Joker Thulasi [Comedian]

ஜோக்கர் துளசி [நகைச்சுவை  நடிகர் ]

பல தசாப்தங்களாக மூத்த மேடை நடிகர் மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் பிறந்தவர். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். பிரதான துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மேடை நடிகராகத்தான் பிரபலமானார். சென்னையிலுள்ள கண்மணி நாடகக் குழுவில் முதன்மையான நடிகராக விளங்கியவர்.

1976-இல் வெளிவந்த ‘உங்களில் ஒருத்தி’ படத்திலிருந்தே இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் எஸ்.வி.சண்முகம் பிள்ளை, சந்திரன் பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்.

இயக்குநர் மனோஜ் குமார் இயக்கத்தில் 1992-இல் வெளிவந்த “சாமுண்டி” திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் பிரபலமானார். இப்படம் வன்முறைகளின் உச்சகட்டத்தால் விமர்சனங்களுக்குள்ளானது. ஆனால் ஜோக்கர் துளசியின் பாத்திரம் நகைச்சுவைக்காக பேசப்பட்டது. இதே வருடத்தில் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “திருமதி பழனிச்சாமி” என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இப்படத்தில் சத்யராஜ், சுகன்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் நகைச்சுவைக்காக பெரிதும் வரவேற்கப்பட்டது.1996-ஆம் ஆண்டில் என்.கே.விசுவநாதன் இயக்கத்தில் “புருஷன் பொண்டாட்டி” என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்தார். இப்படம் வரவேற்பைப் பெற்றதோடு வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. இவர் சின்னத்திரையிலும் ‘வாணி ராணி’, ‘கேளடி கண்மணி’, ’முத்தாரம்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்த படங்களின் பட்டியல்:-இளைஞர் அணி, அவதாரப் புருஷன், தமிழச்சி, மண்ணைத் தொட்டுக் கும்பிடணும், புதுமைப் பித்தன், சித்திரைப் பூக்கள், நம்ம ஊரு பூவாத்தா, சின்ன மணி,செவத்தப் பொண்ணு, நீலக்குயில், வாழ்க ஜனநாயகம், மருது பாண்டி, மறவன்.

Joker Thulasi

Thulasi popularly known as Joker Thulasi is a famous South Indian actor. He is a senior most artist in Cinema and drama for more than 5 decades. He is a Comedian and has acted in many films in Tamil, Malayalam and Kannada. Mainly he has acted in supporting and hilarious roles. He started his acting career through drama.  He was an active patron and main actor of the Kanmani drama club based in Chennai.

His debut performance was in Tamil action movie “Samundi” directed by Director Manoj Kumar. The movie was criticized for the extremes of violence, but Joker Thulasi’s role was noted for the humourous moments. In the same year itself, he acted in another movie called “Thirumathi Palanisamy”. It was a  Tamil comedy drama film directed by R Sundararajan. The film features Sathyaraj and Sukanya in lead roles. The film was well received for its comedy. Malini Mannath of the Indian Express reviewed the film as “first haft was height of entertainment, but later half turned was awful.”

Another noteworthy performance was in “Purushan Pondatti” and 1996 Tamil comedy drama film directed by N K Viswanathan.  The film was well received and it was a commercial success. His recent performance in the drama “Imsai Purushan Irandam” as a Bagadur was also well received for its comedy. Thulasi once said in an interview that his idea of comedy is not only for entertaining the masses, but at the same time it should give them education also.

http://www.nettv4u.com/celebrity/telugu/tv-actor/joker-thulasi

https://www.onenov.in/listings/joker_thulasi_indian_television_actor

”உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஜோக்கர் துளசி

”உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் சந்திரன் பாபு, சண்முகம் பிள்ளையுடன் ஜோக்கர் துளசி  

”உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் சிவகுமார், எஸ்.ராமராவுடன் ஜோக்கர் துளசி

”பட்டணத்து ராஜாக்கள்” 1982 படத்தில் திடீர் கன்னையா, லூஸ் மோகனுடன் ஜோக்கர் துளசி

மன்மத லீலை [1976] படத்தில் ஜோக்கர் துளசிJocker Thulasi-Manmadha Leelai 1976-

”காலமெல்லாம் காத்திருப்பேன்” 1997 படத்தில் ஒரு விரல் கிருஷ்ணாராவ், மணிவண்ணனுடன் ஜோக்கர் துளசி

Jocker Thulasi-Kaalamellam Kaathiruppen 1997-Jocker Thulasi-Kaalamellam Kaathiruppen 1997-1Jocker Thulasi-Oruviral-Manivannan-Kaalamellam Kaathiruppen 1997-

”காலமெல்லாம் காத்திருப்பேன்” 1997 படத்தில் கரண், ஒரு விரல் கிருஷ்ணாராவ், குமரி முத்துவுடன் ஜோக்கர் துளசி

Jocker Thulasi-Oruviral-Kumari Muthu-Kaalamellam Kaathiruppen 1997-1Jocker Thulasi-Oruviral-Kumari Muthu-Kaalamellam Kaathiruppen 1997-

One comment on “Joker Thulasi [Comedian]

Leave a comment