களின் மனதில் பீதியியுடன் கூடிய நெருப்பை வாரியிட வந்தவர் இவர் “பாவம் குரூரன்” படம் நினைவிருக்கிறதா? இப்படத்தில் ‘ஷாஜி’ என்ற கதாபாத்திரமே இவரை வில்லன் கதாபாத்திரங்களுக்கு முத்திரை குத்தியது. அரவிந்தன் இயக்கத்தில் ‘உத்தராயன்’ படத்தின் மூலமாக அடையாளப் படுத்தப்பட்ட வில்லன் ரி.ஜி.ரவி. இப்படத்துடன் அடுத்து வந்த ‘சோர சுவந்ந சோர’ [இரத்தம் சிவந்த இரத்தம்], சாகர என்ற Continue reading

Advertisements

Master Vishweshwar Rao

மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

ஏ.சி.திருலோகசந்தர் இயக்கி நடிகர் திலகம், கலைச்செல்வி, சோ, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை நிர்மலா, கே.பாலாஜி போன்ற பலர் நடித்த எங்க மாமா படத்தைப் பார்த்திருக்கும் அன்றைய ரசிகர்கள் நிச்சயமாக அப்படத்தில் நடித்த இச்சிறுவனை மறந்திருக்கமாட்டார்கள். நடிகர் திலகம் எடுத்து வளர்க்கும் அனாதைக் குழந்தைகளாக ஜெய கௌசல்யா, ரோஜாரமணி, லட்சுமி ஸ்ரீ, ஜின்டா, ரஜனிஸ்ரீ, சுமதி, மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் சுரேந்திரகுமார், மாஸ்டர் ராமு, மாஸ்டர் ரமேஷ் போன்ற மழலைப்பட்டாளங்களுடன் வித்தியாசமாக நடித்திருந்த சிறுவன் தான் இந்தச் சிறுவன் விஸ்வேசுவர் ராவ். Continue reading

Poornima Jayaram

பூர்ணிமா ஜெயராம்

1978-இல் திரையுலகில் அறிமுகமாகி மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ள ஒரு சிலருள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர் பூர்ணிமா ஜெயராம். இவர் ஒரு ராசியான நடிகை என்று அடையாளம் காணப்பட்டவர். இது அவருக்கு வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றியல்ல. இந்தத் திரையுலகில் நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதைவிட நன்றாகப் பழகும் நடிகை என்று பெயரெடுப்பது மிகவும் கடினம். அந்த விஷயத்திலும் வெற்றிபெற்றுவிட்டவர் பூர்ணிமா ஜெயராம். தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றபடி மூடை மாற்றிக்கொண்டு பழகுவோரிடையே பூர்ணிமா ஜெயராம் விதியாசமானவர். புன்சிரிப்பு, இன்முகம், மரியாதை, வரவேற்பு என்பவை அவருக்கே உரித்தானது. இவருக்கு “Silver Jubilee Star” என்ற பெயரும் உண்டு. Continue reading

Mala Aravindan

மாள அரவிந்தன் – மலையாளத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் தனியிடம் உண்டு. இவரும் தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு முதலிடத்திற்கு வந்தவர் என்றால் அது மிகையாகாது. இவர் நடிகர் மட்டுமல்ல; சிறந்ததொரு தபேலா கலைஞருமாவார்.

இவரது ஆறாம் வயதில் இவரது தந்தை ஐயப்பன் மரணமடைந்துவிட்டார். கலால் துறையில் அவர் பணியாற்றி வந்தார். Continue reading

Sankaradi

சங்கராடி

இயற்பெயர் சந்திரசேகர மேனன். மலையாளத் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர், மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகர். அத்துடன் வில்லன் கதாபாத்திரங்களிலும் மிளிர்ந்தவர். ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளராகவும் இருந்தவர். மறைன் பொறியியலாளருக்கான கல்வி பயின்றவர் என்றாலும் அதைப் பூர்த்தி செய்யவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு கொண்டவர். யதார்த்த நடிகர் என பெயர் பெற்றவர். பறவூர், மேமனா பரமேஸ்வரன் பிள்ளை-தோப்பில் பறம்பில் ஜானகி அம்மா ஆகியோரின் மூத்த மகனாக 1924-இல் பிறந்தவர். முதலில் பிரம்மச்சாரியாக இருந்தவர் பின்னர் 52 ஆவது வயதில் கடவந்த்ரா, செறுவரன்பத்து, குட்டிப்பாரு-நாராயண மேனன் தம்பதிகளின் மகள் சாரதா என்பவரை 1982-இல் மணந்துகொண்டார். இத்தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. Continue reading

Captain Raju

கேப்டன் ராஜு தேவர் பிலிம்ஸின் ‘நல்ல நாள்’ படத்தில் வில்லன் வேஷத்தில் பண்ணையாராகத் தோன்றிய அந்த ஆஜானுபாகுவை நினைவிருக்கிறதா? அவர்தான் கேப்டன் ராஜு. நிஜமாகவே ஐந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, ‘கேப்டன்’ ஆன ராஜு இராணுவத்தில் பணியாற்றிய காலத்திலேயே இந்தி நாடகங்களில் நடித்தவர். Continue reading

Jeevitha

ஜீவிதா

இயக்குநர் ரி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவைக் காத்த கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜீவிதா. பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது நடிக்க வந்தவர். இவரது தந்தை ஒரு படத்தயாரிப்பாளர். இவர் நடித்த படம் வெளிவருவதற்கு முன் ரி.ராஜேந்திரின் கண்டுபிடிப்பு என்பதால் எட்டு படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனந்தபாபு-ஜீவிதா ஜோடியாக நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அன்றைய காலத்தில் அதிக வரவேற்பிருந்தது. Continue reading

Old actor S.S.Rajendran is serious condition in hospital-SS Rajendran, veteran Tamil actor, passes away

86 வயதாகும் பழம்பெரும் நடிகர் S.S.ராஜேந்திரன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிட்சையளித்து வருகின்றனர்.

SS Rajendran, veteran Tamil actor, passes away

Chackravarthi (Actor)

சக்கரவர்த்தி

ரிஷிமூலம் படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவக்கிய சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் அந்தப் படத்தில் சிவாஜிகணேசனிடத்தில் பரிவும், கே.ஆர்.விஜயாவிடத்தில் கோபமும் கொண்ட பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடித்தது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுவே அவரது திரையுலக பவனிக்கு பின்பாயிண்டாக அமைந்துவிட்டது. Continue reading