Subhashini

சுபாஷினி

1979-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமாகிய இயக்குநர் ஸ்ரீதரின் “அழகே உன்னை ஆராதிக்கிறேன்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுபாஷினி. இவர் பிரபல நடிகை ஜெயசுதாவின் தங்கை ஆவார். பிரபல நடிகையும், இயக்குநருமான ‘அலேக்’ விஜயநிர்மலாவின் உறவினரும் ஆவார்.

திரைப்படங்களுடன் சின்னத்திரை நடிகையாகவும் இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செல்லமே’ தொலைக்காட்சித் தொடரில் நடித்திருக்கிறார்.

தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கரும்பு வில்’, ‘ஜானி’, ‘பாய்ஸ்’, ‘நட்சத்திரம்’, போன்ற பல படங்களிலும், மலையாளத்தில் ’கிரிகலட்சுமி’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘அரைஞாணம்’, ‘ஆஸ்தி’, ‘மின்னாரம்’ போன்ற பல படங்களிலும், கன்னடத்தில் ‘ஃபிப்டி ஃபிப்டி’ என்ற படத்திலும் தெலுங்கில் ’சிவ ரஞ்சனி’ உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது மகள் பூஜாவும் தற்போது நடிகையாகவுள்ளார்.

விக்கிப்பீடியாவிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

“அழகே உன்னை ஆராதிக்கிறேன்’’ 1979 படத்தில் விஜயகுமாருடன் சுபாஷினி

Subashini-Azhage Unnai Aarathikkiren 1979-1 Subashini-Azhage Unnai Aarathikkiren 1979-2 Subashini-Azhage Unnai Aarathikkiren 1979- Subashini-Vijayakumar-Azhage Unnai Aarathikkiren 1979- Subashini-Vijayakumar-Azhage Unnai Aarathikkiren 1979-1

“அழகே உன்னை ஆராதிக்கிறேன்’’ 1979 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் சுபாஷினி

Subashini-Sutha-V.Gopalakrishnan-Azhage Unnai Aarathikkiren 1979-

“அழகே உன்னை ஆராதிக்கிறேன்’’ 1979 படத்தில் நாகேஷ், விஜயகுமாருடன் சுபாஷினி Subashini-Vijayakumar-Nagesh-Azhage Unnai Aarathikkiren 1979-

“நட்சத்திரம்” 1980 படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் சுபாஷிணிSubhashini-Natchathiram 1980-1Subhashini-Natchathiram 1980-Subhashini-Natchathiram 1980-3Subhashini-Natchathiram 1980-4Subhashini-Natchathiram 1980-2Subhashini-Sripriya-Natchathiram 1980-

“நட்சத்திரம்” 1980 படத்தில் ஹரிபிரசாத்துடன் சுபாஷிணிSubhashini-Hariprasad-Natchathiram 1980-

கீதா ஒரு செண்பகப் பூ [1980] படத்தில் நீலகண்டன், மனோரமாவுடன் சுபாஷிணிSubhashini-Geetha Oru Shenbagapoo 1980-Subhashini-Geetha Oru Shenbagapoo 1980-1Subhashini-Geetha Oru Shenbagapoo 1980-2Subhashini-Manorama-Geetha Oru Shenbagapoo 1980-Subhashini-Neelu-Geetha Oru Shenbagapoo 1980-

One comment on “Subhashini

  1. ராதிகா ரயில் ராதிகாவா வரும்முன்னே அந்த ரயிலில் யார் இருந்தா தெரியுமா?
    ஆம்…ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணி..யாருய்யா சுபாஷிணி…?
    “ஆசையக்காத்துல தூது விட்டேன்” பாட்டில் அசத்துவாரே அவர் தான்.பாரதிராஜா முதலில் படத்துக்கு தேர்ந்தெடுத்தது ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியை தான். அவர் வீட்டுக்குப்போய் பார்த்து செலக்ட் செய்தார் பாரதிராஜா. வழக்கம் போல தெலுங்கு தெரிந்த பாக்யராஜ் டயலாக் சொல்லிக்கொடுத்து ஷூட்டிங்குக்கு ரெடியாகிவிட்டார்கள். ஆனால் சுபாஷிணியின் தந்தைக்கும் பாரதிராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் ராதிகாவை கொண்டு வந்தார் பாரதிராஜா.
    உடனே அவரின் குடும்ப நண்பர் தாசரி அவர்களே ஜெயசுதாவை அறிமுகம் செய்தது போல் சுபாஷிணியையும் ‘சிவரஞ்சனி’ படத்தில் அறிமுகம் செய்தார். தமிழில் ‘அழகேஉன்னை ஆராதிக்கிறேன்’ மூலம் அறிமுகமானார் சுபாஷிணி.
    ஆனாலும் பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கோட்டை விட்டு விட்டார் சுபாஷிணி. கீதா ஒரு செண்பகப்பூ, ஜானி, கரும்புவில் என சில படங்கள் நடித்தார். தெலுங்கில் அமிதாப்பின் ‘கூன் பஸீனா'(தமிழில் சிவா) படத்தை என்.டி.ஆர் ரீமேக் செய்த போது வினோத் ரோலில் ரஜினி நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சுபாஷிணி நடித்தார்.
    அந்தப்பட ஷூட்டிங்குக்காக ரஜினி, சுபாஷிணி ஹைதராபாத் விமான நிலையம் சென்றபோது ஒருவர் மட்டமான கமெண்ட் இட ரஜினி வெளுக்க பெரிய ரகளை செய்தியாகி பத்திரிக்கைகளில் வந்தது. சுபாஷிணி-ரஜினி கோஸிப்பும் கிளம்பியது..
    வாய்ப்புகள் இல்லாததால் சுபாஷிணி என்.டி.ஆரின் பொப்பிலி புலி படத்தில் ‘ஏ அப்பாராவு..ஏ..சுப்பாராவு’ பாடலுக்கு ஜெயமாலினி, ஜோதிலக்ஷ்மி, விஜயநிர்மலா மூவரோடு நாலாவதாக நடனமாடும் ஐட்டம் நம்பராக ஆகிவிட்ட நிலைமையும் வந்தது.
    சுபாஷிணிக்கு உற்ற தோழி பொப்பிலி புலி நாயகி ஸ்ரீதேவி.இருவரும் நெருங்கிய தோழிகள்..அருந்ததி படத்தில் வில்லியாக கலக்கினார் சுபாஷிணி…
    ஆசையக்காத்துல தூது விட்டேன் பாடல் தான் எவ்வளவு மனதை மயக்கும் பாடலாக இருக்கிறது.அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க பாடலும், மீன் கொடி தேரில் மன்மத ராஜன் பாடலும் சுபாஷிணியை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும்…
    நல்ல வாய்ப்புகள் வந்தும் தாசரி, மகேந்திரன், ஸ்ரீதர் படங்களில் நடித்தும் ஏனோ கோட்டை விட்டு விட்டார் சுபாஷிணி…
    Comments

Leave a comment