Kutty Padmini

குட்டி பத்மினி- (பிறப்பு-5.6.1956) வயது-57. தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். தனது 3-ஆவது வயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

1965-இல் ஏவி.எம்மின் குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனாவின் மகள்களாக இரட்டை வேடத்திலும் 1967-இல் நான் படத்தில் திருச்சி சவுந்தரராஜனின் மகளாகவும் 1959-இல் கப்பலோட்டிய தமிழன் படத்திலும் 1970-இல் மாணவன் படத்திலும் நவராத்திரி, நம்நாடு, திருவருட்செல்வர், முதலாளி, ஸ்கூல் மாஸ்ரர், அவளும் பெண் தானே, பெண்மணி அவள் கண்மணி, சாது மிரண்டால், நல்லதொரு குடும்பம், மல்லுவேட்டி மைனர், ஜல்லிக்கட்டு, என் கணவர், கண் சிமிட்டும் நேரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குழந்தைப் பருவத்திலும் குமாரியான பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்போது தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவுள்ளார். இவரது கணவர் பெயர் பிரபு நேபால். இவருக்கு இரு குழந்தைகள்.

குட்டி பத்மினி, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சி ஒரு தெலுங்குப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது. குட்டி பத்மினியின் தாயாரை தந்திரமாக வெளியே அனுப்பிவிட்டு, இக்காட்சியை டைரக்டர் படமாக்கினார்.

“இளங்கன்று பயமறியாது” என்பார்கள். குட்டி பத்மினி, பாம்பு கொத்துகிற மாதிரியான காட்சிகளில் கூட நடித்தார்.

ஆனால், அவருக்கே தெரிவிக்காமல் திடீரென ஒரு தெலுங்குப்படத்தில் சிங்கங்களுக்கு மத்தியில் அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் பயம் எதுவுமின்றி நடித்து முடித்தார்.

சிங்கத்துடன் நடித்த அனுபவம் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

“சகுந்தலா” என்ற தெலுங்குப் படத்தில், நடிகை சரோஜாதேவியின் மகளாக நடித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஐதராபாத்தில் மக்காச்சோளம் அதிகம். அம்மா மக்காச்சோளத்தை சுட்டு, மிளகாய் பொடி தூவி பக்குவமாக சாப்பிடத் தருவார். அம்மாவின் இந்த கைப்பக்குவத்துக்கு செட்டில் இருந்தவர்கள் ரசிகர்களாகி விட்டார்கள். இப்படி படப்பிடிப்பில் எல்லாருக்கும் தெரிந்தவராக, வேண்டியவராகி விட்ட அம்மாவை அன்றைய தினம் எங்கோ சுற்றிப் பார்க்க அழைத்துப்போய் விட்டார்கள்.

அம்மாவை திட்டம் போட்டே வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. படத்தின் டைரக்டர் என்னிடம், “உனக்கு புலிக்குட்டின்னா பிடிக்கும்தானே?” என்று கேட்டார்.

எதற்காக கேட்கிறார் என்பது புரியாமல், “ஓ! ரொம்ப பிடிக்குமே என்றேன்.

அதன் பிறகுதான் என்னை செட்டின் இன்னொரு புறம் கூட்டிப் போனார்கள். எனக்கு கைநிறைய சாக்லெட் தந்தவர்கள், “இப்ப நீ புலிக்குட்டியை கையில் தூக்கிக்கிட்டு சிங்கத்தின் மேல் ஏறி வரப்போறே” என்றார்கள்.

சிங்கம், புலி போன்ற பயங்கர மிருகங்களை பயிற்றுவிக்கும் ‘புலி கோவிந்தராஜ்’ அங்கிருந்தார். சுற்றிலும் ஒரு இரும்பு வேலி அமைத்து, ஐந்து சிங்கங்களையும், மூன்று புலிகளையும் உலவ விட்டிருந்தார்கள். எதற்குமே வாய் தைக்கவில்லை. ‘புலி கோவிந்தராஜ்’ மாஸ்டர், அவற்றுக்கு பயிற்சி கொடுக்க அழைத்து வந்திருந்தார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் நுழையக்கூடிய வழியை திறந்து என்னை அந்த கூண்டுக்குள் அனுப்பினார்கள். சர்க்கசில்தான் ஒரே நேரத்தில் இத்தனை சிங்கம், புலிகள் பார்த்திருக்கிறேன். மாஸ்டர், அழகாக இருந்த ஒரு புலிக்குட்டியை என் கையில் கொடுத்து, “இதை கெட்டியா பிடிச்சுக்கோ” என்றார். புலிக்குட்டியை பிடித்துக்கொண்டதும், அங்கிருந்த சிங்கத்தின் மீது என்னை உட்கார வைத்தார். சிங்கம் அந்த தடுப்பு வேலிக்குள் ரவுண்ட் அடிக்க, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது நான்!

வெளியே நின்று காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை நான் சிங்கத்தின் மீது வலம் வந்தபடி பார்க்கிறேன். அவர்களில் ஒருவர் முகத்திலாவது சந்தோஷம் இல்லை. கொடூர குணம் படைத்த மிருகங்களாயிற்றே. எந்த நேரத்தில் என்ன செய்து வைக்கப்போகிறதோ?” என்று அவர்கள் உள்ளூர கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பதட்டத்திலும் காட்சி படமாகிக் கொண்டிருக்க, அப்போதுதான் அம்மா செட்டுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் இமைக்காமல் இரும்பு வேலிக்குள் சிங்க ஊர்வலம் வரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை அம்மாவும் பார்த்து விட்டார். பெற்ற வயிறல்லவா! துடித்துப் போனார், அம்மா. “அய்யோ! இந்தக்காட்சியை எடுக்கணும்னுதான் என்னை வெளியே அனுப்பினீங்களா?” என்று கதறினார்.

நான் அங்கிருந்தபடியே, “அம்மா பயப்படாதீங்க! எனக்கு ஒண்ணும் ஆகாது” என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் அழுகையை நிறுத்தவில்லை. அவசரமாய் அந்தக் காட்சியை படமாக்கி, மாஸ்டர் என்னை பத்திரமாக வெளியே அழைத்து வந்த பிறகுதான் அம்மாவுக்கு உயிரே வந்தது.

அப்போது கூட எனக்கு கையெல்லாம் ஒரே வலி. நான் அசையாமல் தூக்கி வைத்திருந்தேனே புலிக்குட்டி. அது
5 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் போலிருக்கிறது. அதுதான் கை வலிக்கு காரணம்!

ஆனால் இந்த வலியையெல்லாம் தாண்டி அந்தப் படத்தில் என் நடிப்புக்கு ஆந்திர அரசின் ‘சிறந்த பேபி நட்சத்திர விருது’ கிடைத்தது.”

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

“குழந்தையும் தெய்வமும்” படத்தில் குட்டி பத்மினியின் இரட்டை வேட நடிப்பை பார்த்து வியந்த பெருந்தலைவர் காமராஜர், தேர்தல் பிரசாரத்தில் குட்டி பத்மினியை காங்கிரஸ் கூட்டங்களில் பேச அனுமதித்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் குட்டி பத்மினியை பேச வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடையே காங்கிரசின் மேடைப் பேச்சாளராகவே மாறிப்போனார், குட்டி பத்மினி.

காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபின், குட்டி பத்மினி தி.மு.க. கூட்டத்திலும், அதன் பிறகு அ.தி.மு.க. மேடைகளிலும் பேசினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எந்த கட்சி மேடையில் பேசினாலும் நடந்து முடிந்த ஆட்சி பற்றி குறையெல்லாம் சொல்வதில்லை. நான் சார்ந்த கட்சி மக்களுக்கு என்ன மாதிரியான நல்ல காரியங்களெல்லாம் செய்யும் என்று மட்டுமே பேசுவேன். இதனால் மாற்றுக்கட்சிகாரர்கள் கூட என் பேச்சை கேட்டு ரசித்தார்கள்” என்றார்.

குட்டி பத்மினி 2 ஆங்கிலப் படங்களிலும் நடித்தார். ‘தி பிரின்ஸ் அண்ட் த பாப்பர்’, ‘டார்சான் கோஸ் டு இந்தியா’ என்ற இந்த படங்களுக்காக தனது 12-வது வயதில் காஷ்மீர் போயிருக்கிறார்.

குட்டி பத்மினியிடம் மிகவும் அன்பு கொண்டவர் சவுகார் ஜானகி. “எங்களுக்கிடையே இருந்தது அம்மா – மகள் உறவு” என்று சொன்ன குட்டி பத்மினி, அதுபற்றி கூறியதாவது:-

“சவுகார் ஜானகியின் மகள் என்றே என்னை பலரும் நினைத்தார்கள். எங்களுக்குள் இருந்த முக ஒற்றுமை அவர்களை இப்படி நினைக்க தூண்டியிருக்கலாம். சவுகாரும் என்னை தனது மகள்களில் ஒருவராகவே நேசித்தார்.

படப்பிடிப்புக்கு வரும்போது தன் கைப்பட சமைத்த சாப்பாட்டை எடுத்து வருவார். தனது கலையுலக நட்பு வட்டாரத்தில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரிசளிப்பார். என்னை அவருடைய மகள் என்று நினைத்த ரசிகர்கள் பல நேரங்களில் சவுகாரின் வீட்டுக்கே என் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதுவதும், அதை ஆன்ட்டி என்னிடம் கொடுப்பதும் தொடர்கதை மாதிரி போய்க்கொண்டிருந்தது.

எனக்கு திருமணமாகி முதல் பிரசவத்தின்போது நிஜமாகவே எனக்கு அன்னையானார். பிரசவத்தின் போது உடனிருந்து தாயாக பார்த்துக்கொண்டார். மகள் பிறந்தபோது, குழந்தைக்கு தங்கக்காசு கொடுத்து வாழ்த்தினார்.

சமீபத்தில் சவுகார் ஆன்ட்டிக்கு அவரது பெண்கள், பேரன், பேத்திகள், ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பெரும் விழா எடுத்தார்கள். அவரை வாழ்த்தி மைக்கில் பேசும்போது அழுது விட்டேன். சினிமா மூலம் எனக்கு கிடைத்த ‘அம்மா’ அவர்.”

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

கதாநாயகியாக நடிக்காதது ஏன்?

குழந்தை நட்சத்திரமாக 175 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும், ‘கதாநாயகி’யாக குட்டி பத்மினி நடிக்கவில்லை! அதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-

“சிறு வயதுப் பிராயம் தாண்டி 13 முதல் 15 வயதிலான கால கட்டத்தில் ‘சிறுமி’யாகவும் நடிக்க முடியாது. பெரிய பெண்ணாகவும் நடிக்க முடியாது. அப்படியான காலகட்டத்தில் குச்சிப்புடி, கதக் நடனங்கள் கற்றுக்கொண்டேன். அப்போது நாடக மேடையில் கிடைத்த கதாநாயகி வாய்ப்பை விடாமல் பற்றிக்கொண்டேன். மவுலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், விசு என நாடக ஜாம்பவான்கள் அத்தனை பேரின் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தேன்.

இந்த காலகட்டத்தில் வருடம் தவறாமல், மயிலை ஆர்ட்ஸ் அகாடமியின் “சிறந்த நாடக நடிகை” விருது எனக்கு கிடைத்து விடும். நாடக காட்சியின்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கான ஒரு நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் நான் வேறு புடவை மாற்றிக்கொண்டு நடிக்க வருவேன். இந்த வேகமான வித்தையை பார்த்து, நாடகத்துக்கு வந்த பெண்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னிடம் நாடகம் முடிந்த நேரத்தில் இதுபற்றி பாராட்டி பேசியவர்களும் உண்டு.

ஜெமினிகணேசன் சாரின் மனைவி புஷ்பவல்லியின் மகள் ரேகா, பின்னாளில் இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். ரேகாவின் அண்ணன் பாபுஜியைத்தான் எனது இரண்டாவது அக்கா விஜயலட்சுமி திருமணம் செய்திருக்கிறார். இந்த பாபுஜி இயக்கிய ‘நயாபக்ரா’ இந்திப்படத்தில்தான் நான் ஹீரோயின் ஆனேன். படத்தில் எனக்கு ஜோடி வினோத் மெஹ்ரா. முழுக்க காமெடிப் படமான இந்தப்படம் இந்தியில் நன்றாகவே ஓடியது.

இந்த நேரத்தில் எனக்கு 16 வயது. எம்.ஜி.ஆர். சார் அப்போது “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தை தயாரிக்க வெளிநாடுகளுக்கு போவதாக இருந்தார். படத்தின் ஒரு கதாநாயகியாக என்னை நடிக்க வைக்கும் நோக்கில் என்னை அழைத்து வரச்செய்தார் எம்.ஜி.ஆர். அம்மாவுடன் போய் அவரை பார்த்தேன். எங்களிடம் நலம் விசாரித்த அவர், “படத்தின் 2 மாத படப்பிடிப்பு ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கிறது. எனவே, பயணச் செலவில் கூடுதல் செலவை தவிர்க்கும் விதத்தில் ‘கதாநாயகி’ மட்டுமே வரவேண்டும்” என்றார்.

பெண்ணை 2 மாத காலம் தனியாக அனுப்ப அம்மாவுக்கு மனதில்லை. அதனால் வீட்டில் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்கிறோம்” என்று சொல்லி விட்டு வந்தார். வீட்டிலும் சகோதரர்களுக்கு என்னை தனியாக அனுப்ப மனதில்லாதிருந்ததால் அந்த வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணி விட்டேன். சில நேரங்களில் தவறாக எடுக்கும் ஒரு முடிவு கூட எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு என் விஷயத்தில் என் குடும்பம் எடுத்த இந்த முடிவும் ஒரு உதாரணம்.

தொடர்ந்து நாடகத்திலும் நடித்து வந்ததால் சில கதாநாயகி வாய்ப்புகள் ‘மிஸ்’ ஆயின. இப்படி டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் படங்களுக்கு கேட்டு வந்த கதாநாயகி வாய்ப்பை நாடகத்துக்கு ஏற்கனவே கொடுத்த தேதிகள் கெடுத்தன. ஒரு டைரக்டர், “உனக்கு சினிமா முக்கியமா? நாடகம் முக்கியமா?” என்று கேட்டு கோபப்பட்டதும் உண்டு. நான் இப்படி மிஸ் பண்ணின சில படங்களில் ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா நடித்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர். சாரின் தங்கையாக “நான் ஏன் பிறந்தேன்” படத்திலும், சிவாஜி சாரின் மருமகளாக “நல்லதொரு குடும்பம்” படத்திலும் நடித்தேன்.

இப்படி சினிமா என்னை விட்டுப் போயிருந்தாலும், சின்னத்திரையில் நான் வலுவாக காலூன்ற அது ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

Kutty Padmini is a South Indian movie actress who predominantly works in Kollywood. She was a child star in her debut movie Ambala Anjulam(1959). She has also acted in Tamil, Telugu and Malayalam movies.

Kutty Padmini was born on 5 June 1956 in Madras in a Tamil family.

Kutty Padmini entered filmdom at the age of 3. She went on to act in many movies as child artist. However, her notable film role was in the 1965 Tamil film Kuzhandaiyum Deivamum along Jaishankar and Jamuna where she played dual roles. She appeared for a dance sequence in the film Maanavan (1970) along with Kamal Haasan, which was also the first adult role for him. She went on to act in other films as a child star and later on as a heroine and in supporting roles. Later she played supporting roles in films like AvargalAval Appadithan, both co-starring Rajinikanth and Kamal HaasanPenmani Aval Kanmani and Kan Simittum Neram, the debut film of Sarath Kumar.

She made a foray into TV megaserials and has churned out quite a few successful TV programmes like Krishnadasi and others.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் குட்டி பத்மினி

Image

நான் படத்தின் காட்சிகள்

ஜெயலலிதாவுடன் குட்டி பத்மினி

Jayalalitha-Kutty Padmini-Naan-2 Jayalalitha-Kutty Padmini-Naan-3 Kutty Padmini-Naan-1 Kutty Padmini-Naan-2 Kutty Padmini-Naan-3 Kutty Padmini-Naan-4 Kutty Padmini-Naan-B Kutty Padmini-Naan-B1

சுருளிராஜன், முத்துராமன், விஜயசிறீயுடன் குட்டி பத்மினிLast Seen on Naan

இடமிருந்து வலமாக: விஜயசிறீ, முத்துராமன், ரவிச்சந்திரனுடன் குட்டி பத்மினி, ஜெயலலிதா, மனோரமா, நாகேஷ்

Last Seens-on Naan3 Last Seens-on Naan4

முத்துராமனுடன் குட்டி பத்மினி

Muthuraman-Kutty Padmini-Naan-B1 Naan-Ammano.-3jpg

இடமிருந்து வலமாக: சுருளிராஜன், சாமிக்கண்ணு, ரி.பி.முத்துலக்ஷ்மி, என்னத்தே கன்னையா, ஜெயலலிதா, திருச்சி சௌந்தரராஜன்

Samikkanu-Ennathe Kannaiah-Suruli Rajan-TP.Muthulakshmi-Trichy Saundarrajan-Jayalalitha-Kutty Padmini-Naan

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் குட்டி பத்மினியுடன் மாஸ்டர் பிரபாகர், எஸ்.ஆர்.ஜானகி மற்றும் T.R.இராமச்சந்திரன்

Kutty Padmini-Prabhagar-TRR-SR.Janaki-Sadhu Mirandal 1966-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர், கல்பனா

Kalpana-Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-1

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் குட்டி பத்மினி தனித்தும் மாஸ்டர் பிரபாகருடனும்

Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-1Kutty Padmini-Sadhu Mirandal 1966-Kutty Padmini-Sadhu Mirandal 1966-1

’டாக்டர் ஆனந்த்’ [1966] தெலுங்குப் படத்தில் குட்டி பத்மினியுடன் மாஸ்டர் ஆதி நாராயணன்

Master Adi Narayanan-Kutty Padmini-Doctor Anand 1966-Master Adi Narayanan-Kutty Padmini-Doctor Anand 1966-1Master Adi Narayanan-Kutty Padmini-Doctor Anand 1966-2

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில்  குட்டி பத்மினி

Kutty Padmini-Motor Sundaram Pillai 1966-Kutty Padmini-Motor Sundaram Pillai 1966-1

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் பேபி அவந்தி, ஜெயலலிதா, ஆஷா, சௌகார் ஜானகி, பண்டரிபாய், குட்டி பத்மினி, மாஸ்டர் குமாருடன் பேபி ஜெய கௌசல்யா

Jayagowsalya-Pandaribai-Sowkar-Motor Sundaram Pillai 1966-

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் குட்டி பத்மினிKutti Padmini-Penmani Aval Kanmani 1988-Kutti Padmini-Penmani Aval Kanmani 1988-1Kutti Padmini-Penmani Aval Kanmani 1988-2

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் சீதாவுடன் குட்டி பத்மினி

Kutti Padmini-Seetha-Penmani Aval Kanmani 1988-

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் விசுவுடன் குட்டி பத்மினிKutti Padmini-Visu-Penmani Aval Kanmani 1988-Kutti Padmini-Visu-Penmani Aval Kanmani 1988-1

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மன், விசுவுடன் குட்டி பத்மினி

LIC Narasimhan-Kutti Padmini-Visu-Penmani Aval Kanmani 1988-

ஆஸ்திபாருலு’ [1966] [தமிழில் என் தம்பி] படத்தில் குட்டி பத்மினி  Kutti Padmini-Aasthiparulu 1966-Kutti Padmini-Aasthiparulu 1966-1Kutti Padmini-Aasthiparulu 1966-2

ஆஸ்திபாருலு’ [1966] [தமிழில் என் தம்பி] படத்தில் ஏ.நாகேஸ்வர ராவுடன் குட்டி பத்மினி Kutti Padmini-ANR-Aasthiparulu 1966-

“குப்பி வளா” [1965] படத்தில் குட்டி பத்மினிKutty Padmini as Tharabi-Kuppivala 1965-Kutty Padmini as Tharabi-Kuppivala 1965-1Kutty Padmini as Tharabi-Kuppivala 1965-3Kutty Padmini as Tharabi-Kuppivala 1965-2Kutty Padmini as Tharabi-Kuppivala 1965-4

“குப்பி வளா” [1965] படத்தில் குட்டி பத்மினியுடன் அம்பிகா சுகுமாரன்Kutti Padmini-Ambika Sukumaran-Kuppivala 1965-1Kutti Padmini-Ambika Sukumaran-Kuppivala 1965-

“குப்பி வளா” [1965] படத்தில் குட்டி பத்மினியுடன் பிரேம் நசீர் Kutty Padmini -Nazir-Kuppivala 1965-

“குப்பி வளா” [1965] படத்தில் குட்டி பத்மினியுடன் பகதூர்Kutty Padmini- Bahadoor-Kuppivala 1965-

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் ராஜஸ்ரீயுடன் குட்டி பத்மினிKutty Padmini-Anubavam Pudhumai 1967-1Kutty Padmini-Anubavam Pudhumai 1967-Kutty Padmini-Rajasree-Anubavam Pudhumai 1967-Kutty Padmini-Rajasree-Anubavam Pudhumai 1967-1

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் பாலையாவுடன் குட்டி பத்மினிKutty Padmini-TS.Balaiah-Anubavam Pudhumai 1967-

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாய், ராஜஸ்ரீ, பாலையாவுடன் குட்டி பத்மினிKutty Padmini-TS.Balaiah-MS.Sundaribai-Rajasree-Anubavam Pudhumai 1967-52

‘சகலகலா சம்பந்தி’ 1989 படத்தில் டெல்லி கணேசுடன் குட்டி பத்மினி kutty-padmini-sakalakala-sammanthi-1989-1kutty-padmini-sakalakala-sammanthi-1989-2kutty-padmini-sakalakala-sammanthi-1989kutty-padmini-delhi-ganesh-sakalakala-sammanthi-1989

‘சகலகலா சம்பந்தி’ 1989 படத்தில் மனோரமா, டெல்லி கணேசுடன் குட்டி பத்மினி kutty-padmini-delhi-ganesh-manorama-sakalakala-sammanthi-198957

பெட்டாலு மாரல்லி 1974 தெலுங்குப் படத்தில் குட்டி பத்மினியுடன் கீதாஞ்சலிkutti-padmini-peddalu-marali-1974kutti-padmini-peddalu-marali-1974-1kutti-padmini-geethanjali-peddalu-marali-197460

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் எம்.வி.ராஜம்மாவுடன் குட்டி பத்மினிKutty Padmini-Vaazhkkai Vaazhvatharkke 1964-2Kutty Padmini-Vaazhkkai Vaazhvatharkke 1964-Kutty Padmini-Vaazhkkai Vaazhvatharkke 1964-1Kutty Padmini-MV.Rajamma-Vaazhkkai Vaazhvatharkke 1964-64

“கண் சிமிட்டும் நேரம்” 1988 படத்தில் ரி.எஸ்.ராகவேந்திராவுடன் குட்டி பத்மினிKutti Padmini-Kan Simittum Neram 1988-1Kutti Padmini-Kan Simittum Neram 1988-2Kutti Padmini-Kan Simittum Neram 1988-Kutti Padmini-TS.Ragavendra-Kan Simittum Neram 1988-68

”ஆசை அலைகள்” 1963 படத்தில் கே.பாலாஜி சௌகார் ஜானகியுடன் குட்டி பத்மினி

Kutty Padmini as Kannamma-Asai Alaikal 1963-Kutty Padmini -Asai Alaikal 1963-Kutty Padmini-Baby Suma -Asai Alaikal 1963-Kutty Padmini-K.Balaji-Sowcar Janaki-Asai Alaikal 1963-72

‘கூட்டுப்புழுக்கள்’ 1987 படத்தில் பிரசன்னாவுடன் குட்டி பத்மினிKutti Padmini-Kootu Puzhukkal 1987-Kutti Padmini-Prasanna-Kootu Puzhukkal 1987-

‘கூட்டுப்புழுக்கள்’ 1987 படத்தில் எம்.பானுமதி, எஸ்.எஸ்.சந்திரனுடன் குட்டி பத்மினிKutti Padmini-M.Bhanumathi-SS.Chandran-Kootu Puzhukkal 1987-75

‘அவர்கள்’ 1977 படத்தில் ரவிக்குமாருடன் குட்டி பத்மினிKutti Padmini-Ravi Kumar-Avargal 1977-01Kutti Padmini-Ravi Kumar-Avargal 1977-02Meera-Ravi Kumar-Avargal 1977-01Meera-Avargal 1977-Meera-Ravi Kumar-Avargal 1977-Meera -Ravi Kumar-Avargal 1977-02Meera -Ravi Kumar-Avargal 1977-0182

’மல்லுவேட்டி மைனர்’ 1980 படத்தில் குட்டி பத்மினியுடன் கோகிலா

Kutti Padmini-Kokila-Mallu Vetti Minor 1980-Kokila-Kutti Padmini-Mallu Vetti Minor 1980-Kutti Padmini-Kokila-Mallu Vetti Minor 1980-01

’மல்லுவேட்டி மைனர்’ 1980 படத்தில் குட்டி பத்மினியுடன் ஷோபனா

Kutti Padmini-Shobhana-Mallu Vetti Minor 1980-

’மல்லுவேட்டி மைனர்’ 1980 படத்தில் குட்டி பத்மினியுடன் ஷோபனா, கோகிலா

Kokila-Kutti Padmini-Shobana -Mallu Vetti Minor 1980-87

நன்றி: விக்கிப்பீடியா, மாலை மலர்

8 comments on “Kutty Padmini

  1. இவரும் இப்பொழுது தனது தனி
    சானலை தொடங்கி துட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவரது அம்மா இவரை மட்டும் சினிமாவில்
    தள்ளிவிட்டு இவரது சகோதர சகோதரிகளை சினிமா பக்கமே தலை காட்ட விடவில்லை. இவர் அம்மாவும் சரி இவரும் சரி சற்றே ஓவர் தி டாப் என்றால் அது மிகை ஆகாது. நான் இவரது
    கேபி
    டீவியை
    விரும்பிப்பார்ப்பேன். ஆனால் தன்னைப்பற்றி சொல்லி கொண்டே போவதால் சலிப்பு ஏற்படுகிறது. வளர்ந்த பிறகு இவர் சினிமாவில் நடிப்பில் ஒன்றும் அப்படி பிரகாசிக்கவில்லை. அப்படி இருந்தும் நடிகர் சங்கம் அது இது என்று மூக்கை நுழைக்கிறார்.

    முதல் திருமணம் உதயன் என்னும் முதலியார் பையனுடன். இவர் சென்னையில் பெரிய தொழிலதிபர். பெண் பிள்ளை பிறந்த பிறகு கணவருடன் விவகார
    முறிவு ஏற்பட்டு விட்டது. அதுவும் இது ஒரு காதல் கல்யாணம். இவரது
    அம்மா ராதா பாய் இவர் காதல் கல்யாணம் பண்ணியதில் கோபம் கொண்டு இவரது தலைப்பிரசவத்தை கூட பார்க்கவில்லை,
    உதயனுக்கு பிறகு தன்னை விட பதினாறு வயது இளையவர் ஆன பிரபு நேபால் என்பவரை காதல் திருமணம் செய்தார். பிரபு நடுவில் ராதிகாவின் வலையில் சிக்கி மீண்டார். ஆனால் குட்டி பத்மினியின் ஆணவமோ அல்லது நேரமோ… இவர்கள் பிரிந்து விட்டார்கள். பிரபு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். குட்டி பத்மினிக்கு மூன்று மகள்கள். பெண்கள் எல்லோரையும் நல்ல படிக்க வைத்து விட்டார்.

    ஆனால் இவர் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கலாமே. திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாமே? கண் சிமிட்டும் நேரம் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். விசு இவர்க்கு வாய்ப்பு கொடுத்தாரே தவிர எல்லாமே ஒப்புக்கு சப்பாணியான
    கதாபாத்திரங்கள் தான்.

    இவரது வாய்துடுக்கு தான் இவரது மிக பெரிய எதிரி.
    ஆனால் டீவியில் தடம் பதித்து விட்டார், அதற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

    • Yes. I too watch her KPTV channel. She still has the baby face ,so she couldn’t shine in movies. She chose her path to spirituality now

  2. Sethu anna, Kutty padmini seems to be burning the Internet. She has a great command over the Tamil language and she is able to engage the audience through her crisp videos. No wonder she has kind of become a rage. She has become a digital influencer. She may feature in a few ads too in the future. But the only problem is that we are hearing one side of the story. Additionally, she is also occasionally resorting to catchy headlines to attract footfalls. Imagine this and compare this…
    ” En Ammavin Nadippu Ulaga anubhavangal”
    with
    ” En Ammavai Kashtapaduthiya Nadigai”…

    Which one will attract more footfalls…? Your guess is as good as mine.

    Believe me, after a while, the euphoria will end when she won’t have enough content. Also, her present videos are so good and exceptionally interesting that she has set high expectations from her audience. If she starts repeating herself, then the audience will vanish in no time. In fact, some of the videos about herself are somewhat repititive.

    Sethu anna, can I ask you this…

    சிவாஜியைப் பகைத்துக்கொண்ட நடிகைகள் யார் தெரியுமா? ரெண்டே பெயர் தான்.

    சிவாஜியுடன் சண்டை போட்ட நடிகைகள்…

    Any wild guesses?

  3. Hello sister gayatri

    1. One of them was an actress who was a KB favorite in the late 60’s – the adorable Jayanthi. Do you recollect any film that Jayanthi acted where Sivaji Ganesan was the lead? She acted with MGR in “Mugarasi” but even in that film it was Jayalalitha who was paired with MGR. Mugarasi was a big hit and was a film that was shot in 18 days flat…

    Years ago, Jayanthi had mentioned this in an interview that she gave to “Savvy” magazine…

    2. The second actress was “Vennira Adai Nirmala” who did act with Sivaji in the film “Lakshmi Kalyanam” (1968) produced by Kannadasan. She was to play the lead with Sivaji in “Sivakamiyin Selvan” (1974) which was a remake of the super-hit Hindi film
    “Aradhana”. Vanisree was finalized to enact the role played by Sharmila Tagore in the original.

    Nirmala was shooting in Coimbatore and she didn’t report to the sets on time because her car arrived late due to a technical snag. Nirmala was finalized to play the role that the chirpy Farida Jalal played in the original. Sivaji wanted Nirmala to tender an apology. Nirmala refused to apologize. Her argument was that her late-coming wasn’t intentional and she was not to be blamed. This misunderstanding resulted in Nirmala not doing the film. Now… shooting had already started… Sivaji called up MGR and within no time, Latha stepped into the shoes of Nirmala. I think this was the only film that had Latha being paired with Sivaji.

    Earlier she had missed the chance of acting in “Moonru Deivangal” and Chandrakala stepped in. This movie had the super hit song – Vasanthatil Oru Naal…

  4. There is also this strange story about a famous script writer in Bollywood who took inspiration from “Mugarasi” which was inspired from a Tamil play which in turn was inspired by a English film… Phew… so many inspirations… The script-writer duo tweaked this script and the result was a super-hit Hindi film (1975) that starred Amitabh Bachchan.

    Who were this duo? Which script was this? How did they get inspired by Mugarasi?

    Will let you know….

    But where are the other members of this family…? Long time no see friends…

Leave a comment