“Chinna Veedu” Anu

”சின்னவீடு” அனு

இயக்குநர் ரி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநர் கே.பாக்யராஜ் மூலம் புகழ் பெற்றவர்தான் “சின்னவீடு” அனு.

1982-ஆம் ஆண்டு ரி.ராஜேந்தரின் “ராகம் தேடும் பல்லவி” படத்தில் இவர் ”அனு”வாக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன்பின் 1985-ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் கதாநாயகியாக நடித்து இயக்கிய “சின்ன வீடு” என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன்மூலம் பிரபலமானார். அதன் பின் முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா வி.சுந்தர் இயக்கத்தில் “கோடை மழை” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் எஸ்.வி.சேகரின் தங்கை கதாபாத்திரம். நடிகை பாத்திரத்தில் வில்லத்தனம் காண்பித்திருப்பார். இதன் பின் இறையருள் இயக்குநர் கே.சங்கரின் “நம்பினார் கெடுவதில்லை”, “அவள் போட்ட கோலம்”, “மழைச்சாரல்” போன்ற பல படங்களில் நடிக்கலானார். இயக்குநர் இவரை கவர்ச்சி நடிகையாக மட்டுமே பயன்படுத்தினர்.

தமிழைத் தவிர ஏராளமான மலையாள, தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

“நம்பினார் கெடுவதில்லை” படப்பிடிப்பு நடைபெற்ற போது பம்பையிலிருந்து கால்நடையாக படப்பிடிப்பு குழுவினருடன் சபரிமலை சென்ற அனு சந்நிதானத்தின் பின் வாசல் வழியாக சென்று ஐயப்ப சுவாமியைத் தரிசித்தவர்.

“சின்ன வீடு” 1985 படத்தில் அனு

”கோடை மழை” 1986 படத்தில் வித்யா வேணுகோபாலுடன் அனு

‘சொந்தமெவிடே பந்தமெவிடே’ 1984 மலையாளப் படத்தில் ஜகதி ஸ்ரீ குமாருடன் அனுAnu-Swanthamevide Bandhamevide 1984-01Anu-Swanthamevide Bandhamevide 1984-Anu-Jagathi Sreekumar-Swanthamevide Bandhamevide 1984-

‘சொந்தமெவிடே பந்தமெவிடே’ 1984 மலையாளப் படத்தில் குண்டற ஜோணியுடன் அனுAnu-Kundara Johny-Swanthamevide Bandhamevide 1984-

சொந்தமெவிடே பந்தமெவிடே’ 1984 மலையாளப் படத்தில் அனுவுடன் ஸ்வப்னாSwapna-Anu-Swanthamevide Bandhamevide 1984-

5 comments on ““Chinna Veedu” Anu

  1. இவர் முதன் முதலில் அறிமுகம் ஆனது சின்ன சின்ன வீடு கட்டி
    திரைப்படத்தில் தான். இந்த படத்தின் தயாரிப்பாளர் பதினாறு வயதினிலே திரைப்படம் தயாரித்த திரு எஸ் எ ராஜ்கண்ணு அவர்கள்

Leave a comment