S.S.Sivasooriyan

S.S.சிவசூரியன்   [சிவராமலிங்கம் சிதம்பரத்தேவர் சிவசூரியன்]

தூத்துக்குடி தந்த சாத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றூரில் பிறந்தவர் சிவசூரியன். தாயார் வடிவு: தந்தை சிதம்பரத்தேவர். [பிறப்பு-1923-இறப்பு-1997]. சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அத்துடன் படிப்பை முடித்துக் கொண்டார். படிப்பைவிட நடிப்பில் நாட்டம் அதிகமாதலால் இளவயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கலானார்.

நவாப் ராஜமாணிக்கம் சபாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரம்தான் S.S.சிவசூரியன். நாடகங்களில் நாரதராக நடித்து நாரதகானம் பொழிந்திருக்கிறார். எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் Continue reading