S.V.Subbaiah

குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா: கப்பலோட்டிய தமிழனில் பாரதியாராக வாழ்ந்து காட்டினார்,
தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சுப்பையா, சிவாஜிகணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச்சிறப்பாக நடித்தார்.

எஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர் – பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.

தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து, குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் நடித்த படங்கள் சுமார் 100. சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ போன்றவை பிரபலமான படங்கள். குறிப்பாக `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ.உ.சிதம்பரனாராக நடிக்க, எஸ்.வி.சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். நடித்தார் என்பதைவிட, பாரதியா ரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும். ஜெமினிகணேசனுடன் ‘சவுபாக்கியவதி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந் தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் நடித்தார்.

பழம் பெரும் நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித் திருக்கிறார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’ எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.

வெற்றிகரமாக ஓடிய படம் இது. தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ்.வி.சுப்பையா 29-1-1980 அன்று மரணம் அடைந்தார். காலமானபோது அவருக்கு வயது 57. எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன்.

எஸ்.வி.சுப்பையா நடித்த படங்கள் மேலும் சில:

நத்தையில் முத்து, சொல்லத்தான் நினைக்கிறேன், குலவிளக்கு, பாதுகாப்பு, பொன்னூஞ்சல், மணிப்பயல், இதயக்கனி, யாருக்கு சொந்தம், அதைவிட ரகசியம், நானே ராஜா, ஜீவனாம்சம், தசாவதாரம், நீதி, சௌபாக்கியவதி, இருளும் ஒளியும், வணக்கத்துக்குரிய காதலியே, களத்தூர் கண்ணம்மா, மங்கையர் திலகம், சிவப்புக்கல் மூக்குத்தி, காவல் தெய்வம், நானும் ஒரு பெண், பூக்காரி, ரம்பையின் காதல்.

ரோஷக்காரி (1974)  படத்தில் எஸ்.வி.சுப்பையா

 ImageImageImageImage
கலைக்கோயில்  படத்தில் எஸ்.வி.சுப்பையாImageImageImage
ரோஷக்காரி (1974)  படத்தில் எஸ்.வி.சுப்பையா மற்றும் வி.எஸ்.இராகவன், சோ
Image
கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாராகவே வாழ்ந்து காட்டிய எஸ்.வி.சுப்பையா
SV.Subbaiah-Kappalottiya Thamizhan-
பொன்னூஞ்சல் படத்தில் எஸ்.வி.சுப்பையா
SV.Subbaiah-Ponnunjal-
‘சத்யன்’ [1976] படத்தில் சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா
S V Subbaiah-Sathyam 1976- S V Subbaiah-Sathyam 1976-1 S V Subbaiah-Sivaji-Sathyam 1976-
SV.Subbaiah-Engal Kula Deivam 1974-SV.Subbaiah-Engal Kula Deivam 1974-1SV.Subbaiah-Engal Kula Deivam 1974-2SV.Subbaiah-Engal Kula Deivam 1974-3
‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் அன்னை ஆதி பராசக்தியின் தீவிர பக்தன் சுப்பிரமணியமாக எஸ்.வி.சுப்பையா
SV.Subbaiah as Subramoniam-Aathi Parasakthi 1971- SV.Subbaiah as Subramoniam-Aathi Parasakthi 1971-1 SV.Subbaiah-Aathi Parasakthi 1971- SV.Subbaiah-Aathi Parasakthi 1971-1
Padmini-SV.Subbaiah-SV.Rangarao-Kankanda Deivam 1967-2
SV.Subbaiah-KA.Thangavelu-Sowbhagyavathi 1957-SV.Subbaiah-KA.Thangavelu-Sowbhagyavathi 1957-1
”ஞானக்குழந்தை” [1979] படத்தில் பேபி சுதாவுடன் எஸ்.வி.சுப்பையா
SV.Subbaiah-Gnana Kuzhanthai 1979-2SV.Subbaiah-Gnana Kuzhanthai 1979-1SV.Subbaiah-Gnana Kuzhanthai 1979-SV.Subbaiah-Baby Sudha-Gnana Kuzhanthai 1979-
”ஞானக்குழந்தை” [1979] படத்தில் மனோகருடன் எஸ்.வி.சுப்பையா SV.Subbaiah-RS.Manokar-Gnana Kuzhanthai 1979-
”ஞானக்குழந்தை” [1979] படத்தில் சுஜாதாவுடன் எஸ்.வி.சுப்பையா SV.Subbaiah-Sujatha-Gnana Kuzhanthai 1979-67
SV.Subbaiah-Sollathan Ninaikiren 1973-SV.Subbaiah-Sollathan Ninaikiren 1973-1SV.Subbaiah-Sollathan Ninaikiren 1973-270
”தெய்வீக உறவு” 1968 படத்தில் எஸ்.வி.சுப்பையாவுடன் பேபி ராஜி
SV.Subbaiah-Deiviga Uravu 1968-1SV.Subbaiah-Deiviga Uravu 1968-SV.Subbaiah-Deiviga Uravu 1968-2Baby Raji-SV.Subbiah-Deiviga Uravu 1968-74
“நாலு வேலி நிலம்” 1959 படத்தில் பண்டரிபாய், மைனாவதியுடன் எஸ்.வி.சுப்பையாSV.Subbiah-Naalu Veli Nilam 1959-SV.Subbiah-Pandaribai-Naalu Veli Nilam 1959-SV.Subbiah-Pandaribai-Mainavathi-Naalu Veli Nilam 1959-83
SV.Subbiah-Unakkaga Naan 1976-2SV.Subbiah-Unakkaga Naan 1976-1SV.Subbiah-Unakkaga Naan 1976-SV.Subbiah-Sivaji-Unakkaga Naan 1976-SV.Subbiah-Gemini-Unakkaga Naan 1976-
 sv-subbiah-nambiar-mrr-bhaga-piravinai-195996
”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எம்.என்.ராஜத்துடன் எஸ்.வி.சுப்பையாSV.Subbiah-Rambayin Kadhal 1956-2SV.Subbiah-Rambayin Kadhal 1956-1SV.Subbiah-Rambayin Kadhal 1956-SV.Subbiah-MN.Rajam-Rambayin Kadhal 1956-1
”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எஸ்.ஏ.அசோகன், கரிக்கோல் ராஜுடன் எஸ்.வி.சுப்பையாSV.Subbiah-S.A.Ashokan-Karikol Raj-Rambayin Kadhal 1956-SV.Subbiah-S.A.Ashokan-Karikol Raj-Rambayin Kadhal 1956-1
”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எம்.என்.ராஜத்துடன் எஸ்.வி.சுப்பையாSV.Subbiah-MN.Rajam-Rambayin Kadhal 1956-103
நன்றி:- மாலை மலர்
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 15, 6:04 PM IST

25 comments on “S.V.Subbaiah

  1. திரு எஸ் வீ சுப்பையா அவர்களின் மறக்க முடியாத சில படங்கள்
    1.சொல்லத்தான் நினைக்கிறேன் – இந்தத் திரைப்படத்தில் அவரின் மூன்று வார்த்தை வசனம் மிகவும் பிரபலம் – “வெளியே போங்கடா முண்டங்களா ” பெண் பார்க்க வந்தவர்கள் வியாபாரம் பேசுவது போல் நடந்து கொள்ளும் போது கோபம் கொண்டு பேசுவது – பிறகு தன பெண்களுக்கு கல்யாணம் நடக்காமலே தள்ளிப்போகும் போது “பெண்ணா பிறக்கவே கூடாது ”

    2.தீபம் – நடிகை சுஜாதாவின் தந்தை ஆக வருவார்

    3. மூன்று தெய்வங்கள் – மிகவும் வெகுளியான மளிகைக் கடைக்குச் சொந்தகாரர்.

    இவரின் சொந்த படமான காவல் தெய்வத்தில் திரு.சிவாஜி கணேசன் பணம் ஏதும் வாங்காமலே நடித்து கொடுத்தார் என்று அந்நாட்களில் பேட்டியில் படித்ததுண்டு

    • அபூர்வமான படங்களெல்லாம் தேடி எடுத்திருக்கின்றீர்கள் கணபதி கிருஷ்ணன். மிக்க நன்றி.மற்றொரு விடயம் ஏவி.எம்.புரொடக்‌ஷனுக்கு ஒரு படத்திற்குக் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொண்டிருந்தாராம் சிவாஜிகணேசன். அந்நேரத்தில் எஸ்.வி.சுப்பையா சென்று சிவாஜிகணேசனிடம் மூன்று நாட்களுக்கு மட்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார். என்னால் அந்நாட்களை உனக்கு வழங்க இயங்காது. நீ வேண்டுமானால் சரவணனைச் சென்று பார். அவர் விட்டுத்தந்தால் நான் நடித்துத் தருகிறேன் என்று சிவாஜி சொல்ல இவர் நேரடியாக சரவணனைச் சென்று சந்தித்து விஷயத்தை எடுத்துக் கூற அவரும் அவர் ஏவி.எம்முக்காக பெற்று வைத்திருந்த நாட்களில் மூன்று நாட்களை எஸ்.வி.சுப்பையாவுக்காக விட்டுக் கொடுத்ததாக நானும் படித்ததுண்டு.

  2. பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் 10 குழந்தைகளின் தந்தையாக ஏழை ப்ரோகிதராக வாழ்ந்து காட்டி இருப்பார்
    அரங்கேற்றம் திரைப்படத்தில் இவரின் மறக்க முடியாத வசனம் – “ஆம்பளை என்பதே மறந்து போச்சு “

  3. அரங்கேற்றம் திரைப்படத்தில் ப்ரோகிதர் சாமா சாஸ்த்ரிகள் பாத்திரத்தில்

  4. செங்கோட்டை வி. சுப்பையா
    சுப்பையாவின் பணிவு மிகவும் குழைவாக இருக்கும். ” முதலாளி” என்று துண்டை இடுப்பில் கட்டும் பணிவு, அதே முதலாளியிடம் கோபத்தைக்காட்டும் போது நெஞ்சை நிமிர்த்தி அவர் கோபப்பார்வை பார்க்கும் போது மற்றொரு எதிர்மறை சுப்பையாவாகி விடுவார்.

    கனிவாய் சாந்தமாய் பார்க்கும் சுப்பையா ஒரு எல்லை என்றால் அருவருத்து எரிமலையாய் மாறி அரிவாளைத்தூக்கிவிடும்போது மற்றொரு எல்லையில் நிற்பார்.

    அவர் மூக்கை துறுத்தி புன்னகைக்கும் அழகு.

    வாய் திறந்து அழாமல் கண் கலங்கி கண்ணை மூடித் திறந்து கண்ணீரை சிந்தும் உருக்கம்.

    பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்கு தம்பியாக வாயில் துண்டை வைத்து அழுகையை அடக்கும் சுப்பையா

    கண் கண்ட தெய்வம் படத்தில் ரெங்காராவுக்கு தம்பியாக, தான் சாவதற்கு கொஞ்சம் முன் அண்ணன் ரெங்காராவிடம் வந்து சுப்பையா” உன்னை பார்க்கனும்னு தோணுச்சி. பாத்துட்டேன். வர்றேன்.”

    கப்பலோட்டிய தமிழன் படத்தில் மகாகவி பாரதியாக கோர்ட்டில் ” எமக்குத் தொழில் எழுத்து, இமைப் பொழுதும் சோராதிருத்தல்!”
    பாரதி பாடல் காட்சிகளில் சுப்பையா கண்ணை இமைக்கவே மாட்டார்.

    “ராமு” படத்தில் மன நிலை பிறழ்ந்த தமிழாசிரியராக –
    சிறுவன் ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
    “தெய்வத்துக்கு ஆயிரம் கையிருக்குன்னு சொல்வாங்க. அதில் ஒரு கை கூட என் கண்ணீரைத் துடைத்ததில்லை. எனக்கு ஒரு வாய் சோறு கொடுத்ததில்லை. ”

    ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’
    – ‘மன நோயாளி’ எஸ்.வி.சுப்பையாவிற்கு மூன்று பெண் மக்கள்.
    பெண் பார்க்க வருபவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று சொன்ன மகளை நோக்கி சைகையில் (ரெண்டே வார்த்தை பேசிக்கிறேன்…ரெண்டே வார்த்தை..) கெஞ்சும் சுப்பையா, பேச அனுமதி கிடைத்ததும் செய்யும் கர்ஜனை ” எழுந்திருச்சி வெளியே போங்கடா முண்டங்களா”
    அடுத்த முறை பெண் பார்க்கும் படலத்தின் முடிவில் வேதனையுடன் கண்ணை மூடி அமைதியாக சொல்வார்
    ” பொண்ணாப் பிறக்கறதே பாவம்.. பொண்ணாப் பிறக்கறதே பாவம்..”

    “அரங்கேற்றம்” – எம்.என்.ராஜன்’ஆம்பளைங்கறது மரத்துப் போச்சின்னு சொல்றா..’ சுப்பையா ‘ இன்னொருக்கச் சொல்லு..இன்னொருக்கச் சொல்லு..’
    ‘ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சின்னு சொல்றா’
    சுப்பையா முகம் பிரகாசமாகி ‘ ஆம்பளைன்றது மறந்து போச்சின்னு சொல்றாடி.. அவ அம்பாள்டி!’

    ‘தாலியா சலங்கையா?’ படத்தில் தன்னுடைய illegitimate daughter வாணிஸ்ரீயை சந்திக்கிற காட்சியில் சுப்பையாவின் கனிவான நடிப்பு.

    நடிகர் ஆக இல்லாமல் சுப்பையா என்ற மனிதரின் சொந்த வாழ்வு பற்றி நடிகர் சிவகுமார் ” இது ராஜ பாட்டையல்ல” நூலில்
    சில மிக அபூர்வத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.அவற்றைப் படித்தால் சித்தர் போன்றவர் சுப்பையா என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

    சுப்பையாவிற்கு மறையும்போது ஐம்பத்தேழு வயது தான். அவருக்கு பாலகனாக ஒரு மகன் அப்போது இருந்தான்.

  5. Actor SIVAKUMAR has written about SV.SUBBIAH in his facebook pages :

    எஸ்.வி.சுப்பையா அண்ணன் – நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.
    திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், ‘தான்’ என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.
    பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் ‘கைவிலங்கு’ – நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.
    நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி – என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள்
    கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி.எஸ். காசு வேண்டாம் என்று சிவாஜி மறுத்துவிட்டார். உணர்ச்சி வசப்பட்டவர் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றிக் கடன் கழிப்பேன் என்று பேட்டியளித்தார்.
    காடாத்துணியில் தைத்த அரை டிராயருடன் திருப்பதி நடந்தே சென்று ஏழுமலையானிடம் சண்டை போட்டுத் திரும்புவார் .
    நடிப்புத்தொழிலை விட்டு கொஞ்ச காலம் ரெட்ஹில்ஸை அடுத்த கரனோடையில் நிலம் வாங்கி கலப்பை பிடித்து உழுது விவசாயம் செய்தார்.
    திடும் என்று ஒருநாள் மாரடைப்பால் புறப்பட்டுப் போய்விட்டார்.
    சவக்குழிக்குள் சடலத்தை வைத்து மண்ணைத் தள்ளிய போது ‘அப்பா மூஞ்சி மேல மண்ணைப் போடாதிங்க. அவருக்கு மூச்சு முட்டும்’- என்று
    அவரின் 6 வயது மகன் சரவணன் அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

  6. “ARANGETRAM” is all about characters and their attitudes, also how they react to different situations… Though, there is only one major character, all the minor characters are equally important to the movie…

    CHARACTERS

    The first character is Ramu Saastrigal (S.V.Subbiah), a poor orthodox brahmin making a living by performing rituals for other brahmins… But Saastrigal is a man of orthodox principles and mocks brahamins who don’t follow principles; he even tells them atheists are much above the brahmins who don’t follow rituals… In a small village with only about 12 brahmin families, he has managed to offend 8 families… And Saashtri has a real big family (8 children – 5 girls and 3 boys) and two extra members in the form of a sister and her daughter. The whole family runs on his income…

    Is he a bad man? No, just a man who wants to follow principles, but can’t understand why people who don’t follow rituals, but yet wear that white thread as a caste symbol are succeeding in life…

    Courtesy from https://spinit.wordpress.com

  7. மனோரஞ்சிதம் படப்பிடிப்பின்போது கோபம் கொண்ட எஸ்.வி.சுப்பையா

    “மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    “மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    “ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.

    சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.

    நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    “மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    “வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது.”கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்? படம் நின்று போனது.

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

    Courtesy from Maalaimalar

  8. அன்புள்ள ஐயா சகாதேவன் அவர்களுக்கு

    உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி !!

    என்னதான் இருந்தாலும் உங்களுடைய முயற்சிகளுக்கு முன்னால் , எங்களுடைய முயற்சி சாதாரணமானதுதான் !!

    உங்களை ‘Walking encyclopedia of Tamil films’ பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அடுத்தபடியாகப் பார்க்கின்றோம்.

    தமிழில் பேசும் படம் காலம் தொட்டு தற்கால ஸ்ரேயா,பிரியாமணி வரையில் எல்லா நடிகர் நடிகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவற் களஞ்சியமாகத் திகழ்கிறது……… உங்களுடைய Blog https://antrukandamugam.wordpress.com/

    எங்களுக்குத் திரைப்படத் துறையப் பற்றி ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உங்களுடைய “அன்று கண்ட முகம்” வெப் தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்கின்றோம்.

    உங்களுடைய இந்த Blog இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில்
    4 LAKHS (4,00,000) Views என்ற இலக்கைத் தொட உள்ளது. இதுவே மிகப் பெரிய சாதனை ஆகும்.தற்போது சராசரியாக தினந்தோறும் 600 பேர் இந்த வெப் தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

    உங்களுடைய முயற்சிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !!

    சேதுராமன்

  9. திரு.சேதுராமன் பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருக்கின்றீர்கள். அந்த அளவுக்குத் தகுதியுடையவனில்லை நான். பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நிகராக ஒப்பிட்டிருக்கிறீர்கள். அவர் எங்கே. நான் எங்கே? நான் சாமான்யன். அதனால் அவர்களைப் போன்ற பெரியோர்களுடன் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். என்னைவிட பன் மடங்குத் திரையுலக அனுபவமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர்.

    நான்கு இலட்சம் பார்வையாளர்களை இவ்வலைப்பூ எதிர்கொள்ளப்போகிறது என்னும் போது நான் பட்ட கஷ்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்திருப்பதாக எண்ணுகிறேன். இன்னும் பார்வையாளர்கள் அதிகரிக்கவேண்டும். அவர்களுக்கும் செய்திகளும் காட்சிகளும் சென்றடையவேண்டும் என்பதுவே எனது அவா. இவ்வலைப்பூவின் மீது தாங்கள் கொண்டுள்ள நல் அபிப்ராயத்திற்கும், உங்கள் கருத்துக்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றி.

  10. ஐயா,

    உங்களுடைய தன்னடக்கத்திற்கு அனைத்து வாசகர்கள் சார்பாக பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் !!

  11. எஸ் வீ சுப்பையாவைப்பற்றி தகவலே இல்லையே என்று நான் வருத்தப்பட்டதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர். மிகையில்லாத தத்ரூபமான நடிப்பு. ஏதோ நம் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு நல்ல மனிதரைப்பார்ப்பது போல் இருக்கும். நான் அவர் நடித்து நிறைய படங்கள் பார்த்தது இல்லை. சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்து இருக்கிறேன் மற்றும் அரங்கேற்றம்.

    சமயம் கிடைத்தால் அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத ரெடி ஆனால் எங்கே வெளியிடுவது?

    51 வயதில் பிள்ளைக்குழந்தை – அரங்கேற்றம் ராமு சாஸ்திரிகள் மாதிரியே.

    பாலையா பொம்பிளைகள் விஷயத்தில் weak என்று தெரியும். ஜெயந்தியை எப்படியாவது அடைய வேண்டும் என்று துடித்தாராம் பாலையா. ஜெயந்தி பயங்கரமாக நடு நடுங்கி போனார் . “உன்னை பார்த்தாஉடம்பெல்லாம் சூடேறுது ..நீ வா. என்னை மாதிரி ஆண்மையை நீ பார்க்கவே முடியாது” என்று ஜெயந்தியை மிரட்ட ஜெயந்தி அப்போது நெருங்கிப்பழகிய ஒரு கன்னட தயாரிப்பாளர் – அவரிடம் முறையிட்டார். அவர் பிரசாந்த் தமிழ் நடிகரின் தாய் வழி தாத்தா.

    ஆனால் சுப்பையா அப்படி இல்லை. கண்ணியமான மனிதர்.
    57 வயதில் மரணமா? ஆனாலும் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து மனோரஞ்சிதம் படத்தை முடித்துக்கொடுத்து இருக்கலாம். மணிசேகரன் நிறைய பேருடன் சண்டை போட்டவர். அவர் சொல்வது அவர் தரப்பில் உள்ள வாதம். உண்மை என்னவோ?

  12. Not many Tamil movies linger in your memory long after you have watched them. But Sollathen Ninaikiren ( I am trying to tell), the 1973 superhit movie directed by the redoubtable K Balachander leaves you with a strange feeling long after the movie has ended. Is it because the Chennai of 1973 looks so beautiful? Is it because one is able to vicariously experience the emotions of the lead actors? Sollathen Ninaikiren doesn’t feel like a movie at all. It is like a narration of events that happen in your neighbourhood. That is where its strength lies.

    Produced by writer Manian [MGR’s associate for a long time] who wrote the serial story in Ananda Vikatan [Ilavu katha kili], Sollathen Ninaikiren is gripping in parts and has the trademark KB touch sprinkled all through the running of the film. A young bachelor [Sivakumar] joins an office as a manager and realizes that his predecessor [S V Subbaiah] was unfairly dismissed from service due to which he has suffered a mental imbalance. Subbaih’s daughters Subha, Srividya and Jayachitra bond well with each other and love their father. Each of them has a different personality.

    While Subha is somewhat morose due to her stammering disability, Srividya rarely steps out of the kitchen. Jayachitra has a spit fire personality and her bluntness at times borders on rudeness. Sivakumar lets out a portion of his bungalow to this family and eventually falls in love with Jayachitra. However, the truth is that all the three sisters have fallen for his charms. As they realize the truth about his love interest, they start withdrawing from the scene.

    There is also a sub-plot involving playboy Kamalhassan and Jayachitra’s classmate Jayasudha. Jayasudha gets married to Poornam Viswanathan who is much older to her and within no time, Jayasudha who is now a bored housewife, falls prey to Kamal’s lust. As they plan to elope, Poornam gets wind of it and elicits the help of Jayachitra in thwarting their plan. Jayachitra submits herself to Kamal’s lust and eventually reforms him. Sivakumar’s friend has already agreed to marry Srividya and when the former comes to know of Jayachitra’s predicament, he bows down and agrees to marry the eldest sister Subha but Subha has already chosen Sivakumar’s cook as her future husband. Thus, Sivakumar ends up a hero sans a heroine.
    Music by M S Viswanathan is pleasing to the ear chords. The title song has been shot brilliantly. The dialogues are razor-sharp and as usual the direction by KB is avant garde. But what strikes you the most about Sollathen Ninaikiren are the spell binding performances.

    Manian’s fictional characters are brought to life by the lead actors. Kamal is menacing as the lusty playboy. Subha is subdued as the eldest sister who is yet to find a match for herself. Jayachitra is boisterous, whacky and cherubic but surprisingly it is Srividya who steals the show. As the silent middle sister who doesn’t speak much and is unable to express her feelings, she manages to charm the audiences with her witty one-liners and her attempts to woo Sivakumar with her disarming demeanour. As usual Sivakumar is charming, debonair and portrays the perfect gentleman with elan. He doesn’t look like a 32-year old at all. It is hard to believe that Jayachitra was all of 16 when she acted in this movie. S V Subbaih moves you with his dialogue delivery and emotional punches. Jayasudha gets hitched to an elderly man on the lines of her earlier role in KB’s Apoorva Ragangal.

    Some of the dialogues are worth noting – “ It is not just a widow who has to don a white saree; a woman who can’t find a husband has also no choice but to wear one”, “ It is better to express your feelings to your lover as otherwise there is a danger of your prize to your lover becoming a gift for her wedding”. [ a reference to Sridhar’s classic Kalyana Parisu that had Gemini Ganesan and B Saroja Devi immortalizing the roles of Bhaskar and Vasanthi respectively].

    Who would be the best choice to play the main protagonist if the movie were to be remade today? It is without doubt, Surya, Sivakumar’s elder son who will fit the role like a T. But to be frank, it is virtually impossible to find actors today who can step in the shoes of S V Subbaih, Suba, Srividya and Jayachitra.

  13. Manian’s story ‘Ilavu Kattha Kili’ was not serialized in Anandavikatan but was published as a novella in the new year issue. Later it was staged as a drama with the same title of the movie by yesteryear actress Chandrakantha for sometime. I agree with the fact if the movie is taken now there are absolutely no heroines to match those three roles. Reasons:1. All the Tamil film heroines now are North Indian import and they cannot speak for themselves. 2. Their acting abilities are very limited. It is true in the whole movie Srividhya’s role stood out because of her arresting eyes and subtle facial expressions. When she says to Sivakumar that ‘You are a gentleman Sir’ everyone watching the movie would have felt a lump in theIR throat for her unrequited love. In a generation where the concept of ‘love’ is more physical than ’emotional’, movies like ‘Sollatthan Ninaikkeraen’ will draw hardly any water today.

  14. Hi this is supriya grand daughter of late. S.V.subbaiah… we just celebrated thatha’s 100th year… Kindly do watch Dear supriya.. can I get your contact please

Leave a comment