Seethalakshmi

சீதாலக்ஷ்மி- பி.எஸ்.

எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம். 1951-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிவாஜிகணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.ரவீந்தர் எழுதிய அட்வகேட் அமரன்” மற்றும் இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். 

படப்பிடிப்பு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர்  ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.

கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார்.

நாடகமே உலகம், அன்னமிட்டக்கை, திருமலை தென்குமரி, உரிமைக்குரல், தங்கக்கோபுரம், நீதிபதி, திலகம், நான் யார் தெரியுமா, சத்திய சுந்தரம், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம்,வில்லி,நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்.

பி.எஸ்.சீதாலக்ஷ்மி குறித்து http://nagoori.wordpress.com/ வலைத்தளத்தில் காணக்கிடைக்கப் பெற்ற செய்தி. நன்றி:- திரு.அப்துல் கையூம்.

எம்.ஜி.ஆர் நாடக மன்ற நாடகங்களில் நடித்த நடிகைளில் இன்னொரு  பிரபலம்  பி.எஸ்.சீதாலக்ஷ்மி. அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.. எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1951-ஆம் ஆண்டு தன் பெற்றோருடன் ராமநாதபுரத்திலிருந்து வந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலிருந்தே முத்துச்சாமி நாடாரின் நாடகக்குழு போன்றவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது.

சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

ரவீந்தர் எழுதிய அட்வகேட் அமரன் மற்றும் இன்பக் கனவு நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். இவருடைய அலட்சியமான நடிப்பும், எடுப்பான குரலும் துடிப்பான பேச்சும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. லாயிட்ஸ் ரோட்டில்தான் பெரும்பான்மையான நாடக ஒத்திகைகள் நடைபெறும்.

சரியான நேரத்தில் ஒத்திகைக்கு வரவேண்டும். என்பதில் கண்டிப்பாக இருந்தார் எம்.ஜி.ஆர்.ஆர். யாராவது தாமதமாக வந்தால் பள்ளி வாத்தியார் போன்ற கண்டிப்புடன் கதவைச் சாத்தி விட்டு வெளியே கால்கடுக்க நிற்க வைத்து விடுவார். இதற்கு பயந்தே நாடகக் கலைஞர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். நேரம் தவறாமல் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி.

தான் பேச வேண்டிய வசனத்தை முன்கூட்டியே ரவீந்தரிடம் “ஸ்கிரிப்ட்” கேட்டு  வாங்கிக்கொண்டுச் சென்று அதற்கேற்றவாறு மனனம் செய்துக் கொண்டு வந்து பிழையின்றி அவர் ஒப்பிப்பார். வசனங்களை, உணர்ச்சிகளைக் கொட்டி ஏற்ற இறக்கத்துடன் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவிப்பதில் ரவீந்தருக்கு நிகர் அவரே. மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர்  ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.

அட்வகேட் அமரன் நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.

“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின்  நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.

எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.

நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.

சீதாலக்ஷ்மி நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களே ஏற்று நடித்தார். நாடகத்தின் மூலம் அவருக்கு கிடைக்கின்ற வருமானம் மிகச் சொற்பமான தொகையாகவே இருந்தது. சிவாஜி நாடக மன்றம் நடத்திய “வேங்கையின் மைந்தன்”, “தேன்கூடு”, “நீதியின் நிழல்”, “களம் கண்ட கவிஞன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “ஜஹாங்கீர்” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் காவல்துறையினரை மையமாக வைத்துப் இவர் பாடும் தாலாட்டுப் பாடல் காட்சி  பலமுறை தடை செய்யப்பட்டிருக்கிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.

எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களில் அம்மாவாக, சகோதரியாக, நாத்தனாராக, வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அற்புதமான கலைஞர் இவர்.

Potpourri of titbits about Tamil cinema – P.S.Seethalakshmi

Thiraichuvai          By Majordasan

She has started her cinema career at the tender age of eight and her journey in cinema continues even at the age of eighty. We share our meeting with Smt.P.S.Seethalakshmi the Tamil Cinema actress of yesteryear at her house in Saligramam, Chennai. She was walking in slowly using a walking stick due to arthritis problem and started talking in her known high-pitched voice. She said ‘though we are from Ramanathapuram, my father went to Burma in search of an employment. My mother Ponnammal managed the family with self-confidence. My parents had a total of 11 children six men and five women. Now only me and my 7th brother Gandhi Kumar are the surviving members of my family now . My father who worked in a press moved the family to Chennai in 1951 after the independence.

During my younger age I had met Nathaji Subhash Chandrapose and expressed my love towards his freedom movement and my respect towards independence India. I acted in some of the dramas staged at Nataji’s INA camp by joining the drama group of Muthuswami Nadar. We all will meet Netaji every week while handing over the drama collections towards funding the freedom struggle organised by him. We all will yell got freedom for India holding the Kadhi flag in our hands. We had met almost all the top leaders at the camp.

Since I joined the drama troupe due to family circumstances, I continued and had my formal education in the troupe. My mother encouraged my acting in cinema and drama and remained a catalyst for my growth in the acting field. I was acting in amateur drama troupes and received invitation from bigger regular drama companies.

I had acted in a number of dramas staged by the drama troupes of MGR, Sivaji, K.R.Ramasamy, SSR and others. Though the dramas earned me a name for my acting I was not monetarily benefited. I started acting in small roles in cinema without it interfering with my acting in dramas.

In Udayasooriyan a drama penned by Kalaignar Karunanidhi, he acted as hero and Manorama as heroin. The lullaby I sang about the police was several times banned. My comedy acting with N.S.K. and Rajagopal received all round appreciation from the fans.

http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/Feb13_1_15/Potpourri_of_

titbits_about_Tamil_cinema_PS_Seethalakshmi.html

Seethalakshmi. Charactor and comedienne roles in Thamizh Films.

நாடகமே உலகம் [1979]படத்தில் சீதாலட்சுமி

Image

சத்திய சுந்தரம் [1981]படத்தில் சீதாலட்சுமி

SEETHALAXMI-SATHYA SUNDARAM

நீதிபதி (1955) படத்தில் எம்.என்.ராஜத்துடன் சீதாலக்ஷ்மி (இடது)Seethalakshmi-Neethipathi-1955 

திலகம் படத்தில் சீதாலக்ஷ்மி

 SEETHALAKSHMI-THAMBARAM LALITHA-THILAGAM

காரைக்கால் அம்மையார் [1973] படத்தில் கே.ரி.ருக்மணியுடனும் தனித்தும் சீதாலக்ஷ்மிSeethalakshmi-Karaikkal Ammaiyar-1973- Seethalakshmi-KT.Rukmoni-Karaikkal Ammaiyar-1973-

கலாட்டா கல்யாணம் [1966] படத்தில் சிவாஜிகணேசன், வி.எஸ்.ராகவனுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Sivaji-Galatta Kalyanam 1967- Seethalakshmi-VSR-Galatta Kalyanam 1967-

திருமலை-தென்குமரி [1970] படத்தில் சீதாலக்ஷ்மியுடன் கே.டி,சந்தானம்KD.Santhanam-Seethalakshmi-Thirumalai Thenkumari 1970-1

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் சீதாலக்ஷ்மி Seethalakshmi-Kalyaniyin Kanavan 1963-Seethalakshmi-Kalyaniyin Kanavan 1963-2

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் சீதாலக்ஷ்மி Seethalakshmi-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-Seethalakshmi-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-1Seethalakshmi-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-2

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் சீதாலக்ஷ்மி Seethalakshmi-SVR-Kalyaniyin Kanavan 1963-

“தேனும் பாலும்” [1970] படத்தில் சீதாலக்ஷ்மியுடன் நாகேஷ்

Seethalakshmi-Nagesh-THENUM PAALUM 1970-

“தேனும் பாலும்” [1970] படத்தில் சீதாலக்ஷ்மியுடன் சிவாஜிகணேசன், சரோஜாதேவி

Seethalakshmi-THENUM PAALUM 1970-Seethalakshmi-THENUM PAALUM 1970-1Seethalakshmi-THENUM PAALUM 1970-2Seethalakshmi-Sivaji-Sarojadevi-THENUM PAALUM 1970-

”குமுதம்” [1961] படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன் சீதாலட்சுமிSeethalakshmi-BS.Saroja-Kumudham 1961-Seethalakshmi-BS.Saroja-Kumudham 1961-1

”குமுதம்” [1961] படத்தில் பி.டி.சம்பந்தம், பி.எஸ்.சரோஜாவுடன் சீதாலட்சுமிSeethalakshmi-PD.Sampantham-BS.Saroja-Kumudham 1961-Seethalakshmi-PD.Sampantham-BS.Saroja-Kumudham 1961-1Seethalakshmi-PD.Sampantham-BS.Saroja-Kumudham 1961-2

”குமுதம்” [1961] படத்தில் பி.டி.சம்பந்தம், சௌகார் ஜானகியுடன் சீதாலட்சுமிPD.Sampantham-Seethalakshmi-Sowkar-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில் பி.டி.சம்பந்தம், சீதாலட்சுமிPD.Sampantham-Seethalakshmi-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில் சீதாலட்சுமி, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்

MR.Radha-PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-Kumudham 1961-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் சௌகார் ஜானகி, காந்திமதியுடன் சீதாலட்சுமி

Seethalakshmi-Oli Vilakku 1968-Seethalakshmi-Kanthimathi-Sowkar Janaki-Oli Vilakku 1968-Seethalakshmi-Kanthimathi-Oli Vilakku 1968-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் சீதாலட்சுமியுடன் சண்முகசுந்தரி 

Seethalakshmi-Adimaippenn 1969-Seethalakshmi-Shunmuga Sundari-Adimaippenn 1969-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் சீதாலட்சுமியுடன் சி.எஸ்.பாண்டியன், ஓ.ஏ.கே.தேவர்

Seethalakshmi-CS.Pandian-OAK.Devar-Adimaippenn 1969-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் மனோரமாவுடன் சீதாலட்சுமி  Seethalakshmi-Annamitta Kai 1972-2Seethalakshmi-Annamitta Kai 1972-1Seethalakshmi-Annamitta Kai 1972-Seethalakshmi-Manoma-Annamitta Kai 1972-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் சீதாலட்சுமி ,நாகேஷ்Seethalakshmi-Nagesh-Annamitta Kai 1972-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் வி.கே.ராமசாமியுடன் சீதாலட்சுமி Seethalakshmi-VKR-Annamitta Kai 1972-

”பத்தாம் பசலி” 1970 படத்தில்சீதா லக்ஷ்மியுடன்   நாகேஷ், ராஜஸ்ரீ  Seethalakshmi-Nagesh-Rajalasree-Pathaam Pasali 1970-Seethalakshmi-Nagesh-Rajalasree-Pathaam Pasali 1970-1

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் சீதாலட்சுமி seethalakshmi-panthayam-1967-1seethalakshmi-vijayanirmala-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஜெமினி கணேசனுடன் சீதாலட்சுமி seethalakshmi-panthayam-1967seethalakshmi-gemini-ganesan-panthayam-1967

”மாடப்புறா” 1962 படத்தில் சரோஜாதேவியுடன் சீதாலக்ஷ்மி  seethalakshmi-sarojadevi-madapura-1962-1seethalakshmi-sarojadevi-madapura-1962

“அகத்தியர்” 1972 படத்தில்  சீதாலட்சுமியுடன் கே.டி.சந்தானம், சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்kd-santhanam-seethalakshmi-agathiyar-1972kd-santhanam-seethalakshmi-sirkazhi-govindarajan-agathiyar-197250

” நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் பி.எஸ்.சீதாலட்சுமியுடன் எம்.ஜி.ஆர்.seethalakshmi-ps-mgr-nallavan-vazhvan-1962

” நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் பி.எஸ்.சீதாலட்சுமியுடன் எம்.ஆர்.ராதாseethalakshmi-mr-radha-nallavan-vazhvan-1962

” நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் பி.எஸ்.சீதாலட்சுமியுடன் ஆர்.எம்.சேதுபதி

rm-sethupathi-seethalakshmi-ps-nallavan-vazhvan-1962

” நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் பி.எஸ்.சீதாலட்சுமியுடன் ஆர்.எம்.சேதுபதி, எம்.ஆர்.ராதா

seethalakshmi-rm-sethupathi-mr-radha-nallavan-vazhvan-196254

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் கரிக்கோல் ராஜுடன்  எஸ்.சீதாலட்சுமி seethalakshmi-anathai-ananthan-1970-1seethalakshmi-anathai-ananthan-1970seethalakshmi-karikol-raj-anathai-ananthan-1970

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன்  எஸ்.சீதாலட்சுமி seethalakshmi-oak-devar-anathai-ananthan-197058

“பாலும் பழமும்” 1961 படத்தில் சிவாஜி கணேசனுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Sivaji Ganesan-Palum Pazhamum 1962-59

“நட்சத்திரம்” 1980 படத்தில் “நட்சத்திரம்” 1980 படத்தில் விஜயசந்திரிகாவுடன்  சீதாலக்ஷிமிSeethalakshmi-Vijayachandrika-Natchathiram 1980-

“நட்சத்திரம்” 1980 படத்தில் “நட்சத்திரம்” 1980 படத்தில் விஜயசந்திரிகா,  எஸ்.ஆர்.வீரராகவன்,  சீதாலக்ஷிமிSeethalakshmi-SR.Veeraraghavan-Vijayachandrika-Natchathiram 1980-

“நட்சத்திரம்” 1980 படத்தில் “நட்சத்திரம்” 1980 படத்தில் விஜயசந்திரிகா,  எஸ்.ஆர்.வீரராகவன் ஸ்ரீப்ரியாவுடன்  சீதாலக்ஷிமிSR.Veeraraghavan-Seethalakshmi-Vijayachandrika-Sreepriya-Natchathiram 1980-1SR.Veeraraghavan-Seethalakshmi-Vijayachandrika-Sreepriya-Natchathiram 1980-Seethalakshmi-SR.Veeraraghavan-Vijayachandrika-Sripriya-Natchathiram 1980-64

”டாக்டர் சாவித்திரி” 1955 படத்தில் சீதாலட்சுமியுடன் எஸ்.பாலசந்தர்Seethalakshmi-Dr Savithri 1955-65

“துளசி மாடம்” 1963 படத்தில் எஸ்.என்.லட்சுமியுடன் சீதாலட்சுமி  Seethalakshmi-Thulasi Maadam 1963-Seethalakshmi-Thulasi Maadam 1963-1Seethalakshmi-SN.Lakshmi-Thulasi Maadam 1963-68

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் வின்சென்றுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Unnai Sutrum Ulagam 1977-1Seethalakshmi-Unnai Sutrum Ulagam 1977-Seethalakshmi-Vincent-Unnai Sutrum Ulagam 1977-Seethalakshmi-Vincent-Unnai Sutrum Ulagam 1977-1

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் சாவித்திரியுடன் சீதாலட்சுமிSeethalakshmi-K.Savitri-Unnai Sutrum Ulagam 1977-73

”தாயில்லா பிள்ளை” 1961 படத்தில் எல்.விஜயலட்சுமியுடன் சீதாலெட்சுமி, நாகேஷ்

Seethalakshmi as Subbamma-Nagesh-Thaayilla Pillai 1961-Seethalakshmi-Nagesh-L.Vijayalakshmi -Thaayilla Pillai 1961-L.Vijayalakshmi -Seethalakshmi-Nagesh-Thaayilla Pillai 1961-76

”தென்னங்கீற்று” 1975 படத்தில் சுஜாதாவுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Thennangkeetru 1975-Seethalakshmi-Thennangkeetru 1975-1Seethalakshmi-Sujatha-Thennangkeetru 1975-

”தென்னங்கீற்று” 1975 படத்தில் செந்தாமரையுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Senthamarai-Thennangkeetru 1975-1Seethalakshmi-Senthamarai-Thennangkeetru 1975-Seethalakshmi-Senthamarai-Sujatha-Thennangkeetru 1975-2

”தென்னங்கீற்று” 1975 படத்தில் சுஜாதா, செந்தாமரையுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Senthamarai-Sujatha-Thennangkeetru 1975-1Seethalakshmi-Senthamarai-Sujatha-Thennangkeetru 1975-84

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் பி.எஸ்.சீதாலக்ஷ்மியுடன் பி.எஸ்.சரோஜாSeethalakshmi-Ethaiyum Thangum Ithayam 1962-Seethalakshmi-Ethaiyum Thangum Ithayam 1962-1Seethalakshmi-BS.Saroja-Ethaiyum Thangum Ithayam 1962-87

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் ரி.கே.ராமச்சந்திரனுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Ninaippatharkku Neramillai 1963-Seethalakshmi-TK.Ramachandran-Ninaippatharkku Neramillai 1963-89

”திலகம்” 1960 படத்தில் சீதாலக்ஷ்மியுடன் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபால்Seethalakshmi-Thilakam 1960-Seethalakshmi-Kuladeivam VR.Rajagopal-Thilakam 1960-91

”தாயின் கருணை” 1965 படத்தில் சீதாலட்சுமியுடன் முத்துராமன், லீலாவதிSeethalakshmi-Thaayin Karunai 1965-Seethalakshmi-R.Muthuraman-Thaayin Karunai 1965-Seethalakshmi-Leelavathi-R.Muthuraman-Thaayin Karunai 1965-94

“தியாக உள்ளம்” 1979 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Thiyaga Ullam-Seethalakshmi-Thengai-Thiyaga Ullam-96

“ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் ஒருவிரல் கிருஷ்ணாராவ், எஸ்.என்.பார்வதி, காந்திமதியுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Ganthimathi-Krishnarao-SN.Parvathi-Raja Raja Cholan 1973-Seethalakshmi-Ganthimathi-Krishnarao-SN.Parvathi-Raja Raja Cholan 1973-198

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில்  சச்சுவுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Mela Thalangal 1978-01Seethalakshmi-Mela Thalangal 1978-Seethalakshmi-Sachu-Mela Thalangal 1978-

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் சுருளிராஜன், சச்சுவுடன் சீதாலட்சுமிSeethalakshmi-Sachu-Suruli Rajan-Mela Thalangal 1978-

‘மேள தாளங்கள்’ 1978 படத்தில் சுருளிராஜன், ஐ.எஸ்.ஆருடன் சீதாலட்சுமிSeethalakshmi-ISR-Suruli Rajan-Mela Thalangal 1978-01Seethalakshmi-ISR-Suruli Rajan-Mela Thalangal 1978-104

 

வெளியிடப்பட்ட நேரம்:08:00 (01/03/2019)

சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்!

கிராபியென் ப்ளாக்

மிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து புகழ்பெற்றவர் சீதாலட்சுமி. தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களோடும் நடித்தவர். எம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும்,`அன்னமிட்ட கை’, `ஆண்டவன் கட்டளை’, `தாய் மேல் ஆனை’, `அன்புக் கரங்கள்’, `கர்ணன்’, `வீரபாண்டிய கட்டபொம்மன்’, ரத்தக் கண்ணீர்’, ரஜினிகாந்த் உடன் `அன்புக்கு நான் அடிமை’, தனுஷ் உடன் `சீடன்’,  இந்தியில் திலிப் குமாருடன் `இரும்புத் திரை’  உட்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பர்மாவில் பிறந்தவர் சீதாலட்சுமி. பின்னர் தமிழகம் வந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். சினிமாவில் மட்டுமின்றி நாடகங்களிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்தார். தனது நடிப்புத் திறமைக்காக `தந்தை பெரியார் விருது’ பெற்றவர். மேலும், கலைமாமணி, கலைச்செல்வி உள்ளிட்ட பட்டங்களையும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற பெருமைக்குரியவர்.

கடந்த சில நாள்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாலட்சுமி. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவரது மகள் ராதிகா, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.

நடிகை சீதாலட்சுமியின் உடல், சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம், எம்.ஆர் பள்ளி அருகிலுள்ள அவரது மகளின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நன்றி;- https://www.vikatan.com/news/cinema/150994-veteran-actress-sitalakshmi-passed-away.html

WhatsApp_Image_2019-03-01_at_12.43.09_AM_02092WhatsApp_Image_2019-03-01_at_12.43.11_AM_(1)_02417WhatsApp_Image_2019-03-01_at_12.43.10_AM_(1)_02121WhatsApp_Image_2019-03-01_at_12.43.10_AM_02557

6 comments on “Seethalakshmi

  1. பழம் பெரும் தமிழ் நடிகை சீதாலட்சுமி காலமானார்

  2. தகவலுக்கு மிக்க நன்றி. இவர் இத்தனை வருடங்களாக உயிருடன் இருந்திருக்கிறார் என்பதே எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளியுலகோடு எந்தத் தொடர்புமே வைத்துக் கொண்டதில்லை இவர். என்றாலும் சிறந்தவொரு நடிகையை இழந்துவிட்டோம். நடிகர் திலகம் சிவாஜிகணேசனே இவரது நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியதுண்டு. அத்தனை பெருமை மிக்கவர்.

    • Yes …she Perfectly fits the role of step mother or slightly negative shade roles…clear dialogue delivery….may her soul rest in peace…

  3. பெட்ரோமாக்ஸ் நடன இயக்குநர் ராதிகா31 Jan 2020
    ‘பெட்ரோமாக்ஸ்’ மாதிரி என்னுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் என்னுடைய அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி. கலைச்சேவைக்காக ‘கலைமாமணி’, ‘கலைச்செல்வி’ போன்ற ஏராளமான விருதுகள் பெற்றவர்.
    இப்போது நடன இயக்குநராக முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் படங்களில் பணிபுரிந்து வருகிறேன். இப்படி என் வாழ்க்கை ஒளிமயமாக மாற காரணமாக இருந்தவர் என்னுடைய அம்மா. அவர் அந்தக் காலத்து நடிகை. சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பிரபல ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘அன்னமிட்ட கை’ போன்ற படங்களில் அம்மா நடித்துள்ளார்.

    எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்துகே அம்மாதான் பெட்ரோமாக்ஸ். அம்மாவின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்துதான் நான் கலைத்துறைக்கு வந்தேன். அம்மா நடிகையாக இருந்தாலும் எனக்கு நடனத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது. உடுப்பி லட்சுமி நாராயணா மாஸ்டரிடம் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன்.

    உதவி நடன இயக்குநராக தருண் மாஸ்டர், சம்பத்ராஜ் மாஸ்டர், பாலாஜி மாஸ்டர், தாரா மாஸ்டர், சின்னி பிரகாஷ் மாஸ்டர் என்று ஏராளமான மாஸ்டர்களிடம் சுமார் 1000 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளேன். அந்த வகையில் அந்த ஜாம்பவான்களும் நான் புகழ் பெற காரணமாக இருந்தார்கள்.

    உதவி நடன இயக்குநராக இருந்த எனக்கு முதன் முதலாக ‘நடன இயக்குநர்’ என்ற புகழ் வெளிச்சத்தைக் கொடுத்தவர் இயக்குநர் மிஷ்கின். அவர் இயக்கிய ‘மூகமுடி’ படம்தான் என்னுடைய முதல் படம்.என்னால் தனியாக படம் பண்ணமுடியுமா என்ற தயக்கம் இருந்த சமயத்தில் அவர்தான் உங்களால் முடியும் என்று ஊக்க மளித்து என்னை டான்ஸ் மாஸ்டராக்கினார்.

    மிஷ்கின் சார் அருமையான மனிதர். இளம் கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளியே கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் விதம், அவருடைய ஒர்க்கிங் ஸ்டைல் என்று அவரைப் பற்றி நிறைய சொல்லலாம். வெளிப்படையாகப் பேசுவார், பழகுவார். முன்னாடி ஒண்ணு, பின்னாடி ஒண்ணு என்ற பழக்கம் அவரிடம் கிடையாது.

    அவருக்கு அடுத்து இயக்குநர் சீனுராமசாமியும் என் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர்களில் முக்கியமானவர். அவர் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு அளித்து எனக்கு வெளிச்சத்தைக் கொடுத்து வருகிறார். விஜய்சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தில் வெளிச்சம் கூடுதலாக வீசுமளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    இந்தத் துறையில் நான் புகழ் வெளிச்சத்துக்கு வரணும் என்று நினைக்கும் உள்ளங்கள் நிறைய உண்டு. அப்படி வாசு என்ற நண்பர் செய்த உதவியை மறக்க முடியாது. நான் வேலை செய்த படங்களில் மிக முக்கியமான படம் தனுஷ் நடித்த ‘மரியான்’. அந்தப் படத்தை பரத்பாலா இயக்கியிருந்தார்.

    அது எனக்கு இரண்டாவது படம். அந்தப் படத்தில் பணிபுரிய முன்னணி நடனக்கலைஞர்கள் தயாராக இருந்த நிலையில் அந்தப் பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் வாசு. அவர்தான் என்னை பரத்பாலா சாரிடம் அறிமுகம் செய்துவைத்தார்.

    இதுவரை தமிழ், தெலுங்கு, ஒரிசா, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 180 படங்களில் நடன இயக்குநராக வேலை செய்துள்ளேன்.
    மம்மூட்டி, சரத்குமார், விஜய்சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி, நகுல், பரத், ஜெய், கெளதம் கார்த்திக், தெலுங்கில் ராம்கோபால் வர்மா படம் உட்பட முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள், பிரபல நிறுவனப் படங்களில் வேலை செய்துள்ளேன்.

    வெளிச்சம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் வேலை செய்வது நல்ல விஷயம். ஆனால் கடினமாக உழைக்கும்போது கண்டிப்பாக புகழ் வெளிச்சம் நம் மீது விழும் என்பது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது.மிக இளம் வயதில் நான் சினிமாவுக்குள் வந்துவிட்டேன்.

    உதவி இயக்குநராக பதினைந்து வருடம் வேலை செய்தேன். மாஸ்டராகி பத்து வருடம் ஆகிவிட்டது. இந்த புகழ் வெளிச்சத்தின் வயது 25 வருடங்கள் என்றால் இந்தத் துறையில் பிரகாசிக்க வேண்டுமெனில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ளமுடியும்.

    சினிமாவில் வெளிச்சம் பிரகாசமாக இருக்கவேண்டுமானால் முறையான பயிற்சி, பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம்.அம்மாவுக்கு அடுத்து நண்பர்கள், சகோதரர்கள், சக தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் ராதிகா இல்லை. எல்லாரும் சேர்ந்ததுதான் ராதிகா. ‘நான்’ என்று சொல்வதற்கு எதையும் நான் செய்யவில்லை.

    எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ‘பெட்ரோமாக்ஸ்’தான். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் பண்ணும்போது இந்த ராதிகாவின் புகழ் வெளிச்சம் அகிலம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Leave a comment