T.S.Durairaj

ரி எஸ். துரைராஜ்

 1940-1970-களில் நடித்த ஒரு மேடை நாடக நடிகர், மிகத்திறமையான தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக விளங்கியவர். மேலும், தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்தவரான இவர் முதலில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடித்து வந்தார், அதன் பிறகு, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே” என்ற பாடல் இன்று வரையிலும் ஒலிக்காத திருமண வீடே இல்லையெனலாம். இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் இவர் தயாரித்த “பானை பிடித்தவள் பாக்கியசாலி” என்ற படத்தில் இடம்பெற்ற பாடலாகும். சந்திரபாபுவுடன் “ கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே, மச்சி வீட்டில் காத்திருக்கும் மல்கோவா மாம்பழமே” என்ற பாடல் இப்போதும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்த்திருக்கலாம். அப்பாடலில் வருபவர் தான் ரி.எஸ்.துரைராஜ்.  இவரது பருத்த உடல்வாகும் தங்கு தடையற்ற வசன உச்சரிப்பும் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும். குதிரை ரேஸில் கலந்து கொள்வதில் அலாதிப்பிரியர். தான் சம்பாதித்தையெல்லாம் குதிரை ரேசில் விட்டவர். மற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவும் குணமுடையவர்.

தனது மாஸ்டர் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலமாக பானை பிடித்தவள் பாக்கியசாலி, ஆயிரங்காலத்துப் பயிரு என்ற இரு படங்களைச் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ளார். இப்பட நிறுவனத்தின் இலட்சினை கூட பறக்கும் குதிரை என்பது சிறப்பு. நகைச்சுவை நடிகர்களிலேயே முதன்முதலாக ஏராளமாக சம்பாத்தித்தவர்.

 இவர் 1987-இல் சென்னையில் வைத்து காலமானார்.

சினிமா மாலைமலரில் ரி.எஸ்.துரைராஜ் பற்றி வெளியான கட்டுரைப்பகுதி.

நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற டி.எஸ்.துரைராஜ், பின்னர் பட அதிபராகவும், டைரக்டராகவும் சாதனை படைத்தார். பந்தயக் குதிரைகளும் வைத்திருந்தார். சென்னை கிண்டியில் நடந்த மிக முக்கிய குதிரைப் பந்தயத்தில், அவருடைய குதிரை வெற்றி பெற்றது.

டி.எஸ்.துரைராஜின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை. தந்தை ராஜா நாயுடு, தாயார் நாகலட்சுமி.

பட்டுக்கோட்டையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய டி.எஸ்.துரைராஜ், 5-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர், மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.

தொடர்ந்து, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பல நாடகங்களில் நடித்தார். அதன் பின்னர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜூம் சென்னைக்கு வந்தனர். என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து திரைப்படங்களில் துரைராஜ் நடிக்கத் தொடங்கினார்.

கலைவாணரின் பெரும்பாலான படங்களில், துரைராஜ் இடம் பெற்றார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் சொந்தமாகத் தயாரித்த ‘திருநீலகண்டர்’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தில், என்.எஸ்.கிருஷ்ணனும், துரைராஜூம் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் புகழ் பெற்றது.

டி.எஸ்.துரைராஜ் பாடல் ரூபத்தில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம், கலைவாணர் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வருவார். கடைசியில், ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தை சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்பார் துரைராஜ்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் கலைவாணர் திணறுவார். பாடலை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போவார். துரைராஜ் விடமாட்டார். கடைசியில் ஒருவழியாக ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே!’ என்று கலைவாணர் பதில் சொல்வார்.

1940-ம் ஆண்டில் வெளியான எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’யில், என்.எஸ்.கிருஷ்ணன் – டி.எஸ்.துரைராஜ் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சி மிகப்புகழ் பெற்றதாகும்.

சகுந்தலைக்கு துஷ்யந்தன் கொடுத்த மோதிரம், அவள் கையில் இருந்து நழுவி விட, அந்த மோதிரத்தை ஒரு மீன் விழுங்கி விடும். என்.எஸ்.கிருஷ்ணனும், துரைராஜூம் போட்ட தூண்டிலில் அந்த மீன் சிக்கிவிடும்.

அந்த மீன் யாருக்கு சொந்தம் என்பதில் இருவருக்கும் தகராறு ஏற்படும். ‘மீனில் பங்கு கேட்டால், அடிதான் விழும்’ என்பார் கலைவாணர்.

‘அடிப்பியோ! உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்று மீசையை முறுக்குவார், துரைராஜ்.

கலைவாணர் அவரை உதைப்பார்.

துரைராஜ், பாதி அழுகையுடன், ‘அடிப்பியோ! உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்பார்.

கலைவாணர் மீண்டும் அடிப்பார்.

அடிமேல் அடி வாங்கி, கடைசியில் பலமாக அழுது கொண்டே ‘உங்கப்பன் மவனே சிங்கம்டா!’ என்பார், துரைராஜ்.

‘அழாதேடா! மீனை அறுத்து, ஆளுக்குப் பாதி எடுத்துக்குவோம்!’ என்று துரைராஜை கலைவாணர் தேற்றுவார். மீனை அறுக்கும்போது, துஷ்யந்தனின் கணையாழி வெளியே விழும்!

இந்த நகைச்சுவையை இன்று பார்ப்பவர்கள் கூட, விலா நோகச் சிரிப்பார்கள். அத்துடன், ‘கவுண்டமணி – செந்தில் பாணி நகைச்சுவையை, அந்தக் காலத்திலேயே கலைவாணரும், துரைராஜூம் நடித்துக் காட்டியிருக்கிறார்களே!’ என்று வியப்படைவார்கள்.

1948-ம் ஆண்டு ‘மரகதா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சொந்தப் படக்கம்பெனி தொடங்கினார், துரைராஜ். ‘பிழைக்கும் வழி’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் டி.எஸ்.பாலையா, டி.எஸ்.துரைராஜ், டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1949-ம் ஆண்டு ‘கலியுகம்’ என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தி வந்தார். அது மட்டுமின்றி இலங்கை போன்ற அயல் நாடுகளில் நாடகத்தை நடத்தி வெற்றி கண்டார்.

இந்த நாடகத்தின் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நடிகராக அறிமுகம் செய்தார். அதன் பின்னர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞராகி கொடிகட்டிப்பறந்தார்.

1951-ம் ஆண்டு ஏவி.எம். தயாரித்த ‘ஓர் இரவு’ 1953-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘திரும்பிப்பார்’ ஆகிய படங்களிலும் துரைராஜ் நடித்தார். 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்’ படத்தில் போலீஸ் ஏட்டாக தோன்றி மிகப்பிரமாதமாக நடித்தார்.

1958-ம் ஆண்டு ‘பானை பிடித்தவள் பாக்கியலட்சுமி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்தார். இதில் சாவித்திரி கதாநாயகியாக நடித்தார். இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே!’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

1960-ம் ஆண்டு ‘படிக்காத மேதை’யில் சிவாஜியுடன் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் நடித்தார்.

1963-ம் ஆண்டு ‘ஆயிரம் காலத்து பயிர்’ என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார். படத்தில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். நடிகர் அசோகன் நடித்த ‘இது சத்தியம்’ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

நடிகர்களிலேயே பந்தயக் குதிரை வைத்திருந்தவர் டி.எஸ்.துரைராஜ். அந்த காலத்திலேயே சொந்தமாக 3 குதிரைகளை வைத்து இருந்தார். தென்இந்தியாவிலேயே நடிகர்களில், அதிக பந்தயங்களில் வென்றவர் என்ற பெயரையும் பெற்றார்.

அவருடைய ‘விண்ட் மாஸ்டர்’ என்ற குதிரை, மிக முக்கியமான பந்தயம் ஒன்றில் முதலாவதாக வந்து வெற்றிக் கோப்பை பெற்றது.

நடிகர் டி.எஸ்.துரைராஜ் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் – நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!

Updated: September 2, 2016 11:00 IST

சொந்தப் பட நிறுவனத்தின் இலட்சினை

Aayiram Kaalaththu Payir 1963-Logo

ஆர்.சி.ஜெயந்தன்3_2996376g4_2996372g

எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ 1940-ல் வெளியானது. சகுந்தலையாக நடித்த எம்.எஸ்.எஸ், துஷ்யந்தனாக நடித்த ஜி.என். பாலசுப்ரமணியம் ஆகிய நட்சத்திரங்களின் வசீகரத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், டங்கனின் இயக்கம், கல்கி சதாசிவத்தின் தயாரிப்பு எனப் பல காரணங்கள் இந்தப் படத்தின் வெற்றியின் பின்னால் இருந்தன. இவை தவிர இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது பாமர ரசிகர்களை திரையரங்களுக்கு வரவழைத்த கலைவாணர் என்.எஸ்.கே. டி.எஸ்.துரைராஜ் ஜோடியின் “அடிப்பியோ… ங்கொப்பன் மவனே… சிங்கம்டா…” என்ற எவர்க்ரீன் காமெடி.

கடலையொட்டிய நதியின் முகத்துவாரத்தில் இரண்டு தூண்டில்களைப் போட்டுவிட்டு மீனுக்காகக் காத்திருக்கிறார்கள் மீனவ நண்பர்களான என்.எஸ்.கே.யும் துரைராஜூம். இந்த இடைவெளியில் கடலோடி மக்களின் அன்றாடப் பாடுகளை இருவரும் லாவணியாகப் பாடி முடிக்க, மீன் சிக்கிவிடுகிறது. தூண்டில் மீன் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. மீனைத் தூக்கிக்கொண்டு துரைராஜ் ஓட, அவரைத் துரத்திப்பிடிக்கும் என்.எஸ்.கே. அடிக்கக் கையை ஓங்குகிறார். அப்போது துரைராஜ் “ அடிப்பியோ… ங்கொப்பன் மவனே சிங்கம்டா” என்று வீரமாக மீசையை முறுக்குவார்.

இப்படிச் சொன்னதும் நிஜமாகவே என்.எஸ்.கே. அவரை அடிக்க, அடியை வாங்கிக்கொண்டு அதே வசனத்தைச் சுருதி குறைத்து முனகியபடியே மீண்டும் கூறி துரைராஜ் மீசையை முறுக்குவார். இப்போது மீண்டும் என்.எஸ்.கே. அடிக்க, ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே அந்த வசனத்தை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துரைராஜ் கெத்து காட்டுவார். இப்படிப் பல படங்களில் தொடர்ந்த இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாசத்தை ரசிகர்கள் அன்று விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.

பல தலைமுறைகளுக்குப் பிறகு கவுண்டமணியிடம் செந்தில் வாங்கிய அடி, ‘வின்னர்’ படத்தில் தொடங்கி ‘போக்கிரி’ வரை ‘கைப்புள்ள’ வடிவேலு வாங்கிய அடி என எல்லாவற்றுக்குமே இந்த ஜோடி போட்டுக்கொடுத்த ‘அடி’தான் அஸ்திவாரம். அடிப்பதும் ஆபாச வசனமும்தான் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அன்று என்.எஸ்.கே.- துரைராஜ் ஜோடியின் நகைச்சுவையில் யாரையும் பழித்துரைக்காத தூய்மை இருந்தது.

ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. இல்லாத வெற்றிடத்தில் தனித்து நின்று தனது நகைச்சுவைப் பாதையை டி.எஸ்.துரைராஜ் அமைத்துக்கொண்டாலும் தனது நண்பர் என்.எஸ்.கே.யின் பாதையிலிருந்து விலகிவிடாமல் அவரது பாணியை இறுகப் பிடித்துக்கொண்டார். நடிப்பதிலும் பாடுவதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் கூட அவர் என்.எஸ்.கே.யின் இன்னொரு பிரதியாகவே சுமார் 20 ஆண்டுகள் தமிழ்த் திரையில் வலம்வந்தார்.

என்.எஸ்.கே.யின் நண்பர்

தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டைதான் டி.எஸ். துரைராஜின் சொந்த ஊர். ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் ராஜா நாயுடு நாகலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். துரைராஜுக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். திருமணமாகிச் சென்ற அக்காவுக்கு உதவியாக இருக்கட்டும் என்று மதுரைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் நாடகக் கலையின் தாய்வீடாக இருந்த மதுரையில் அன்று சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுக்கள் புகழ்பெற்று விளங்கிய காலம்.

சிறுவயது முதலே நக்கலும் நையாண்டியுமாகப் பேசும் துரைராஜுக்கு இட்டுக்கட்டிப் பாட்டுப் பாடும் திறனும் இருந்தது. இதைக் கண்ட அவரது மைத்துனர், எம். கந்தசாமி முதலியார் நடத்திவந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்துவிட்டார். 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், அங்கு வந்து சேர்ந்த எம்.ஜி. சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி. என். ரத்னம், என்.எஸ்.கே. ஆகியோருக்கு நண்பர் ஆனார்.

பிறகு, கலைவாணருடன் நெருங்கி நட்புகொண்டார். அவருடன் அதிக நாடகங்களில் நடித்தார். என்.எஸ்.கே.யுடன் துரைராஜும் சென்னைக்கு வர மாடர்ன் தியேட்டரில் கம்பெனி நடிகர்கள் ஆனார்கள். ஆனால் அடையாளம் பெறும் அளவுக்கு வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’மேனகா’ படத்தில் கலைவாணருக்கே சினிமாவில் நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது; என்றாலும் நண்பன் துரைராஜுக்காகவும் தொடர்ந்து முயன்றுவந்தார் கலைவாணர். ராஜா சாண்டோ இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துத் தயாரித்த ‘திருநீலகண்டர்’(1939) படத்தில் முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார் கலைவாணர்.

மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் துரைராஜும் எரிந்த கட்சி எரியாத கட்சியாகப் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் பெரிய ஹிட்டடித்தது. டி.எஸ். துரைராஜ் லாவணிப் பாடல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டுவரும் கலைவாணரிடம் ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தைச் சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்று துரைராஜ் வில்லங்கமான கேள்வியைக் கேட்க, அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவார் கலைவாணர். கடைசியில் வேறு வழியில்லாமல் ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே! தொந்தி பெருத்தது அண்ணே அண்ணே’ என்று கூறி சமாளிப்பார்.

இந்தப் படத்துக்கு முன்பே வாசன் வெளியிட்ட 1939-ல் ‘சிரிக்காதே’ என்ற முழு நீள நகைச்சுவை படத்திலும் அதே ஆண்டில் வெளியான ‘ரம்பையின் காதல்’ படத்திலும் டி.எஸ். துரைராஜ் நடித்திருந்தாலும் ‘திருநீலகண்டர்’, ‘சகுந்தலை’ படங்களுக்குப் பிறகு என்.எஸ்.கே. துரைராஜ் ஜோடி மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து தன்னைத் தேடி வந்த சுந்தரம் என்ற இளம் கவிஞனை ‘சக்தி நாடக சபா’வில் சேர்த்துவிட்டார் துரைராஜ். பிறகு ‘கலியுகம்’ என்ற தனது நாடகத்தில் அவரை நடிகராக்கி அழகுபார்த்தார். அவர்தான் பின்னாட்களில் பாட்டுக் கோட்டையாக உயர்ந்து நின்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

கைதும் தனிமையும்

கலைவாணர் இருந்தால் துரைராஜ் அந்தப் படத்தில் இருப்பார் என்ற நிலையை ‘லட்சுமி காந்தன்’ கொலைவழக்கு மாற்றியது. அந்த வழக்கில் கைதாகி 30 மாதங்கள் பாகவதருடன் கலைவாணர் சிறையில் இருக்க வேறு வழியில்லாமல் தனித்து நடிக்கத் தொடங்கினார் டி.எஸ். துரைராஜ். பாகவதர் சிறை சென்ற பிறகு எம்.ஜி.ஆரும் நாயகனாக எழுந்துவந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்நாளின் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற டி.எஸ். துரைராஜ், தனது நண்பரின் வழியில் பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக விளங்கினார்.

ஒல்லியான உடல்வாகுடன் திரையில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் பருத்த தோற்றத்துக்கு மாறிய துரைராஜ், தனது தோற்றத்துக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்புடன் குணசித்திர நடிகர், குறும்பு செய்யும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்துப் பல பரிமாணங்களில் கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்களில் அதிகம் பொருளீட்டியவர் என புகழப்படும் துரைராஜ், சென்னையில் ராயப்பேட்டையில் பெசன்ட் சாலையில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டி வசித்தார். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். விரல்களில் வைர மோதிரம் அணிந்தும் வலம் வந்தார்.

குதிரையின் வேகம்

புகழின் உச்சியில் இருந்தவருக்குக் குதிரைப் பந்தயம் மீது தீவிர வேட்கை உருவானது. திரை நடிப்பு, நாடக வருவாய் ஆகிவற்றின் மூலம் சம்பாதித்ததில் பெரும் பகுதியைக் குதிரைப் பந்தயங்களில் பணயம் வைத்தார். உயர்தரப் பந்தயக் குதிரைகளை வாங்கிப் பந்தயங்களில் ஓட விட்டார். ஆனால், குதிரைப் பந்தயம் அவரது திரைவாழ்வின் வேகத்தையும் செல்வத்தையும் குறைத்தது. இழந்த பொருளை மீட்க, பட நிறுவனம் தொடங்கிச் சில படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் செய்தார். சாவித்திரி தங்கையாகவும் தான் அண்ணாகவும் நடித்து 1958-ல் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தைத் தயாரித்து இயக்கினார் துரைராஜ்.

அந்தப் படத்தில் தங்கைக்கு அறிவுரை சொல்லும்விதமாக ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று திருச்சி லோகனாதன் குரலில் இவர் பாடுவதுபோல் அமைந்த பாடல் இன்றும் தமிழகத்தில் டி.எஸ். துரைராஜை நினைவுபடுத்தும் விதத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

Source: http://tamil.thehindu.com/cinema/cinema-others/ article9064833.ece

ஓர் இரவு படத்தில் ரி.எஸ்.துரைராஜ்.

ImageTS.Durairaj-Balaiah-Ore Iravu 1951 TS.Durairaj-Ore Iravu 1951 TS.Durairaj-Ore Iravu 1951-1 TS.Durairaj-Ore Iravu 1951-2TS.DURAIRAJ-MALAIKKALLAN TS.DURAIRAJ-MALAIKKALLAN-1

மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் துரைராஜ்TS.DURAIRAJ-MG.CHAKRAPANI-MALAIKKALLANV.M.EZHUMALAI - TS.DURAIRAJ-CHAKRAPANI- MALAIKKALLAN

மலைக்கள்ளன் படத்தின் இறுதிக்காட்சியில் இடமிருந்து வலமாக துரைராஜ், ஏழுமலை, எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ஆர், டி.பாலசுப்பிரமணியம், பானுமதி, பி.எஸ்.ஞானம்TS.DURAIRAJ-EZHUMALAI- CHAKRAPANI- MGR -D.BALASUBRAMONIYAM- BHANUMATHI- PS.GNANAM-MALAIKKALLAN

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ரி.எஸ்.துரைராஜ்

TS.Durairaj-Kappalottiya Thamizhan-

‘பங்காளிகள்’ [1963] படத்தில் துரைராஜ்

TS Durairaj-PANGALIKALTS Durairaj-PANGALIKAL-1

‘பங்காளிகள்’ [1963] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் T.S.துரைராஜ்TS Durairaj-MR RADHA-PANGALIKAL-1

‘பங்காளிகள்’ [1963] படத்தில்  கே.சாய்ராமன்-துரைராஜ்K Sairam-TS Durairaj-PANGALIKAL

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் காவலன் கதாபாத்திரத்தில் துரைராஜ்

TS.Durairaj as Kaavalan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

மாமன் மகள்” [1950]  படத்தில் ரி.எஸ்.துரைராஜ் TS.Dorairaj-Maaman Magal 1950-TS.Dorairaj-Maaman Magal 1950-1TS.Dorairaj-Maaman Magal 1950-2TS.Dorairaj-Maaman Magal 1950-3

மாமன் மகள்” [1950]  படத்தில் சாவித்திரியுடன் ரி.எஸ்.துரைராஜ் TS.Dorairaj-Savithri-Maaman Magal 1950-

மாமன் மகள்” [1950]  படத்தில் ஜே.பி.சந்திரபாபு, ரி.எஸ்.துரைராஜ் TS.Dorairaj-JP.Chandrababu-Maaman Magal 1950-TS.Dorairaj-JP.Chandrababu-Maaman Magal 1950-1

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் ரி.எஸ்.துரைராஜ் T.S.Durairaj-Paanai pidithaval bhagyasali 1958 -T.S.Durairaj-Paanai pidithaval bhagyasali 1958 -1T.S.Durairaj-Paanai pidithaval bhagyasali 1958 -2

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் கே.சாவித்திரி T.S.Durairaj-K.Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -T.S.Durairaj-K.Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -1T.S.Durairaj-K.Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -2

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் வீரப்பா P.S.Veerappa-T.S. Durairaj-Paanai pidithaval bhagyasali 1958 -

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் வி.எஸ்.ராகவன், முஸ்தபா, ரி.எஸ்.துரைராஜுடன் பி.எஸ்.வீரப்பா

P.S.Veerappa-VSR-T.S.Durairaj-MK.Musthafa-Paanai pidithaval bhagyasali 1958 -

T.S.Durairaj with Poongaavanam M.R.Santhanam  in ‘MEERA’ [1945]TS.Durairaj-Meera 1945-TS.Durairaj-Meera 1945-1TS.Durairaj-Meera 1945-2TS.Durairaj-Poongaavanam MR.Santhanam-Meera 1945-Poongaavanam MR.Santhanam-TS.Durairaj-Meera 1945-1

“திருநீலகண்டர்” [1939] படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

TS.Durairaj-NSK-Thirunilagandar 1939-3TS.Durairaj-NSK-Thirunilagandar 1939-2TS.Durairaj-NSK-Thirunilagandar 1939-1TS.Durairaj-NSK-Thirunilagandar 1939-NSK-TS.Durairaj-Thirunilagandar 1939-TS.Durairaj-Genova 1953-

”ஜெனோவா” 1953 படத்தில்  ரி.எஸ்.துரைராஜுடன் கொட்டாப்புளி ஜெயராமன்TS.Durairaj-Genova 1953-1TS.Durairaj-Genova 1953-2Kottappuli Jayaraman-TS.Durairaj-Genova 1953-

“மணமகள் “ 1951 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் ரி.எஸ்.துரைராஜ் TS.Durairaj-Manamagal 1951-TS.Durairaj-Manamagal 1951-1TS.Durairaj-TS.Balaiah-Manamagal 1951-TS.Durairaj-TS.Balaiah-Manamagal 1951-1TS.Durairaj-TS.Balaiah-Manamagal 1951-2

“மணமகள் “ 1951 படத்தில் ரி.ஏ.மதுரம், ரி.எஸ்.பாலையாவுடன் ரி.எஸ்.துரைராஜ்

TS.Durairaj-TS.Balaiah-TA.Maduram-Manamagal 1951-51

“நல்ல தீர்ப்பு” 1959 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Nalla Theerpu 1959-1TS.Durairaj-Nalla Theerpu 1959-TS.Durairaj-TRR-Nalla Theerpu 1959-1TS.Durairaj-TRR-Nalla Theerpu 1959-

“நல்ல தீர்ப்பு” 1959 படத்தில் செந்தாமரையுடன் துரைராஜ்TS.Durairaj-Senthamarai-Nalla Theerpu 1959-56

“திரும்பிப்பார்” 1953 படத்தில்  ரி.எஸ்.துரைராஜ், சிவாஜிகணேசன்ts-durairaj-thirumpipaar-1953-1ts-durairaj-thirumpipaar-1953ts-durairaj-sivaji-thirumpipaar-1953-1ts-durairaj-sivaji-thirumpipaar-1953

“திரும்பிப்பார்” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜ், பி.வி.நரசிம்மபாரதிts-durairaj-pv-narasimha-bharathi-thirumpipaar-1953

“திரும்பிப்பார்” 1953 படத்தில் எம்.என்.கிருஷ்ணனுடன் ரி.எஸ்.துரைராஜ், சிவாஜிகணேசன்ts-durairaj-sivaji-mn-krishnan-thirumpipaar-1953mn-krishnan-ts-durairaj-sivaji-thirumpipaar-1953-1

“திரும்பிப்பார்” 1953 படத்தில் பி.வி.நரசிம்மபார்தியுடன் ரி.எஸ்.துரைராஜ்,  சிவாஜிகணேசன்pv-narasimha-bharathi-ts-durairaj-sivaji-thirumpipaar-1953

“திரும்பிப்பார்” 1953 படத்தில் எம்.என்.கிருஷ்ணனுடன் ரி.எஸ்.துரைராஜ்mn-krishnan-ts-durairaj-thirumpipaar-1953-165

“பிரஹ்லாதா” 1939 படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் ரி.எஸ்.துரை ராஜ்TS.Durairaj-NS.Krishnan-PRAHLADA 1939-NS.Krishnan-TS.Durairaj-PRAHLADA 1939-

“பிரஹ்லாதா” 1939 படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் ரி.எஸ்.துரை ராஜ்TS.Durairaj-PS.Gnanam-PRAHLADA 1939-1TS.Durairaj-PS.Gnanam-PRAHLADA 1939-69

“வள்ளியின் செல்வன்” 1955 படத்தில் ரி.எஸ்.துரை ராஜ் TS.Durairaj-Valliyin Selvan 1955-TS.Durairaj-Valliyin Selvan 1955-2TS.Durairaj-Valliyin Selvan 1955-1

“வள்ளியின் செல்வன்” 1955 படத்தில் ஜெமினி கணேசனுடன் ரி.எஸ்.துரை ராஜ் TS.Durairaj-Gemini Ganesan-Valliyin Selvan 1955-

“வள்ளியின் செல்வன்” 1955 படத்தில் வனஜாவுடன் ரி.எஸ்.துரை ராஜ் TS.Durairaj-Vanaja-Valliyin Selvan 1955-74

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் மாதவியுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Aayiram Kaalaththu Payir 1963-2TS.Durairaj-Aayiram Kaalaththu Payir 1963-1TS.Durairaj-Aayiram Kaalaththu Payir 1963-TS.Durairaj-Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-TS.Durairaj-Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-1

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.எஸ்.துரைராஜ், வைரம் கிருஷ்ணனுடன் 

TS.Durairaj-Vairam Krishnamoorthy-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் கே.கண்ணனுடன் ரி.எஸ்.துரைராஜ்

TS.Durairaj-K.Kannan-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில்  வைரம் கிருஷ்ண மூர்த்தி,ரி.கே.எஸ்.சந்திரனுடன் ரி.எஸ்.துரைராஜ்   TKS.Chandran-Vairam Krishnamoorthy-TS.Durairaj-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ராதாபாய், வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன்  ரி.எஸ்.துரைராஜ்

Radhabai-TS.Durairaj-Vairam km-Aayiram Kaalaththu Payir 1963-83

“குடும்ப விளக்கு” 1956 படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Kudumba Vilakku 1956-2TS.Durairaj-Kudumba Vilakku 1956-1TS.Durairaj-Kudumba Vilakku 1956-TS.Durairaj-MG.Chakkarapani-Kudumba Vilakku 1956-87

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Ezhai Padum Paadu 1950-1TS.Durairaj-Ezhai Padum Paadu 1950-TS.Durairaj-T.S.Balaiya-Ezhai Padum Paadu 1950-1TS.Durairaj-T.S.Balaiya-Ezhai Padum Paadu 1950-

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் குமாரி. என்.ராஜத்துடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Kumari N.Rajam-Ezhai Padum Paadu 1950-

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன், ரி.எஸ்.பாலையாவுடன்  ரி.எஸ்.துரைராஜ்

TS.Durairaj-T.S.Balaiya-V.Gopalakrishnan-Ezhai Padum Paadu 1950-93

புத்திமான் பலமான் ஆவான் 1940 படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் ரி.எஸ்.துரைராஜ்.TS.Durairaj-Puthiman Balavan Aavan 1940-1TS.Durairaj-Puthiman Balavan Aavan 1940-NS.Krishnan-TS.Durairaj-Puthiman Balavan Aavan 1940-NS.Krishnan-TS.Durairaj-Puthiman Balavan Aavan 1940-197

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் எம்.ஆர்.சுவாமிநாதன்TS.Durairaj-Ponni 1953-2TS.Durairaj-Ponni 1953-1TS.Durairaj-Ponni 1953-TS.Durairaj-MR.Swaminathan-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் எம்.ஆர்.சுவாமிநாதன், பச்சை நாயகி

TS.Durairaj-MR.Swaminathan-Pachanayagi-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் லலிதாTS.Durairaj-Lalitha-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் பேபி ஆஷாTS.Durairaj-Baby Asha-Ponni 1953-104

கன்னியின் சபதம் 1958 படத்தில் சந்தியா, எம்.என்.ராஜத்துடன் துரைராஜ்

TS.Durairaj-MN.Rajam-Kanniyin Sabatham 1958-1TS.Durairaj-MN.Rajam-Kanniyin Sabatham 1958-TS.Durairaj-MN.Rajam-Sandhya-Kanniyin Sabatham 1958-107

”மரகதம்” 1959 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன்  சிவாஜி கணேசன்TS. Durairaj-Maragatham 1959-TS. Durairaj-Sivaji-Maragatham 1959-

”மரகதம்” 1959 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் ரி.பி.முத்துலட்சுமிTS. Durairaj-T.P.Muthulakshmi-Maragatham 1959-TS. Durairaj-T.P.Muthulakshmi-Maragatham 1959-1TS. Durairaj-T.P.Muthulakshmi-Maragatham 1959-2

”மரகதம்” 1959 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் ரி.எஸ்.பாலையாTS. Durairaj-T.S. Balaiah-Maragatham 1959-TS. Durairaj-T.S. Balaiah-Maragatham 1959-01

”மரகதம்” 1959 படத்தில் ரி.எஸ்.துரைராஜுடன் ரி.எஸ்.பாலையா, சந்தியாTS.Durairaj-Santhya-T.S.Balaiah-Maragatham 1959-115

ரம்பையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன்  ரி.எஸ்.துரைராஜ் TS.Durairaj-Rambha's Love or Yathabhavishya -1TS.Durairaj-Rambha's Love or Yathabhavishya -TS.Durairaj-NSK-Rambha's Love or Yathabhavishya -1TS.Durairaj-NSK-Rambha's Love or Yathabhavishya -NS.Krishnan-TS.Durairaj-Rambha's Love or Yathabhavishya -1NS.Krishnan-TS.Durairaj-Rambha's Love or Yathabhavishya -121

“கன்னியின் சபதம்” 1958 படத்தில் கே.ஆர்.ராமசாமியுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Kanniyin Sabatham 1958-TS.Durairaj-KR. Ramaswamy-Kanniyin Sabatham 1958-

“கன்னியின் சபதம்” 1958 படத்தில்  எம்.என்.ராஜத்துடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-MN.Rajam-Kanniyin Sabatham 1958-124

நிச்சயதாம்பூலம்’ 1958 படத்தில் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Nichayathamboolam 1958-125

‘’மதன காம ராஜன்’’ 1941 படத்தில் எம்.ஆர்.சுவாமிநாதனுடன் ரி.எஸ்.துரைராஜ்TS.Durairaj-Mathana Kama Rajan 1941-.jpgTS.Durairaj as Thandavan-Mathana Kama Rajan 1941-01TS.Durairaj as Thandavan-Mathana Kama Rajan 1941-TS.Durairaj -MR.Saminathan-Mathana Kama Rajan 1941-

‘’மதன காம ராஜன்’’ 1941 படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, எம்.எஸ்.சுந்தரிபாயுடன் ரி.எஸ்.துரைராஜ்

TS.Durairaj-MS.Sundaribhai-Mathana Kama Rajan 1941-TS.Durairaj-MS.Sundaribhai-Kothamangalam Subbu -Mathana Kama Rajan 1941-131

S ource:- http://cinema.maalaimalar.com/2013/11/20221055/ts-thurairaj-cinema-history.html

Leave a comment