Sooriyakanth

சூரியகாந்த்

இவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியவர் காலஞ்சென்ற சின்னப்பாத்தேவர் அவர்கள்தான். ‘தாய் மீது சத்தியம்’ படப்பிடிப்பு நேரத்தில் தேவரைச் சந்தித்து அவர் சொன்னபடி நடித்தெல்லாம் காட்டியிருக்கிறார். அப்போது தேவர் பெயரைக் கேட்டதற்கு, ’சூரிய பிரசாத்’ என்று சொல்லியிருக்கிறார் இவர். ‘தெலுங்குப் பேர் மாதிரியிருக்கே’! சூரியகாந்த் என்று வைத்துக் கொண்டாலென்ன? என்று கேட்க அதுவே தேவ வாக்காகிவிட்டது.

தூரல் நின்னு போச்சு படத்தில் செந்தாமரையை ‘’மாமா மாமா……ஏனுங்க மாமா’’ என்று நாய்க்குட்டி போல மசிந்து, குழைந்து கடைசியில் கட்டை வண்டி அச்சாணியால் அடி வயிற்றில் குத்திக் கொல்வது ஒரு கதாபாத்திரம்.

அதை அவ்வளவு ‘அசலாக’ செய்திருந்தார் சூரியகாந்த். பெயரில் என்னவோ ஒளியடிக்கிறது. நிறத்தில் அமாவாசைக்கு வண்ணம் குழைக்கலாம். தோற்றத்தில் கச்சடாப்பேர்வழியோ என்ற அச்சம்.

திரைப்படத்தில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் எதை எதையோ இழந்தவர். தஞ்சை மாவட்டம், பூண்டியில் பிறந்த இவர் ’போண்டியே’ ஆகியிருக்கிறார்.

படித்துக்கொண்டிருந்த பி.ஏ., முதலாமாண்டு படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது. திரைப்படங்களில் வேஷம் கொடுப்பார்கள் என்று நம்பிப் போலி படத்தயாரிப்பாளர்களிடம் அவ்வப்பொழுது பணம் கொடுத்து ஏமாந்தது திரைப்படங்களுக்காக.

எம்.ஏ.காஜா இயக்கத்தில் உருவான ‘வசந்த காலம்’ இவரது முதல் படம். ஒரு சிறிய வேடம் செய்தார். ‘அடிச்சுவடுகள்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தூரல் நின்னு போச்சு படத்தில் நல்ல படத்தில் கதாபாத்திரத்தில் நின்றிருக்கிறாய். அவசரப்பட்டு எதையும் செய்து பேரைக் கெடுத்துக் கொள்ளாதே. நல்ல வில்லன் பாத்திரமாக பார்த்துச் செய். நல்ல நிறுவனத்தின் படங்களையே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கே.பாக்யராஜ் அறிவுரைச் சொல்லியிருக்கிறார்.

‘இன்று போய் நாளை வா’ படத்தில் அருமையான ஓர் உதார் மைனர் வேஷத்தை சூரியகாந்துக்கு அளித்து ஓரு அழுத்தமான அறிமுகம் கொடுத்தவர் கே.பாக்யராஜ்.

1984-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குடும்பம்’, 1985-ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுயுகம்’, 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ’கண்ணத்தொறக்கணும் சாமி’, இதே ஆண்டு வெளிவந்த விசுவின் ‘மீண்டும் சாவித்திரி’, பாலு ஆனந்த் இயக்கத்தில் ‘ரசிகன் ஒரு ரசிகை’, 1988-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, 1992-ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாக்யராஜின் ‘ராசுகுட்டி’ என பல்வேறு தமிழ்ப் படங்களில் வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளவர் சூரியகாந்த்.

1.7.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

மடிப்பிச்சை

‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் செந்தாமரையுடன் சூரியகாந்த்

sooriyakanth-thooral-ninnu-pochu sooriyakanth-senthamarai-thooral-ninnu-pochu

‘குடும்பம்’ 1984 படத்தில் சூரியகாந்த்sooriyakanth-kudumbam-1984

‘குடும்பம்’ 1984 படத்தில் சங்கிலி முருகன், ஸ்ரீப்ரியா, விஜயகாந்துடன்  சூரியகாந்த்

sooriyakanth-vijayakanth-sripriya-sangili-murugan-kudumbam-1984

‘குடும்பம்’ 1984 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீப்ரியா, விஜயகாந்துடன்  சூரியகாந்த்

sooriyakanth-vijayakanth-sripriya-va-murthy-kudumbam-1984

‘ரசிகன் ஒரு ரசிகை’ 1986 படத்தில் சூரியகாந்த்sooriyakanth-rasigan-oru-rasigai-1986-1 sooriyakanth-rasigan-oru-rasigai-1986

‘புதுயுகம்’ 1985 படத்தில் சூரியகாந்த்sooriyakanth-puthu-yugam-1985sooriyakanth-puthu-yugam-1985-1

“கண்ணத்தொறக்கணும் சாமி” 1986 படத்தில் சிவகுமாருடன் சூரியகாந்த்suryakanth-kanna-thorakkanum-saami-1986-3suryakanth-kanna-thorakkanum-saami-1986suryakanth-kanna-thorakkanum-saami-1986-2suryakanth-kanna-thorakkanum-saami-1986-1suryakanth-sivakumar-kanna-thorakkanum-saami-1986suryakanth-sivakumar-kanna-thorakkanum-saami-1986-1

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் சூரியகாந்த் sooriyakanth-enakku-nane-neethipathi-1986sooriyakanth-enakku-nane-neethipathi-1986-2sooriyakanth-enakku-nane-neethipathi-1986-3sooriyakanth-enakku-nane-neethipathi-1986-1

“என் இரத்தத்தின் இரத்தமே” 1989 படத்தில் சூர்யகாந்துடன் நாகராஜ சோழன்

sooriyakanth-en-rathathin-rathame-1989nagarajachozhan-sooriyakanth-en-rathathin-rathame-1989sooriyakanth-nagarajachozhan-en-rathathin-rathame-1989

“ராஜநடை” 1989 படத்தில் சூர்யகாந்த்Suryakanth-Rajanadai 1989-

“கண் சிமிட்டும் நேரம்” 1988 படத்தில் சூர்யகாந்த்Suryakanth-Kan Simittum Neram 1988-

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் ஜீவிதா, சுரேஷுடன்  சூரியகாந்த்Sooriyakanth-Engal Thaikulame Varuga 1986-Sooriyakanth-Engal Thaikulame Varuga 1986-2Sooriyakanth-Engal Thaikulame Varuga 1986-1Sooriyakanth-Jeevitha-Suresh-Engal Thaikulame Varuga 1986-

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில்  குமரி முத்து , டைப்பிஸ்ட் கோபு, கவுண்டமணியுடன் சூரியகாந்த்

Kumari Muthu-Goundamani-Sooriyakanth-Engal Thaikulame Varuga 1986-

’தாலாட்டு” 1993 படத்தில் சூர்யகாந்துடன் ரா.சங்கரன், மன்சூர் அலி கான்Sooriyakanth-Thalattu 1993-Sooriyakanth-Mansoor Ali Khan-Thalattu 1993-Mansoor Ali Khan-Sooriyakanth-Ra.Sankaran-Thalattu 1993-

’புதிய தீர்ப்பு’ 1985 படத்தில் எம்.என்.நம்பியார், சேது விநாயகம், பசி நாராயணனுடன் சூரியகாந்த்Suryakanth-Sethu Vinayagam-MN.Nambiar-Pasi Narayanan-Puthiya Theerpu 1985-

One comment on “Sooriyakanth

Leave a comment