Madhavi – Comedy Actress

மாதவி – தமிழ்த் திரையுலகில் சிறந்த ஒரு நகைச்சுவை நடிகை. பொதுவாக தமிழ்த் திரையுலகிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி மனோரமாவுக்குப் பின் நகைச்சுவை நடிகைகள் யாரும் சாதிக்கவில்லை, காலூன்றவில்லை, நிலைத்து நிற்கவில்லை என்றெல்லாம்  ஒரு பொருந்தாத காரணத்தைச் சொல்வார்கள். அது இன்று வரையிலும் நீடிக்கிறது. சில வருடங்களுக்கு முன் கோவை சரளாவை மனோரமாவுக்குப் பின் இவர்தான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஏன் மிகப்பெரிய நகைச்சுவை நடிகை சச்சுவையே இத்திரையுலகம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தது. நீண்ட பல வருடங்களுக்குப்பின் மனோரமாவுக்குப் பிறகு சச்சு என்பதை இப்போது தான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மாதவியும் அவ்வாறாக புறக்கணிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான். இவரும் பல படங்களில் நாகேசுடன் சிறந்த நகைச்சுவை நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் பெரும் அலைகளுக்கிடையில் இவரும் புறந்தள்ளப்பட்டார் என்பது தான் நிதர்சனம். அம்முகுட்டி புஷ்பமாலாவும் இவரைப் போல் ஒதுக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் தான்.

இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரி.எஸ்.துரைராஜ் தயாரித்து இயக்கிய “ஆயிரங்காலத்துப் பயிரு” என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். இப்படத்தில் இவர் கே.கண்ணனின் கொள்ளைக் கூட்டணியில் ஒருவராக சரஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உயிர் மேல் ஆசை, நான், நீ, பறக்கும் பாவை, அம்மா எங்கே, அன்பு வழி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நான் படத்தில் கீழேயுள்ள சண்டைக்காட்சி. மாதவி பெண் வீராங்கனைகளின் அணித்தலைவி.  நாகேசும் ரவிச்சந்திரனும் இவர்களிடம் மாட்டிக்கொள்வார்கள். ரவிச்சந்திரன் ஆண்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார். நாகேஷ் இவரிடம் மாட்டிக்கொள்வார். இவர்களிடமிருந்து தப்பிக்கவேண்டும். அதே நேரம் ரவிச்சந்திரனையு காப்பாற்றிக் கொண்டு வெளியேற வழி தெரியவேண்டும். பார்ப்பார் நாகேஷ். மாதவியைப் புகழ ஆரம்பிப்பார். இவரை ஒரு சினிமா ஸ்டாராக ஆக்கிவிடுவதாகச் சொல்வார். அதற்கு மாதவி எனக்குத் தமிழ் நல்லா வராதே….. திக்கித்திக்கித்தானே பேசுவேன் என்பார். அது போதுமே இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க அது தானே தேவை என்பார் நாகேஷ். இப்படியே புகழ்ந்து மாதவியின் துணையுடன் நாகேசும் ரவிச்சந்திரனும் தப்பித்துவிடுவார்கள்.

இச்சண்டைக் காட்சி முடிந்தவுடன் ஒரு காட்சி. அசோகனிடம் இவர் இருவரையும் தப்ப விட்டதற்காக ஒப்படைக்கப்படுவார்.

அசோகன்:

ஏன் இப்படி செஞ்ச?

மாதவி:

பாஸ்….. நான் அழகா இருக்கேன்னு சொல்லி சினிமாவுல  சேத்துவிடறதா சொன்னாங்க…….

அசோகன்: 

சினிமாவுல  சேத்துவிடுறேன்னு சொன்னதுக்கே அவங்கள தப்ப வச்சிட்டே, சினிமாவுல நீ சேந்து பெரிய  ஸ்டாராயிட்டா என்னையே காட்டிக்கொடுத்துருவே இல்ல…….. டேய் இவ அழக கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமா கெடுத்துருங்க கெடுத்துருங்க…….. என்பார்.

மாதவி கிருஷ்ணன் அறிமுகமான “ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் கே.கண்ணனுடன்

Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-1Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-2Madhavi Krishnan-K.Kannan-Aayiram Kaalaththu Payir 1963-1Madhavi Krishnan-K.Kannan-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரனுடன் Madhavi Krishnan-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-

நான் படத்தில் மாதவிImage

நாகேசுடன் நான் படத்தில் மாதவி

ImageImageImageImageImageImage அசோகனிடம் மாட்டிக்கொள்ளும் காட்சியில் மாதவிSA.Ashokan-Madhavi- Naan-1அன்பு வழி படத்தில் தனித்தும் நாகேசுடனும் மாதவிMadhavi-ANBU VAZHI- Madhavi-ANBU VAZHI-1 Madhavi-ANBU VAZHI-2 Madhavi-ANBU VAZHI-3 Madhavi-ANBU VAZHI-4 Madhavi-ANBU VAZHI-5 Madhavi-ANBU VAZHI-6 Madhavi-ANBU VAZHI-8 Madhavi-Nagesh-ANBU VAZHI- Madhavi-Nagesh-ANBU VAZHI-1 Madhavi-Nagesh-ANBU VAZHI-2 Madhavi-Nagesh-ANBU VAZHI-3 Madhavi-Nagesh-ANBU VAZHI-4 Madhavi-Nagesh-ANBU VAZHI-5 Madhavi-Nagesh-ANBU VAZHI-6

“நாம் மூவர்” 1966 படத்தில் வி.கே.ராமசாமி, நாகேஷுடன் மாதவி கிருஷ்ணன்Madhavi Krishnan-Naam Moovar 1966-1Madhavi Krishnan-VK.Ramasamy-Naam Moovar 1966-1Madhavi Krishnan-VK.Ramasamy-Naam Moovar 1966-2Madhavi Krishnan-Naam Moovar 1966-Madhavi Krishnan-VK.Ramasamy-Naam Moovar 1966-

‘அதே கண்கள்’ 1967 படத்தில் காஞ்சனாவுடன் மாதவிMadhavi-Kanchana-Athe Kangal 1967-

‘அதே கண்கள்’ 1967 படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனாவுடன் மாதவிMadhavi-Kanchana-Ravichandran-Athe Kangal 1967-

Advertisements

8 comments on “Madhavi – Comedy Actress

  1. ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டு பிள்ளை படங்களிலும் நாகேஷுக்கு ஜோடியாக நடித்திருநதார்.இந்த பதிவும் தகவல் செறிந்த பதிவு். பாராட்டுக்கள்

    • தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு.ரங்கராஜன்.

  2. During her peak period ,she returned to Malaysia her native place and got married during 1968. (her name was also appeared in news paper during the Nagesh brother-in-law murder case)

    • நன்றி திரு.சிவசுப்பிரமணியம் அவர்களே. நான் இதுவரை அறிந்திருந்திராத செய்தி இது. நல்ல முன்னேறி வந்த ஒரு நடிகை திடீரென காணாமல் போய்விட்டாரே என்று நான் நினைப்பதுண்டு. மாதவியின் பிறப்பிடம் மலேசியா என்பதும் நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரியவந்தது.

  3. பணக்காரக் குடும்பம் படத்தில் ஸ்கூட்டர் மோகினி லில்லியாக நடித்திருப்பார். இவரது முதல் படம் எதுவென்று யாருக்காவது தெரியுமா?

  4. Great work for reminding her….even wikipedia don’t indicate her name in tamilnadu comedians list(even many bullshits names are there)but her nama was forgotten.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s