T.P.Muthulakshmi

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.பி.முத்துலட்சுமி 1948-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரி.பி.முத்துலட்சுமி “சௌபாக்கியவதி’, “மக்களைப் பெற்ற மகராசி, நான், ஒளிவிளக்கு நாடோடி மன்னன் அறிவாளி, ஆரவல்லி, வீரபாண்டிய கட்டபொம்மன், இருவர் உள்ளம், நவராத்திரி, அன்பே வா’ உள்பட சுமார் 350 படங்களுக்கு மேல் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நடிப்பில் தன்னுடைய சிறப்பான பங்களிப்புக்காக கலைமாமணி விருது பெற்ற இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, ரி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, ரி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் இவருடைய நெருங்கிய உறவினர்.  நடிகை முத்துலட்சுமி நடிகர் தங்கவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக்காட்சிகளில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத பல சிரிப்புக்காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.

இறுதிக்காலத்தில் நடக்க முடியாமல் அவதியுற்ற முத்துலட்சுமி சக்கர நாற்காலியைத் தான் பயன்படுத்தி வந்தார். இவரது கணவர் பெயர் முத்துராமலிங்கம். 29.5.2008 அன்று தனது 77-ஆவது வயதில் மரணடைந்தார்.

1957 -இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் வெற்றிப்படமான ‘ஆரவல்லி’ படத்தில் இவர் சிங்காரவல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மைனாவதியின் தோழி. ரி.பி.முத்துலட்சுமியை ஏ.கருணாநிதியும் இவரும் காதலிப்பார்கள். ரி.பி.முத்துலட்சுமிக்கு யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது என்பதில் குழப்பம். குழப்பத்தைத் தீர்க்க இருவருக்கும் ஒரு போட்டி வைப்பார். ஒரே போலவுள்ள மூன்று பெண்களின் முழு உருவச்சிலையை ஓரிடத்தில் வைத்து இந்த 3 பெண்களில் யாரைப்போல் இருந்தால் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று இருவரும் சரியாகச் சொன்னால்தான் நான் அதில் சரியாகச் சொல்பவரை என் துணையாக ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லிவிடுவார். ஏ.கருணாநிதியோ 3 சிலைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மூன்றுமே அழகாக இருக்கின்றன. என்று வீர வசனம் பேசிவிட்டு அதனால் என்னை ஏற்றுக்கொள் என்பார். ஆனால் ரி.பி.முத்துலட்சுமி ஏற்றுக்கொள்ளமாட்டார். இரு இரு நான் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வழக்கம்போல தனது காதில் திரியை விட்டு குடைந்து ஆராய்ச்சி செய்துவிட்டு , நான் இப்போது சொல்கிறேன் என்று 3 பெண்களது சிலைகளின் காதுகளில் வரிசையாக ஒரு காதில் ஒரு நீள திரியை விடுவார். ஒரு பெண்ணின் ஒரு பக்கக் காதிலிருந்து மறுபக்க காதுக்கு திரி வந்துவிடும். இன்னொரு பெண்ணின் ஒரு காதிலிருந்து திரி வாய்க்கு வந்துவிடும். மூன்றாவது சிலையில் திரியை நுழைப்பார்… அத்திரி ஒரு காதில் போய் உள்ளேயே நின்றுவிடும். இப்பெண்தான் சரியானவள் குடித்தனத்திற்கு ஏற்றவள். அவளைப் போல் நீ இருக்கவேண்டும் என்பார். ரி.பி.முத்துலட்சுமியும் சரியென ஏற்றுக்கொள்வார். இக்காட்சி படத்தில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

நன்றி:- http://www.alaikal.com/news/?p=4288

நன்றி:- http://www.maalaimalar.com/2012/08/01203632/glamour-role-tb-muthu-lakshmi.html

நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி என்ற தலைப்பில் “மாலை மலர்” நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி.

புதன்கிழமை, ஆகஸ்ட் 01, 8:36 PM IST
 

டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்’ என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. ‘நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு’ என்று கூறிவிட்டார்.ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், ‘சந்திரலேகா’வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், ‘சந்திரலேகா’வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ‘டூப்’பாக ஆடினார்.ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.பின்னர் ‘மகாபலிசக்ரவர்த்தி’, ‘மின்மினி’, ‘தேவமனோகரி’, ‘பாரிஜாதம்’ முதலான படங்களில் நடித்தார்.1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பொன்முடி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். பின்னர் ‘சர்வாதிகாரி’, ‘ஏழை உழவன்’ போன்ற படங்களில் நடித்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘திரும்பிப்பார்’ படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான ‘நாடோடி மன்ன’னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, ‘புருஷன்! புருஷன்! புருஷன்’ என்று பூஜை செய்வார்.இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், ‘இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். ‘நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்’ என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்’ என்றார்.சிவாஜி -சரோஜாதேவி நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

‘அறிவாளி’ படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

‘தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

‘டவுன் பஸ்’ படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த ‘அன்னையின் ஆணை’யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘தேன்மொழி’ என்று அண்ணன் பெயரிட்டார்.

அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, ‘உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு’ என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.’

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். ‘தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக’த்தின் நிறுவனத் தலைவர்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, ‘கலைவாணர் விருது’ உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.

நன்றி:- http://cinemanirubar.blogspot.in/2008/05/blog-post_3537.html

பழம்பெரும் நடிகை முத்துலட்சுமி உடல் தகனம்

தூத்துக்குடியை சேர்ந்தவர் டி.பி.முத்துலட்சுமி (வயது 77). 1948ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன், அன்பே வா, நவராத்திரி, நாடோடி மன்னன் உள்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய முத்துலட்சுமி காலப்போக்கில் நகைச்சுவை நடிகையாக மாறினார். அந்தக்கால நகைச்சுவையில் தனக்கென தனி பாதை அமைத்து நடித்து பெயர்பெற்ற முத்துலட்சுமி, பழம்பெரும் நடிகர்களான எம்.ஆர்.ராதா, தங்கவேலு, டி.எஸ்.பாலையா உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருது, பரிசுகளை பெற்றுள்ளார்.கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முத்துலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முத்துலட்சுமி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முத்துலட்சுமி தனது இயல்பான நகைச்சுவை நடிப்பால் ரசிக பெருமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர், என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர், பழகுவதற்கு இனிமையானவர் என்று கூறியுள்ளார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நான் படத்தில் என்னத்தே கன்னையா மற்றும் சாமிக்கண்ணுவுடன் ரி.பி.முத்துலட்சுமி.Samikkanu-Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Naan-5

நான் படத்தில் சுருளிராஜன், குட்டி பத்மினி, என்னத்தே கன்னையா மற்றும் சாமிக்கண்ணுவுடன் ரி.பி.முத்துலட்சுமி.

Samikkanu-Ennathe Kannaiah-Suruli Rajan-TP.Muthulakshmi-Kutty Padmini-Naan.1jpg

1955-இல் வெளிவந்த டவுன் பஸ் படத்தில் ஏ.கருணாநிதியுடன் ImageImage

சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் டணால் கே.ஏ.தங்கவேலுவுடன் ரி.பி.முத்துலட்சுமி.

Image

சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் டணால் கே.ஏ.தங்கவேலுவுடனும் தனித்தும் ரி.பி.முத்துலக்ஷ்மி

TP.Muthulakhsmi-Chakravarthi Thirumagal . TP.Muthulakhsmi-KAT-Chakravarthi Thirumagal .

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில் ரி.பி.முத்துலட்சுமி காமாட்சியாக

TP.Muthulakshmi-Veerapandiya Kattabomman-1959-2 TP.Muthulakshmi-Veerapandiya Kattabomman-1959-

ஏ.கருணாநிதி, பத்மினியுடன் ரி.பி.முத்துலக்ஷ்மிA.Karunanidhi-TP.Muthulakshmi-Padmini-Veerapandiya Kattabomman-1959-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் கே.ஏ.தங்கவேலு

TP.Muthulaxmi-KA.Thangavelu-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி

TP.Muthulaxmi-Neelavukku Neranja Manasu 1960-1

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு

TR.Ramachandran-KA.Thangavelu-TP.Muthulaxmi-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் கே.ஏ.தங்கவேலு

KA.Thangavelu-TP.Muthulaxmi-Neelavukku Neranja Manasu 1960-2KA.Thangavelu-TP.Muthulaxmi-Neelavukku Neranja Manasu 1960-1KA.Thangavelu-TP.Muthulaxmi-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் ரி.பி.முத்துலட்சுமி

P.D.Sampantham-TPM-Neelavukku Neranja Manasu 1960-1P.D.Sampantham-TPM-Neelavukku Neranja Manasu 1960-

‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ [1958] படத்தில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், ராகினி, ரி.பி.முத்துலட்சுமி, எம்.என்.ராஜம்

இருப்பவர்கள் இடமிருந்து வலம் வி.கே.ராமசாமி, சி.ரி.ராஜகாந்தம், வேணுபாய், ரி.ஆர்.ராமச்சந்திரன் [கருப்புச் சட்டையுடன்], ரி.கே.ராமச்சந்திரன், டணால் கே.ஏ.தங்கவேலு

VKR-Pandaribhai-PD.Sampantham-Ragini-TP.Muthulaxmi-MN.Rajam-TRR-TK.Ramachandran-CT.Rajakantham-Venubhai-KA.Thangavelu-Neelavukku Neranja Manasu 1958-

‘வல்லவனுக்கு வல்லவன்’ [1965] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி மற்றும் எஸ்.ஏ.அசோகனுடன் ஆர்.எஸ்.மனோகர்

TP.Muthulakshmi-RS.Manokar-SA.Asokan-Vallavanukku Vallavan 1965-1TP.Muthulakshmi-RS.Manokar-SA.Asokan-Vallavanukku Vallavan 1965-

‘ஆரவல்லி’ [1957] படத்தில் சிங்காரவல்லியாக ரி.பி.முத்துலெக்ஷ்மி

TP.Muthulakshmi as Sinkaaravalli-Aravalli 1957-TP.Muthulakshmi as Sinkaaravalli-Aravalli 1957-7TP.Muthulakshmi as Sinkaaravalli-Aravalli 1957-8TP.Muthulakshmi as Sinkaaravalli-Aravalli 1957-A

‘ஆரவல்லி’ [1957] படத்தில் மைனாவதியுடன் ரி.பி.முத்துலெக்ஷ்மி

TP.Muthulakshmi as Sinkaaravalli-Mainavathi-Aravalli 1957-TP.Muthulakshmi as Sinkaaravalli-Mainavathi-Aravalli 1957-1

‘ஆரவல்லி’ [1957] படத்தில் ஏ.கருணாநிதியுடன் ரி.பி.முத்துலெக்ஷ்மி

TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-1TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-2TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-3

‘ஆரவல்லி’ [1957] படத்தில் எம்.சரோஜாவுடன் ஏ.கருணாநிதியுடன் ரி.பி.முத்துலெக்ஷ்மி

M.Saroja as Chithravalli-TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-M.Saroja-TP.Muthulakshmi-A.Karunanidhi-Aravalli 1957-1

‘ஆரவல்லி’ [1957] படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் காகா ராதாகிருஷ்ணன்

Kakka Radhakrishnan as Aarachi-TP.Muthulakshmi -Aravalli 1957-Kakka Radhakrishnan as Aarachi-TP.Muthulakshmi -Aravalli 1957-1Kakka Radhakrishnan as Aarachi-TP.Muthulakshmi -Aravalli 1957-2

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் ரி.பி.முத்துலட்சுமி

TP.Muthulakshmi-Nadodi Mannan 1957-1TP.Muthulakshmi-Nadodi Mannan 1957-2TP.Muthulakshmi-JPC-Nadodi Mannan 1957-TP.Muthulakshmi-JPC-Nadodi Mannan 1957-1TP.Muthulakshmi-Nadodi Mannan 1957-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மிTP.Muthulakshmi-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி,

TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-1TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-2

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்TP.Muthulakshmi-CS.Pushpalatha-Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, புஷ்பலதாவுடன் TP.Muthulakshmi-CS.Pushpalatha-Anandan-Sengamala Theevu 1962-1TP.Muthulakshmi-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-

‘குல கௌரவம்’ [1974] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி  TP.Muthulakshmi-KULAGOWRAVAM 1974-TP.Muthulakshmi-KULAGOWRAVAM 1974-1

‘குல கௌரவம்’ [1974] படத்தில் தேங்காய் சீனிவாசன், ரி.பி.முத்துலக்ஷ்மிTP.Muthulakshmi-THENGAI-KULAGOWRAVAM 1974-

‘குல கௌரவம்’ [1974] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி  TP.Muthulakshmi-VKR-KULAGOWRAVAM 1974-TP.Muthulakshmi-VKR-KULAGOWRAVAM 1974-1TP.Muthulakshmi-VKR-KULAGOWRAVAM 1974-2

‘குல கௌரவம்’ [1974] படத்தில் ஜெயந்தியுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி  TP.Muthulakshmi-JAYANTHI-KULAGOWRAVAM 1974-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன்  ரி.பி.முத்துலட்சுமி

TRR-TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் சி.ரி.ராஜகாந்தத்துடன்  ரி.பி.முத்துலட்சுமி

CT.Rajakantham-TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-CT.Rajakantham-TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-1

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரன்ரி.பி.முத்துலட்சுமியுடன் பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம்

Poongaavanam MR.Santhanam-TRR-TP.Muthulakshmi-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண்” [1960] படத்தில் அஞ்சலி தேவி, பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், ரி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சி.ரி.ராஜகாந்தத்துடன் ரி.பி.முத்துலட்சுமி.Poongaavanam MR.Santhanam-CT.Rajakantham-Anjalidevi-TP.Muthulakshmi-TRR-Adutha Veetu Penn 1960-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ரி.பி.முத்துலட்சுமி TP.Muthulakshmi-Gomathiyin Kathalan 1955-ATP.Muthulakshmi-Gomathiyin Kathalan 1955-1

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ரி.பி.முத்துலட்சுமி

TP.Muthulakshmi-TRR-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி, தங்கவேலுவுடன் ரி.பி.முத்துலட்சுமி

TP.Muthulakshmi-Gomathiyin Kathalan 1955-

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் முத்துலட்சுமியுடன் தங்கவேலு

TP.MUTHULAKSHMi-Sowbhagyavathi 1957-1TP.MUTHULAKSHMi-Sowbhagyavathi 1957-TP.MUTHULAKSHMI-Thangavelu-Sowbhagyavathi 1957-TP.MUTHULAKSHMI-Thangavelu-Sowbhagyavathi 1957-1

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் முத்துலட்சுமியுடன் சாவித்திரிSAVITHRI-TP.MUTHULAKSHMI-Sowbhagyavathi 1957-TP.MUTHULAKSHMI-SAVITHRI-Sowbhagyavathi 1957-

“ஒளி விளக்கு” 1968 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் என்னத்தே கன்னையா

TP.Muthulakshmi-Oli Vilakku 1968-2TP.Muthulakshmi-Oli Vilakku 1968-1TP.Muthulakshmi-Oli Vilakku 1968-TP.Muthulakshmi-Ennathe Kannaiah-Oli Vilakku 1968-Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Oli Vilakku 1968-1AEnnathe Kannaiah-TP.Muthulakshmi-Oli Vilakku 1968-

“தெய்வீக உறவு” 1968 படத்தில் நாகேஷுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி TP.Muthulakshmi-Deiviga Uravu 1968-TP.Muthulakshmi-Nagesh-Deiviga Uravu 1968-TP.Muthulakshmi-Nagesh-Deiviga Uravu 1968-1

“தெய்வீக உறவு” 1968 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி TP.Muthulakshmi-VKR-Deiviga Uravu 1968-TP.Muthulakshmi-VKR-Deiviga Uravu 1968-1

“தெய்வீக உறவு” 1968 படத்தில் சச்சு, வி.கே.ராமசாமியுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி TP.Muthulakshmi-VKR-SACHU-Deiviga Uravu 1968-TP.Muthulakshmi-Nagesh-VKR-Deiviga Uravu 1968-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் எம்.ஆர்.ராதா TP.Muthulakshmi-Iruvar ullam 1963-TP.Muthulakshmi-Iruvar ullam 1963-1TP.Muthulakshmi-MR.Radha-Iruvar ullam 1963-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் சந்தியா Sandhya-TP.Muthulakshmi-Iruvar ullam 1963-TP.Muthulakshmi-Sandhya-Iruvar ullam 1963-

”ஹரிச்சந்திரா” 1956 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ரி.பி.முத்துலட்சுமி TP.Muthulakshmi-Harichandra 1956-TP.Muthulakshmi-VKR-Harichandra 1956-TP.Muthulakshmi-VKR-Harichandra 1956-1TP.Muthulakshmi-VKR-Harichandra 1956-2TP.Muthulakshmi-VKR-Harichandra 1956-3

”சர்வாதிகாரி” 1951 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் எம்.ஜி.ஆர்  TP.MUTHULAKSHMI-MGR-SARVATHIKARI 1951-1TP.MUTHULAKSHMI-MGR-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன்  ஏ.கருணாநிதிTP.MUTHULAKSHMI-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் எம்.சரோஜாM.SAROJA-TP.MUTHULAKSHMI-SARVATHIKARI 1951-1

”சர்வாதிகாரி” 1951 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் எம்.சரோஜா, ஏ.கருணாநிதிTP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-2TP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-1TP.MUTHULAKSHMI-M.SAROJA-A.KARUNANIDHI-SARVATHIKARI 1951-

“வண்ணக்கிளி” 1959 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ரி.பி.முத்துலட்சுமிtp-muthulakshmi-vannakili-1959tp-muthulakshmi-t-r-ramachandran-vannakili-1959-1tp-muthulakshmi-t-r-ramachandran-vannakili-1959

“வண்ணக்கிளி” 1959 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் பி.எஸ்.சரோஜாtp-muthulakshmi-bs-saroja-vannakili-1959

Leave a comment