Veteran Comedy|Stage Actor Typist Gopu No More

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி , நாணல், அதே கண்கள், எங்க மாமா, தேனும் பாலும் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்த சிறந்த நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு வயது முதிர்வு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி  இன்று [6.3.2019] தனது 85-ஆவது வயதில் காலமானார்.

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்த டைப்பிஸ்ட் கோபு மரணம்

1955 -ஆம் ஆண்டு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார்.

Updated: March 6, 2019, 7:34 PM IST

வயது முதிர்வு மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் டைப்பிஸ்ட் கோபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 85

லால்குடியை சொந்த ஊராக கொண்டவர் கோபால ரத்தினம். 1955 -ம் ஆண்டு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். 1959-ம் ஆண்டு நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது. 1965ல் கே.பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் சினிமாவில் சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா உள்ளிட்ட 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்த டைப்பிஸ்ட் கோபு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி தற்போதிருக்கும் விஜய், அஜித் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.

ஆனாலும் பின்னாளில் முதுமையும் வறுமையுமாக மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து வந்த டைப்பிஸ்ட் கோபுவுக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

UPDATED MAR 06, 2019 07:28 PM

லால்குடியை சொந்த ஊராக கொண்டவர்.

50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்தவர்.

ஆனாலும் பின்னாளில் முதுமையும் வறுமையுமாகத்தான் மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இவருடைய நகைச்சுவை நாடகங்கள் அந்த காலத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் பாப்புலர். 1955-இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். 1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது. 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் சினிமாவில் சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார். இவருடைய கண்கள், அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது .

’சோ’ வின் நண்பர் நடிகர் நீலுவும் டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலு வை பார்த்தால் டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள். டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள்.

டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள், வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர். இதை ஒரு பேட்டியில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார்.

என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம். 1975-இல் அவ்வளவு வசதி, வீடு, நகைகள் எல்லாம் போய் விட்டதாம்.

Source:-https://www.toptamilnews.com/comedy-actor-tyipist-gobu-passed-away

Leave a comment